புலிகளின் மேலும் 38 உடலங்கள் புலிகளால் உரிமை கோரப்படாத நிலையில் வவுனியாவில் புதைப்பு.
வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்களின் போது உயிரிழந்த புலிகளது சடலங்களின் இரண்டாவது தொகுதி இன்று வவுனியா இந்து மாயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. வுவுனியா மாவட்டநீதிபதியின் உத்தரவின் பேரில் சர்வதேச செஞ்சிலுவைச் சந்கத்தினரின் மேற்பார்வையில் அடக்கம் செய்யப்பட்ட இவ் உடலங்களில் 17 ஆண்களதும் 21 பெண்களதும் ஆகும். கடந்த வார முற்பகுதியில் ஒரு தொகை உடலங்கள் இவ்வாறே பிரதே அறையில் துர்நாற்றம் ஏற்படுத்தியதையடுத்து பொலிஸார் நீதிபதியின் உத்திரவின் பேரில் 42 சடலங்களை அடக்கம் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment