புலிகளின் மேலும் சில உடலங்களும் வெடிகுண்டு நிரப்பிய லொறி ஒன்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
சுண்டிக்குளம் பிரதேசத்தை கைப்பற்றியதன் ஊடாக யாழ் மாவட்டத்தின் முழு நிலப்பரப்பபையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ள படையினர் அங்கு நாடாத்திய தேடுதல்களின் போது புலிகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு நிரப்பிய லொறி ஒன்றையும் இரு அதிவேக படகுகளையும் கண்டு பிடித்துள்ளனர். மேற்படி இருபடகுகளும் படையினர் மீது தாக்குதல் நாடாத்தும் நோக்குடன் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என படையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் ராமநாதபுரம் மேற்குப்பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது 4 ரி56 ரக துப்பாக்கிகளையும் 1 எல்எம்ஜி ரக துப்பாக்கியையும் 2 புலிகளின் உடலங்களையும் கண்டெடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment