Friday, October 18, 2019

ஒரு வருடத்திற்கு கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்களுடன் யப்பான் ஓப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்படும் மனிதநேய நிறுவனங்களுடன் யப்பான் அரசு மேலும் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

முகமாலை பகுதியில் யுத்த காலங்களின் போது புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஸாப் நிறுவனமும், ஹலோரெஸ்ட் நிறுவனமும் இணைந்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுடனுமே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் கிராஸ்ரூட்ஸ் மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான கிராண்ட் உதவி (GRANT ASSISTANCE FOR GRASSROOTS HUMAN SECURITY PROJECTS) திட்டததின்னுடாக கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக ஒரு வருடத்துகான சுமார் 105 மில்லியன் ரூபா நிதி வழங்க ஒப்பந்ததில் கைச்சாத்திடப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் ஸாப் நிறுவனத்தினதும் ஹலோரெஸ்ட் நிறுவனத்தினதும் முகாமையாளர்கள் ஒப்பந்தத்தில் இன்று (18.10.2019) கையெழுத்திட்டு ஜப்பானிய தூதுவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்கள்.

இதன்பின்னர் கண்ணிவெடி அகற்றப்படும் இடங்களுக்கு நேரில் சென்று ஜப்பானிய தூதுவர் பார்வையிட்ட மை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கைச்சாத்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் படைப்பிரிவின் கட்டளைத் தளபதிகள் ஸாப் நிறுவனத்தினதும் ஹலோரெஸ்ட் நிறுவனத்தினதும் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்

Read more...

Thursday, October 17, 2019

நிஸங்க சேனாதிபதி கைது!

நாட்டுக்கு கிடைக்கவேண்டிய வருமானத்தின் பெரும்பகுதியை அரசியல் செல்வாக்கு மற்றும் பிறதொடர்புகளை கொண்டு கைப்பற்றிக்கொண்டுள்ளார் என்ற பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள எவன் கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று நள்ளிரவு 11.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான ளுஞ468 ரக விமானத்தில் இலங்கை வந்திருந்த போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எவன்கார்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய வழக்கு ஒன்று தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றம் நிஸங்க சேனாதிபதிக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Read more...

800 கோடியில் மைத்திரி மாளிகை! பறிமுதல் செய்து அரச சொத்தாக்குவாராம் அனுரகுமார திஸாநாயக்க

மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெறமுன்னரே 800 கோடி ரூபாய் செலவழித்து வீடொன்றை நிர்மாணித்துள்ளார் என அறிந்துகொள்ள முடிந்ததுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லயில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மக்கள் கூட்டத்தில் பேசியபோதே இத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் என அனைவருக்கும் கொடுக்கும் அனாவசிய சலுகைகளை முழுமையாக நிறுத்துவோம்.

நாட்டில் சகல பகுதிகளிலும் ஜனாதிபதிக்கான மாளிகைகள் உள்ளன. ஆனால் அதில் எவரும் குடியிருப்பதும் இல்லை, ஒரு இரவைக்கூட அங்கிருந்து அனுபவிப்பர்களா என தெரியவில்லை. ஆனால் இந்த மாளிகைகளை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெறமுன்னரே 800 கோடி ரூபாய் செலவழித்து வீடொன்றை நிர்மாணித்துள்ளார் என அறிந்துகொள்ள முடிந்தது. எனவே நாம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகள் பிரதமர்களுக்கு ஒதுக்கும் அனாவசிய செலவுகள் அனைத்தையும் நிறுத்துவோம்.

ஆட்சியை கைப்பற்றி இரண்டு மாதத்தில் முழுமையாக அரச சொத்துக்களை தன்வசப்படுத்திய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம். வழங்காவிட்டால் நாமே அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி மக்கள் மயப்படுத்துவோம்.

அரச சொத்துக்களை கொள்ளையடிக்க எவருக்கும் உரிமையில்லை. அரச சொத்துக்கள் என்பது மக்களின் சொத்துகள் அதனை மக்களே அனுபவிக்க வேண்டும் என்பதே எமது கொள்கையாகும்.

நாட்டில் அனாவசியமாக செலவழிக்கும் பணத்தை சரியாக கையாண்டு கல்விக்கும், சுகாதாரதுறைக்குமான உயரிய சேவையை செய்ய முடியும். ஆனால் இன்று இந்த பணம் முழுமையாக ஆட்சியாளர் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளது என்றார்.

Read more...

ஆளும் கட்சியைப் பயமுறுத்தும் கதை சொல்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 80%-85% இடைப்பட்டதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிடுகின்றார்.

மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று பெரும்பாலான இலங்கையர்கள் வாக்களிப்பதற்காக இம்முறை இலங்கைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பதிவுசெய்யப்பட்ட வாக்களர்களில் பெரும்பாலானோர் வாக்குகளைப் பயன்படுத்துவது என்பது, இருக்கின்ற அரசாங்கத்தின் சரிவிற்கேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறக்கப்படுகிறது!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமானம் பரீட்சார்த்தமாக தரையிறங்கியுள்ளது.

இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் செவ்வாய்க்கிழமை தரையிறங்கியுள்ளது.

விமான ஓடுபாதைபரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் பணிகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் தேதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களாக விரிவாக்கப்படுகிறது . முதற்கட்ட பணிகளுக்காக சுமார் 2 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

விமானநிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விமான நிலையத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று 17 ஆம் தேதியன்று திறந்து வைக்கவுள்ளனர்.

விமான நடவடிக்கை செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடுதளத்தின் முதலாவது 950 மீட்டர் மார்க்கம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் குறித்த பிரதான ஓடுதளத்தின் 1.5 கிலோமீட்டர் மார்க்கம் மேலதிகமாக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்த பின்னர் பலாலி விமான நிலையத்தில் இருந்து 1800 சதுர கிலோமீட்டர் வரையான ஆகாய மார்க்கத்தில் விமானங்கள் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

திட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது பிரதான விமான ஓடுதளத்தின் 2.3 கிலோமீட்டர் மார்க்கம் முற்றாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் அந்த கட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் AL- 320 மற்றும் AL- 321 ரக விமானங்கள் பலாலி விமான நிலையத்தில் இருந்து பிராந்திய விமான நிலையங்களுக்கு பயணிக்கவுள்ளன.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் (ICAO CODE) என்பது VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் (IATA) என்பது JAF ஆகும்.

இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் BTC என்பதாகும்.

கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் YCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீட்டு இலக்கம் RML ஆகும்.

இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இவை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே இவையாகும்.

(ஜ.மு) .

Read more...

Wednesday, October 16, 2019

இரண்டரை இலட்சம் வாக்குகளால் நுவரெலியாவில் சஜித்தைத் தோற்கடிப்போம்! - CWC

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பெருந்தோல்வியைச் சந்திப்பார் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஹற்றனில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டி, அதில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர்களான கணபதி கனகராஜ் மற்றும் பீ. சத்தியவேல் ஆகியோர் ஊடகத்தைக் கூட்டி மேலும் கூறியிருப்பதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்.உறுப்பினர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்றுக்கொடுப்பதற்கு ஆவன செய்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு தோட்டத்தில் வாழும் மக்களை ஏமாற்றியதாகவும், தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ரூபா 50 இற்கான சம்பளத்தை வழங்கவில்லை எனவும், தங்கள் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்தி அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்திப் பெற்றுக்கொண்ட வீட்டுத் திட்டம் மாத்திரம் தோட்டத்து மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் 32 இற்கு புதிய ஜனநாயக முன்னண மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இரண்டினதும் ஜனாதிபதி வேட்பாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளபோதும், தோட்ட மக்களின் வேண்டுகோள் கோத்தபாய ராஜபக்ஷவே என்பதால், கட்சியின் நிறைவேற்றுக் குழு கோத்தபாய ராஜபக்ஷவை தேர்தலில் வெற்றியீட்டச் செய்வதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவரான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Read more...

தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கவே சந்திரிக்க கடிதங்கள் அனுப்புகிறார்! வீரகுமார திசாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மேடையில் 'ஹு' சொன்னது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க கடிதங்கள் அனுப்புவதன் காரணம் தேர்தல் நடவடிக்கைகளை இரண்டுபடுத்தவே எனக் குறிப்பிட்டார்.

அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவுக்கு விடையளிக்கும்போது, கோத்தபாய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்லர் எனவும், அதனால் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவருக்கு வழங்குவதற்கு எந்தவிதத் தீர்மானங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய 17 ஆம் திகதி பதில் கடமையிலிருந்து நீங்கி, மீண்டும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'பொதுஜன பெரமுனவிலுள்ள ஒருசிலரைப் பணம் கொடுத்துவாங்கியே 'ஹு' போடச் செய்திருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட சதி.’

இலட்சக் கணக்கான மக்கள் குழுமியிருந்த இடத்தில் 'ஹு' போட்டவரிடம் கமெரா ஒன்று. இது திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டத்தைப் பார்வையிடுவதற்காக வந்தவர்கள் சொல்கிறார்கள்.

அவ்வாறு கேவலமான விடயத்தைச் செய்பவர்களுக்கு பொதுமக்கள் தண்டனை கொடுப்பது தடுக்கவியலாத விடயம். அப்படிப்பட்டவர்களின் கை கால்களை முறிப்பதும் நடக்கின்ற செயல்தான். பிறகு அவர்கள் துதிபாடுகின்றவர்களே அவர்களுக்கு ஒத்தடம் வழங்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

சிங்கள பெளத்தர்களினால்தானா ஜனாதிபதிகள் உருவானார்கள்... இல்லவே இல்லை! - ஹேஷா

சிங்கள பெளத்தர்களின் வாக்குகளினால் மாத்திரம் இந்நாட்டில் எந்தவொரு ஜனாதிபதியும் பதவியில் அமரவில்லை. இனிமேலும் அவ்வாறுதான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக சிறுபான்மையினரின் வாக்குகள் மிக மிக அவசியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றும்போதே அவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதற்காக சிறுபான்மையினரின் வாக்குகளைப்பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு அளுத்கம பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளினால் சென்ற அரசாங்கம் தோல்வியடைந்தது. அதைப்போல தற்போதும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்காக முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

முஸ்லிம்களது பாதுகாப்பை இல்லாது செய்தவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினராம்! கூறுகின்றார் மயோன் முஸ்தபா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (15) மாலை 6 மணி முதல் 9 மணிவரை முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.மயோன் முஸ்தபாவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் கலந்துரையாடல் கல்முனை வரவேற்பு மண்டபம் ஒன்றில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில்

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தான் முஸ்லிம் மக்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன.ஆனால் இன்று முஸ்லிம் மக்களது இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவினால் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கான அனுமதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று அந்த பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை காணப்படுவதை அவதானிக்கலாம்.2015ல் அளுத்கமவில் இடம்பெற்ற இனக்கலவரத்தை இரவோடு இரவாக அமைதிக்கு கொண்டுவந்ததும் எமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான். இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களது பாதுகாப்பை இல்லாமல் செய்தவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான். குறிப்பாக 18ம் திருத்தத்திற்கு ஆதரவாக கைகளை தூக்கியவர்களும் இவர்கள் தான்.ஆகவே 2015 வரை இடம்பெற்ற அனைத்து அசம்பாவிதங்களுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடு இவர்களுக்கு உண்டு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவிற்கு எதுவித ஒப்பந்தங்களும் இன்றி தமது ஆதரவை தெரிவித்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு வருகின்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை பகிடி பண்ணிக்கொண்டு கோமாளியாக திரிகின்றார். போராட்டம் போராட்டம் என்று கூறும் இவர் முஸ்லிம் காங்கிரஸின் போராட்டத்தின் வெற்றி என்ன? எதற்காக இந்த போராட்டம்? வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்த போராட்டத்தின் மூலம் கிடைத்த நன்மை தான் என்ன? ஒன்றுமில்லைஇ பழைய பாடல் பாடும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் எதுவித தகுதியுமற்றவர்கள் என்பதை கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டார்.

மேலும் இக்கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு பற்றியும் கடந்த ஆட்சியின் பாதக தன்மைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

Read more...

தேர்தலுக்கு முன்னர் கருணா அம்மானை போட்டுத்தள்ள முயலும் சுவிஸ் புலிகள்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில்கருணா அம்மானைக் கொலை செய்வதற்காக கிளிநொச்சியிலிருந்து ஆயுதங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன என ஒன்றிணைந்த புலனாய்வுத் தேடல்களின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு வருகைதந்துள்ள சுவிஸ் புலிகள் வலையமைப்பின் தலைவர்களினாலேயே கொலைக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என புலனாய்வுப் பிரிவினர்களுக்குத் தெரியவந்துள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு இதுதொடர்பில் நீண்ட காலமாக விசாரணைகள் மேற்கொண்டு வந்ததன் பின்னர், எனும் இல. 442 அம்பாள்குளம், கிளிநொச்சி எனும் முகவரியில் வசித்துவந்த ஜோசப் பீட்டர் ரெபின்சன் (36) என்ற புலி உறுப்பினர் ஒரு கைதுசெய்யப்பட்டு, ஏ.ரீ. 56 துப்பாக்கியொன்றுடன் சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த புலிப் பயங்கரவாதியின் கிளிநொச்சியில் அமைந்திருந்த வீட்டைச் சோதனையிட்டபோது, ரீ56 துப்பாக்கியொன்று, சிறிய கைத்துப்பாக்கிகள் மூன்று, குண்டுகள் 05, தூரே பாய்ந்துசெல்லும் அரைத் தன்னியக்க ரய்ஃபல் 01, புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் பொதிந்த 04 ரீசேட்டுக்கள், துப்பாக்கி ரவைகள், குண்டுகளை வெடிக்கச் செய்கின்ற டெட்டனேட்டர்கள் 62 உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் நேற்று முன்தினம் (13) கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் சந்தேகநபரின் வீட்டில் வாழ்ந்துவந்த அவரது மனைவியும் சகோதரியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புலிகள் இந்த வலையமைப்பானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலையை கேந்திரநிலையங்களாகக் கொண்டு இந்தியாவுக்கு வருகைதந்துள்ள சுவிஸ் புலித் தலைவர்களில் ஒருவனால் செயற்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தலைதூக்குவதற்குத் தயாராகின்ற புலிகளை, இராணுவப் புலானாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து பெற்ற தகவல்களுக்கு ஏற்பவே இந்தக் கண்டுபிடிப்புக்கள் வெறும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் நடைபெற்றுள்ளன.

குறித்த புலிகளின் வலையமைப்புப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒற்றர்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர்களின் இலக்காக இருப்பவர் கருணா அம்மான் எனவும். அவரை கிழக்கில் கொலை செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 2018 ஜுன் மாதம் ஒட்டுச்சுட்டான் - புதுக்குடியிருப்பில் கரனின் புலிகள் வலையமைப்பினைச் சுற்றிவளைத்துப் பிடித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் நீண்ட விசாரணைகளினாலும் தேடல்களினாலுமே கருணா அம்மனைக் கொலை செய்வதற்காக உபயோகிக்கப்படவுள்ள ஸ்னைஃபர் ஆயுதங்கள் இரண்டு கிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை பற்றித் தெரியவந்துள்ளது. அந்த ஆயுதம் குமான்குளம் என்ற இடத்தில்தான் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

கருணா அம்மானைக் கொலை செய்வதற்காக மட்டும் ஸ்னைபர் ஆயுதம் கிழக்கிற்குக் கொண்டுவரப்படவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கிழக்கில் வைத்துக் கொலைசெய்வதற்குமே என அக்காலப் பிரிவில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடல்களினால் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் புலிப்பயங்கரவாதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read more...

Tuesday, October 15, 2019

பயணிக்கும் வாகனம் இயந்திரக்கோளாறால் நின்றால். அடுத்த வாகனத்தில் ஏறுவது வழமை. ரெலோவிற்கு சிவாஜிலிங்கம் சவால்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ரெலோவின் தவிசாளர் சிவாஜிலிங்கம் குதித்திருப்பது அக்கட்சியின் தலைமைப்பீடத்திற்கு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டுவரும் ரெலோவினர் சிவாஜிலிங்கம் தமது கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவாஜிங்கம் தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்கியுள்ளார். அவர் அங்கு தெரிவித்தமை வருமாறு.

அடுத்த மூன்று மாதங்களிற்கு ரெலோவின் சகல பொறுப்புக்களிலிருந்தும் விலகி, பெயரளவிற்கு மட்டுமே கட்சியில் இருக்கிறேன். இதற்கிடையில் கட்சி தனது விசாரணையை நடத்தி முடிக்கட்டும். கட்சியின் நடவடிக்கையை பொறுத்தே, கட்சிலிருந்து நிரந்தரமாக விலகுவதா என்ற முடிவை எடுப்பேன்.

கடந்த 12ம் திகதி ரெலோவின் யாழ் மாவட்ட குழு கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், நான் போட்டியிட்டது சரியென்றுதான் கூறினார்கள். விந்தன் கனகரட்ணம் மட்டும்தான் எதிர்நிலைப்பாடு எடுத்தார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் அடுத்த நாள் நடைபெற்றது. அதில் 13 பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் ஜனாதிபதி தேர்தல் குறித்தும், நான் போட்டியிடுவது குறித்தும் ஆராய்ந்துள்ளார்கள்.

ஆனால், இதுவரை ரெலோவிடமிருந்து எனக்கு எந்த விளக்கம் கோரல் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான், என்னிடம் விளக்கம் கோரப்பட்டதாக அறிந்தேன்.

சிவாஜிலிங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக, ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்கும்படியும், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும்படியும் ஒரு தீர்மானத்தை தலைமைக்குழு எடுத்துள்ளது.

அதற்கு எனது பதில்தான், சங்கிலி மன்னனின் சிலைக்கு முன்பாக எனது தேர்தல் பிரசாரம் ஆரம்பித்தது. என்னுடைய பிரசார துண்டு பிரச்சாரத்தை வழங்கினேன்.

என்னிடம் விளக்கம் கோருவதென்ற விடயத்தை எப்படி ஊடகங்கள் வழியாக அறிந்து கொண்டேனோ, அதேபோல எனது நிலைப்பாட்டையும் ஊடகங்கள் வழியாக தெரிவித்துள்ளேன்.

நான் தேர்தலில் இருந்து விலக மாட்டேன், எனது பிரச்சாரங்கள் தொடரும் என்பதே அந்த செய்தி.

இந்த வாரம் 17ம் திகதி எனது பிரச்சாரம் ஆரம்பமாகும். கொழும்பு, மலையகத்திலும் பிரசாரம் நடக்கும்.

என்னிடம் விளக்கம் கோரி, அதில் திருப்தியடையாத பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கையெடுப்பதாகவும் ரெலோ தீர்மானித்துள்ளதாக அறிந்தேன்.

கட்டுப்பணம் செலுத்தவதற்கு முன்னர் என்னுடைய தவிசாளர் பதவி,தவிசாளர் மூலம் பெற்ற அரசியல் குழு, தலைமைக்குழு, மத்தியகுழுவிலிருந்து விலகுவதாக கட்சியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தேன்.

சாதாரண உறுப்புரமை மூலம் யாழ்ப்பாணம் மாவட்ட கிளையின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினராகவும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். அவர்கள் என்னை இடைநிறுத்தும் வரை அந்த பொறுப்புக்களில் இருப்பேன்.

கட்சியின் செயலாளர் என்னை யாப்புவிதிகளின்படி நீக்கலாம். தலைமைக்குழுவும் நீக்கலாம். ஆனால், நான் தேர்தலில் குதித்தமைக்கான காரணங்கள், அவர்களை நடவடிக்கையெடுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

நான் அவர்களிற்கு மேலும் சங்கடங்களை ஏற்படுத்தாமல், சுயாதீன விசாரணையை அவர்கள் நடத்த விரும்பினால், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக யாழ் கிளை பொதுக்குழு, செயற்குழு, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகும் கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு நேரிலோ வேறு வழிகளிலோ கையளிப்பேன்.

இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன். அவர்கள் இடைநிறுத்தாவிட்டாலும் மூன்று மாதங்களிற்கு கட்சியின் எந்த நடவடிக்கையிலும் பங்குபற்றாமல், பெயரளவிற்கு சாதாரண உறுப்பினராக இருப்பேன். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்து, நிரந்தரமாக விலகுவதா என்பதை தீர்மானிப்பேன்.

நான் 46 ஆண்டுகள் இந்த விடுதலை இயக்கத்தில் (ரெலோ) செயற்பட்டவன். தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை, பிரபாகரன் முன்னிலையில் இந்த விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டவன். என்னுடைய வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பங்குகாலம் ரெலோவுடனும், தமிழ் தேசிய இயக்கத்துடனும் பயணித்திருக்கிறேன். கனத்த இதயத்துடன்தான் இந்த முடிவை எடுத்தேன்.

மக்களுடைய அபிலாசைகளிற்காக போராடுவதுதான் எனது முதலாவது விடயம். இதில் நாம் பயணிக்கிற வாகனத்தை போலத்தான் நான் சார்ந்த இயக்கமும், கட்சியும். இயந்திர கோளாறால் வாகனம் நின்றால் நாம் வேறு வாகனத்தில்தான் ஏறி செல்ல முடியும்.

அல்லது வாகனம் வேறு திசையில் சென்று, நாம் வேறு திசையில் செல்ல வேண்டுமென்றால், நாம் அதிலிருந்து இறங்கி நடந்தாவது செல்ல வேண்டும். இதைத்தான் நான் செய்தேன்.

ரெலோவின் தலைமைக்குழுவிற்கு ஊடகங்கள் வாயிலாக சொல்லும் பதில் இதுதான். எனக்கு ஏதாவது கடிதங்கள் கிடைத்தாலும், நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

Read more...

இன்னும் 20 கட்சிகள் கோத்தாவுடன் கைகோக்கின்றன....!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இன்னும் சிறுகட்சிகள் 20 கூட்டுச் சேர்ந்து ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் மகிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

இன்று (15) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

எல்பிட்டிய தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 5000 அதிகமான வாக்குகளை - அதாவது, நூற்றுக்கு 13 சதவீதம் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தத எனவும் அமரவீர அங்கு குறிப்பிட்டார்.

அதன்மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக மிகவும் பாடுபடக்கூடியவர்கள் நாடு முழுவதும் உள்ளனர் என்பது தெளிவாகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்காகத் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சாதாரண குடிமக்களை விடக் கூடுதலான வாக்குகளைப் பெறுவார்.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றம் பொதுஜன பெரமுன இடையே வாக்கு வீதம் நூற்றுக்க 69 வீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்வரும் தேர்தலில் மிகக் கூடுதலான வாக்குகைளப் பெற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறுகளும் உள்ளன எனக் குறிப்பிட்டார்.

தொண்டமானின் கட்சியும் ஒன்று சேர்ந்ததன் காரணமாக இன்னும் ஓர் இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் முன்னணிக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடும் அமரவீர, எதிர்வரும் நாட்களில் இன்னும் 20 கட்சிகளுக்கும் மேலாக ஐக்கிய மக்கள் முன்னணி அமைப்புடன் கைகோத்து கோத்தாவின் வெற்றியில் பங்குகொள்வார்கள் எனவும், மக்கள் சுதந்திர அமைப்போடு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒத்துழைப்பு நல்குவதற்கு முடியுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

வெள்ளைவேன் கலாச்சாரம் என்னுடையதல்ல! சரணடைந்த அனைவரையும் விடுதலை செய்துள்ளோம். கோத்தா

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தம்மீது குற்றச்சாட்டப்படும் வெள்ளைவேன் கலாச்சாரம் தங்களுடையது அல்லவெனவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது கோத்தாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை மையப்படுத்தியே ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவளிக்கின்றார் எனவும் இதன்போது தெரிவித்தார் கோத்தாபய ராஜபக்ஷ.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம் எனவும் இராணுவத்திற்கு தான் தலைமைதாங்கவில்லையெனவும் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Read more...

சுமந்திரனின் காது கிழியக் கொடுக்கிறார்கள் மகிந்தா - கோத்தா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் கொழும்பில் நடாத்திய பேச்சுவார்த்தை எவ்விதப் பலனுமற்றுப்போனது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கு பிரச்சினை விடயத்தில் கோத்தபாயவின் நிலைப்பாடு என்னவென்றும், இதற்கான தீர்வை வழங்குகின்ற தீர்வு என்ன என்றும் கேட்டபோது, இந்தப் பேச்சுவார்த்தையின்போது கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறுக்கிட்டு 'வடக்கு கிழக்கு மக்களுக்குள்ள பிரச்சினையை விடவும் பாரிய பிரச்சினை தெற்கில் உள்ள மக்களுக்கு இருக்கிறது' எனக் குறிப்பிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வடக்கு கிழக்கு மக்களும் தெற்கிலுள்ள மக்களும் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகள் ஒன்று போலவே இருக்கின்றன எனவும் அப்பேச்சுவார்த்தையின்போது கோத்தபாய ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவும் குறிப்பிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் இருவரும் தங்களது புதிய அரசாங்கத்தில் வடக்கு கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருவதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், சுமந்திரன் தான் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம் கூறியபோது, அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

Read more...

Monday, October 14, 2019

கூசாக்கள் தூக்கியது போதும்... உங்கள் மூட்டுவலியில் அக்கறை எனக்கில்லை

ஆளுக்காள் கூசாதூக்கித் திரியும் ஆட்களே!
அயர்ந்து தூங்காது சொல்வதைக் கேளுங்கள்...
நாளுக்குநாள் எம்முதிரம் சிந்தியே உழைத்தோம்

நாட்டுக்கு எம்வரிகளையும் ஈந்தே யழிந்தோம்...

டும்டும்டும் எனவே வானுயர்கின்றன ஓலங்கள்
டும்டும்டும் என்தலைவன் இவனென்று ஆளுக்காள் டமாரம் அடித்து ஏதுபயன் கேளுங்கள்
தயவோடு சொல்கின்றேன் கூசா தூக்கியேதுபயன்?

சஜித் என்றும் கோத்தா அநுரவென்றும்
சிந்திக்காது நீங்கள் கூசா தூக்குகின்றீர்பாவம்
நாசுக்காகச் சொல்லவில்லை உங்கள் மூட்டுக்கள்
நன்றாக வலிக்கும் சிந்திக்காது நடந்தாற்றான்....

எங்கள் கைமூட்டில் இவனுக்கு என்னவென்று
என்னைச் சாடுவதில் ஏதுபயன் உங்கட்கு
உங்கள் கைமூட்டுக்கு மருந்துவாங்க
எங்கள் நாட்டு ஏழைகளின் உதிரந்தான் போகும்...

பசையை வாளிவாளியாகச் சுமந்தும் கைகடுக்க
பதாதைகளை தலைமேற் சுமந்தும் இக்கால்மட்டும்
நேசமான உங்கட்குக் கிட்டியதேது? சொல்லுங்கள்
நாமுண்டுவாழ நீதியான தேசமன்றோ தேவை!

நிறங்களைப் பற்றிப் பிடித்தது போதும்
நாட்டினுக்கு நேசமான நம்மவர்க்கு நேசமான
நல்லவரைத் தேர்ந்தெடுக்க உழைப்போம் நாம்
நிறங்கள் எலாம் வானுயரும்வரை மெத்தப்பேசும்...

நம்சிறுசுகள் நலமாகக் கல்விப்பால் அருந்துதற்கும்
நம்மிளையோர் நாளும் நற்றொழில் செய்வதற்கும்
எம்மூடகங்கள் அச்சமின்றி தொடர்ந் தெழுவதற்கும்
எம்கைகளைக் கோத்திடுவோம் கூசா தூக்காது...

உழைப்பாளின் வரிப்பணத்தைச் சுரண்டாமல்
உழைப்பாளியின் வியர்வையை வீணாக்காமல்
உழைப்பவனுக்கு முன்னுரிமைதர முன்வாருங்கள்
உழைக்காதவன் பின்சென்று அரோகரா பாடாமல்...

-கலைமகன் பைரூஸ்

Read more...

அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்போருக்கே எமது வாக்குகள்....! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வடக்கு கிழக்கு பாதுகாப்புப் பிரிவினர் வசமிருக்கின்ற இடங்களை பெற்றுத்தருவது மற்றும் அம்மாகாணங்களுக்கு வெவ்வேறாக அதிகாரங்கள் வழங்கப்படும் எனக்கூறுகின்ற வேட்பாளர் எவரோ அவருக்கே ஜனாதிபதித் தேர்தலின்போது எமது வாக்குகள் அளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான கடப்பாடை பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலவேளை தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குக் கருத்துரைத்துள்ளமையே, சஜித் பிரேமதாச இத்தீர்மானத்தினை எடுப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரியவருகின்றது.

Read more...

யாழில் 15 கிலோ கிளைமோர் குண்டுகள் இரண்டு கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் கொண்டாவில் வரணி பிரதேசத்திலுள்ள இடமொன்றில் புதைக்கப்பட்டிருந்த 15 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டுகள் இரண்டு இன்று (14) பிற்பகல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

கிளிநொச்சிப் பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று நடாத்திச் சென்றமை தொடர்பில் கைசெய்யப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் பீட்டர்ரொப்ஸன் என்பவரிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொள்ளும்போது, வெளிவந்த தகவலுக்கேற்பவே இந்த குண்டுகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் மற்றும் அவரது மனைவி, சகோதரி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Read more...

கோத்தா - கருணா இருவரதும் உயிருக்கு அச்சுறுத்தல்...! அஜித் பிரசன்ன விடயத்தை வெளிச்சத்திற்கு கொணர்கிறார்!

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இருவரதும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய ஒருவர் தன்னிடம் கூறியதாக தாய்நாட்டிற்காக இராணுவத்தினர் அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேஜர் அஜித் பிரசன்ன தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கோத்தபாய ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகச் சொன்னார்கள். நான் ஏன் என்று கேட்டேன். பெண்ணொருவர் முகநூலில் பதிவிடுகிறார். நாட்டைப் பாதுகாக்க முடியுமான ஒருவர் கோத்தபாயவே என்று. அப்போது அவருக்குத் தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது.

கோத்தபாயவுக்கு பந்தம் பிடிப்பது எதற்காக என்று. அதற்கு அந்தப் பெண் கோத்தபாய வெற்றிபெறுவார் எனக் குறிப்பிடுகிறார். கோத்தபாய உயிரோடு இருந்தால்தானே அவர் வெற்றிபெறுவார் என அடுத்த பெண் கூறுகிறார். அதாவது உயிர்வாழ்வது சந்தேகமே என்கிறார். அண்மைய காலம் வரை அவர் இலங்கையில்தான் இருந்தார்.

பயங்கரவாதியொருவர் அக்காலகட்டத்தில்தான் அவரைச் சந்திக்கிறார். இவரது உயிருக்கு உத்தரவாதமில்லை... புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டதிற்கு ஏற்ப, கோத்தபாயவினதும் கருணாவினதும் உயிர் ஆபத்தான நிலையிலே இருக்கின்றது. கருணா கோத்தாவுக்காக இறங்கி வேலை செய்கின்றார்'

என சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

Read more...

கிளிநொச்சி பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம். மதுவரித் திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதம்

இன்று காலை(14) கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார்.கெப்பரிக்கொலாவ மதுவரித்திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதமடைந்துள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி பாரிய போதைப்பொருள் கடத்தல் இடம்பெறவுள்ளதாக மதுவரித்திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரும் உத்தியோகத்தர் ஒருவரும் வாடகைக்கு வாகனம் ஒன்றில் தேடுதலை மேற்கொள்ள தகவல் வழங்கிய மன்னாரைச் சேர்ந்த நபருடன் அறிவியல்நகர் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி பொலீஸாருக்கும் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே பொலீஸ் அணியொன்றும் குறித்த பகுதிக்குள் தேடுதல் மேற்கொள்ள சென்றுள்ளனர்.மதுவரித்திணைக்களம் மற்றும் பொலீஸார் ஆகியஇரண்டு தரப்பினனர்களுக்கும் இடையே தொடர்பாடலற்ற நிலையில் சிவில் உடையில் சென்ற பொலீஸார் வாடகை வாகனத்தில் வந்த மதுவரித்திணைக்கள த்தின் வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போது அவர்கள்வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளனர்.இந்த நிலையிலேயே வாகனத்தின் மீது பொலீஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தகவல் வழங்கிய மன்னாரைச் சேர்ந்த நபரே காயமடைள்ளார.

கெப்பரிகொலாவ பிரதேசத்தை சேர்ந்த மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரே கிளிநொச்சிக்கு பயணித்து பெருமளவு பணத்துடன் போதைப்பொருளை கொள்வனவு செய்பவர்கள் போன்று சென்று காத்திருந்த போதே சிவில் உடையில் சென்ற பொலீஸார் வாகனத்தை நிறுத் த முற்பட்டுள்ளனர்.இதன் போதே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் அந்த வாகணத்தில் பயணித்த 38 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவர் காயமடைந்துள்ளார்.அவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Read more...

நியாயத்தின் பக்கம் நாமா? நாம் நிற்கும் பக்கம் நியாயம் பேசுகின்றோமா? வை எல் எஸ் ஹமீட்

ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றோம். 2010ம் ஆண்டிற்கு முந்தியவை போன்ற ஒரு தேர்தலாக இத்தேர்தல் இருக்குமாயின் நாம் சற்று தளர்வாக நம் முடிவுகளை எடுக்கலாம். நமது பிரதான தலைப்புகள் அபிவிருத்தி, பொருளாதாரம், உரிமைகளோடு சம்பந்தப்பட்ட சில விடயங்கள்; என்று பேசலாம்.

இன்று அவைகளுக்கும் மேலாக, எதிர்காலத்தில் நாம் இந்த நாட்டில் வாழக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இருக்குமா? இலங்கை ஒரு மியன்மாராக மாறுமா? அல்லது சீனாவின் உய்குர் முஸ்லிம்களின் நிலைவருமா? அல்லது இந்தியாவின் வடமாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் இறைச்சியை கொண்டுசென்றாலே அடித்துக் கொலைசெய்து அதனை சமூக வலைத்தளங்களிலேயே பதிவிட்டு எந்த சட்ட நடவடிக்கையும் இல்லாமல் இருக்கும் நிலை வருமா? என்று தெரியாத ஒரு நிலையை உருவாக்கக்கூடிய ஒரு இக்கட்டான தேர்தலை முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைய பிரதான போட்டியாளர்களில் எந்தத் தரப்பும் சிறுபான்மைகளின் அல்லது முஸ்லிம்களின் நண்பன் என்று சொல்லக்கூடியதாக இல்லை. எல்லாம் இனவாத மேகம் கருக்கொண்ட, இனவாதிகளால் சூழப்பட்ட கூடாரங்களாகவே இருக்கின்றன.

இனவாதத்திற்கு சாஷ்டாங்கம் செய்யும் சிறுபான்மை

இன்று இருதரப்பிலும் உள்ள எந்த முஸ்லிம்கட்சியோ, மலையகக்கட்சியோ எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஒப்பந்தம் செய்யாததை சாணக்கியமாக அவர்கள் கருதுகிறார்கள். ஒப்பந்தம் செய்தால் அது இனவாதிகளுக்கு சாதகமாகப்போகும். எனவே, இனவாதிகளுக்கு தீனிபோடுவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இந்நிலை, பல அர்த்தங்களைத் தொனித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, இந்நாட்டின் ஆட்சியாளர் யாராக இருந்தாலும் அவர்கள் இனவாதத்திற்கு அடிபணிந்துதான் ஆட்சிசெய்ய வேண்டும். சிறுபான்மைகள் இரண்டாம்தர பிரஜைகளாக அந்த இனவாதத்திற்கு சாஷ்டங்கம் செய்துதான் வாழவேண்டும்.

இன்று ஒரு தரப்பு சிறுபான்மையின் வாக்குகள் இல்லாமல் வெற்றிபெறுவோம்; என்கிறார்கள். ( களநிலவரம் அவர்களின் நிலைப்பாட்டைக்கூட மாற்றிக்கொண்டிருக்கிறது. அது தொடர்பாக பின்னர் பார்ப்போம்)

அடுத்த தரப்பு தன்வெற்றிக்குத் தங்கியிருப்பதே சிறுபான்மை வாக்கில்தான். அந்தத் தரப்பும் சிறுபான்மைகளுடன் எந்த ஒப்பந்தமும் செய்யத் தயாராயில்லை. சிறுபான்மையுடன் ஒப்பந்தம் செய்தால் வெற்றிபெறுவதற்குத் தேவையான மிகுதி வாக்குகளைக்கூட பெரும்பான்மை சமூகம் தராமல் விட்டுவிடுமோ என்கின்ற அச்சம். அப்படியானால் கிட்டத்தட்ட மொத்த பெரும்பான்மை சமூகமும் இனவாதத்தின் பக்கம்தான் நிற்கின்றதா?

முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு இனவாத வாக்குகளும் உங்களுக்குத் தேவை. கடந்தகாலங்களில் ஒப்பந்தம் எழுதித்தான் எதைச் சாதித்துவிட்டோம். எனவே, இனவாதிகளின் மனம்கோணாமல் தேர்தல் செய்து அவர்களின் வாக்குகளையும் பெறுங்கள்; என்கிறார்கள். அதை சாணக்கியம் என்றும் கூறுகிறார்கள்.

அவர்களது இந்த மனோநிலை சரியா? பிழையா? த தே கூ துணிச்சலாக ஒப்பந்தம் செய்துதான் ஆகவேண்டும்; என்கின்றதே! அதைப்பற்றி என்ன சொல்லப்போகிறோம்? என்ற விடயங்களை இன்னுமொரு ஆக்கத்தில் பார்ப்போம்; இன்ஷாஅல்லாஹ். ஆனால் தேர்தலில் சிறுபான்மையின் வாக்குகளில் தங்கியிருந்துகொண்டே இவ்வாறு செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் இனவாதிகளிடம் இருந்து எவ்வளவு தூரம் சிறுபான்மைகளை, குறிப்பாக முஸ்லிம்களைப் பாதுகாப்பார்கள்?

கடந்தகாலங்களில் முஸ்லிம்களைப் பாதுகாக்க காத்திரமாக எதையும் செய்யமுடியாமல்போன முஸ்லிம்கட்சிகள் எதிர்காலத்தில் எதைச்செய்வார்கள்? என்ற கேள்விகள் எமக்குள் எழுப்பப்பட வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளும் எதிர்காலத்தில் நமக்கு பெரிதாக உதவப்போவதில்லை. போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் ஒன்றில் இனவாதியாக அல்லது இனவாதிகளுக்கு அஞ்சுகின்றவர்காக அல்லது தலைசாய்க்கின்றவர்களாத்தான் இருக்கின்றார்கள். போதாக்குறைக்கு முன்னாள் ராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்ககூட “ One Coutry, One Law” என்று கோசம் எழுப்பிக்கொண்டு திரிகின்றார்.

இந்நிலையில், நாம் எடுக்கப்போகும் தீர்மானம் மிகவும் நுணுக்கமாக, பல விடயங்களையும் ஆராய்ந்து குறைந்த பாதிப்புள்ளவரைத் தெரிவுசெய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தேர்தலிலும் சிறுபான்மை வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போகின்றன.

இந்த இக்கட்டான நிலையை இன்று நாம் சிந்திக்கின்றோமா?

இன்று நாம்


ஒரு கூட்டம் தம் சொந்த மூளையால் சிந்திக்க ஆயத்தமில்லை; என்ற நிலை. தனது கட்சி, தனது தலைவன் எந்தப் பக்கமோ, நாமும் அந்தப் பக்கம். இன்று தரப்பு A யை ஆதரிக்கும் கட்சிகள், தரப்பு B யையும் அடுத்த தரப்பு மறுதிசையிலும் ஆதரித்திருந்தால் இந்தக் கைகளெல்லாம் மறு திசையில் எழுதியிருக்கும்.

தன் கட்சியின் தலைவன் எதை உளறினாலும் அதற்கு வக்காலத்து வாங்குவதற்காக ஒருகூட்டம். இன்று ஒரு பதிவு பார்த்தேன். அதில், “தலைவன் கழுதையை குதிரையென்றால்; தொண்டன், ஆமாம் தலைவா, அது தரமான வரிக்குதிரை “ என்னுமளவு இந்தத் தொண்டன் இருக்கின்றான்; என்ற ஒரு கருத்தை அது குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இன்னொரு புறம்; சுயேட்சையாக போட்டியிடும் தன் தலைவனை தேர்தல் திணைக்களத்திற்கு முன்னால், அத்தனை தேசிய ஊடகங்களுக்குமுன்னால் வைத்துக்கொண்டு ஒரு தொண்டன் “ அபே ஜனாதிபதி துமாட”; என்கின்றான். அந்தத்தலைவனும் ஏனைய தொண்டர்களும் இணைந்து “ஜயவேவா” என்கின்றனர்.

இவற்றையெல்லாம் எங்கே போய்ச் சொல்லி அழுவது.

இன்னுமொரு கூட்டம், அவர்கள் எந்தத் தலைவனுக்குப் பின்னாலும் இல்லை; அவர்களாகவே, ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள்; தாம் எந்தப்பக்கமென்று.

கேட்டால் இந்தத் தரப்பு, அந்த ஆட்சியில் நடந்தவற்றைக் கூறுகிறது. அந்தத் தரப்பு இந்த ஆட்சியில் நடைபெற்றவற்றைக் கூறுகின்றது.

இரண்டு தரப்பிலும் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடந்தது; என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்கின்றதா? வெற்றிபெறக்கூடிய மூன்றாவது தரப்பும் இல்லாத நிலையில் இவ்விரண்டு தரப்பில் ஒன்றைத்தானே தெரிவுசெய்தாக வேண்டும்.

எவ்வாறு தெரிவுசெய்வது

இவ்விரண்டு தரப்பிலும் சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்ககின்றன; என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். இவற்றில் குறைவான பாதிப்பை அடையாளம் காணவேண்டுமானால் இரண்டினதும் கடந்தகால, சமகால செயற்பாடுகளை அலசி ஆராய்ந்து சமூகத்திற்கு எது சிறந்த முடிவோ, அதைத்தானே எடுக்கவேண்டும். ஆனால், என்ன நடக்கிறது.

ஒரு தரப்பு ‘ அவரது முகத்தில் கறுப்புப் புள்ளியிருக்கிறது’ என்றால் அடுத்த தரப்பு, ‘இவரது கழுத்தில் கறுப்புப்புள்ளி இருக்கிறதே!’ என்று எதிர்வாதம் புரிகிறது.

அதாவது, ஒரு தரப்பு தனது மாமன், மாமனை விட்டுக்கொடுக்க முடியுமா? என்பதுபோலவும் அடுத்த தரப்பு அவன் என் மச்சான், என் மச்சானை விட்டுக் கொடுக்க முடியுமா? என்பதுபோலவும் வாதப்பிரதிவாதம் புரிகிறார்கள்.

இவ்விரு தரப்பும் உங்கள் குடும்பமா? கண்ணை மூடிக்கொண்டு நியாயம், அநியாயங்களுக்கப்பால் வாதாடுவதற்கு. குடும்பமென்றாற்கூட நியாயத்தின் பக்கத்தில்தான் நிற்கவேண்டும்; ஆனாலும் பெரும்பாலும் அவ்வாறிருப்பதில்லை.

இவர்கள் யார் நமக்கு. ஏன் கண்மூடித்தனமாக ஆளுக்கொரு தரப்பை ஆதரித்துக்கொண்டு, தான் ஆதரிப்பதற்காக அத்தரப்பை நியாயப்படுத்துகிறீர்கள். மாறாக, ஒரு நடுநிலையான மனோநிலைக்கு வந்து, இருபக்கமுமுள்ள பாதகங்களை மீண்டும் மனத்திரைமுன் கொண்டுவாருங்கள்.

அவற்றை அசைபோடுங்கள். யாரையும் யாரும் தாக்காமல் நாம் எல்லோரும் சகோதரர்கள். எந்தப் பக்கம் முடிவெடுப்பது இச்சந்தர்ப்பத்தில் நமக்கு உசிதமானது; என ஏன் தீர்மானிக்க முடியாது?

எல்லாமுட்டையையும் ஒரு கூடையில் வைக்கக்கூடாது.


கோட்டாவுக்கு ஆதரவளிப்பதன்மூலம்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்; அல்லது சஜித்தின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட சாத்தியமான ஆபத்துக்களைவிட கோட்டாவின் ஆட்சியில் ஆபத்துக்கள் குறைவாகத்தான் இருக்குமென்பதுதான் யதார்த்தமென்றால் அனைவரும் கோட்டாவுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை.

ஆபத்துக்கூடிய வேட்பாளரைத் தெரிவுசெய்து நாளை அதனால் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் மறுமையில் அதற்கும் நாம் பதில் சொல்லவேண்டும். ஆனால், எந்தவகையில் அந்த முடிவுக்கு வந்தீர்கள்; என்பதற்கான நியாயத்தைக்கூறவேண்டும்.

கடந்தகால, சமகால நிகழ்வுகள், அவர்களின் கொள்கை நிலைப்பாடுகள், அவர்களுடன் இணைந்திருப்பவர்கள், இவை அனைத்தும் தொடர்பாக ஒரு முழுமையான பார்வையில் ஆராயப்படவேண்டும். ( A holistic analysis).

அதைவிடுத்து ஒரு தரப்பு, ‘உங்களுடன் விமல், உதய, டிலான்’ போன்றவர்கள் இருக்கின்றார்கள்; என்றால் அடுத்த தரப்பு ‘உங்களுடன் சம்பிக்க’ இருக்கிறார்; என்பது. ஏட்டிக்குப்போட்டி. யாருக்காக இந்தப்போட்டி?

இதில் மிகப்பெரிய ஜோக், டிலான் பெரேராவையும் இனவாதி பட்டியலில் சேர்ப்பது. இவ்வாறு தாம் இருட்டில் தடவிக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்ட ஒருகூட்டம்.

இதேபோன்றுதான், சஜித்திற்கு வாக்களிக்க வேண்டுமானால் அதற்கான நியாயங்களை கடந்தகால, சமகால அனுபவத்தின் அடிப்படையில் முன்வைக்க வேண்டும். அதன்பின் ஏற்படுகின்ற தெளிவின் அடிப்படையில் கோட்டாவோ, சஜித்தோ, சமூகம் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். ஆனால் இன்று நாம் அதற்கெல்லாம் ஆயத்தமில்லை.

யாராவது கடந்தகால மஹிந்த அரசினால் ஏற்படும் பாதிப்புக்களை எழுதினால் மஹிந்தவாதிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது. ரணிலின் ஆட்சியின் குறைபாடுகளை எழுதினால் அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது. நீங்களெல்லாம் யார்?

ஏன் இருதரப்பு விடயங்களையும் நடுநிலை மனோநிலையில் இருந்து ஆராய்வதற்கு ஆயத்தமில்லாமல் இருக்கிறீர்கள்.

இந்த லட்சணத்தில் சமூகத்தை மறந்து தாம் பிரிந்து நிற்பதற்கு கொடுக்கும் இன்னுமொரு நியாயப்படுத்தல் ‘ எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது. ஒரு முன்னாள் அமைச்சரும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவர் இதை பகிரங்கமாகவே சொல்கின்றார். அவர் குறித்த ஒரு தரப்பை ஆதரிப்பதற்குக் காரணம் அத்தரப்பு, சரியானதென்பதல்ல. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது; என்பதாகும்.

மறுவார்த்தையில் கூறுவதாக இருந்தால் நாம் இருப்பதோ 10%, கத்தி தலைக்குமேல் தொங்குகிறது. சேர்ந்து முகம்கொடுக்காமல் பிரிந்து நிற்போம்; என்கின்றார். பிழையான கூடையில் முட்டையைப் போட்டு முட்டை கூழானாலும் பறவாயில்லை. ஒரே கூடையில் போடக்கூடாது; என்கிறார்.

எல்லோரும் நல்ல வேட்பாளர்களே! என்றால் அது பொருந்தும். சில கூற்றுக்கள் பொதுவாக பொருந்தும். சில விசேட சூழ்நிலைக்குப் பொருந்தாது. மழை வரும்போது குடையை விரிக்கவேண்டும்; என்பது பொதுவான விதி. அதற்காக, மழையுடன் சேர்த்து பயங்கர சூறாவளியும் வீசும்போது குடையை விரித்தால் என்ன நடக்கும். ஆளையும் சேர்த்துத் தூக்கிப்போகாதா?

2010 ஆண்டிற்கு முந்திய ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு அந்தக்கூற்று பொருந்தலாம். இனவாதம் உச்சம்தொட்ட இந்த காலகட்டத்திற்குப் பொருந்துமா? சிந்திக்க வேண்டாமா?

நாட்டைப் பாதுகாக்க வாக்களிப்போம்

இன்னும் சிலர் நாட்டைப் பாதுகாக்க வாக்களிக்கப் போகின்றார்களாம். யாரிடமிரூந்து நாட்டைப் பாதுகாக்க? முஸ்லிம்கள் அடிப்படை வாதிகள், தீவிரவாதிகள்; முஸ்லிம்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அவர்கள் சிங்கள மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள். அனைத்து முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்களில் தேடுதல் நடாத்தப்பட வேண்டுமென்று ஏற்கனவே கூறியிருக்கின்றார்கள். நீங்களும் முஸ்லிம்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கத்தானா வாக்களிக்கப் போகின்றீர்கள்? அவ்வாறாயின் நீங்கள் யார்?

எனவே, அன்புள்ள சகோதரர்களே! நீங்கள் ஏதாவது தனிப்பட்ட ஆதாயத்திற்காக வாக்களிக்கப் போகின்றீர்களா? அல்லது உங்களுக்காக, உங்கள் எதிர்கால சந்ததிக்காக, இந்த சமூகத்திற்காக வாக்களிக்கப் போகின்றீர்களா?

முந்தியதுதான் உங்கள் காரணமென்றால் பேசுவதற்கெதுவுமில்லை. சில அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அதுதான் காரணம்.

பிந்தியதுதான் காரணமென்றால் முதலாவது நடுநிலை மனோநிலைக்கு வாருங்கள். “ நான் எடுக்கும் முடிவு இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக ஆக்கிவிடு இறைவா” என்ற பிரார்த்தனையுடன் சகல பக்கங்களையும் ஆராயுங்கள். அதன்பின் முடிவெடுங்கள்.

தமிழ் மக்களைப் பாருங்கள். எவ்வளவு ஆறுதலாக அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அவசரப்படவில்லையே!

நவம்பர் 16ம் திகதிதான் வாக்களிப்பு. காலம் இருக்கிறது. எல்லாப் பக்கத்தையும் ஆராயுங்கள். அதன்பின் முடிவெடுங்கள்.

Read more...

மொட்டு ஜெயிக்கும்! எங்கள் ஆதரவு கோத்தபாய ராஜபக்சவிற்கே.. வியாழேந்திரன்

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தாங்கள் பூரணமான ஆதரவை வழங்குவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ( புளொட் ) பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அறிவித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் மேற்கொண்டுள்ள பாரிய அபிவிருத்தி பணிகள் காரணமாக தமிழ் மக்கள் கௌரவ கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களிப்பார்கள். நிச்சயமாக மொட்டு வெற்றிபெறும்..

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.




Read more...

மக்கள் மீது அடுத்த சுமை! ஜனாதிபதி தெரிவாகி மூன்று மாதத்தில் பொதுத்தேர்தல்....!

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அடுத்த வருடம் (2020) மார்ச் மாதத்தின் பின்னர் பொதுத்தேர்தல் நடாத்தப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனாதிபதி தெரிவாகி மூன்று மாதங்கள் கடந்ததும் ஜனாதிபதி பொதுத்தேர்தலை நடாத்தவியலும்.

இதற்கமைய ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்படவிருந்த என்றாலும் பின்போடப்பட்ட 2020 வரவு செலவுத் திட்ட அறிக்கை மார்ச் மாதத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய ஜனாதிபதி மற்றும் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்திற்குத் தேவையானவாறு வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதே எதிர்பார்க்கையாகவும் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்ததன் பின்னர் பாராளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. 19 ஆவது அரசியலமைப்பில் அதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.

அதற்கேற்ப, 2015 ஆகஸ்ற் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிகாரத்திற்கு வந்த இப்பாராளுமன்றத்திற்கு நான்கரை ஆண்டுகள் எதிர்வரும் 2020 மார்ச் மாதம் நிறைவுபெறுகின்றது. அதனால் இவ்வருட நவம்பவர் மாதம் 16 ஆம் திகதி தெரிவுசெய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி, எதிர்வரும் 2020 மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.

Read more...

Sunday, October 13, 2019

பதவிக்காலம் முடிவதற்குள் நண்பனுக்கு 100 ஏக்கர் காணி வழங்குமாறு ஒற்றைக்காலில் நிற்கும் சுரேன் ராகவன்.

பூநகரி பிரதேச செயலக பிரதேத்திற்குட்பட்ட கோதாரிமுனை பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு 100 ஏக்கர் காணியினை வழங்குவதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தனது அதிகாரத்தை எல்லை கடந்து பயன்படுத்தியுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அவுஸ்திரேலிய பிரஜையான வாசுதேவன் என்பவருக்கு உல்லாச விடுதி ஒன்றை அமைப்பதற்காகவே இப்பாரிய நிலத்தொகை வழங்கப்படவுள்ளது. இப்பிரதேசத்தில் உல்லாச விடுதியொன்று அமைவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் கருத்தில் எடுப்பதற்குகூட கால அவகாசம் வழங்காது காணியினை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலருக்கு வட மாகாண ஆளுநர் அழுத்தம் பிரயோகித்ததாக தெரியவருகின்றது. தொலைபேசியில் பலதடவைகள் பிரதேச செயலாளரை அழைத்து திட்டித்தீர்த்ததாகவும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இங்கு மிகவும் கண்டனத்திற்குரிய விடயம் யாதெனில் , உல்லாச பிரயாணத்துறை மேம்பாட்டுக்கு அரசு அல்லது இலங்கை இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, தமிழ் மக்களின் கலாச்சாரத்தை சிரழிக்க சிங்களம் கங்கணம்கட்டி நிற்கின்றது என கோஷமிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்விடயத்தில் கள்ள மௌனம் காத்துவருகின்றான். தமிழர் பிரதேசத்தில் உல்லாசப்பிரயாணம் என்பது தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பது என கோஷமிட்ட பா.உ உறுப்பினர், அவுஸ்திரேலிய பிரஜைக்கு அதே காரணத்துக்காக காணி வழங்கப்படும்போது அடக்கி வாசிக்கின்றார் என்றால் அதற்காக அவுஸ்திரேலிய டொலர்களில் பெட்டிகளை பெற்றுக்கொண்டாரா என்ற கேள்வியை இலங்கைநெற் எழுப்புகின்றது.

அத்துடன் சிலகாலங்களுக்கு முன்னர் அதே பிரதேசத்தில் வாழுகின்ற இளைஞன் ஒருவன் நன்நீர் மீன்வளர்ப்பிற்காக 3 ஏக்கர் காணியினை கோரியிருந்தபோது ஒரு நபருக்கு 3 ஏக்கர் காணிகளை வழங்க முடியாது என்றும் அவ்வாறு ஒவ்வொருவருக்கும் 3 ஏக்கர் கொடுத்தால் எதிர்காலத்தில் மாவட்டத்தில் காணித்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் போர்கொடி தூக்கியிருந்த சிறிதரனிடம் அவுஸ்திரேலிய நபருக்கு 100 ஏக்கர் வழங்கும்போது எதிர்காலத்தில் காணித்தட்டுப்பாடு நிலவாதா என்ற கேள்வியையும் இலங்கைநெற் கேட்கின்றது.

சுரேன் ராகவன் இன்னும் ஒரிரு மாதத்தில் பதவியிலிருந்து தூக்கி எறியப்படலாம் அல்லது தொடர்ந்தும் பதவியில் இருக்கலாம். ஆனால் அப்பதவியினை துஷ்பிரயோகம் செய்தால் அதற்கான தண்டனை பெறவேண்டிவரும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்ததாகும்.

புலம்பெயர் தேசத்திலிருந்து இலங்கை வருகின்ற அத்தனை புறம்போக்குகளும் நாட்டின் வளத்தை சுரண்டி தமது வளத்தை பெருக்கவே முயற்சி செய்கின்றனர். முதலீடு என்ற முகமூடியுடன் காணிகளை பெற்றுக்கொள்ளும் இவர்கள் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளை அமைத்து மக்களுக்கான தொழில்வாய்ப்பை பெருக்கி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதற்கு பதிலாக அங்கே உல்லாச விடுதிகள், மதுமாண நிலையங்கள், விபச்சார விடுதிகள், சூதுநிலையங்கள் என்பவற்றை அமைத்து மக்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் சீரழித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே புலம்பெயர் தேசத்திலிருந்து முதலீடு என்ற பெயரில் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கொடுத்து காணி அபகரிப்பில் ஈடுபட முனையும் நபர்கள் தொடர்பில் அவதானம் தேவைப்படுகின்றது. அவர்கள் காணியினை கோரும்போது எந்த நோக்கத்திற்காக காணியினை கோருகின்றார்கள் என்பது தெளிவாக எழுத்தில் பெறப்பட்டு அந்த நோக்கத்திலிருந்து அவர்கள் விலகிச் செல்ல முற்பட்டால் வழங்கப்பட்ட காணிகளை உடனடியாக மீளப்பெறுவதற்கான பொறிமுறை அவசியமாகின்றது.

காரணம் இவர்கள் யாவரும் காணியினை பெற்றுக்கொள்ளும்போது சுமார் 500 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கவுள்ளேன் என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் இதுவரை அரச காணியினை பெற்றுக்கொண்டு 100 பேருக்கு தொழில்வழங்கியவர்கள் எவரும் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.

Read more...

மனிதாபிமான செயற்பாடுகளுக்கு உதவுவதும் பயங்கரவாத செய்பாடுகளுக்கு துணைபோவதும் வேறு. மலேசிய பொலிஸ்.

மலேசியாவில் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மொத்தமாக 12 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில் இக்கைதுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த புக்கிட் அமான் பயங்கரவாத விசாரனைப் பிரிவின் தலைவர் ஆயுப் கான் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும் வெவேவேறானாது என கூறியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீது எனக்கும் அனுதாபம் உள்ளது. ஆனால் தீவிரவாத இயக்கத்தினர் மீது அனுதாபம் காட்ட முடியாது. இது இரண்டுக்கு வித்தியாசம் உள்ளது. அதே போலத்தான் பாலஸ்தீனத்திற்கும். அவர்கள் மீது அனுதாபம் காட்ட முடியும், ஆனால் அதற்காக அந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜீஹாட் இயக்கதுடன் இணையவா முடியும் என ஆயும் கான் வினவினார்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததன் பெயரில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டது குறித்து பேசும் போது ஆயுக் கான் இதனைத் தெரிவித்தார். அவர்கள் ஐவரும் செயலிழந்த விடுதலைப் புலி இயக்கத்துக்கு நிதி வழங்கியது, ஆதரவு அளித்தது, நிதி திரட்டியது ஆகிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த ஐவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆகும்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 52 வயது இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரும் அடங்குவார். இவர் சமூக வலைத்தளத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகல் குறித்து பரப்புரை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அடுத்ததாக 2ஆம் மற்றும் 3ஆம் நபரக்ள் மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் கைது செய்யப்பானர். இவர்கள் இருவரும் உள்நாட்டுப் போரின்போது இறந்த விடுதலைப்புலி போராளிகளை நினைவுக்கூறும் நிகழ்வு ஒன்றினை கடந்த நவம்பர் மாதம் ஏற்பாடு செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.

மற்ற இருவர் பினாங்கு புக்கிட் பெர்தாஜாமில் கைது செய்யப்பட்டனர். 26 மற்றும் 29 வயதுமிக்க அவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் விடுதலைப் புலிகள் குறித்து பரப்புரை செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப்புலி இயக்கத்தின் கொடிகள், புத்தகம், போஸ்டர்ஸ் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர்கள் படங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் மீதான விசாரணை தொடரும் மேலும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது போலிஸ் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமைச்சர் குலசேகரன் கைது செய்யப்படுவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் இந்தியாவின் நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் படம் எடுத்துக் கொண்டார் என்பதற்காக மட்டும் அவர் கைது செய்யப்படமாட்டார் என ஆயும் கான் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் உணர்வுகளை தொடர்ந்து நிலைநாட்டும் முயற்சியாக தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சீமான் தலைமையிலான அரசியல் கட்சி சில முக்கிய பிரமுகர்கள் உட்பட மலேசியாவில் உள்ள ஒரு தரப்பினருடன் தொடர்பை கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தை தொடர்வதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மலேசியாவில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுடன் பல ஆண்டுகாலம் பல்வேறு கூட்டங்களையும் நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது.

மலேசியாவில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்ட முயன்றதன் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவர், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியுடன் அணுக்கமான தொடர்பை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

சில இதர முக்கிய பிரமுகர்கள் இன்னும் சுதந்திரமாக இருந்தாலும் அவர்களின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பிரமுகர்கள் குறித்து அடையாளங்களை அறிந்திருந்தாலும் விசாரணை நடைபெற்று வருவதால் அதனை வெளியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாக மலேசியன் இன்சைட் இணையதள பதிவேடு தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தது, அவர்களுக்கு நிதியுதவி ஏற்பாடு செய்தது, மற்றும் அந்த இயக்கம் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததன் தொடர்பில் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஜ.செ.க.வின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட எழுவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர், பேரா, கெடா, நெகிரி செம்பிலான் மலாக்கா மற்றும் கோலாலம்பூரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படும் சோஸ்மா எனப்படும் சிறப்பு குற்றங்களுக்கான சட்டத்தின்கீழ் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த ஐவரும் பினாங்கு, மலாக்கா, மற்றும் சிலாங்கூரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

தமது கட்சியின் செல்வாக்கு மற்றும் நோக்கங்களை விரிவுபடுத்துவதற்கு 2012 ஆம் ஆண்டு முதல் மலேசியாவுக்கு வருகை புரிந்துவரும் சீமான் தமிழ் ஈழப் போராட்டத்தில் அனுதாபத்தை கொண்டிருக்கும் சில முக்கிய பிரமுகர்களுடன் பல்வேறு கூட்டங்களையும் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

வியாழக்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட எழுவரில் ஒருவரான கலைமுகிலனையும் சீமான் சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மலேசிய கிளையை அமைக்கும்படி கலைமுகிலனுக்கு சீமான் பணித்ததாகவும் தெரிகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு உதவும் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் முதல் நோக்கத்தை நாம் தமிழர் மலேசியா கொண்டிருந்தாலும் போகப்போக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு அது ஆதரவை தெரிவிக்கும் வகையில் மாறியது.

சமூக வலைத்தளங்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பானபல விவகாரங்களை பகிர்ந்து கொண்டு வருவதன் மூலம் கலைமுகிலன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரியவருகிறது.

2016ம் ஆண்டில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியாவிற்கான இலங்கை தூதரை தாக்கியதில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.

தூதரை தாக்கியது உட்பட நான்கு குற்றச்சாட்டுக்களை கலைமுகிலனும் இதர இருவரும் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 9,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி கோலாலம்பூரில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள உணவகம் ஒன்றில் தமது நாம் தமிழர் கட்சியின் மலேசியா கிளையை சீமான் தொடக்கி வைத்ததாகவும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள இந்திய முஸ்லிம்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராகும் பொருட்டு அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் மலேசியன் இன்சைட் தெரிவித்தது.


Read more...

கோத்தாவுடன் கைகோக்கும் தொண்டா!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் இன்று முற்பகல் ஒன்றுகூடிய கூட்டத்தின்போது இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அதற்கேற்ப, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அக்கட்சி தனது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, October 12, 2019

சிறிதரனின் சகாவான பாலியல் பலாத்கார குற்றவாளியை விடுவிக்க சுமந்திரன் செய்த வேலை தெரியுமா?

தெருவால் சென்ற சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்காக பற்றை ஒன்றுக்குள் இழுத்துச் செல்கையில் சிறுமி சத்தமிட்டதை தொடர்ந்து, ஊர் மக்கள் திரண்டபோது தப்பியோடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கயவனும் சிறிதரனின் சகாவுமாகிய ஒருவன் சிறுமியால் அடையாளம் காட்டப்பட்டதன் பிரகாரம் பொலிஸார் கைது செய்துசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தான்.

சிறுவர் துஷ்பிரயோகம் , கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு பிணைவழங்குவது மிகவும் அரிது என்பதுடன் விசேட காரணங்களின் அடிப்படையிலேயே அவ்வாறு பிணை வழங்கப்படும் என்பதும் பொலிஸார் பிணை வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பர் என்பதும் யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் சுமார் மூன்று நாட்களே விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கயவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவனுக்கு பிணைவழங்குவதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவிக்க வில்லை. இதற்கான காரணம் தமிழ் தேசியக் வழக்கறிஞர் மதியாபரணம் சுமந்திரன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியில் அழைந்து அழுத்தம் கொடுத்தமையே காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் கிளிநொச்சியின் கட்டப்பஞ்சாயத்து ராஜா தற்போது பிறேமதாஸவின் மகனுக்காக வன்னியெங்கும் வாக்கு தேடி வருகின்றார். அதன்பிரகாரம் அண்மையில் புலிகளின் முதலாவது பெண்போராளி என்று சொல்லப்படுகின்ற மாலதியின் நினைவஞ்சலி நிகழ்வு நடந்தபோது அங்கு சஜித்திற்கு வாக்கு கேட்டுச் சென்ற கட்டப்பஞ்சாயத்து தலைவன் சிறிதரன் , மேற்படி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட தனது சகாவையும் கூடவே கூட்டிச் சென்றுள்ளான்.

குறித்த பாலியல் துஷ்பிரயோகியை அங்கு கண்ட மக்கள் புலிகளின் முதலாவது போராளியின் நினைவு நிகழ்வில் இவ்வாறானதோர் சமூகவிரோதியா என தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

நிகழ்வு ஆரம்பமானபோது கிளிநொச்சி கட்டப்பஞ்சாயத் தலைவனின் வலது பக்கத்தில் உட்காந்திருந்த குறித்த காமுகனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதை உணர்ந்ததை தொடர்ந்து அவன் தனது ஏஜமானுக்கு அருகிலிருந்து எழுந்து சென்று பின்வரிசையில் உட்காந்திருப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.

Read more...

கிளிநொச்சி அம்பாள்குளம் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

திருமலையில் நேற்றிரவு கைதான கிளிநொச்சி அம்பாள்குளம் இளைஞனின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் புலி உறுப்பினரான அவனிடம் மெற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

குறித்த வீட்டில் கைதானவரின் மனைவி மற்றும் பிள்ளை தங்கியிருந்தனர். கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்தே வீட்டை சோதனைக்குட்படுத்தினர்.

இதன் போது ரி56 ரக துப்பாக்கி 1, சிறிய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57 துப்பாக்கி ரவைகள் 154, சிறிய ரக துப்பாக்கி ரவைகள் 45, மடிக் கணிணி 1, தொலைபேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள்,கமரா உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Read more...

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அண்ணன் - தம்பி இருவரையும் தூக்குமரத்தில் ஒன்றாக ஏற்றுவேன்! - ஹிருணிகா

இரண்டாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ஷவை மெதமுலான வளவில் ஜன்னல் ஒன்றில் தூக்கிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குறிப்பிடுகிறார்.

இம்முறை தனியாக அன்றி சகோதரனான கோத்தபாயவையும் சேர்த்துத் தூக்கிடுவதற்குத் தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கானகூட்டத்தில் உரையாற்றும்போதே ஹிருணிகா இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

ஏற்கனவே எல்பிட்டியில் ரணில் பெற்ற வாக்குகளை விட இம்முறை சஜித் பெற்ற வாக்குகள் ? குறியே...!

நேற்று நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குத் தலைமைத்துவம் கொடுத்துவந்த எல்பிட்டிய பிரதேச சபை இம்முறை வெறும் 24% வாக்குகளையே பெற்றுள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்அத்தேர்தலில் அத்தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபை 40.8% வாக்குகளையே பெற்றது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரனாதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி எல்பிட்டியில் மாத்திரம் 16% வாக்குகளைப் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

அதிகூடிய வாக்குகளால் எல்பிட்டிய பிரதேச சபை பொதுபெரமுன வசமாகியது....

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 தொகுதிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (11) இரவு வெளியிட்டுள்ள அனைத்து முடிவுகளின் படி, எல்பிட்டிய பிரதேச சபைக்குரிய அவித்தாவ, மெடிலிவிலிய, இந்திபலேகொட, அமுகொட, கெடென்தொல, எலிபிட்டிய, நவதல, பட்டுவன்ஹேன, தலாவ, குடாகல கதிரன்தொல, வல்லஒகல பிட்டுவல, எல்ல அம்பனகந்துவ பினிகஹ, திப்பொட்டுவாவ ஆகிய அனைத்துத் தொகுதிகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர்.

Read more...

சிங்களக் குடியேற்றம் என நீலிக்கண்ணீர் வடிக்கும் மேற்குலக தமிழரே கேளீர். பீமன்.

இலங்கையின் வடகிழக்கு தமிழரின் தாயகமாம் அங்கே சிங்களவன் குடியேற முடியாதாம்! இதுதான் இலங்கை தமிழ் அரசியல்விபச்சாரிகளதும் மேற்குலக தமிழரதும் கோஷம். சிங்களவன் குடியேற்றத்தை மேற்கொண்டு குடிப்பரம்பலை உருவாக்கி பாராளுமன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதுதான் நோக்கமாம். இதுவரை பாராளுமன்றுக்கு சென்ற தமிழன் என்ன மயிரை தமிழ் மக்களுக்கு கொண்டுவந்து கொடுத்தவன் என்ற கேள்வியை கேட்டு நேரத்தை வீண்விரயம் செய்யாது விடயத்துக்கு வருகின்றேன்.

வடகிழக்கில் சிங்களவன் குடியேறுகின்றான் தமிழரின் விகிதாசாரம் குறைகின்றது என மேற்குலகத்திற்கு சென்றிருந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழனுக்கு இன்றைய நாளில் ஒரு செயல்வீரனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தீவகத்தின் குக்கிராம் ஒன்றில் பிறந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது முழுநாளையும் அர்பணித்தவர் டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட். அவுஸ்திரேலியா, வட ஆபிரிக்கா , பிரித்தானியா என்றெல்லாம் சுகபோக வாழ்கை கிடைத்திருந்தும் அங்கு தான் உழைத்து சேமித்த பணத்தை கொண்டு இலங்கை வந்து டாக்டர் இராஜசுந்தரம் அவர்களுடன் இணைந்து காந்தீயம் என்ற அமைப்பை உருவாக்கினார். (டேவிட் ஐயா கட்டிய காந்தியம் என்ற கூட்டில் புளொட் முட்டையிட்ட கதை வேறு) வடகிழக்கில் குடியேற்றத்திற்கு எதிராக இரத்தம் சிந்தாத யுத்தம் ஒன்றை புரிந்தார். காந்தியத்தினூடாக மலையக பகுதிகளிலிருந்த தமிழ் மக்களை முல்லைத்தீவு கிளிநொச்சி மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லை பிரதேசங்களில் குடியேற்றினார். டேவிட் அவர்களால் அந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காதிருந்திருந்தால் இன்று வன்னியின் சனத்தொகை எவ்வாறிருந்திருக்கும் என்பதை அவரது நினைவு நாளான இன்று கற்பனை செய்யும்போது இச்சமூகத்தின்மீது பாரியவெறுப்பு ஏற்படுகின்றது. தீர்க்கதரிசனத்துடன் வன்னியின் சனத்தொகையை பெருக்க அரும்பெரும் பணியாற்றிய அந்த மகனை மறந்த எமது சமூகம் வன்னியின் சனத்தொகையை கொடிய யுத்தத்தின் ஊடாக அழித்தொழித்த ஒரு மோடனை தீர்க்கதரிசி என வாழ்த்தி வணங்குகின்றது. அவனது இறப்பைக்கூட ஏற்க மறுக்கின்றது.

எனவே இறுதியாக டேவிட் ஐயாவின் நினைவு நாளான இன்று „சிங்களக்குடியேற்றம் தமிழ் மக்களின் குடிப்பரம்பல்" என்றெல்லாம் புலம்பும் மேற்குலக தமிழனுக்கு ஒர் சவால் விடுக்கின்றேன். வடக்கிலிருந்து வெளியேறி சுமார் 15 லட்சம் தமிழர்கள் மேற்குலகில் வாழ்ந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. முடிந்தால் மலைநாட்டிலிருந்து டேவிட் அவர்களின் பாணியில் 1 லட்சம் தமிழ் மக்களை வடகிழக்கில் குடியேற்றிக்காட்டுங்கள்..

டேவிட் ஐயாவின் வாழ்கைவரலாறு மற்றும் அவர் எவ்வாறு காந்தியத்தை கொண்டு இயக்கினார் என்பது தொடர்பாக அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தி அங்குள்ள வீடியோக்களில் அவர் விளக்குவதை கேட்கலாம்.

டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று. பீமன்.


Read more...

Friday, October 11, 2019

ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டைத் தட்டிக்கேட்கும் தகுதி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உள்ளது: வீ.ஆனந்தசங்கரி

ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டைத் தட்டிக்கேட்கும் தகுதியும் துணிவும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உள்ளதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கி வைத்து முன்னெடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளதா எனவும் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டணியை ஒதுக்கும் தமிழ் அமைப்புகள் இந்த விடயத்தை சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதவி மோகம் கொண்ட சிலரின் திட்டமிட்ட துரோகம் கலந்த சதியால் 2004 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி முடக்கப்பட்டதாகவும் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

இதேவேளை, 1972 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பான்மையான தமிழர்கள் உதய சூரியன் சின்னத்திற்கே வாக்களித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு இதேபோல் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக உக்கிரமாக செயற்பட்டமையால், ஜனநாயக விழுமியங்ளை மீறி, தேர்தல் விதிமுறைகளை மீறி ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக விருப்பு வாக்குகளை சிலருக்கு பெற்றுக்கொடுத்ததாகவும் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே செயற்பாட்டை தற்போதும் மாணவர் ஒன்றியம் முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் அத்துமீறல்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனநாயகத்திற்காக போராடும் அமைப்பினால் மாத்திரமே தட்டிக்கேட்க முடியும் என்பதை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புபவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

தெரிந்தோ, தெரியாமலோ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய அமைப்புகளும் செயற்படுவதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி பலமடைவதை இந்த அமைப்புகளும் அரசாங்கமும் விரும்பாததன் காரணத்தினாலேயே தமது கட்சி திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீடிப்பு

மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணம் தொடர்பில் விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் நீடித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது, 33.9 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு புவனேக அலுவிஹாரே, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர உள்ளிட்ட மூவரடங்கிய நீதியசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விசேட மேல் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com