Saturday, November 2, 2019

MCC ஒப்பந்தத்திற்கு எதிராக உச்ச மன்றில் வழக்கு! அமெரிக்க தூதரகம் நீலிக்கண்ணீர் வடிக்கின்றது.

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள மிலேனியம் சலன்ஞ் கோப்ரேசன் (MCC) வேலைத்திட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தடுக்கும் வகையில், உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை மனு சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவுடன் எக்ஸா, எம்சீசீ, சோபா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட இடைகால தடை உத்தரவை பிறப்பிக்க கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என அச்சப்படுகின்றே மேற்படி ஒப்பந்தங்களில் இலங்கை அரசை கையொப்பம் இடவைப்பதற்காக நிலுவையிலுள்ள கடன்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களை இதுவரை காலமும் கையிலெடுத்திருந்த அமெரிக்கா தற்போது இலங்கையின் அபிவிருத்தியின்பால் அக்கறைகொண்டே தாம் மிலேனியம் சலேனஞ் கோப்பரேசன் வேலைத்திட்டங்களை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை கீழ்கண்டவாறு செல்கின்றது. இதை வாசிக்கின்றபோது இலங்கையின் சகல துறைகளினுள்ள அமெரிக்க எவ்வாறு சூட்சுமமாக நுழைய முனைகின்றது என்பதை எந்நவொரு சாதாரண பிரஜையாலும் புரிந்துகொள்ள முடியும்..

அனைத்து பங்காளி நாடுகளிலுமான மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனின் (Millennium Challenge Corporation - MCC) உலகளாவிய கொள்கைக்கு இசைவானதாக, இந்த (கடனற்ற) நிதியுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் இலங்கை அரசாங்கம் அதை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம், இந்த நிதியுதவி ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய பாராளுமன்றத்துக்கு போதிய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமெரிக்க தூதரகம் அறிவித்திள்ளது.

இந்த மீளாய்வு காலப்பகுதியில், நிதியுதவி ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிப்பதற்கும் போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் செயற்படும். இந்த நிதியுதவி ஒப்பந்தமானது 11 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு நேரடியாக நன்மைபயக்கும் என்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும் அர்த்தபுஷ்டியான வகையில் ஊக்குவிக்கும்.

இந்த நிதியுதவி ஒப்பந்தத்திற்கு அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொள்வதற்கு பாராளுமன்றத்தினது மீளாய்வு மற்றும் ஒப்புதல் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனுக்கு தேவைப்படுகிறது.

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் போக்குவரத்துத் திட்டம்

போக்குவரத்துத் திட்டமானது 350 மில்லியன் டொலர்களைக் கொண்டது என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன் இது மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களில் நகர மற்றும் கிராமிய நகரும் தன்மையை இருவழியில் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். முதலில் கொழும்பு பெருநகரப் பிராந்தியத்தில் காணப்படும் வாகன நெரிசலை எளிதுபடுத்துவதுடன், பொதுப் போக்குவரத்தை முன்னேற்றும். கொழும்பை மேலும் வாழக்கூடிய, நன்கு செயற்படக்கூடிய நகரமாக்குவதற்கு போக்குவரத்து உரிமையைப் பெறுவது முக்கியமானதாகும். இரண்டாவதாக, போக்குவரத்துத் திட்டமானது மேல் மாகாணத்திலுள்ள துறைமுகங்கள் மற்றும் சந்தையுடன் நாட்டின் மத்திய பகுதியை இணைப்பதை மேம்படுத்தும். போக்குவரத்துத் திட்டமானது போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் பொறிமுறைகளை தரமுயர்த்தும். இது மூன்று செயற்பாடுகளைக் கொண்டதாகும்:

* கொழும்பு பெருநகர பிராந்தியத்தின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறைக்காக (Advanced Traffic Management System) 160 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது மத்திய கொழும்பை புறநகர் பகுதிகளுடன் இணைக்கும் அதிக போக்குவரத்துக்களைக் கொண்ட எட்டு பாதைகளில் உள்ள வீதி வலையமைப்புக்களை தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் பௌதீக ரீதியாக முன்னேற்றுவதுடன், சிவில் வேலைகளை முன்னேற்றுவதாகும். இந்த செயற்பாடானது வாகனங்களை கண்டறிவதற்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல், நிகழ்நேர தகவல் சேகரிப்பு, போக்குவரத்தை ஆய்வுசெய்தல், போக்குவரத்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தல் மற்றும் முழுமையான வலையமைப்பிலும் பஸ் முன்னுரிமை முறைக்கு இடமளித்தல் என்பன உள்ளடங்குகின்றன. பாதசாரிகள், உலகின் பல நகரங்களில் பொருட்கள் மற்றும் பயணிகள் நகர வீதிக் கட்டமைப்பில் நெரிசல்கள் இன்றி பயணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கியமான கருவியாக மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறை நிரூபணமாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது கொழும்பு மாகரில் உள்ள 132 சந்திகளில் சிவில் செயற்பாடுகளை முன்னேற்றுவது மற்றும் ஏறத்தாழ 205 கிலோமீற்றர் வீதி வலையமைப்பில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞை திட்டங்களை வினைத்தினறாக நடைமுறைப்படுத்துவதையும் மேம்படுத்தும்.

* 50 மில்லியன் டொலர்கள் கொழும்பு மாநகரில் பஸ் சேவையை மேம்படுத்த பஸ் சேவை நவீனயப்படுத்தல் செயற்பட்டுக்கு ஒதுக்கப்படும். கொழும்பு மாநகரில் உள்ள பயணிகளில் 45 வீதமானவர்களே பஸ் சேவையைப் பயன்படுத்துவதுடன், குறைந்தவருமானம் பெறும் நபர்களாலேயே இது அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயற்பாடானது ஸ்மார்ட் அட்டையின் அடிப்படையில் தன்னிச்சயாக கட்டணங்களை அறவிடும் பொறிமுறையை அறிமுகப்படுத்தும். ஒரு அட்டையை பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைவதுடன், பஸ்கள் சரியான முறையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்பதைக் கண்டுகொள்வதற்காக ஜிபிஸ் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்குகிறது. சரியான நேரசூசியில் பஸ்கள் செயற்படுகின்றனவா, பஸ்களில் பயணிக்கும் பெண்கள், வயது வந்தவர்கள், மாற்றுவலுவுடையவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இது உதவியாகவிருக்கும். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் செயற்பாட்டாளர்கள் அதிநவீன போக்குவரத்துக்கான புதிய பஸ்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஏற்பாடுகளை செய்வதற்கு மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் உதவியளிக்கும்.

* 140 மில்லியன் கிராமிய போக்குவரத்து செயற்பாடானது மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களுக்கிடையிலான ஏறத்தாள 131 கிலோமீற்றரைக் கொண்ட மத்திய வளைய வீதி வலையமைப்பை மேல் மாகாணத்தின் சந்தைகள் மற்றும் துறைமுகங்களுடன் இணைப்பதை மேம்படுத்தும். மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் பல்வேறு பிரிவு வலையமைப்புக்களை புனரமைக்கும். கிழக்கு மாகாணத்திலுள்ள பயணிகள் மற்றும் பொருட்கள் இந்த வலையமைப்பின் ஊடாகப் பயணப்படும். இந்த வலையமைப்பை மேம்படுத்துவது விவசாயம், சுற்றுலாத்துறை என்பவற்றின் மையமாகவிருக்கும் மத்திய பிராத்தியத்துக்கும், அங்குள்ள இன பல்வகைமை மற்றும் வறுமைநிலையில் உள்ள அதிகமானவர்களுக்கும் நன்மையாக அமையும்.

மிலேனியம் சலெஞ்ச் காணித் திட்டம்

காணித் திட்டமானது 67 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டது என மதிப்பிடப்பட்டிருப்பதுடன், இடஞ்சார் தகவல்கள் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் காணி உரிமைத் தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை விஸ்தரிப்பது மற்றும் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். இந்தத் திட்டமானது பயன்படுத்தப்படாதுள்ள அரசாங்க காணிகளை அடையாளம் கண்டு அவற்றை முடிந்தளவு வினைத்திறனாகப் பயன்படுத்தவும், அவற்றை அரசாங்கம் குத்தகைக்கு வழங்கி ஆகக்கூடியளவு வாடகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாகவிருக்கும். அத்துடன் பணிக்காலப் பாதுகாப்பு மற்றும் சிறுகாணி உரிமையாளர்கள், பெண்கள் நிறுவனங்களுக்கான காணி வர்த்தகத்தன்மை என்பவற்றை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட காணி உறுதிகளைப் பேணவது போன்றவற்றால் பாதிப்புக்கள், திருட்டுக்கள், இழப்புக்களிலிருந்து தவிர்த்தல் என்பவற்றுக்கு உறுதுணையாக இருப்பதுடன், தலைப்புப் பதிவு முறையிலிருந்து காணி உறுதி முறைக்கு சொத்துக்களை மாற்றுவதாகும். காணித் திட்டமானது ஐந்து செற்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள முயற்சிகளை மேம்படுத்துவதாக இவை அமையும். அவையாவன:

* நிலம் தொடர்பான காணி வரைபடத்தை உருவாக்குவது மற்றும் அரசாங்க காணிகள் குறித்த முழுமையான இருப்புக்களைப் பெறுதல், ஈ-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமைக்கு தகவல்களை வழங்குதல். மதிப்பீடு 23,400,000 டொலர்கள்;

* கணினி மயப்படுத்தப்பட்ட வெகுஜன மதிப்பீட்டுக்கு உதவியாக அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான தகவல் சேகரிப்பை மேம்படுத்துதல், மதிப்பீட்டுத் திணைக்களத்தைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பலப்படுத்துதல். மதிப்பீடு 6,5000, 000 டொலர்கள்;

* காணி உறுதி பதிவேட்டில் உள்ள பதிவுகளை டிஜிட்டல் மயப்படுத்தி மேம்படுத்தல், டிஜிட்டல் தகவல் கட்டமைப்பில் அவற்றை இணைத்தல், அரசாங்கத்தின் ஈ-பதிவு முயற்சிகளைக் கட்டியெழுப்புதல். மதிப்பீடு 11,400,000 டொலர்கள்;

* காணி உறுதி முறையிலிருந்து தலைப் பதிவேட்டு முறைக்குச் சொத்துக்களை மாற்றுவதன் ஊடாக காணி உரிமையாளர்களின் உரிமையை மேம்படுத்தல். அரசாங்கத்தின் பிம் சவிய திட்டத்தை விஸ்தரித்தல். மதிப்பீடு 19,300,000 டொலர்கள்;

* காணி நிர்வாக கொள்கைத்திட்டங்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கான ஆய்வுளுக்கு உதவியளித்தல். மதிப்பிடு 6,700,000 டொலர்கள்;

ஈ-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமை என்பது அரசாங்கத்தின் பல்வேறு முகவர்களிடம் உள்ள அரச காணிகள் தொடர்பான காணி வரைபடைத்தை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப பொறிமுறையாகும். இந்தப் பொறிமுறையானது அரசாங்கம் ஏற்னவே குத்தகைக்கு வழய்கிய அரச காணிகள் குறித்த தகவல்கள் பற்றிய விண்ணப்பங்களை பின்தொடர்ந்து அவற்றிலிருந்து வருமானங்களை சேகரித்துக் கொள்ளும். அரசாங்கம் தற்பொழுது காணி மதிப்பீட்டு செயற்பாட்டை தானியங்குமுறைக்கு மாற்றி வருகிறது. இது வரி மதிப்பீடு மற்றும் ஏனைய தேவைகளுக்காக சொத்துக்கள் மதிப்பிடப்படுவதை விரைவுபடுத்தும். ஈ-காணி பதிவேடு முறைமையானது காணி பதிவுத் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்துவதுடன், காணி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கான தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் வழிகோலும். பிம் சவிய திட்டமானது தனியார் காணிகளை காணி உறுதி முறையிலிருந்து மிகவும் பாதுகாப்பான தலைப்பு பதிவு முறைக்கு மாற்றுவதாகும். துரதிஸ்டவசமாக போதிய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இன்மையால் இந்த முயற்சிகள் யாவும் அங்கும் இங்குமாக இழுபடுவதுடன் சரியான ஒருங்கிணைப்பின்றிக் காணப்படுகின்றன. மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் காணி திட்டமானது இந்த வளப் பிரச்சினையை நிவர்த்திசெய்யும்.

Read more...

குருகந்த - நயாரு விகாரையின் தற்காலிகப் பொறுப்பாளர் தாக்குதலுக்குள்ளானார்!

முல்லைதீவு - நயாரு குருகந்த ரஜமகா விகாரையைத் தற்காலிக பொறுப்பாளராக இருந்த தன்னை நேற்றுப் பிற்பகல் இளைஞர் ஒருவர் தாக்கியதாக தற்காலிகப் பொறுப்பாளர் கெலும் பண்டார எனும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

கோயில் வளாகத்தில் பூஜைக்காக வந்திருந்த குழுவொன்றின் இளைஞர் ஒருவரே தன்னைத் தாக்கியதாக கெலும் பண்டார தெரிவித்துள்ளார்.

ட்ரக்டர் வாகனமொன்றில் ஏதோவொரு தெய்வத்தின் சிலையை எடுத்து வந்த குழுவினர் தன்னைப் பற்றி விசாரித்ததாகவும், வந்த குழுவினர் என்னதான் செய்கின்றார்கள் என்பதை விசாரித்தற்காகவும், அவர்களது செய்கைகள் தொடர்பில் கைத்தொலைபேசி மூலம் 'விடியோ' எடுத்தற்காகவும், வந்திருந்தோரில் ஒரு இளைஞர் தன்னிடம் வந்து தன்னைத் தாறுமாறாகத் தாக்கியதாக விகாரைக்குத் தற்காலிகமாகப் பொறுப்பான இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுவினர் தன்னைத் தாக்கியது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக தான் முல்லைத்தீவு பொலிஸிற்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்றபோதும், போக முடியாத இக்கட்டான நிலையில் தான் இருப்பதாக நிருபர்களிடம் அவ்விளைஞர் தெரிவித்துள்ளான்.

மேற்படி குழு தன்னை மறைந்திருந்து தாக்கலாம் என்ற அச்சம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

இதற்கு முன்னர் ஒருமுறை வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டி. ரவிஹரன் உள்ளிட்ட சிலரும் தன்னை அச்சுறுத்தியதாக அவ்விளைஞர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

சஜித்துடன் சேர்ந்த சந்திரிகாவின் உறுப்புரிமை கேள்விக்குள்ளாகின்றது!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்காவை அதன் உறுப்பினர் மற்றும் ஆலோசகர் பதவியிலிருந்து வெளியேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சியின் மத்திய குழுவின் ஒருமித்த முடிவுக்கு எதிராக செயல்படுவதன் மூலமும், அதிகமான உறுப்பினர்களைத் தூண்டுவதன் மூலமும் கட்சி ஒழுக்கத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

இருப்பினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராகச் செயற்பட்டுவந்த சந்திரிக்கா குமாரதுங்க அக்கட்சிக்கு எதிரான முறையில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Read more...

Friday, November 1, 2019

தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இருக்காதாம். சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியாகியிருந்தது. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் இழப்புக்களை தனிப்பட அனுபவித்தவன் என்ற வகையில், இந்த நாட்டின் எந்த ஒரு பிரஜையின் மீதும் பயங்கரவாதத்தின் வினைகள் தாக்கிவிடக்கூடாது என்பதில் கடுமையான உறுதி பூண்டிருக்கின்றேன். தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எவ்வித சகிப்புத் தன்மையும் அறவே இல்லாத அறவழியுத்தம் ஆரம்பிக்கப்படும் என நான் உறுதியளிக்கின்றேன். ஒரு விரிவான செயற்திட்டத்துடன் சேர்த்து தேசிய பாதுகாப்பை கையாள சிறந்த நபர்களை நியமிப்பேன். சட்டவாக்க நியமங்களுடாக எவ்வித அரசியல் தலையீடுமின்றி நம் நாட்டின் அனைத்து பிரஜைகளையும் பாதுகாக்க அவர்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்படும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தினை முழுமையாக இங்கே வாசிக்கமுடியும்..




Read more...

இராணுவ வீரர்களைப் பாதுகாக்கும் அமைப்பு வெளிக்கொணரும் புதுச்செய்தி!

போர் வீரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு இன்று முக்கிய விடயமொன்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

சென்ற செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 20 நாட்கள் நீடித்த ஊனமுற்ற இராணுவ வீரர்களின் போராட்டத்தின்போது, இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு இது தொடர்பாக இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.

அந்த தொலைபேசி அழைப்பில், உங்கள் பிரச்சினைகளை நீங்கள் தீர்க்க விரும்பினால், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகக் கூறி ஒரு அறிக்கையை வெளியிடுங்கள் என சம்பந்தப்பட்ட மருத்துவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more...

எதிர்வரும் தேர்தலில் நாம் யாரைத் தெரிவு செய்ய வேண்டும்? கத்தோலிக்க பேராயர் சம்மேளனம்

அனைத்து மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கும் நாட்டின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பதற்கும் ஒருமைப்பாட்டுடன் செயல்படும் பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து குடிமக்களும் புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கட்சி அரசியலுக்கு அப்பாற்சென்று ஜனாதிபதி செயற்பட வேண்டும் எனவும் கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் அறிக்கையாென்றில் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மிருகத்தனமான தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரவும், மத தீவிரவாதத்தையும் வகுப்புவாதத்தையும் ஒழிக்கவும், நாட்டில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் மதங்களிடையே அமைதியான சகவாழ்வை ஏற்படுத்தவும் அனைத்து தலைவர்களும் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்படவுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நாட்டின் நிலையான அபிவிருத்திக்காக மத சுதந்திரம், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை தொடர்பான தேசிய கொள்கைகளை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

Thursday, October 31, 2019

கோத்தா வந்தால் டக்கிளஸின் கை ஓங்கப்போவதாக சிறிதரனுக்கு வயிற்றோட்டம்.. தமிழரசு முகநூல் வால்களிடம் புலம்பலாம்..

எதிர்வரும் தேர்தலில் தங்களுக்கு சார்பான அல்லது வசதிவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம் எனக் கருதுகின்ற வேட்பாளரை வெல்லவைப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் தேசம் எங்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைமுகமாக சஜித்தை ஆதரித்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

ஆனால் சஜித் பிறேமதாஸவிற்காக நேரடியாக பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்ற கிளிநொச்சி கட்டப்பஞ்சாயத்து தலைவன சிறிதரன் தனது முகநூல் வாரிசுகளை அழைத்து எச்சரிக்கை மணி அடித்துள்ளார். அவர் அவ்வாறு எச்சரிக்கை மணி அடித்தபோது அவரது வயிற்றில் கலக்கம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தாக சிறிதரனுடன் சந்திப்பில் கலந்து கொண்ட அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று 30.10.2019 ம் திகதி பிரதேசத்திலுள்ள முகநூல் வில்லாதிவில்லர்களை இரகசியமாக அழைத்து எச்சரிக்கை மணி அடித்த சிறிதரன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ஜனாதிபதியாக வந்தால் அடுத்த கட்டமாக மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி அமைய வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு ஆட்சி அதிகாரத்தை மகிந்த தரப்பு கைப்பற்றினால் வடக்கில் டக்ளஸ் தேவானந்தவின் கை ஓங்கும். அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டு வடக்கில் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடும். இதனால் வறுமையிலும், வேலை வாய்ப்புகள் இன்றி இருக்கும் மக்கள் டக்ளஸ் பக்கம் திரும்பிவிடுவார்கள்.

இதனால் நாம் கட்சி நடத்த முடியாத நிலை ஏற்படுவதோடு கூட்டமைப்பு எம்.பிமார் வீடுகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்று முடித்தபோது சிறிதரனுக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்துவிட்டது என தாங்கள் உணர்ந்து கொண்டதாக அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறன நிலை எமக்கும் எமது கட்சிக்கும் ஏற்படாமல் இருக்க கோத்தாபாய ராஜபக்ஸவுக்கு எதிராகவும் சஜித்திற்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யுமாறு சிறிதரன் தழிழரசுக் கட்சியின் முகநூல் வல்லுனர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் 60 வீதமாக பிரச்சினைகள் தீர்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவோடு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு சிறு துரும்பை கூட இவர்களால் நகர்த்த முடியவில்லை என்பதுடன் தமிழர்களின் கலாச்சார சின்னங்கள் சமயஸ்தலங்கள் போன்றன திட்டமிட்டு அழிக்கப்பட்டிருப்பதோடு இந்துக்களின் கோவில்கள் சுடுகாட்டுக்கு சமம் என்று இவ் நல்லாட்சி அரசால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் தங்கள் சுயலாப அரசியலுக்காகவும் தமிழ் மக்களை பகடைகாயாக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டவேண்டியது காலத்தின் தேவையாகும்.

Read more...

மாநாயக்க தேரர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை பாரமளித்தார் சஜித் பிறேமதாஸ.

' சஜித் சமூக புரட்சி' எனப் பெயரிடப்பட்டுள்ள சஜித் பிறேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கண்டி, குயின்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு முன்னராக அதன் முதல் பிரதி மல்வத்து மகாநாயக்கர், அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவால் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Read more...

மாவன்னல்லையிலிருந்து ஹிஸ்புல்லாவையும் ஐந்து பஸ்களில் சென்ற பரிவாரங்களையும் விரட்டியடித்த முஸ்லிம் மக்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்ல மாவன்னல்லை பிரதேசத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது பிரதேச முஸ்லிம் மக்கள் அவரை விரட்டியடித்துள்ளனர். மாவன்னலை ராழியா வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கூட்டத்திற்கு மக்கள் பெரும் எதிர்ப்பை காட்டியதை தொடர்ந்து அங்கிருந்து ஹிஸ்புல்லா தலைமறைவாகியதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் இணைப்பாளர் ஒருவரினால் இந்த கூட்டத்தை நடாத்துவதற்கு மண்டபத்துக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டிருந்தன. இந்த விடயத்தை அறிந்த ஊர் மக்கள், குறிப்பிட்ட இணைப்பாளரை கடுமையாக எச்சரித்ததுடன், இனிமேல் இவ்வாறான கூட்டங்களை காத்தான்குடியில் வைத்துக்கொள்ளுமாறும் சமூகங்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை, மாவனல்லை மண்ணில் நடாத்த வேண்டாமெனவும் எச்சரித்தனர்.

ஏற்கனவே, காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக, மாவனல்லை மண் சந்தித்திருந்த அவல நிலையை சுட்டிக்காட்டிய ஊர் மக்கள், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவரும் துணைபோவதை மாவனல்லை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.

மேலும், காத்தான்குடியில் உருவாகிய சில பயங்கரவாதிகளினால், இந்த நாடு சந்தித்த அவலங்களையும் துயரங்களையும் மாவனல்லை ஏற்பாட்டாளர்கள் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டுமென கடுந்தொனியில் சுட்டிக்காட்டியதோடு, இனிமேல், மாவனல்லை மண்ணில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எவருமே ஆதரவளிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இங்கு வியத்தகு விடயம் யாதெனில், காத்தான்குடியில் இருந்து ஐந்து பஸ்களில் மாவனல்லைக்கு அழைத்து வரப்பட்ட ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களும் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவும் ஊர்மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து, இடைநடுவே திரும்பிச் சென்றதாக தெரிய வருகின்றது.

Read more...

Wednesday, October 30, 2019

மீண்டும் பிரதமராவதற்குக் கனவு காண்கிறார் ரணில்... ஐயோ பாவம் என்கிறார் விமல்

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றதும் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் தானே பிரதமர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவரது அரசியல் ரீதியிலான கனவுகளை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரணில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றதும் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் தானே பிரதமர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் இன்று பேசிய விமல், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றதும் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் தானே பிரதமர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவரது அரசியல் ரீதியிலான கனவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டு மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் தவறான தீர்மானத்தை முன்னெடுத்ததை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் ஊடாகக் திருத்திக் கொண்டார்கள். அன்றே ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக புறக்கணித்து விட்டார்கள். மக்களின் ஆணையினை பெற்று அதிகாரத்தை பெற்றுக் கொள்ளமாட்டார்.

மீண்டும் தானே பிரதமர் என்று அவர் கருதுவது வெறும் கனவாகவே காணப்படும். முதலில் நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பிறகே ஏனைய விடயங்கள் நாட்டு மக்கள் மீண்டும் அரசியல் ரீதியில் தவறான தீர்மானத்தை முன்னெடுக்க மாட்டார்கள் என்றார்.

Read more...

முடிந்தால் என்னை அமைச்சுப் பதவியிலிருந்து கீழிறக்குங்கள் பார்க்கலாம்! - வசந்த சேனாநாயக்க

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதில்லை என வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முடிந்தால், தன்னை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.

வசந்த சேனாநாயக்கவை, கட்சியில் இருந்தும் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க போவதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் வசந்த சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Tuesday, October 29, 2019

கருணா, பிள்ளையான் வழிகாட்டலில் தேர்தல் சதிமுயற்சியாம். அழுகின்றார் ஹக்கிம்

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது.

அவ்வமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் அரசியல் பகுப்பாய்வாளர் மேரி பொலன்ட், தமது குழுவின் சார்பில் பிரியங்கா முனசிங்கவுடன் இன்று (29) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக சிறுபான்மை மக்கள் செறிந்தும், பரவியும் வசிக்கும் நாட்டின் இதர பகுதிகளிலும் இவ்வாறான முறைகேடுகளும், அடாவடித்தனங்களும் நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்துவரும் முஸ்லிம் காங்கிரஸ் அச்சம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக நடைபெறவேண்டிய ஜனாதிபதி தேர்தலை மோசடிகள் மலிந்ததாக்கி தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரின் வெற்றிவாய்ப்பை மழுங்கடிக்கச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தன் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்களை தேர்தலின்போது களமிறக்கி மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகளின் விளைவுகள் ஆபத்தானவையாக அமையலாம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

கோர யுத்தம் நடந்த காலத்தில் வட மாகாணத்தில், வன்னியில் வசித்துவந்த நிலையில் பின்னர், இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற வேறு மாவட்டங்களில் வசித்துவரும் வாக்காளர்கள் பூர்வீக வசிப்பிடத்தில் தமது வாக்குகளை அளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு யுத்தம் முடிவடைந்துவிட்ட காரணத்தினால் இனியும் அவசியமில்லை என கூறி மறுக்கப்படும் நிலைமை தோன்றியுள்ளது. இது பற்றியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இதற்கு முன்னர் வாக்குரிமையுள்ள குறித்த இடத்துக்கு சென்று வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வந்தமை பற்றியும் கூறப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக இலங்கைக்கு வருகைதரும் அறுபதுக்கும் மேற்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இங்கு வந்து, முன் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர்.

தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது சம்பந்தமான விடயத்தை பொறுத்தவரை, வாக்களிப்பின் இறுதிக் கட்டத்தில் வாக்காளர்களை மிரட்டி பலவந்தமாக வாக்குச் சாவடிகளில் வைக்கப்படும் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகளை திணித்தல் மற்றும் மோசடிகள், அச்சுறுத்தல் என்பன மேற்கொள்ளப்படும் நிலைமை பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

மாலை வேளை, புவியியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமங்களின் அமைவிடம் போன்றவை இவ்வாறான ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு பெரிதும் ஏதுவாக அமைந்துவிடுவதை இவ்வாறான பிரதேசங்களின் கடந்தகால தேர்தல் அனுபவங்கள் நன்கு உணர்த்துவதாகவும் எடுத்துரைக்கப்பட்டன.

கடந்த தேர்தல்களில் மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களில் மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றமை பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான காரியங்களில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் நடந்துகொண்ட விதம் இவற்றுக்கு சான்றாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

தனியார் தொலைகாட்சிகள் சிலவும், அச்சு ஊடகங்கள் சிலவும் ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளரை முன்னிலைப்படுத்தி, பக்கச்சார்பாக நடந்துகொண்டு வாக்காளர்களை தவறாக வழிநடத்தி வருவது குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் விசனம் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடத்திலும் அவருடனான கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் கூறினார்.

வாக்களிப்பு மோசடிகள் பெருமளவில் மேற்கொள்ளப்படக்கூடிய கிராமங்கள் மற்றும் வாக்குச் சாவடிகள் பற்றிய பட்டியலொன்றை தமது கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டு, உள்நாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கவுள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.

தன்சானியா, சியராலியோன், சிம்பாப்வே, பங்களதேஷ், பாகிஸ்தான், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பொதுநலவாய மற்றும் சார்க் நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களில் இடம்பெற்றதன் மூலம் தாம் செய்த பங்களிப்புகள் பற்றியும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது நினைவூட்டினார்.

இந்த ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல் தினத்திற்கு முன்னர் இரண்டாம் கட்டமாக இங்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவில் பிரதான கண்காணிப்பாளர் மரிசா மார்டியஸ் இடம்பெறுவார்.

அத்துடன் பலத்த பலப் பரீட்சையாகவும், தீர்க்கமானதும், விறுவிறுப்பானதாகவும் அமையப்போகும் 2019 ஆம் ஆண்டின் இந்த ஜனாதிபதி தேர்தலை பொதுநலவாய நாடுகளினதும், சார்க் நாடுகளினதும் தூதுக்குழுக்களும் கண்காணிப்பதற்கு முன்வந்துள்ளன.

Read more...

புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தாக மலேசியாவில் கைதானோர் மன்றில் ஆஜர். 30-40 வருட சிறைத்தண்டனை கிடைக்கலாம்.

மலேசியாவில் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தமை மற்றும் அவர்களது சின்னங்கள் மற்றும் இறுவெட்டுக்களை தமது உடமைகளில் வைத்திருந்தமை தொடர்பில் அந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இருவர் உட்பட பன்னிருவர் கைது செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயமாகும்.

குறித்த பன்னிருவரும் இன்று மேலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவேறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றப்பத்திரிகைகள் வாசிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர்கள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக தலையசைத்ததாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்பட்சத்தில் 30-40 வருட சிறைத்தண்டனையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளனர்.

மலேசியச் செய்திகள் இவ்வாறு தெரிவிக்கின்றது.

கோலாகங்சார் நீதிமன்றத்தில் அரவிந்தன் -பாலமுருகன் மீது குற்றச்சாட்டு


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான அம்சத்தை கொண்ட ஆவணங்களை வைத்திருந்தது தொடர்பில் கூலிமைச் சேர்ந்த 27 வயதுடைய அரவிந்தன் மற்றும் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த டாக்சி டிரைவர் வி. பாலமுருகன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கும் இரவு 11 45 மணிக்கிடையே சுங்கை சிப்புட் கிளையைச் சேர்ந்த கோலாகங்சார் நகராண்மைக் கழக மண்டபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரவிந்தன் ஆதரவு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

தண்டனைச் சட்டத்தின் 130J (1) (a)விதியின் கீழ் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை அல்லது கூடிய பட்சம் 30 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

அதே நாளில் சம்பந்தப்பட்ட அதே இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக டாக்சி டிரைவரான வி . பாலமுருகன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் பாலமுருகனுக்கு எதிராக இதர மூன்று குற்றச்சாட்டுக்களும் கொண்டு வரப்பட்டன.

பயங்கரவாதம் தொடர்பிலான ஆவணங்களை வைத்திருந்தது அதாவது கைத்தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பயங்கரவாத நடவடிக்கை அம்சங்களுக்கான ஆவணங்களை கொண்டிருந்ததாகவும் பாலமுருகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. தண்டனைச் சட்டத்தின் 130JB (1) (a)

விதியின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி காலை மணி 9.40 அளவில் சுங்கை சிப்புட் டாக்சி வளாகத்தில்

அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்வதையும் இந்த சட்டவிதி வழி வகை செய்கிறது.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்களை காட்டியதாகவும் அவர்மீது மூன்றாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. இது தவிர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பயங்கரவாத நடவடிக்கை அம்சங்களைக் கொண்ட ஆவணங்களை காட்சிக்கு வைத்திருந்த நான்காவது குற்றச்சாட்டும் அவர் மீது கொண்டுவரப்பட்டது.

அரவிந்தன் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எஸ். என் ராயர்‌,பாலமுருகன் சார்பில் வழக்கறிஞர் மேத்யூஸ் ஜூட் மற்றும் வழக்கறிஞர் பர்ஹான் பாட்ஷிலும் ஆஜராகினர்.

2012 ஆம் ஆண்டில் பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் 13-வது விதியின் கீழ் அரவிந்தன் மற்றும் பாலமுருகனுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டதால் அவர்களுக்கு அரசு தரப்பு ஜாமீன் வழங்கக் கூடாது என ட்அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரொஹாய்டா குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் அனுமதி மறுப்பதாக தெரிவித்தார்.

அதோடுகுற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் நவம்பர் 28ஆம்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் பெறுவதற்காக ஈப்போ உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு – சாமிநாதன், குணசேகரன், சந்துரு‌ மீது குற்றச்சாட்டு


ஜ.செ.க.வின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி. சாமிநாதன், நெகிரி செம்பிலான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் மற்றும் மலாக்கா அரசு சார்பு நிறுவனத்தின் அதிகாரி எஸ். சந்துரு ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி இரவு 8 .30 மணிக்கும் 10.50 மணிக்குமிடையே மலாக்கா தாமான் ஆயர் கெரோ ஹைட்ஸில் , ஆயர் கெரோ டேவான் கஸ்தூரியில் 34 வயதுடைய சாமிநாதன், 60 வயதுடைய குணசேகரன், 38 வயதுடைய சந்துரு ஆகியோர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

இவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஆயுட்கால தண்டனை அல்லது கூடிய பட்சம் 30 ஆண்டுகள் சிறை , அபராதம் மற்றும் குற்றம் புரியும் நோக்கத்தோடு சொத்துக்களையும் பயன்படுத்தி இருந்தால் அவற்றை பறிமுதல் செய்வதை வழிவகுக்கும்‌ குற்றவியல் சட்டத்தின் 130 J (1) (a)jவிதியின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் தனது கைத்தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை அம்சங்களுக்கான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் சாமிநாதன் மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது கடந்த அக்டோபர் மாதம்

10 ஆம்தேதி காலை 10.25 அளவில் மலாக்காவில் முதலமைச்சர் துறையிலுள்ள மனிதவள ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் விவாகரத்துக்கான ஆட்சிக்குழு அலுவலகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணத்தை பறிமுதல் செய்யக் கூடிய குற்றவியல் விதியின் 130 JB(1) (a) கீழ் அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெலிசாபெட் பாயா வான் முன்னிலையில் அந்த மூவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர்கள் அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலை அசைத்தனர்.

இவர்கள் மீண்டும் டிசம்பர் 16-ம் தேதி நீதிமன்றத்தில்‌ நிறுத்தப்படுவார்கள். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

டி.பி.பி . முகமட் இஸ்கந்தர் அகமட் மற்றும் முகமட் இஷானுடின் அலியாஸ் ஆகியோர் அரசு தரப்பில் ஆஜராகிய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் ராம் கப்பார்சிங் தலைமையில் ஐந்து வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

சொஸ்மா சட்டத்தின் 13 வது விதியின் கீழ் அந்த மூவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லையென

டி.பி.பி முகமட் இஸ்கந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று காலை மணி 10 45 அளவில் மலாக்கா செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திலிருந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.

Read more...

குங்குமத்தை அழிக்கச் சொல்வதற்கும் பர்தாவை அணியாதே என்று கூறுவதற்கும் எவருக்கும் அதிகாரம் இல்லை - அனுர குமார.

தமிழ் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணை பார்த்து பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

அத்துடன் கடந்த காலங்களில் இந்த நாடு பாரிய மோதல்களுக்கு முகங்கொடுத்துவிட்டது . இனியும் அவ்வாறான நிலையை உருவாக்காது நாடாக நாம் முன்னோக்கி செல்ல முயற்சிக்க வேண்டும். இதில் சகல மக்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். இன்று எமது நாட்டுக்கு புதிய அபிவிருத்தி இலக்கொன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திகாரி நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இன்று நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ளது. சமூகமாக பாரிய குற்றங்கள் ஈடுபடும் நாடு, இன மத முரண்பாடுகள் நிகழும் நாடு. அடிப்படை தேவைகள் எவையும் மக்களுக்கு வழங்க முடியாத ஆட்சியே கொண்டுசெல்லப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இருந்து நாட்டினையும் மக்களையும் மீட்க வேண்டும்.

கடன்களில் இருந்து நாம் எவ்வாறு மீள்வது என்பதை சிந்திக்க வேண்டும். இது குறித்து ஆழமாக கலந்துரையாடி நாம் தீர்வுகளை உருவாக்கியுள்ளோம். கடன்களை சரியான அபிவிருத்திக்கு உட்படுத்தியிருந்தால் இன்று எமக்கு இந்த நிலைமை உருவாகாது. கடன்களை மீள செலுத்தும் உறுதியாக அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் ஆறு வருடங்களில் முழுக் கடனையும் மீள செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நாம் உருவாக்குவோம்.

கிராமிய மக்களின் கடன் நெருக்கடியில் இருந்து அவர்களை மீட்கும் உறுதியான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்போம். குறிப்பாக இன்று வடக்கில் தான் மக்கள் அதிகமாக கடன்களில் நெருக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இவர்களை மீட்டெடுக்க நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். விவசாயம், தொழில்வாய்ப்பு மூலமாகவே அவர்களை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

Read more...

இருதலைக்கொள்ளி எறும்பாக ஜனாதிபதி மைத்திரி!

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் தனது நிலைப்பாடு பற்றி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முன்வரவுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் சுயாதீனமாக செயற்படுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். தான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலகட்டத்தில் தன்னால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும், கொடுத்த வாக்குறுதிகள் பற்றியும் தெரிவிக்கவுள்ளார்.

சென்ற ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றி ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விடயங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் தற்போது சஜித் பிரேமதாச ஆதரவாளர்களும் மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோர் சார்ந்த 15 அமைச்சுக்கள் ஊழல், முறைகேடுகள் பற்றிய அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

Read more...

Monday, October 28, 2019

எவனோ ஒருவனை சிம்மாசனத்தில் அமர்த்துவதற்காக அப்பாவிகளை பாடையேற்ற தயாராகும் குண்டுத்ததாக்குதல்கள். பீமன்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நற்பெட்டிமுனைப் பிரதேசத்தில் சில ஆயுததாரிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் பிரதேசத்திற்குச் சென்ற படையினரால் குறித்த நபர்களை கைது செய்ய முடியாது போயுள்ளது.

ஆயுததாரிகளின் நடமாட்டம் தொடர்பான தகவல் போலியானது என்று எடுத்துக்கொள்வதற்கு இல்லை. காரணம் ஆயுததாரிகள் பாதையால் சென்ற நாவிதன்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட நபர் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இன்று காலை தெருவோரத்தில் வெடிகுண்டு ஒன்றை அவதானித்த நபர் ஒருவர் பாதுகாப்பு தரப்பிரனருக்கு அறிவித்ததை தொடர்ந்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், இடம்பெறவிருந்த அனர்த்தம் ஓரளவிற்கு தடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

யார் இந்த ஆயுததாரிகள்? இவர்களது நோக்கம் என்னவாக இருந்திருக்கவேண்டும் என்பது இங்கு தெட்டத்தெளிவானது. யார் என்ற கேள்விக்கு பதிலை நேரடியாக கூறுவதானால் அவர்கள் முஸ்லிம்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுவிட்டால் குய்யா முய்யா என்று ஒரு கூட்டம் வரும். அவர்களை பற்றிய அச்சத்தில் அவ்வாறு குறிப்பிடுவதை தவிர்க்கவில்லை. காரணம் இது இஸ்லாமிய பயங்கரவாத நோக்கம் கொண்ட கூட்டம் அல்ல. இவர்கள் அரசியல்பயங்கரவாதிகள். ஏதோ ஒரு தரப்பை வெல்ல வைப்பதற்காக அல்லது தோற்கடிப்பதற்காக நாட்டில் இரத்த ஆறினை ஓடவைக்க முனையும் வெறும் வன்செயல் மீது காதல்கொண்ட கூலிப்படைகள். இவர்களுக்கு இஸ்லாத்தின் மீதோ அன்றில் இஸ்லாமிய மக்கள் மீதோ எவ்வித கருணையும் கிடையாது. மொத்தத்தில் ஏவலாளிகள்.

நடைபெறவிருக்கின்ற தேர்தல் வெற்றி-தோல்வியை தமிழ், முஸ்லிம், சிங்கள இனவாதிகளின் வாக்குகளே தீர்மானிக்கப்போகின்றது. குறித்த இனவாதிகள் வேட்பாளர்களின் தாராதரம் அவர்களின் தூநோக்கு சிந்தனை, வினைத்திறன், நேர்மை, அர்பணிப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்டு வேட்பாளரை தெரிவு செய்யப்போவதில்லை, மாறாக அவர்களை ஆட்டிப்படைக்கின்ற இனவாதபேயே வேட்பாளரை தெரிவு செய்யப்போகின்றது. அந்த அடிப்படையில் சிங்கள இனவாதிகள் தனது இனத்திற்கு மிகவும் விசுவாசமானவன் அல்லது இனத்தின் பாதுகாவலன் என கருதுகின்றவனை தெரிவு செய்கின்ற அதேநேரம்; தமிழ் , முஸ்லிம் இனவாதிகள் தங்களது இனத்திற்கு நன்மை செய்யக்கூடியவனா என்ற விடயத்தை ஆராய்வதை விடுத்து இனத்திற்கு எதிரானவன் என கருதுகின்றவவனை தோற்கடிப்பதில் கவனம் செலுத்தப்போகின்றனர்.

எனவே இந்த இனவாதப்பேயை உருவேற்றுவதற்காக இலங்கையின் நாலா பக்கங்களிலும் இனக்குழுமங்களிடையே மோதல்களை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒருபகுதியே நற்பெட்டிமுனையில் கண்டெடுக்கப்பட்டுள்ள குண்டாகும். நற்பெட்டிமுனையென்பது நான்கு பக்கங்களும் தமிழ் கிராமங்களால் சூழப்பட்ட தமிழ்-முஸ்லிம் கிராமமாகும். கிழக்கில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் கலவரங்களை எடுத்துநோக்குகையில் தமிழ்-முஸ்லிம் கிராமமான நற்பெட்டிமுனையில் கலவரங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்பதும் முடிந்தளவு இக்கிராமத்து மக்கள் மிகவும் உறவாடி வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த குண்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் இன்று நிர்ப்பந்திக்கப்படுகின்றது. அச்சமூகம் தனது இக்கடமையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுமாகவிருந்தால் கிழக்கில் இரத்த ஆற்றில் இருசமூகங்களும் முக்குளிக்கவேண்டிவரும் என்பது தவிர்க்க முடியாதது.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை தமது சமூகத்தில் எந்த காடைத்தனம் இடம்பெற்றாலும் முஸ்லிம் நாமத்தை கொண்டுள்ளவன் என்ற ஒரேகாரணத்திற்காக காடையர்களை அது காப்பாற்றுகின்றது. ஆனால் காடையர்களுக்கு அந்த சமூகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையும் அவர்கள் வெறும் கூலிப்படைகள் , கொந்தராத்துக்காரார்கள் என்பதையும் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே இன்று இந்த நாட்டில் யாருக்கு ஒரு வன்செயல் தேவைப்படுகின்றது? இதனால் யார் எவ்வாறு பயன்பெறப்போகின்றார்கள் என்பதை நன்றாக யோசித்தறிந்த ஒவ்வொருவரும் கூலிப்படைகளை இனம்காண அர்பணிப்புடன் செயற்பட்டு எதிர்காலத்தில் இந்தநாட்டில் ஒரு துளி இரத்தம்கூட சிந்துவதற்கு வழிவிடக்கூடாது என்பதே இந்நாட்டில் அமைதியாக வாழ விரும்புகின்ற மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Read more...

மலேசியாவில் கைது செய்யப்பட்ட பன்னிருவர் மீதான விசாரணைகள் நிறைவு. நாளை மன்றில் நிறுத்தப்படுகின்றனர்.

பயங்கரவாத அமைப்பாக மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உள்பட 12 பேர் மீது நாளை செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.

இவர்கள் அனைவரையும் நாளை காலை 8.30 மணி அளவில் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இவர்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையினை மலேசிய பயங்கரவாத தடுப்பு பொலிஸார் சட்டத்துறை தலைவரிடம் வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த அறிக்கையின் மீது போலீஸ் துறை திருப்தி அடைந்திருப்பதாக புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் துணைத் தலைவர் அயோப்கான் மைடின் பிச்சை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 23ஆம் தேதி, புதன்கிழமை அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தாங்கள் சட்டத்துறைத் தலைவரின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் பத்திரிகையாளர்கள் மைடின் பிச்சையிடம் கேட்டபோது, நேற்று தீபாவளி தினத்தின்போது, தடுத்து வைக்கப்பட்டோரின் குடும்பத்தினர் , காலை 9லிருந்து மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப் பட்டனர். தடுத்து வைக்கப்பட்டோரில் சிலர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கடுமையான நோய் பிரச்சினை எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.

இதேநேரம் விசாரணை அறிக்கையை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் தாங்கள் ஒப்படைத்து விட்டதாக போலீசார் அறிவித்துவிட்டதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஜ.செ.கவின் சட்ட விவகாரப் பிரிவின் தலைவர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.

சொஸ்மா சட்டத்தின்கீழ் ஒருவரை 28 நாட்களுக்கு தடுத்து வைக்க முடியும் என்றாலும் விசாரணை முடிந்துவிட்டதாக போலீஸ் அறிவித்து விட்டதால் அவர்களை தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை என ராம் கர்ப்பால் கூறுகின்றார்.

போதுமான ஆதாரம் இருந்தால் அவர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டும்படி அவர் கேட்டுக்கொண்டார் இதன்வழி அவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியும் என்றும் சுட்டிக்காட்டும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினரும் காடேக் சட்டமன்ற உறுப்பினருமான ஜி சாமிநாதன் மற்றும் சிரம்பான் சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் ஜாமினில் விடுவிக்கப்பட வேண்டும் என ராம் கர்ப்பால் தெரிவிக்கின்றார்.

Read more...

பின்கதவால் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டுதான் இருக்கின்றார்களாம்! கூறுகின்றார் சுமந்திரன்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நடத்திவரும் பேச்சுக்கள் தொடரும். ஐந்து கட்சிகள் கூட்டு உருவாக்கப்படுவதற்கு முன்னரே கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டது. அந்தப் பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம்பெறும்.' துமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கைகயில் :

'5 கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது ஆவணத்தைத் தயாரிப்பதற்கு முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுடன் பேச்சை ஆரம்பித்தது. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுடன் பேச்சு நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சுக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கும்.

5 கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளுடனேயே பேச்சு நடத்தமாட்டோம் என்று பிரதான வேட்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், நாம் (கூட்டமைப்பு) அவர்களுடன் ஏற்கனவே நடத்தி வருகின்ற பேச்சுக்கள் தொடர்ந்து இடம்பெறும்' – என்றார்.

சுமந்திரனின் மேற்படி கூற்றானது 5 கட்சிகள் இணைந்து எட்டப்பட்ட முடிவுகளுடன் தங்களிடையே பொதுவான உடன்பாடு இல்லையென்பதை துல்லியமாக காட்டுகின்றது. எந்ந வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கட்சியின் பங்காளிகளிடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளதுடன், ஒவ்வொருவரும் மறைமுகமாக தங்களுக்கு வேண்டியவர்களை ஆதரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் சுமந்திரன் தாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நாடாத்திக்கொண்டிருப்பதாக மக்களை ஏமாற்ற முனைகின்றார்.

கோரிக்கைகளை தயாரிப்பதற்கு முன்னரே பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூறுகின்றார். அவ்வாறாயின் இதுவரை இடம்பெற்ற பேச்சுக்களில் எந்தத்தரப்பிடமிருந்து என்னென்ன முன்மொழிவுகள் வைக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தமிழ் மக்களுக்கு சுமந்திரன் மறைத்துவருவது ஏன்? அவ்வாறாயின் இறுதியில் தாங்கள் விரும்பும் ஒரு கட்சியை தெரிவு செய்து மக்களை அக்கட்சிக்காக வாக்களிக்க தூண்டுவதே அதன் நோக்கமாகும்...

Read more...

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் வெளியிடப்படவுள்ளது. முதல் பிரதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 31 ஆம் திகதி கண்டியில் வெளியிடப்பட உள்ளது.

கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள நிகழ்வில், அவருடைய தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெறும் என தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு குழுவின் தலைவர் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகள, கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளிடம், சஜித் பிரேமதாச அவர்களினால் 31 ஆம் திகதி காலையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இம்முறை 2015 ஆம் ஆண்டில் பெரும்பான்யைமான முற்போக்கு, புத்தாக்க முயற்சியுடைய நாட்டின் பெண்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பிரஜைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து உருவாக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் இதுவாகும் என அமைச்சர் மங்கள குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

"ராஜபக்ஷக்களின் தேவதைக் கதைகளைப் போன்றல்லாது, நாம் இம்முறையும் சொல்வதை செய்வோம். நாம் எமது தேர்தல் விஞ்பானத்தை எதிர்வரும் 31ம் திகதி கண்டியில் வெளியிட உள்ளோம்.

ராஜபக்ஷக்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் தமது தேர்தல் விஞ்ஞாபனம் வித்தியாசமானது, நான் ராஜபக்ஷக்களின் அண்மைய தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி மட்டும் பேசவில்லை 2005 மற்றும் 2010ம் ஆண்டிலும் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சொல்வதை அவர்கள் செய்தது கிடையாது, சொல்வது ஒன்று அவர்களினால் செய்யப்படுவது வேறொன்று.

2005ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதாக கூறினார்கள். சம்பள அதிகரிப்பு செய்வதாகவும் மக்களுக்கு போசாக்கு பொதியொன்றை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தனர்.

எனினும், உறுதியளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டு, சர்வாதிகார ஆட்சியொன்றை மேற்கொள்வதற்கே ராஜபக்ஷ தரப்பு முயற்சிக்கின்றது. குடும்ப ஆட்சியை நிறுவிக் கொள்ளக்கூடிய, இழிவான சர்வாதிகார தீர்மானங்களையே எடுத்திருந்தனர்.

எனினும், நாம் 2015 ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளில் 80 வீதமானவை பூர்த்தி செய்துள்ளோம். இம்முறையும் நாம் சொல்வதை செய்வோம்.

இம்முறை மிகச் சிறந்த தேர்தல் விஞ்ஞாபனமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

அசான்ஜ் ஒப்படைப்பு வழக்கின் தாமதத்தை இங்கிலாந்து நீதிபதி நிராகரிக்கிறார்! By Laura Tiernan

சிறையிலடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் கடந்த 21 அன்று இலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். இது, ஏப்ரல் 11 அன்று ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து பிரிட்டிஷ் பொலிஸ் அவரை கைது செய்து அதிகூடிய பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையிலடைத்ததற்கு பின்னர் பகிரங்கமான அவரது மூன்றாவது பிரசன்னமாகும்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி உலகளவிலான கவனத்தை ஈர்த்தவரும், மேலும் அதற்காக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பல ஊடகத்துறை விருதுகளை பெற்றவருமான அசான்ஜ் ஒரு பாதுகாப்பான செர்கோ சிறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்தார்.

நீதிபதி வனேசா பாரைட்சர் அவரது பெயரையும் பிறந்த தேதியையும் கூறும் படி கேட்டபோது, வலுவான கண்ணாடி பலகங்களால் மூடப்பட்ட கைதி கூண்டில் நின்ற அசான்ஜ் சிந்தனையளவில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டார்.

ஒன்றரை மணிநேர வழக்கு மேலாண்மை விசாரணையின் ஆரம்ப தருணங்களிலேயே அசான்ஜ் மீதான பாரைட்சரின் பழிவாங்கும் தன்மை அப்பட்டமாகத் தெரிந்தது. பொதுமக்கள் காட்சி கூடத்தில் அமர்ந்தவாறு அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த அசான்ஜின் ஆதரவாளர்கள் “தொந்திரவு செய்தால்…. வெளியேறும் படி அவர்கள் கேட்கப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார். அங்கு அமர்ந்திருந்தவர்களில் விக்கிலீக்ஸின் ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான கிறிஸ்டின் ஹ்ராஃப்சன், புலனாய்வு ஊடகவியலாளர் ஜோன் பில்ஜெர் மற்றும் இலண்டனின் முன்னாள் மேயர் கென் லிவிங்ஸ்டன் ஆகியோர் அடங்குவர்.


கிறிஸ்டின் ஹ்ராஃப்சன் (இடது) விசாரணைக்குப் பின்னர் பேசுகிறார் அருகே ஜோன் பில்ஜெர்

அமெரிக்க நீதித்துறை சார்பாக ஆஜரான ஜேம்ஸ் லூயிஸ் QC, “ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை திட்டங்கள் சம்பந்தமான அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக “உளவு பார்த்தது” மற்றும் “செல்சியா மானிங்கின் குற்றச்செயலுக்கு துணைநின்றது” குறித்து “திரு அசான்ஜை தன்னிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசாங்கம் கோருகிறது” என்று தெரிவித்தார். மேலும், அசான்ஜ் “ஒரு ஊடகவியலாளர் அல்ல” என்றும் வலியுறுத்தினார். இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தை மேற்கோள் காட்டி, அவரது நடவடிக்கைகள் “அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இரு நாடுகளிலும் குற்றகரமாக” இருந்தன என்றும் அவர் கூறினார்.

அசான்ஜ் சார்பாக மார்க் சம்மர்ஸ் QC ஆஜராகி, தனது கட்சிக்காரருக்கு எதிரான ஒப்படைப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 2003 இங்கிலாந்து/அமெரிக்க ஒப்படைப்பு ஒப்பந்தம், “அரசியல் குற்றத்திற்காக ஒப்படைப்பு செய்ய கோரப்படும் பட்சத்தில், அந்த ஒப்படைப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று வெளிப்படையாக கூறுகிறது. இந்நிலையில், தனது கட்சிக்காரரின் அரசியல் நோக்கங்கள் “நன்கு அறியப்பட்டவை” என்று சம்மர்ஸ் கூறினார்.

சம்மர்ஸ் தொடர்ந்து, 2010 முதல் அசான்ஜ் மற்றும் அமெரிக்க இராணுவ தனியார் இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கிற்கும் எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் “புலனாய்வு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் உள்ளடங்கலான இரகசிய செய்தி வெளியீட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட போரின் ஒரு பகுதியாக” இருந்தன என்று தெரிவித்தார். மேலும், ஈக்வடோர் மீதும், மற்றும் அசான்ஜிற்கு எதிராக பொய் சாட்சியமளிக்க மறுத்ததற்காக தற்போது சிறையில் இருக்கும் மானிங் மீதும் அமெரிக்க அரசு அரசியல் அழுத்தம் கொடுத்து வந்தது. விக்கிலீக்ஸ் ஒரு “விரோத அரசு-சாரா புலனாய்வு அமைப்பு” என்று விவரிக்கப்பட்டு, மேலும் இந்த வழக்கு ட்ரம்ப் நிர்வாகம் மூலம் “புத்துயிர்” பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான இந்த தாக்குதல் “முன்னுதாரணமற்றது”.

பெப்ரவரி 25 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒப்படைப்பு விசாரணையை மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைக்க அனுமதிக்கும் படி பாரைட்சரிடம் சம்மர்ஸ் கோரினார். அசான்ஜின் சட்ட உரிமைகளுக்கு எதிரான சட்டவிரோதமான அமெரிக்க தலையீட்டின் “வழமைக்குமாறான” வெளிப்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். ஸ்பானிய பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக அசான்ஜ் எடுத்த சட்ட நடவடிக்கை, ஈக்வடோர் தூதரகத்தில் அசான்ஜ் மற்றும் அவரது வழக்கறிஞர்களிடையே நடந்த “சிறப்புரிமை பெற்ற விவாதங்களில் அமெரிக்கா தீவிரமாக தலையீடு செய்தை” அம்பலப்படுத்தியது.

அமெரிக்க அரசு, தொலைபேசி மற்றும் கணினிகளிலிருந்து சட்டவிரோதமாக தகவல்களை திருடுவது, “அலுவலகங்களுக்குள் முகமூடியணிந்த நபர்களை அனுப்பி சேதப்படுத்துவது” மற்றும் “அசான்ஜை கடத்தவும் துன்புறுத்தவும் திட்டமிடுவது” ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தது.

“வெளிப்படையாக கூறினால், எங்களுக்கு இன்னும் அதிக நேரம் தேவை,” என்று அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் உள்ள சிக்கல்களின் “முக்கிய தன்மையின் காரணத்தினால்” “பெரும்பாலான வழக்கறிஞர்களால் பரிசோதிக்கப்படவேண்டிய ஆதாரங்களை சேகரிப்பதும்” இதற்கு அவசியமாகிறது என்றும் கூறினார்.

பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் எதிர்கொள்ளும் நிலைமைகள் காரணமாக தாமதிப்பதும் தேவைப்பட்டது என்று சம்மர்ஸ் விளக்கமளித்தார். அவரது கட்சிக்காரர், தகவல்களை அணுக முடிவதில்லை, அவரது அமெரிக்க சட்டக்குழுவுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடிவதில்லை, மேலும் அவருக்கிருந்த அஞ்சல் கட்டுப்பாடுகளினால் இன்றைய விசாரணைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவர் தனது வழக்கறிஞர்களிடமிருந்து நீதிமன்ற ஆவணங்களை பெற்றிருக்கிறார் என்று மேலும் விளக்கமளித்தார்.

அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக பாரைட்சருக்கு லூயிஸ் பதிலளிக்கையில், “அசான்ஜின் வழக்கறிஞர்கள் மூன்று மாத கால தாமதத்திற்கு வாதிடுவதை “ஒப்புக்கொள்வதில் நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது” என்று கூறினார். “இது ஒரு மதிப்பீடு மட்டுமே.”

முழு ஒப்படைப்பு விசாரணைக்கான பெப்ரவரி தேதி “நிலையானது அல்ல” என்று பாரைட்சரிடம் சம்மர்ஸ் முறையிட்டார். நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கான அசான்ஜின் உரிமைக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டு வந்தது என்று அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.

ஆயினும், பாரைட்சர், “லூயிஸ் பரிந்துரைத்த கால அட்டவணையை பின்பற்றுவதே எனது நோக்கமாகும்” என்று இரக்கமின்றி தெரிவித்தார். மேலதிக ஆதாரங்களைத் திரட்ட இரண்டு மாத கால நீட்டிப்பை பிரதிவாதி தரப்பினருக்கு அவர் வழங்கிய அதேவேளை, முழு ஒப்படைப்பு விசாரணை பெப்ரவரி 25 அன்று தொடரும் என்று தீர்ப்பளித்தார்.

இறுதியான பழிவாங்கும் நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு ஒரு வாரத்திற்கு நீடிக்கும் ஒப்படைப்பு விசாரணை பெல்மார்ஷ் சிறைக்கு அருகிலுள்ள பெல்மார்ஷ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலேயே நடத்தப்படும் என்று பாரைட்சர் தெரிவித்தார். பாரைட்சர் இதை அறிவிக்கையில் பொதுமக்கள் கூடத்தில் பெருமூச்சுவிடும் சப்தங்கள் கேட்டன. பெல்மார்ஷ் சிறைக்கு அருகிலுள்ள இடத்தில் ஐந்து இருக்கைகளைக் கொண்ட “பொதுமக்கள் கூடம்” தான் உள்ளது என்ற நிலையில், இது அனைத்தையும் பொதுமக்களினால் கண்காணிக்கப்படுவதை மறுப்பதுடன், குறிப்பிட்ட தகவல்களை மட்டும் வெளியிடும் வகையில் ஒருபக்க சார்புடைய ஊடகங்கள், தேர்ந்தெடுத்த தவறான தகவல்களையும் பொய்களையும் பரப்ப அனுமதிக்கிறது.

பாரைட்சரின் இடத் தேர்விற்கு சம்மர்ஸ் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தை சென்றடைவது கடினம் என்பதற்காக மட்டுமல்லாது –சட்டக்குழுவிற்கு ஏற்கனவே சாத்தியப்படாத அட்டவணையாக அது இருப்பதுடன் அவர்களின் வேலைப்பழுவையும் சேர்த்து– அங்கிருக்கும் வசதிகள் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தை விட குறைவாக இருந்தன என்பதுடன், இரகசிய சட்ட விவாதங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கூட்ட அறைகள் கூட அங்கு இல்லை என்பது போன்ற அவரது கவலைகள் நிராகரிக்கப்பட்டன.

விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், பாரைட்சர் அசான்ஜின் பக்கம் திரும்பி அவரை எழுந்திருக்கச் சொன்னார். பின்னர், “இன்று இங்கே என்ன நடந்தது என்பது உங்களுக்கு புரிகிறதா?” என்று கேட்டார்.

பல மாதங்கள் தனிமைச் சிறைவாசத்தை சகித்தவரும் மற்றும் வெளிப்புறத் தகவல்களை தினசரி அணுக முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான அசான்ஜ், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், “எனக்கு புரிகிறதா? என்றால், உண்மையில் இல்லை” என்று பதிலளித்தார்.

“நீங்கள் வேறெதையும் சொல்ல விரும்புகிறீர்களா?” என்று பாரைட்சர் அவரிடம் கேட்டார்.

“இது எவ்வாறு பாரபட்சமற்றது என்பது எனக்கு புரியவில்லை.” கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அசான்ஜ் பதிலளித்தார், என்றாலும் மென்மையாகவும் சில நேரங்களில் செவிக்கு புலப்படாத வகையிலும் அவர் பேசினார். “இந்த வழக்கிற்கு தயாராவதற்கு இந்த வல்லரசுக்கு 10 ஆண்டுகள் இருந்தன. என்னால் எதையும் நினைவுபடுத்த முடியவில்லை. என்னால் எழுதப்பட்ட எதையும் என்னால் அணுக முடியவில்லை. ஒரு வல்லரசின் நோக்கத்திற்கு எதிராக இதுபோன்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு எதையும் செய்வது மிகவும் கடினம்…. [செவிக்கு புலப்படவில்லை] ஆவணங்களை கையாள்வதில் அவர்கள் நியாயமற்ற தன்மையுடன் இருக்கிறார்கள். எனது உளவியலாளர் மூலம் எனது வாழ்வின் உட்புறத்தை அவர்கள் [அறிவார்கள்]. அவர்கள் எனது குழந்தைகளின் டி.என்.ஏ. ஐ திருடுகிறார்கள். எனவே, இங்கே நடப்பதில் பாரபட்சம் உள்ளது” என்றார்.

பின்னர், “என்னால் சரியாக சிந்திக்க முடியவில்லை,” என்றவர் முடித்தார், கண்ணீருடன் போராடி, இரு கைகளையும் தனது தலைக்கு மேல் உயர்த்தினார். இது குறித்து, “நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்படாது,” என்று பாரைட்சர் பதிலளித்தார். பொதுமக்கள் கூடத்தில் அமர்ந்திருந்த அவரது ஆதரவாளர்களின் பார்வைக்கு புலப்படாத வகையில், அசான்ஜ் கைதி கூண்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் பேசிய கடைசி வார்த்தைகளாக அவை இருந்தன.

விசாரணைக்கு பின்னர் பேசிய விக்கிலீக்ஸின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்சன் இவ்வாறு தெரிவித்தார்: “இந்த வழக்கு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஒப்பந்தத்தை எதிர்கொள்கையில் இது சட்டவிரோதமானது என்பதால் மட்டுமல்லாது, ஸ்பெயினில் பெரும்பாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகளில், அசான்ஜ் மற்றும் அவரது வழக்கறிஞர்களுக்கு எதிராக சட்டவிரோதமான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது என்பதற்காகவும் தான்”

நீதிமன்றத்திற்கு வெளியே, ஹ்ராஃப்சனும் பில்ஜெரும் அன்று காலை முழுவதும் அங்கு காத்திருந்த சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்பு உரையாற்றினர். அந்த கூட்டம், பிரான்சிலிருந்து கோச் வண்டி மூலம் இரவு முழுவதும் பயணித்து அங்கு வந்து சேர்ந்திருந்த டசின் கணக்கான மஞ்சள் சீருடையாளர்களையும் உள்ளடக்கியது.


அசான்ஜிற்கு ஆதரவாக பிரான்சிலிருந்து கலந்து கொண்ட சுமார் 100 மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பில்ஜெர் பின்வருமாறு தெரிவித்தார்: “முழு விடயமும் கோரமான அபத்தமானது. இந்த நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒப்படைப்புச் சட்டம் உள்ளது. இது குறிப்பாக, குற்றங்கள் அரசியல் சார்ந்தவையாக இருப்பின், சம்பந்தப்பட்ட எவரையும் பிற நாட்டிடம் ஒப்படைக்க முடியாது என்று தெரிவிக்கிறது… இது ஒரு சிறிய கிளர்ச்சியும் அல்ல, இது ஒரு கருத்தும் அல்ல, மாறாக அவை அரசியல் சார்ந்தவை. ஒன்றைத் தவிர அனைத்தும் 1917 உளவுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை, இந்த சட்டம் அமெரிக்காவில் முதல் உலகப் போரின்போது நேர்மையாக எதிர்ப்பவர்களை சிறையிலிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பில்ஜெர், “ஒரு மோசடியான நாடு தான் இதற்கான மூலமாக உள்ளது – அதாவது அந்த நாடு அதன் சொந்த சட்டங்களையும், சர்வதேச சட்டங்களையும் மற்றும் இந்த நாட்டின் சட்டங்களையும் புறக்கணிக்கிறது” என்று கூறி நிறைவு செய்தார்.

Read more...

என்னை நம்புங்கள் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவேன். யாழில் திருநீற்றுப்பட்டையுடன் கோத்தா

இந்த நாட்டிலே உங்களிடம் வாக்குகளை பெற்றுக்கொண்டவர்கள் யாவரும் உங்களை காலம் காலமாக ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். ஆனால் என்மீது நம்பிக்கை வையுங்கள் நான் உங்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். நான் வரலாற்றில் உறுதிமொழி கொடுத்தவற்றை நிறைவேற்றிக்காட்டியிருக்கின்றேன் என தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

இன்று யாழில் நடந்த பிரச்சார கூட்டத்தில், கோட்டாபய உரையாற்றியபோது, மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் அங்கு பேசுகையில்:

வணக்கம், தீபாவளி வாழ்த்துக்கள்

சுதந்திரத்திற்கு பின்னர் இருந்த அரசியல்வாதிகள் நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளை வழங்கியதால், உங்களிற்கு எம் மத்தியில் நம்பிக்கையில்லாமல் போயிருக்கலாம். அனால் நீங்கள் என்னில் நம்பிக்கை வைக்கலாம். நான் பொறுப்பேற்ற அனைத்தையும் 100 வீதம் நிறைவேற்றியிருக்கிறேன்.

நான் தேர்தல் விஞஞாபனத்தில் உங்களின் பிரச்சனையை தீர்ப்பதாக கூறியிருக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்ததும் உங்களின் அனைத்து பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன். உங்களில் சில தலைவர்கள், இன்னும் உங்களை கடந்தகாலத்திலேயே வைத்திருக்கிறார்கள். நான் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறேன். நான் உங்களிற்கு சகல சௌபாக்கியங்கழளையும் பெற்று தருவேன்.

நீங்கள் இங்கு காணும் அபிவிருத்தி அனைத்தும் மகிந்த ராஜபக்ச காலத்திலேயே நடந்தது. வீதிக்கட்டமைப்பு, புகையிரதம், மின்வசதி அனைத்தும் அவர்கள் காலத்திலேயே நடந்தது. 2009 இன் முன்னர் இங்கு பல இராணுவ முகாம்களும், இராணுவத்தினரும் இருந்தனர். ஆனால் 2009 இன் பின்னர் இராணுவம் இருந்த தனியார் காணிகளில் 90 வீதமானவற்றை விடுவித்தது நான்.

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காங்கேசன்துறை, வளளாய், தொண்டமானாறு வரையான காணிகளை விடுவித்தேன். எஞ்சியிருக்கும் காணிகளை விடுவிப்பது பற்றி டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி வந்தேன். அந்தகாணிகள் விடுவிக்கும் வரை அந்த காணிக்குரியவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதித்தேன். எனினும், 205இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதால் எஞ்சியதை செய்ய முடியவில்லை.

நான் தேர்தல் விஞஞாபனத்தில் அபிவிருத்தியை பற்றியே விசேடமாக பேசியிருக்கிறேன். அந்த விஞஞாபனத்தில் விவசாயிகளிற்கு உரம், நிவாரணம் வழங்க, கடன்களை இரத்து செய்ய அதில் குறிப்பிட்டுள்ளேன். மக்களை முன்னிலைப்படுத்திய, மக்களின் விஞ்ஞாபனமாகவே இதை அமைத்துள்ளோம்.

மீனவ சமூகத்திற்கு கடன், படகு வழங்க, இளைஞர் யுவதிகளிற்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறென். இளைஞர்கள் தரமான கல்வியை பெற்றுக்கொள்ளாததால் வேலையற்று பிரச்சனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனது அரசின் கீழ் தரம்மிக்க கல்விக்காக பாரிய கல்வியை வழங்குவேன்.

உயர்தரம் சித்தியடைந்து பல்கலைகழகம் போக முடியாதவர்களிற்கும் பல்கலைகழகம் போக வசதியேற்படுத்துவேன். சாதாரணம் சித்தியடைந்து உயர்தரம் சித்தியடையாத மாணவர்களிற்கு தொழிற்கல்வி, தொழில்நுட்ப,கைத்தொழில் அறிவை பெற்றுக்கொடக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

நாம் குறுகிய, நீண்டகால திட்டமாக நல்ல கல்வியை வழங்குவோம். அதை முடித்தவர்களிற்கு வெலைவாய்ப்பு கிடைக்கும் விதமான கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வொம். இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேற்றமடைய காரமாக இருந்தது அறிவு சார்ந்த பொருளாதாரம்.

இலங்கை இளைஞர் யுவதிகள் நல்ல திறமைசாலிகள். கணினி, தொழில்நுட்ப அறிவை அவர்களிற்கு வழங்குவோம். இந்தியாவிலும் இப்படியான திட்டங்கள் உள்ளன. தகவல் தொழில்நுட்பம் சார்நத அறிவை மேற்கொள்ள கம்பனிகளை நிறுவ பெரும் முதலீடு செய்வோம்.

பொருளாதார விருத்தியை எற்படுத்த, இளையவர்களிற்கு வேலைவாய்ப்பை கொடுக்கவும் நான் ஆவண செய்வேன். எல்லோரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன்.

Read more...

அல் பக்தாதி கொல்லப்பட்டதில் அமெரிக்க ரஷ்யா விடையே முரண்பட்ட கருத்துக்கள். வழிவிடவில்லை என்கிறது ரஷ்யா!

இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுகின்ற ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அமெரிக்க புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல்களையடுத்து வடமேற்கு சிரியாவில் பக்தாதியின் மறைவிடத்தை நோக்கி அமெரிக்காவின் ஹெலிகொப்டர்களும், விமானங்களும் வான்வளி தாக்குதல் நடாத்தியதாகவும், விமானத்தாக்குதலில் இருந்து அவர் தப்பிச்செல்ல முற்பட்டபோது அப்பிரதேசத்தை அமெரிக்க தரைப்படைகள் சுற்றிவளைத்ததாகவும், தப்பிச்செல்ல முடியாமல் வேறு வழியின்றி தனது உடலில் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அதிலும் சில குழப்பங்கள் காணப்படுகின்றது. அதாவது இந்த இராணுவ நடவடிக்கைக்கு செல்லும்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை கடந்து சென்றதாகவும் அதற்காக அனுமதி வழங்கிய ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது.

ஆனால் அவ்வாறு எந்தவொரு அனுமதியையும் தாங்கள் வழங்கவில்லை என்றும், அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கருத்தினை ரஷ்யா மறுத்துள்ளதாலும், கடந்த காலங்களிலும் பக்தாதி கொல்லப்பட்டார் என்று பல தடவைகள் அமெரிக்கா அறிவிப்பு செய்ததுமேதான் இந்த குழப்பத்துக்கு காரணமாகும். எதுஎவ்வாறாகவிருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதியே நேரடியாக பக்தாதியின் மரணத்தை உறுதிப்படுத்தும்போது அதனை நாங்கள் மறுதலிக்க முடியாது.

ஒசாமா பின் லேடன் அமெரிக்காவினால் கொல்லப்பட்டபின்பு அல்கொய்தா இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்களில் ஒருவராக இருந்த ஈராக்கை சேர்ந்த அபூபக்கர் அல் பக்தாதி என்பவன் ஐ.எஸ் இயக்கத்தை ஆரம்பித்திருந்தான் என்பதும் பின்னர் அவன் அமெரிக்காவினதும் யூதர்களினதும் செல்லப்பிள்ளை என்றும் பிரச்சராங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதும் யாவரும் அறிந்த விடயங்கள்.


Read more...

Sunday, October 27, 2019

பிரசாரத்தில் ஈடுபட வேண்டுமானால் பதவிகளிலிருந்து விலகுவீர்! CaFFE அமைப்பு ஆளுநர்களிடம் வேண்டுகோள்

ஜனாதிபதி பிரசாரத்தில் மகாண ஆளுநர்கள் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதோடு, அவ்வாறு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டுமானால் தமது பதவிகளிலிருந்து விலகுமாறு மாகாண ஆளுநர்களிடம் கோரிக்கை விடுப்பதாக CaFFE அறிவித்துள்ளது.

தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான, சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CaFFE) பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஆளுநர்கள் ஜனாதிபதி பிரசாரத்தில் ஈடுபடுவதை CaFFE கடுமையாக கண்டிக்கின்றது. நான்கு மாகாணங்களின் ஆளுநர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். ஆளுநர்கள் அரசியல் செய்ய விரும்பினால் அவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் அவர் கூறினார்.

தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் சுதந்திரமாக செயற்படப்போவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தபோதிலும், ஜனாதிபதி அவரது பிரதிநிதிகளாக நியமித்துள்ள மாகாண ஆளுநர்கள் பக்கச்சார்பாக செயற்படுவது ஒரு போதும் நியாயமானதல்ல என, CaFFE தெரிவிக்கிறது.

ஆளுநர்கள் தனது பதவிக்கு முந்தைய 'கௌரவ' பெயரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பக்கச்சார்பாக அரசியலில் ஈடுபடும் ஆளுநர்கள் தங்களது பதவியிலுள்ள 'கெளரவ' பெயருக்கு இழுக்காக நடக்கின்றனர் எனவும், மனாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மாகாண சபைகளின் ஆட்சி மாகாண ஆளுநர்களிடம் காணப்படுவதனால், மாகாண சபைகளுக்குச் சொந்தமான வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் அரச வளங்கள் தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுவதாக, முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இது தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறும் செயற்பாடு எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது தொடர்பான முறைப்பாடுகளை எமது அமைப்புக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 387 முறைப்பாடுகள் CaFFE அமைப்பிற்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதி மீறல்கள் மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே அவற்றில் பெரும்பாலானவையாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி: 0114341524, தொலைநகல்: 0112 866224, மின்னஞ்சல் info@caffesrilanka.com போன்றவற்றின் மூலம் CaFFE அமைப்பிற்கு தங்களின் முறைப்பாடுகளை பொதுமக்கள் வழங்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பைஷல் இஸ்மாயில் -

Read more...

MR கிளிநொச்சி 10% ன் கம்பரெலிய வீதியை முதல் மழையே கழுவிச் சென்றுவிட்டது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்படுவதற்கு பிரதான காரணமாக கூறப்பட்ட விடயம் 10% விவகாரமாகும். அதாவது சகல கொந்தராத்துக்களுக்கும் பசில் ராஜபக்சவுக்கு 10% வழங்கவேண்டும் என்று ஒருகாலத்தில் பேசப்பட்டது.

ஆனால் இன்று கிளிநொச்சியில் மிஸ்டர் 10% ஒருவர் இருக்கின்றார். அவர்தான் சிவஞானம் சிறிதரன். ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பரெலியவின் மொத்த வியாபாரியாக கிளிநொச்சியில் அறியப்பட்டுள்ள சிறிதரனுக்கு சகல கொந்தராத்துக்களிலும் 10% கொடுக்கப்படவேண்டும் என்ற நியதியாம்.

இங்கே காணப்படுகின்றவீதி கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில் உள்ளது. இவ்வீதியின் 200 மீற்றருக்கு கிறவல்போட்டு செப்பனிடுவதற்கு மக்களின் வரிப்பணத்தில் 20 லட்சங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதகாலத்திற்கு முன்பே செப்பனிடப்பட்ட வீதி முதலாவது மழையுடன் கரைந்து சென்றுள்ளது.



இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது சிறிதரனுக்கு 10% கொடுத்தால் மிகுதிப்பணத்திற்கு எங்களால் இவ்வாறுதான் செய்யமுடியும் என கொந்தராத்துக்காரர் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.

இங்கு மேலும் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் குறித்த வீதிக்கான கொந்தராத்தை பெற்றுக்கொண்டுள்ளது யாரெனின் பளை பிரதேச செயலர் ஜெயராணியின் கணவராகும். கிளிநொச்சி கச்சேரியில் கடமை புரியும் அவர் நீதிக்கு புறம்பாக கொந்தராத்தினை பெற்றுக்கொண்டதாக அறியமுடிகின்றது. அத்துடன் அரச ஊழியர்கள் இவ்வாறான கொந்தராத்துக்களை மேற்கொள்ளுகின்றபோது, மேற்கொள்ளப்படும் வேலைகளின் தரம் தொடர்பாக ஏனைய ஊழியர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றமுடியா அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதாகும்.

கிளிநொச்சியில் சகலதும் யானே என செயற்பட்டுவரும் கட்டப்பஞ்சாயத்து தலைவன் சிறிதரனால் அரச நிர்வாக சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதுடன் சகல விடயங்களிலும் மூக்கினை நுழைத்து 10% அடித்து வருவதனால் முழு மாவட்டத்தினதும் நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாக மக்கள் மிகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

பசில் 10% வாங்கினார் என்பதற்காக அந்த அரசாங்கத்தையே சிங்கள மக்கள் 2015 ல் தூக்கி எறிந்தனர். ஆனால் கிளிநொச்சியில் 10% வாங்கும் சிறிதரன் கிளிநொச்சியிலிருந்து தூக்கி எறியப்படுவாரா?

Read more...

ISIS தலைவரைச் சுட்டுச் சாய்த்ததாக உறுதிசெய்கிறது CNN

வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவம் நடாத்திய தாக்குதல் நடவடிக்கையில் இஸ்லாமிய அரசு அமைப்பு (ஐ.எஸ்.ஐ.எஸ்) தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத் தாக்குதலில் இறந்தவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரா என்பதை அறிய டி.என்.ஏ மற்றும் 'பயோமெட்ரிக்' சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத் தலைவரின் இறப்புக் குறித்து, டொனால்ட் டிரம்ப் இன்று சிறப்பு அறிக்கை வெளியிடவுள்ளார்.

(AFP)

Read more...

வெளிநாட்டுச் சக்திகளுக்கு அடிபணியாத தலைமைத்துவமே எமக்குத் தேவை! - அபயதிஸ்ஸ தேரர்

வெளிநாட்டுச் சக்திகளுக்குத் தலை சாய்க்காத தலைமைத்துவத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

'வியத்பவுர' எனும் அமைப்பு நேற்று வவுனியாவில் நடாத்திய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் உரையாற்றும்போது,

'ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் மேல் ஏறி அமெரிக்கா இங்கு உள்நுழையப் பார்க்கின்றது.

நல்ல நேரத்திற்கு மக்கள் அவசரப்பட்டு முஸ்லிம்களைத் தாக்கச் செல்லவில்லை.

இரண்டு வாரங்களுக்குப் பிறகே பிரச்சினைகளை மேற்கொண்டார்கள். மக்களை உசுப்பேத்துவதற்கான செயல் இதுவென்று உங்களுக்குத் தெரியவில்லையா?

மக்களை உசுப்பேதுவதேயன்றி வேறில்லை.... வெளிநாட்டுச் சக்திகளுக்குச் சோரம் போகாத தலைமை எதுவென்று தீர்மானிப்போம்... அந்தத் தலைமையைத் தேர்ந்தெடுப்போம்' எனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முஸ்லிம்களையும் குறிவைத்ததே! - அநுர குமார

சஜித் பிரேமதாசவின் மேடைகளில் அடிப்படைவாதிகளே நிறைந்திருக்கிறார்கள். சஜித்திற்கு வாக்களிப்பதன் மூலம் அடிப்படைவாதத்தை அழிக்கவே இயலாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஏறாவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கத்தோலிக்கர்களை மட்டுமே குறிவைத்து நடாத்தப்பட்டதல்ல... முஸ்லிம்களையும் குறிவைத்தே நடாத்தப்பட்டது.

தான் ஒருபோதும் இனவாத, மதவாத, அடிப்படைவாதம் சார்ந்தவர்களை அரசியல் நடிவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளவே மாட்டேன். அடிப்படைவாதத்தைத் தோற்கடிக்காமல் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது' எனவும் குறிப்பிட்டார்.

மேலும், சஜித்தும் கோத்தபாயவும் நல்ல நண்பர்கள் என்பதால் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கவுள்ள வாக்கினை கோத்தாவுக்கே அளிக்கலாம் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

Read more...

இன்று தீபத்திருநாள்!

முழு உலகிலும் இன்று இந்து பக்தர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

'தீப ஆவளி அல்லது தீப வரிசை' எனும் கருத்துடன் கூடிய உற்சவமாகவே இந்துக்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இன்று தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். அதில், 'தீபாவளியின் உட்கருத்து என்னவென்றால் அசுரர்களைத்தோற்கடித்து, மக்களுக்குச் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த வரலாற்று புகழ்மிக்க நாள் இதுவாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில், மனிதம் அரசோச்சி சாந்தி சமாதானம் மலர்ந்து அனைத்து மக்களும் தங்களை மட்டுமே கருத்திற் கொள்ளாது அடுத்தவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை தீபாவாளி உணர்த்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

தீபாவாளியை முன்னிட்டு அனைத்து இந்துப் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் (முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த) நாளை விடுமுறை வழங்குவதற்கு கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்நாளுக்குப் பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு உலகிலும் வாழும் இந்துமக்கள் சாந்தி சமாதானத்துடனும் விட்டுக்கொடுப்புடனும், பிற மதத்தவர்களையும் மதித்து நடந்து சிறப்புற்றோங்க எமது 'இலங்கைநெற்' இணையத்தளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்காள்கிறது.


Read more...

பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் 436... பதிவு செய்யப்படாத தெளஹீத் ஜமாஅத் பள்ளிகள் 16....

436 முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என அத்திணைக்களத்தின் பணிப்பாளர் மாெஹமட் ரிபாய்தீன் மொஹமட் மலிக் வழங்கிய தகவலின்படி தெளிவாகின்றது என குற்றவியல் விசாரணைத் திணைக்களம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தகவல் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில்பதிவுசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவால்கள் 2599 உள்ளதெனவும், அதில் 80 அளவில் தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் நிருவாகத்தின் கீழ் இயங்குவதாகவும் அத்திணைக்களம் உறுதிசெய்துள்ளது எனவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆய்வறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்படாத முஸ்லிம் பள்ளிகள் 951 மற்றும் பதிவு செய்யப்படாத தெளஹீத் பள்ளிவாசல்கள் 16 என்பன உள்ளன எனவும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் நீதிமன்றில் குறிப்பிட்டது. திருகோணமலை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் 2017.09.27 அன்று இஸ்லாமிய அமைப்புக்களைப் பதிவுசெய்வதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு ஆணை பிறப்பித்ததாகவும் அதன்பின்னர் அவ்வாறான எந்தவொரு அமைப்புக்களும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் தகவல் மூலம் தெளிவாகின்றது எனவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் தெரிவித்தது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில், சென்ற ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின்படி இந்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் குற்றவியல் விசாரணைகள் திணைக்களம் மேலும் தெரிவித்தது.

Read more...

Saturday, October 26, 2019

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழு விபரம்

நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இந்தக் கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பொதுஜன பெரமுனவின்தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (வெள்ளிக்கிழமை) நெலும் பொகுன பிரதான அரங்கில் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் விபரம் வருமாறு,

தேசிய பாதுகாப்பு

நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தால் ஏனைய அடிப்படைத் துறைகள் அனைத்தும் இயல்பாகவே வீழ்ச்சியடையும் என்ற நடைமுறை நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு அறிந்து கொள்ளலாம். அனைத்து மட்டங்களிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய பாதுகாப்பிற்கே எந்நிலையிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை மதித்து அனைவருக்கும் பொதுவான அமைதியான சூழலை ஏற்படுத்தும் விதத்தில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

நற்புறவுடனான வெளிநாட்டுக் கொள்கை

நாட்டின் கௌரவமான கொள்கைகள் சர்வதேச மட்டத்தில் வெளிநாட்டு கொள்கைகளின் ஊடாகவே வெளிப்படுத்தப்படும். நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதற்கும், நாட்டின் நிலப்பரப்பினை பிறிதொருவருக்கு கையளிப்பதற்கான ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டு கொள்கைகள் நிராகரிக்கப்படும். இதேவேளை, அனைத்து நாடுகளுடன் என்றும் நட்புறவுடன் செயற்படும் கொள்கைத் திட்டங்கள் செயற்படுத்தப்படும். நட்புறவுடனான வெளிநாட்டுன் கொள்கை முழுமைப்படுத்தப்படும்.

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம்

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரச நிர்வாக கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும். முறையான கொள்கைகளைக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் செயற்படுவதற்கான ஊழலற்ற முகாமைத்துவம் கட்டாயமாக்கப்படும்.

மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு மீள்திருத்தம்

அரசசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் தேவைக்காகவும் தனிப்பட்ட தேவைக்காகவும் அரசியலமைப்பினைப் பயன்படுத்திய காலம் நிறைவுக்கு கொண்டு வரப்படும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடான விடயங்கள் நீக்கி மக்களாணையினை மையப்படுத்தியதும், பொறுப்புக் கூறும் விதத்திலும் புதிய அரசியலமைப்பு மீள்திருத்தம் செய்யப்படும்.

மாற்றம் கொண்ட பிரஜை வளமான மனித வளம்

நாட்டு மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு மாறிவரும் உலக நடப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவசியமாகும். திறன் விருத்தி, சுகாதார கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் மாற்றம் கொண்டுள்ள மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன் வளமான மனித வளங்கள் துறைசார் விருத்திக்கேற்ப கட்டியெழுப்பப்படும்.

மக்களை மையப்படுத்திய பொருளாதாரம்

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் உள்ளூர் வியாபாரிகள் பலப்பட வேண்டும். இதன் முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்கும். வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். தேசிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப துறைசார் விருத்திகளை அரசாங்கம் அனைத்து கிராமிய மட்டத்திலும் மேம்படுத்தும்.

தகவல் தொழினுட்ப விருத்தி

பூகோள தொழினுட்ப விருத்தி மற்றும் அடிப்படை தகவல் தொழினுட்பம் ஆகியவையே இன்றைய இளம் சந்ததியினருக்கு அரசாங்கம் வழங்கும் வரப்பிரசாதமாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு தகவல் தொழினுட்பத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. தகவல், திறன் விருத்தி மற்றும் கல்வித்துறை விருத்தி ஆகியவற்றில் முன்னேற்றமடைந்த சமுதாயம் உருவாக்கப்படும்.

பௌதீகவள அபிவிருத்தி

பௌதீள வளங்களை பயனுடையவதாக மாற்றும் திட்டங்கள் செயற்படுத்தப்படும். ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள பௌதீள வளங்கள் அங்கு வாழும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் மாற்றியமைக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம்

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அனைவரது பொறுப்பாகும். எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்காகவும், வாழ்வாதார இருப்பிற்காகவும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் முகாமைத்துவத்திற்காக முறையான கட்டமைப்புக்கள் செயற்படுத்தப்படும். சுற்றுசூழல் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டங்கள் மீள் திருத்தம் செய்யப்படும். அத்துடன் காலத்தின் தேவைக்கேற்ப சுற்றுச்சூழல் சார் திட்டங்கள் வகுக்கப்படும்.

சட்டத்தினை மதிக்கும் ஒழுக்கமுள்ள சமூகம்

சட்டம் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக செயற்படுத்தப்படும். சட்டத்தினை அனைவரும் மதிக்கும் நிலைமையினை சமூகத்தில் ஏற்படுத்தல் பிரதானமாகும். எவருக்கும் எந்நிலையிலும் சட்டத்தின் பிரகாரம் முன்னுரிமை கொடுக்காது கௌரவத்தின் பிரகாரம் ஒழுக்கமுள்ள சமூகம் தோற்றுவிக்கப்படும்.

என்று குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com