Tuesday, March 16, 2010

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -03 – புன்னியாமீன்

மிகப் பெரும் மீதி முறை சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு நன்மை பயக்கத்தக்கதே
விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் 6 படி முறைகளில் போனஸ் ஆசனத்தை வழங்குதல், குறைந்த பட்சம் 5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல் போன்ற இரண்டு படி முறைகளையும், இந்த இரண்டு படிமுறைகளினூடாகவும் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், கடந்தவாரம் நோக்கினோம். ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் ஏனைய முறைகள் பற்றி இன்று நோக்குவோம்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளை கணிப்பீடு செய்வதாகும். இதனையும், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட உதாரணம் மூலமாகவே விளக்குவோம். அதாவது x எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும், இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A = 5400 வாக்குகள்
கட்சி B = 3600 வாக்குகள்
கட்சி C = 1410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11850
நிராகரிக்கப்பட்ட வாக்கு 150
செல்லுபடியான வாக்கு 11700

இரண்டாம் படி முறையின் கீழ் வெட்டுப் புள்ளி வாக்கினைப் பெறாத சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளைக கணிப்பிடுதல்.

இங்கு தொடர்புடைய வாக்குகள் எனும் போது தேர்தல் முடிவுகளின் படி ஒரு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைய வாக்கினைக் குறிக்கும். அதாவது, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து, 5 வீதத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று நீக்கப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளையும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும், கழித்துப் பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகளாகும்.

தொடர்புடைய வாக்குகள் = அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – (நீக்கப்பட்ட வாக்குகள் + நிராகரிக்கப்பட்ட வாக்குகள்)
எமது உதாரணப்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11, 850 . இவ்வாக்குகளில் இருந்து நீக்கப்பட்ட வாக்குகள் 540 உம், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 150உம் கழிக்கப்பட்டு பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகள் ஆகும்.

அதாவது தொடர்புடைய வாக்குகள் = 11850 – (540+150) = 11160 இங்கு பயன்படுத்தப்படும் வாக்குகள் 11160 மட்டுமே.

4வது படிமுறை – முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல்

ஓர் ஆசனத்தைப் பெற குறைந்தபட்சம் ஒரு கட்சி புறைந்த பட்சம் பெற வேண்டிய வாக்கே முடிவான எண்ணாகும். அதாவது ஆசன எண்ணிக்கையில் இருந்து ஒன்றைக் கழித்து வரும் விடையினால் தொடர்புடைய வாக்குகளை வகுத்தல் வேண்டும்.
முடிவான எண் = தொடர்புடைய வாக்குகள்/ ஆசன எண்ணிக்கை – 1

எமது உதாரணப்படி
முடிவான எண் = 11160 / (10-1) = 1240

ஏற்கனவே போனஸ் ஆசனம் வழங்கப்பட்டமையால் இங்கு மொத்த ஆசன எண்ணிக்கையிலிருந்து 1 கழிக்கப்படும். எமது உதாரணப்படி 1240 வாக்குகளைப் பெற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், குழுக்களும் ஓர் ஆசனத்தைப் பெற உரித்துடையதாகும்.

5வது படிமுறை – முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

போட்டியிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளை முடிவான எண்ணால் வகுத்து முழுமையான எண்ணுக்கமைய ஆசனங்களை வழங்குதல்.

எமது உதாரணப்படி

A கட்சி பெற்ற வாக்குகள் 5400/ 1240 = 4
இங்கு முழுமையான எண்ணுக்கமைய 4 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
354 வாக்குகள் மீதியாகின்றன.

B கட்சி பெற்ற வாக்குகள் 3600/ 1240 = 2
இங்கு முழுமையான எண்ணுக்கமைய 2 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
903 வாக்குகள் மீதியாகின்றன.

C கட்சி பெற்ற வாக்குகள் 1410/ 1240 = 1
இங்கு முழுமையான எண்ணுக்கமைய 1 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
137 வாக்குகள் மீதியாகின்றன.

சுயேட்சைக்குழு – 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சுயேட்சைக்குழு – 2 முடிவான எண்ணைப் பெறாமையால் ஆசனத்தைப் பெறவில்லை. இருப்பினும் சுயேட்சைக்குழு 2 பெற்ற 900 வாக்குகளும் பயன்படுத்தப்படாமையால் இந்த 900 வாக்குகளும் மீதியாகின்றன.

எனவே 5ம் படிமுறை முடிவின்போது 10 ஆசனங்களைக் கொண்ட X தேர்தல் மாவட்டத்தில் ஆசனங்கள் பின்வருமாறு பகிரப்பட்டிருக்கும்.

கட்சி போனஸ் முடிவான எண்ணுக்கமைய
கட்சி A 01 04
கட்சி B - 02
கட்சி C - 01
சுயேட்சை 1 - -
சுயேட்சை 2 - -

5ம் படிமுறை நிறைவில் 08 ஆசனங்களே பகிரப்பட்டிருக்கும் மீதான 2 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள 6 வது படிமுறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

6ம் படிமுறை – மிகப் பெரும் மீதி முறை

பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது விகிதாசார முறையில் பிரச்சினைக்குரிய ஆசனங்களைப் பெற, கடைப்பிடிக்கப்படும் மிகப்பெரும் மீதி முறையே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பாக அமைகின்றதெனலாம்.

5ம் படிமுறையின் போது முடிவான எண்ணுக்கமைய ஆசனங்கள் பகிரப்பட்ட பின்பு மிகுதியாக உள்ள வாக்குகளின் பெரும்பான்மைக்கமைய பிரச்சினைக்குரிய ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். இம்முறையையே மிகப்பெரும் மீதி முறை என அழைப்பர்.

எமது உதாரணப்படி மிகுதிகள் வருமாறு:
A கட்சி மீதி 354 வாக்குகள்
B கட்சி மீதி 903 வாக்குகள்
C கட்சி மீதி 137 வாக்குகள்
சுயேட்சை 2 மீதி 900 வாக்குகள்

எனவே பிரச்சினைக்குரிய 2 ஆசனங்களும் ஆகக் கூடுதலான மீதியைப் பெற்றுள்ள B கட்சிக்கு ஓர் ஆசனம் என்றும், இரண்டாவது மீதியைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழு 2க்கு ஓர் ஆசனம் என்றும் பகிரப்படும்.

எனவே, இறுதித்தேர்தல் முடிவானது பின்வருமாறு அமையும்.

A கட்சி போனஸ் முறையின் கீழ் 01ஆசனத்தையும், முடிவான எண்ணுக்கமைய 4 ஆசனங்களையும், கொண்டதாக மொத்தம் 5 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

B முடிவான எண்ணுக்கமைய 2 ஆசனங்களையும், மிகப் பெரும் மிகுதிக்கமைய ஒரு ஆசனத்தையும், கொண்டதாக மொத்தம் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

C முடிவான எண்ணுக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும்.

சுயேட்சைக் குழு 2 மிகப் பெரும் மிகுதிக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும். மேற்குறிப்பிட்ட அடிப்படையில் X மாவட்டத்தில் 10 ஆசனங்களும், வழங்கப்படும்.

எனவே குறைவான வாக்குகளைப் பெற்ற போதிலும் கூட மிகப் பெரும் மிகுதி முறையின் கீழ் சுயேட்சைக்குழு 2 இனால் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

2000ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை எடுத்துநோக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆசனங்களை வென்றெடுக்கவும், தேசிய ஐக்கிய முன்னணி (NUA) சில ஆசனங்களை வென்றெடுக்கவும் மிகப் பெரும் மிகுதி முறையே காரணமாக அமைந்தது. கண்டி தேர்தல் மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி ஓர் ஆசனத்தை வென்றெடுத்தமைக்குக் காரணம் இந்த மிகப்பெரும் மிகுதி முறையே.

எனவே விகிதாசார தேர்தல்முறை காரணமாக சிறுபான்மைக் கட்சிகளும், மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் அதிக பயனைப் பெறுகின்றன என்றால் மிகையாகாது.

விருப்பு வாக்குகள்

ஆசனப்பகிர்வின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்களுக்கமைய, வெற்றி பெற்ற கட்சியில் கூடிய விருப்பத் தெரிவினைப் பெற்ற அபேட்சகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்.

தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் முறை பற்றி அடுத்த வாரம் நோக்குவோம்.

Read more...

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்!- கிறேசியன்! (பாகம் -11)

சூனா. பானா. தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவராகி வெளிநாடுகளுக்குச் சென்று பல்லிளித்து வந்ததைத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை. அரசியல் என்றால் புன்னகைப்பதுதான் என்று இவர் கண்டுபிடித்திருந்தார் போலும். அன்று என்னைத் தாக்கும் போது அவரது முகத்தை நான் நேராகப் பார்த்தேன். மிகவும் கொடூரமானதும், அசிங்கமானதாகவும் இருந்தது.

அங்கே இருந்த ஏனைய இயக்க அங்கத்தினருக்கும் புலி விலங்குகளுக்கும் தன்னை ஓர் பொல்லாத விலங்கு என்று காண்பிப்பதற்காக என்னை அப்படிப் பலமாக அடித்துத் துவைத்தார். என்னை அவருக்கு யார் என்றே தெரியாது. அன்றுதான் இந்தப் பகுதிக்கு வந்தவர். தன்னை ஓர் சூரப்புலியாகக் காண்பிக்க பிறரை வருத்தினார். எனது கையால் ஒரு அடிக்குத் தாங்கமாட்டார் அந்தப் பலிலிளிக்கும் விலங்கு. கைது செய்யப்பட்டிருக்கும் இயக்க அங்கத்தினரைப் பார்வையிட வந்தவராம் அன்று. தனது வீரத்தையும் காண்பிக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவுதான் இது.

யுத்த நிறுத்த காலத்தில் இவர் நான்கு பஸ்களை உறவினர்கள் பெயரில் வாங்கி தொழில் நடத்திவந்தார். இவரது குழந்தை விளையாடுவதற்கு ஒன்றரை இலட்சம் ரூபாயில் லாப்ரொப் கம்யூட்டர் வேண்டி கொடுத்திருந்தார். சாதாரண புலிப் போராளி அங்கத்தினர் இதனைக் கண்டு வேதனை அடைந்தனர்.

புலிகளின் பெருந்தலைகள் எல்லோரும், சொகுசான வீடுகள், வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் என்று வன்னியிலும் ஐரோப்பியர் போன்று வாழ ஆரம்பித்தனர். இந்த வாழ்க்கையை முன்நின்று நடத்திக் காட்டியவர் தமிழ்ச்செல்வன்தான். இவரது அந்த இரக்கமற்ற கொடுந் தாக்குதலை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அவர் இறந்த போது பலர் கவிதைகள் பாடினர். இப்படியான கொடியவர்களும் நல்லவர் போல் உலகத்தை ஏமாற்றியுள்ளனர் என்று கண்டேன்.

இந்த அடிக்கும் அதே மருத்துவர் தயாபரன் வின்ரோஜன் தடவி எனக்கு ஆறுதல் கூறினார். தமிழ் செல்வன் இதற்கு முன்னரும் ஒரு தடவை இங்கு வந்து ஒரு பெடியனைப் போட்டு தாறுமாறாக அடித்துவிட்டுச் சென்றார். அவருக்கும் இந்தப் பகுதிக்கும் எந்தவிதச் சம்மந்தமும் இல்லை. இங்கு கைதிகளை மிகவும் சுதந்திரமாக விட்டுள்ளனர். தன்னிடம் ஒப்படைத்தால் காலில் விலங்குபோட்டு இப்படி இருக்கவைத்திருக்க மாட்டேன், வெளவால் போல அனைவரையும் தலைகீழாகத் தொங்கவிட்டிருப்பேன் என்று கூறிச் சென்றார் என்று என்னிடம் கூறினார்.

இப்படியாக ஒருவாரம் கழிந்தது. ஒருநாள் இரவு ஒரு சக கைதிக்கு வயிறு வலி ஏற்பட்டது. காலை மாலை இருவேளை தவிர ஏனைய நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க அவர்கள் அனுமதிப்பது கிடையாது. அந்தச் சகோதரன் வலியில் தான் கழிவறை செல்லவேண்டும், இங்கு சொப்பின் பைகிடையாது எனவே என்னை வெளியிலே கூட்டிச் செல்லுங்கள் என்று சத்தமிட்டார். காவல் விலங்கு அதற்குச் சம்மதிக்காமல் சத்தம் போட்டாமல் இரு! சத்தம் போட்டால் அடிவாங்குவாய் என்று கூறிச் சென்றார். இரவு அனைவரும் தூங்கிவிட்டோம். அந்தச் சகோதரன் அம்மண்டபத்தின் உள் ஓரத்தில் மலம் கழித்துவிட்டார்.

காலையில் புலி விலங்குகள் வந்தனர். யார் மலங்கழித்தது என்று கேட்டனர். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை, உங்கள் அனைவருக்கும் இதற்காகத் தண்டனை உண்டு என்று கூறிவிட்டுச் சென்றனர். மாலை உணவு வழங்கப்பட்டப் பின்னர் அனைவரையும் எழுந்து நிற்கும்படி கூறினர் விலங்குகள். அனைவரும் எழுந்து நின்றோம். தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்திக்கொண்டு நிற்கும்படி கூறினர்.

மாலை நான்கு முப்பது மணியளவில் இந்த உத்தரவைப் போட்டனர். ஒரு மணி இரண்டு மணி நேரமல்ல 16மணி நேரம் யாரும் கையைக் கீழே கொண்டுவரக்கூடாது. அருகில் இருக்கும் சுவரில், அல்லது தூணில் சாயக்கூடாது, பத்துக்கும் மேற்பட்ட புலி விலங்குகளை இதற்காகவே காவலுக்குப் போட்டனர். வலி தாங்காமல் கைகளைக் கீழே கொண்டு வந்தவர்களுக்கு அடிவிழுந்தது. 3-4 மணி நேரங்களுக்கு மேல் என்னால் தொடர்ந்து நிற்கமுடியவில்லை. எதிர் முனையில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் என்னைப் பார்த்து அழுதுகொண்டு நின்றார். இரவு 10மணியைக் கடந்ததும் ஏறக்குறைய 10பேருக்கு மேல் நிலத்தில் இருந்து விட்டனர். இதைப் பார்த்துவிட்ட புலிவிலங்குகள் ஓடிவந்தனர். நிலத்தில் இருந்தவர்களைத் தாக்கினர், எங்களைக் கொன்று விடுங்கள் என்று கத்தினார்கள் நிலத்தில் இருந்தவர்கள்.

இந்தக் கதறல்கள் எவற்றினையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து அடித்து அவர்களை எழுந்து நிற்கவைத்தார்கள். எனது தோழ்கள் இரண்டும் வலியெடுத்து விறைத்துவிட்டது. கைகளை நேரே தூக்காமல் தலையின் மேல் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துக்கொண்டேன். இதைபோன்று அனைவரும் வைத்திருந்தனர். உறக்கம் உடலைத் தள்ளாட வைத்தது. புலிவிலங்குகள் ஆள்மாறி ஆள்மாறி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் தள்ளாடி மற்றவர் மீது விழுந்தனர். இப்படியாக இரவு முடிந்தது.

காலையில் வழக்கம் போல் கடன் கழிக்க வரிசையாகச் சென்று முடித்துவிட்டு வந்தோம். இப்போது கூட விலங்குகள் திருப்தியடையவில்லை. மீண்டும் கைகளைத் தூக்கிக்கொண்டு நிற்கும்படி கூறினர். அவர்கள் உத்தரவுபடி கைகளை தலைக்கு மேலாக உயர்த்திக்கொண்டு நின்றோம். காலை 8.30 மணியளவில்தான் நிலத்தில் அமரும்படி கூறினர். அப்படி நிலத்தில் அமர்ந்தவர்கள் இருந்தபடியே உறங்கலாயினர். இதைக் கவனித்த விலங்குகள் மீண்டும் தடிகள் எடுத்து வந்து உறங்கியவர்களை அடிக்கத் தொடங்கினர்.

பகல் நேரத்தில் நித்திரை கொள்ளக்கூடாது கைதிகள் என்பது அவர்களது சட்டமாம். கொடுமைப்படுத்த வேண்டும் என்பது கொள்கையானால் அனைத்துமே சட்டம்தான்! மிருகவதை என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது என்னவென்று தெரியாது. இந்தப் புலி விலங்குகளிடம் தான் அதன் உண்மைநிலையைக் கண்டேன். இப்படியான ஓர் தண்டனையைக் கண்டு பிடித்து நடைமுறைப்படுத்திய புலி விலங்கின் பெயர் ரவி என்பதாகும். இவர் செம்படை சலிமுக்கு அடுத்தப்டியான பதவியில் சில காலம் இருந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார் என அறிந்தேன்.

மீண்டும் பல நாட்கள் இதே போன்று பலதரப்பட்ட தாக்குதல்கள், சித்திரவதைகளுக்கிடையில் வழக்கம் போல் கே.டி. வந்து பலரது மூக்குகளை உடைத்துக் கொண்டிருந்தார். கே.டி. உள்ளே வரும்போது அங்கிருக்கும் சகோதரர்கள் தங்கள் தலைகளைக் கீழே சரித்துக்கொள்வார்கள். கே.டி. திரும்பி வெளியே செல்லும் வரை தலையை நிமிர்த்திப் பார்க்கவேமாட்டார்கள்.

ஒருநாள் நான் விசயம் தெரியாமல் கே.டி.யைப் பார்த்துவிட்டேன். சைகையால் வா என்று அழைத்தார். வேறு வழியில்லை, எழுந்து சென்றேன். அப்பையா அண்ணன் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது! எனது மூக்கை எப்படிப் பாதுகாப்பது என்று தெரியவில்லை! மூக்கைப் பாதுகாக்கப்புறப்பட்டால் உடல்ப் பாகங்கள் பழுதடையும், ஒரு தடவை வலிதானே! வருவது வரட்டும் என்று அந்த விலங்கின் முன் நின்றேன்.

தூசன வார்த்தைகள் பேசி தனக்குத் தானே கோபத்தை வரவழைத்து தனது உள்ளங்கையால் என் மூக்கின் மீது பலமாகக் குத்தினார். மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது, போய் இரடா என்றார், தரை முழுவதும் இரத்தம் வடிய நான் மீண்டும் எனது இருப்பிடத்தில் இருந்தேன். இரத்தத்தைத் துடைக்க எந்தவித துணியும் கிடையாது. எனது சறத்தைக் கழற்றி இரத்தத்தைத் துடைத்தேன். மறுநாள் காலை கடன் கழித்த பின்னர்கூட அந்தச் சறத்தைக் கழுவ முடியவில்லை. ஐந்து நாட்கள் கழித்துத்தான் குளிப்பதற்கு அனுமதித்தனர். அன்றுதான் இரத்தக்கறை படிந்த சறத்தைக் கழுவினேன்.

வாரத்தில் இரண்டு மூன்று தடவை வந்து மூக்குடைக்கும் கே.டி. இப்போது தினமும் வர ஆரம்பித்தார். காலைக் கடன் கழித்துவிட்டு வரும் சகோதரர்களுக்கு வாசலில் நின்று கெட்டவார்த்தைகள் பேசி பெருத்த தடி ஒன்றினால் அடிப்பார். தொடர்ந்து ஒரு வாரமாக இந்தப் பணியை கே.டி. என்ற விலங்கு செய்து வந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளர் தர்மலிங்கம் என்பவர், வயது 45க்கு மேல் இருக்கும். வழக்கம் போல் காலைக்கடன் முடித்து வரும்போது கே.டி. வரிசையில் வருபவர்களுக்கு ஓர் தடிப்பான தடியினால் அடித்துக்கொண்டு நின்றார். தர்மலிங்கம் அவர்கள் வந்ததும் அவரை அடிக்கும் போது அவர் தனது இடது கைகளினால் தடுத்து விட்டார். கே.டி.க்கு கோபம் வந்துவிட்டது. தர்மலிங்கம் அவர்களைத் தள்ளிவிட்டார். கால்சங்கிலி தடுக்க அவர் கீழே விழந்தார். சற்று தள்ளி ஓர் மண்வெட்டி இருந்தது. அந்த மண்வெட்டியை எடுத்து பிடியை நிலத்தில் குத்திக் கழற்றினார். அந்தப் பிடியினால் தர்மலிங்கம் அவர்களைத் தாக்குவதற்கு ஆரம்பித்தார். முழங்கைக்குக் கீழ் உடைந்தது. அவர் மீது பட்ட ஒவ்வொரு அடியும் அருகில் நின்ற அனைவரையும் திகைக்க வைத்தது. புலி விலங்குகளும் இதனை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்தனர்.

மறுநாள் இச்சிறையின் பொறுப்பாளர் சலீம் வந்தார். கே.டி.யை அழைத்து இனிமேல் இந்தப்பக்கம் வரக்கூடாது என்றும் யாரைக் கேட்டு அவரை அடித்தனீ என்றும், நீ இங்கு வரும்போதெல்லாம் இவர்களை அடிக்கிறாய் என்று ஏக வசனத்தில் திட்டி அனுப்பிவைத்தார். ஆனாலும் கே.டி. இந்த உத்தரவை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

தொடரும்…

Read more...

பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு. தீவிரவாத தாக்குதல் அல்ல.

பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஆய்வு மையத்தின் மீது இரண்டு மர்ம ஆசாமிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது அங்கு பாதுகாப்புக்கு இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்களும் (சிஐஎஸ்எப) பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அந்த இரு ஆசாமிகளும் தப்பியோடிவிட்டனர்.

அவர்களைத் தேடும் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூர் பையலலுவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ரேடார் மையத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.

நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்த்ராயன் செயற்கைக் கோளில் இருந்து தகவல்களைப் பெற இந்த ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. இப்போது பிற செயற்கைக் கோள்களும் இந்த மையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் எதி்ர்காலத்தில் இஸ்ரோ பிற கிரகங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள செயற்கைக் கோள்களின் கட்டுப்பாடும் இந்த மையத்தில் இருந்து தான் கையாளப்படவுள்ளது. இதற்காக இங்கு மாபெரும் ஆண்டெனக்கள் நிறுவப்பட்டுள்ளன.

நிலவை சுற்றி வந்து சந்த்ராயன் செயற்கைக் கோள் நடத்திய ஆராய்ச்சியின் தகவல்கள் மற்றும் அந்த கோள் எடுத்த படங்கள் எல்லாம் இந்த Deep Space Network ஆண்டெனக்கள் மூலம் தான் பெறப்பட்டன.

24 மணி நேரமும் மிக பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த மையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தீவிரவாதத் தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இந்த மையத்தின் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இரண்டு ஆசாமிகளை, அங்கிருந்த பாதுபாப்பு வீரர்கள் நிறுத்தி விசாரித்தபோது திடீரென அவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு வீரர்களும் திருப்பிச் சுட்டனர்.
பாதுகாப்பு வீரர்கள் அவர்களை சுற்றி வளைப்பதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இவர்களைப் பிடிக்க கர்நாடக போலீசார் வலை வீசியுள்ளனர். பெங்களூரின் மையப் பகுதியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் மைசூர் சாலையில் இந்த மையம் அமைந்துள்ளது.

தீவிரவாத தாக்குதல் அல்ல:

இந்த துப்பாக்கிச் சூடு தீவிரவாதத் தாக்குதல் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இஸ்ரோ மையங்கள் போதிய பாதுகாப்பில் உள்ளன. பையாலலுவில் நடந்த தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் போலத் தெரியவில்லை. இது ஒரு அமெச்சூர்தனமான தாக்குதல். நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு யாரோ இருவர் இதை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் இந்தத் தாக்குதல் குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். இஸ்ரோவின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யவும், உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிஐஎஸ்எப் குழு பாதுகாப்பு மறு ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்ட தகவலின்படி யாரோ இருவர் முகத்தை மூடியபடி 10, 15 மீட்டர் தொலைவில் இருந்து இஸ்ரோ மையத்தில் பாதுகாப்புக்கு இருந்த சிஐஎஸ்எப் படையினரை நோக்கி சுட்டுள்ளனர். பதிலுக்கு படையினரும் சுட்டுள்ளனர்.

முழு விசாரணைக்குப் பின்னரே இது எந்த மாதிரியான தாக்குதல் என்பது தெரியவரும் என்றார்.

Read more...

யாழில் மாணவியை கற்பழித்த ஆசிரியர்.

பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திவரும் 30 வயதுடைய ஆசிரியர் ஒருவர் 19 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் ஒன்று யாழ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாத்தியாரின் கையடக்க தொலைபேசியில் இருந்து மாணவியின் புகைப்படங்கள் () உட்பட பல சாட்சியங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் குற்றத்தை நிருபிப்பதற்கு போதுமான பல சாட்சியங்கள் பொலிஸாரினால் திரட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read more...

பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் : நீதிமன்றில் அந்தர் பல்டி.

சண்டே லீடர் பத்திரிகையில் கடந்த 28ம் திகதி எழுதப்பட்டிருந்த கட்டுரையில் பிரதி பிரதம நீதியரசர் சிறானி பண்டாரநாயக்கவை அவமானப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. இக்கருத்துக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் நேற்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டுரையின் உரிமையாளர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் மன்றில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். அவர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் தவறை உணர்ந்துள்ளதாகவும் , தவறுக்காக எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கட்டுரையில் உள்ள பாரதூரமான விடயங்களை அவர் பின்னரே உணர்ந்துள்ளதாகவும் கூறினர்.

அவருடைய மன்னிப்பு கோரலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மன்னிப்புகோரும் விடயத்தினை சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் முதற்பக்கத்தில் பிரசுரிக்க உத்தரவிட்டுள்ளதுடன் கட்டுரையில் உள்ள தவறுகளைத் திருத்தி அவற்றை முன்பக்கத்தில் பிரசுரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார் என செய்தி வெளியிட்ட பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ், அவ்வாறு அவர் அதை தெரிவித்தார் என்பதற்கான ஒலிப்பதிவு தன்னிடம் உண்டு என தெரிவித்தபோதும் இதுவரை அவர் அதை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

கூகுள் நிறுவனத்திற்கு சீனா மீண்டும் அறிவுறுத்தல்

சீனாவின் சட்ட விதிகளுக்கு கீழ்படிந்து நடக்குமாறு பிரபல இணைய தேடுதள நிறுவனமான கூகுளுக்கு சீனா மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் செயல்படும் கூகுள் நிறுவனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளதால், சீனாவில் தனது தொழில் சேவைகளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து வெளியேற கூகுள் ஆயத்தமாகி வருகிறது.

கூகுளின் வெளியேற்றத்தினால் கணிசமான அன்னிய முதலீடு பாதிக்கப்படும் என்பதால், கூகுளை வெளியேறவிடவும் சீனாவுக்கு மனமில்லை. இந்நிலையில், சீனாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடந்தால் கூகுள் தொடர்ந்து சீனாவில் தனது தொழில் சேவைகளை தொடரலாம் என்று அந்நாட்டின் வர்த்தக துறை அமைச்சக பேச்சாளர் யாவோ ஜியான் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சீனாவின் சட்டவிதிகளுக்கு கீழ்படிந்து கூகுள் நடக்கும் என்று தாம் நம்புவதாகவும், அதே சமயம் அந்நிறுவனம் வேறு முடிவை மேற்கொண்டாலும் அது குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Read more...

முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம் சமுதாயத்தினர் மீதான பாரபட்சமான, துவேஷப் போக்கு அதிகரித்து வருவதாக அமெரிக்க மனித உரிமைத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மனித உரிமைத் துறை வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் குறித்து துவேஷப் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. முஸ்லீம்களிடம் பாகுபாடு காட்டுவதும், வெறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வதும் ஐரோப்பியர்களிடையே அதிகரித்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் மசூதிகள் அல்லது பள்ளிவாசல்கள் போன்றவற்றைக் கட்ட சுவிட்சர்லாந்து அரசு தடை விதித்தது இதையே காட்டுவதாக உள்ளது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, ஆலந்தில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. தொப்பி அணிவதையும் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்த செயல்கள் மிகவும் கவலை தருவதாக உள்ளன. மத சுதந்திரத்தையும், மனித உரிமையையும் தடுக்கும் செயல்கள் இவை. ஆலந்தில் 8 லட்சத்து 50 ஆயிரம் முஸ்லீம்கள் உள்ளனர். ஆனால் இங்கு அவர்களுக்கு சுதந்திரம் பெரிய அளவில் இல்லை. முஸ்லீம்கள் மீதான துவேஷம் அதிகரிக்க அங்குள்ள வலது சாரி அரசியல்வாதிகள்தான் முக்கியக் காரணம்.

முஸ்லீம்களுக்கு எதிராக அங்கு பெருமளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லை என்றாலும் கூட சிறு சிறு சம்பவங்கள் நடந்தபடிதான் உள்ளன. கேலி செய்வது, வேண்டுமென்று வம்புக்கு இழுப்பது, தகாத வார்த்தைகளால் விமர்சிப்பது போன்றவற்றில் ஆலந்து நாட்டினர் ஈடுபடுகின்றனர்.

மனித உரிமை மீறல்கள்...

மனித உரிமை மீறல்களைப் பொறுத்தவரை சீனா, பெலாரஸ், கியூபா, மியான்மர், வட கொரியா, ஜிம்பாப்வே, சூடான், சிரியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் அவை பெருமளவில் உள்ளன. ஈரானில் இது அதிகமாகவே உள்ளது.

உய்கூர் முஸ்லீம்களுக்கு எதிராக சீன அரசு மிகப் பெரிய அளவில் அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதேபோல திபெத்தியர்களிடமும் அவர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். இன்டர்நெட்டையும் கூட சீன அரசு கடுமையாக முடக்கி வருகிறது. செய்திகளை அறிவதில் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை அது போட்டு வருகிறது.

அப்பாவி மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு...

கடந்த 2009ம் ஆண்டில் பல நாடுகளில் ஏற்பட்ட மோதல்களில் அப்பாவிகள் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான் ஆகிய நாடுகளில்தான் பெருமளவிலான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் அப்பாவிகளின் உயிர்களுக்கு சற்றும் உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது. அங்கு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், சித்திரவதைகள், படுகொலைகள், காணாமல் போவது ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Read more...

ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர். விசாரணைகள் ஏப்பரல் 6 க்கு ஒத்தி.

இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் , இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளருமான ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணைகள் ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது போல் இன்று கடற்படைத் தலைமையத்தில் அமைக்கப்பட்ட விசேட இராணுவ நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளில் ஜெனரல் பொன்சேகா கலந்து கொள்ளமாட்டார் என ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தபோதும், அவர் ஆஜராகியுள்ளார். ஜெனரல் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரின்சி அர்ஷாகுலரத்ன தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் தலைமையில் வழக்கு எடுக்கப்பட்டபோது, இராணுவ நீதிமன்றின் நீதிபதிகள் தொடர்பாக ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 3 நீதிபதிகளில் ஒருவர் இராணுவத் தளபதியின் மைத்துனர் , ஒருவர் குற்றச்செயல் ஒன்றுக்காக ஜெனரல் பொன்சேகாவினால் தண்டிக்கப்பட்டு பதவியிறக்கப்பட்டவர், மூன்றாமவர் இராணுவ ஏல விற்பனை ஒன்று தொடர்பாக குற்றவாளியெனக் நிருபிக்கப்பட்டவர் என தெரிவித்த சட்டத்தரணிகள் நீதிபதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஜெனரல் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டதுடன், தமது வாதத்திற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டபோது சட்டத்தரணிகள் அதற்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்ததை அடுத்து வழக்கு எதிர்வரும் ஏப்பரல் மாதம் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, தம்மீதான குற்றச்சாற்றுக்கள் அனைத்தையும் பொன்சேகா மறுத்ததோடு, இவை அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்றும், அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடாமல் தடுப்பதற்காகவே தம்மீது இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் தம்மீதான இந்த குற்றச்சாற்றுக்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே தாம் குற்றவாளி இல்லை என்றோ அல்லது குற்றவாளி என்றோ மன்றாடப்போவதில்லை என்றும் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான நளின் தெரிவித்தார்.


Read more...

பொன்சேகாவை விடுவிக்ககோரி ஆர்பாட்டங்கள். பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்.

ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ நீதிமன்றில் இன்று விசாரணைகள் இடம்பெறுகின்ற தருணத்தில் அவரது கைது சட்டவிரோதமானது எனவும் அவரை இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது எனவும் வாதிடும் அவரது ஆதரவாளர்களும் , அரசியல் பங்காளிகளான ஜேவிபி யினரும் நாடுபூராகவும் இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜேவிபி யின் தலைவர் சோமவன்ச உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை பாணந்துறையில் இடம்பெற்ற ஆர்பாட்ட ஊர்வலத்தினை பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து கலைத்துள்ளனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்துபேரளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் 300 பேரளவில் கொழும்பு - காலி பிரதான வீதியை குறுக்கிட்ட பாதையை செயலிளக்கச் செய்ய முனைந்தாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன் நாடு பூராகவும் ஏற்பாடாகியுள்ள ஆhப்hட்டங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிஸார் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.






Read more...

அமெரிக்காவில் பெண் தீவிரவாதி கைது. இந்தியா குறித்து உளவு பார்த்தாராம்!

ஜிஹாத் ஜேன் என்ற பெயரில் இந்தியா வுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கான தகவல்களைத் திரட்டி வந்த அமெரிக்கப் பெண்ணை அந்த நாட்டு எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலும், தெற்காசியாவிலும், ஐரோப்பாவிலும் பெரும் தீவிரவாத சதிச் செயல்களை இவர் உள்ளிட்டோர் தீட்டி வந்தது தெரிய வந்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கான ஆளெடுப்பிலும் ஜிஹாத் ஜேன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவருடைய உண்மையான பெயர் கொலீன் லாரோஸ் என்ற பாத்திமா லாரோஸ். பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் தற்போது வெள்ளையர்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர் தீவிரவாதிகள். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஆண்டு டேவிட் கோல்மேன் ஹெட்லி என்ற அமெரிக்கர் கைது செய்யப்பட்டார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த வரிசையி்ல் இன்னொரு அமெரிக்கப் பெண் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதாகும் கொலீன் லாரோஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிலடெல்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு தீவிரவாதக் குழுக்களுடன் நல்ல தொடர்பு உள்ளதாம். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர் தீவிரவாதக் குழுக்களுக்காக பணியாற்றி வந்துள்ளார்.

நான்கு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவை - தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தது, வெளிநாடு ஒன்றில் கொலைச் செயலை செய்ய திட்டமிட்டது, அடையாளத் திருட்டில் ஈடுபட்டது, போலி வாக்குமூலம் அளித்தது.

கொலீன் லாரோஸ் குறித்த வழக்கில், பிலெடல்பியா கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் மைக்கேல் லெவி கூறுகையில், தீவிரவாதிகள் தற்போது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. பார்த்தவுடன் இவர் தீவிரவாதி என்ற சந்தேகம் கொஞ்சம் கூட எழாத வகையில் ஆட்களை இவர்கள் தேர்வு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் தீவிரவாதிகளுக்குத் துணை போக ஆரம்பித்து பிடிபட்டிருப்பது இதையே காட்டுவதாக உள்ளது என்றார்.

வெள்ளை இனத்தைச் சேர்ந்த முதல் பெண் தீவிரவாதி கொலீன் லாரோஸ் என்று கூறப்படுகிறது. இவருடைய கூட்டாளி இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவருடைய பெயரை எப்.பி.ஐ. குறிப்பிடவில்லை.

டென்மார்க்கைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட்டைக் கொல்ல கொலீன் லாரோசுக்கு இந்த நபர் உத்தரவிட்டிருந்தாராம். இந்த வில்க்ஸ், நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வரைந்ததால் சர்ச்சைக்குள்ளானவர்.

வில்க்ஸ் கொலைச் சதி தொடர்பாக அயர்லாந்து போலீஸார், 4 ஆண்கள், 3 பெண்களை கைது செய்துள்ளனர். இவர்கள் மூலம்தான் கொலீன் லாரோஸ் குறித்த தகவல் வெளியானதாம்.

வில்க்ஸ் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற சிலரை தேர்வு செய்திருந்தார் கொலீன் லாரோஸ். மேலும் இதற்காக நிதியும் கூட திரட்டி வைத்திருந்தார். தெற்காசியா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில தீவிரவாதிகளுடன் அவர் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் எந்த குறிப்பிட்ட தீவிரவாத இயக்கத்திற்காகவும் இவர் தனியாக செயல்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் தீவிரவாத திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான சதியும் கொலீன் லாரோசிடம் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த தீவிரவாத செயல்களில் கொலீன் லாரோசுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெரியவில்லை.

Read more...

Monday, March 15, 2010

டீஎன்ஏ இன் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளிவருகின்றது.

ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளிவருகின்றது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா மற்றும் ஜேவிபி யின் தலைவர் சோமவன்ச ஆகியோர் கலந்து கொள்வர் என தெரியவருகின்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டில் சிறந்த ஆட்சியை ஏற்படுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், மனித உரிமைகளை பேணுதல் போன்ற 5 முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Read more...

இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

எதிரி நாட்டு ஏவுகணகளை வானிலேயே தடுத்து தாக்கி அழிக்கும் இந்தியா வின் நவீன ஏவுகணை (Advanced Air Defence missile) சோதனை இன்று தோல்வியில் முடிந்தது. ஒரிஸ்ஸா மாநிலம் பாலசூர் அருகே உள்ள வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மையத்தில் இன்று இந்த சோதனை நடந்தது.

இந்த சோதனையின்போது முதலில் பிருத்வி ரக ஏவுகணை 10.02 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ஏவுகணை வங்கக கடலின் மீது பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் இதை வானிலேயே தடுத்து அழிக்கும் interceptor ஏவுகணையை செலுத்த முயற்சிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஏவுகணை ஏவு வாகனத்தில் இருந்து கிளம்பவே இல்லை. அந்த ஏவுகணை டேக்-ஆபே ஆகவில்லை. இதனால் இந்த ஏவுகணை சோதனை தோல்வியைத் தழுவியது.

இது குறித்து ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூறுகையி்ல், பிருத்வி ஏவுகணை தனது பாதையில் இருந்து விலகிச் சென்று கடலில் விழுந்துவிட்டது. இதனால் தான் இந்த ஏவுகணையை எதிர்கொண்டு அழிக்க, எதிர்ப்பு ஏவுகணைக்கு உரிய கமாண்ட் கிடைக்கவில்லை. இதனால் தான் அந்த ஏவுகணை டேக் ஆப் ஆகவில்லை என்றனர்.

15 முதல் 20 கி.மீ. தூரத்தில் வைத்து பிருத்வி ஏவுகணையை இந்த எதிர்ப்பு ஏவுகணை தாக்கி அழிக்கும் வகையில் சோதனை திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சோதனையை நேற்றே நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறுகளால் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடத்தப்பட்டது.

Read more...

'பிரிட்டன் நீதித்துறை ஒருதலைபட்சமாக உள்ளது'

பிரிட்டன் கிரிமினல் நீதித்துறை, ஆசிய மற்றும் கறுப்பு இளைஞர்களுக்கு எதிராக உள்ளதாக அந்நாட்டின் சமத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உள்ள கறுப்பு மற்றும் இதர இனங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், வெள்ளை இன இளைஞர்களுக்கும் இடையே குற்றவியல் தொடர்பான நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பது தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் காவல் துறையினர், பொது இடங்களில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்வதிலும் இனப்பாகுபாட்டை கடைபிடிப்பதாகவும் அந்த ஆணையம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. அத்துடன் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் இளைஞர்களுக்கு முன் பிணை வழங்குவதிலும் இதே பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

1987 ஆகஸ்ட் மாதத்தில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான குமரப்பாவும், புலேந்திரனும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்குச் சென்று வரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர் அமைதிப்படையிடம். தரைமார்க்கமாகச் செல்வதற்கு பாதுகாப்புகள் அப்போது இல்லை. எனவே உலங்கு ஊர்தியில் இவர்களை அழைத்துச் சென்றுவர ஐ.பி.கே.எப். ஏற்பாடு செய்தது.

அதன்படி இந்த இருவரும் உலங்கு வானூர்தியில் மட்டக்களப்புக்குச் சென்றனர். அங்கே ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் ஊர்தியில் ஏறும்போது ஒரு பெண்ணை அழைத்து வந்து ஏற்றினர். இராணுவக் கெலிகாப்ரரில் பெண்களை ஏற்றக் கூடாது என்று சட்டம் உள்ளது. பைலட் ஏற்றுவதற்கு மறுத்தார். குமரப்பா முடியாது ஏற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். பைலட் ரேடியோவில் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டார். அவர்களும் பலருடன் ஆலோசித்துவிட்டு ஏற்றிக்கொண்டு வரும்படி பைலட்டுக்கு அனுமதி வழங்கினர்.

பின்னர் அதே கெலிகாப்ரர் திருமலைக்கு வந்தது. அங்கும் ஒரு பெண்ணை ஏற்றினார் புலேந்திரன். ஊர்தி யாழ்ப்பாணம் வந்தது. இரு நாட்கள் கழித்து அப்படி அழைத்துவரப்பட்ட பெண்களுக்கும் குமரப்பா, புலேந்திரனுக்கும் பிரபாகரன் தலைமையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஐ.பி.கே.எப். இவர்களுக்கு பெண் அழைக்கும் வேலையைக் கூட வெட்கப்படாமல் அவர்கள் சட்டத்தையும் மீறி செய்தனர்.

திருமணம் நடந்த ஒருமாதத்தில் அந்தப் போராளிகளை இறந்து போகும்படி அவர்களது தலைவர் விசம் கொடுத்து உத்தரவிடுகிறார்! எதற்காக? கொழும்புக்குக் கொண்டு சென்றால் அவர்களைச் சித்திரவதை செய்து விடுவார்கள். அவற்றை அந்தப் போராளிகள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களை அதிலிருந்து காப்பாற்ற தலைவர் கண்ட வழி மரணம். ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். எந்த மடையன் இப்படி ஓர் உத்தரவினைச் செயற்படுத்துவான்? தனது குழந்தைகள் இவ்விதம் அகப்பட்டால் எந்தப் பெற்றோரால் இந்த வழிதான் சிறந்த வழி என்று தங்கள் குழந்தைகளை இறந்து போகும்படி கூறுவாரா? சக தோழனை ஓர் தலைவன் காப்பாற்றுவானா? அல்லது இறந்து போ என்று கூறுவானா? யாரையும் எந்த நேரத்திலும் கைவிட்டுதான் லாபத்தைப் பார்ப்பார் இந்தத் தலைவர்.

இந்தப் 12 பேரும் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டதனால் புலிகளுக்குக் கிடைத்த லாபம் என்ன? தமிழர்களுக்குக் கிடைத்த லாபம் என்ன? விளலுக்கு இறைத்த உயிர்களானதா இல்லையா? இளம் வயதில் அவர்களது மனைவியர் விதவைகள் ஆக்கப்பட்டனரா இல்லையா? ஒரு தலைவர் தன் சகாக்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுவானா அல்லது எதிரி செய்ய வேண்டிய வேலையை இவரே செய்வாரா? தனது சகாக்களைக் காப்பற்ற முடியாதவரா தன் மக்களைக் காப்பாற்றப் போகிறார். அந்த இளைஞர்களை செத்துப் போகும்படி உத்தரவிட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். இவை கொலை குற்றமாகும்.

சரி தலைவருக்குத்தான் அறிவு இல்லை. அரசியல் ஆலோசகர், அரசியல் ஞானி, கலாநிதி, தத்துவ வித்தகர். விஸ்கி மாஸ்ரர் என்று பல பதவிகளை தன்னகத்தே வைத்திருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குக் கூட சுய அறிவு இருக்கவில்லை. 12 பேரைக் கொலை செய்யத் தூதுவனாக தானே சென்று, குப்பிகளைக் கொடுத்து மரண தண்டனை வழங்கிவிட்டு வந்து பின்னாளில் அதனைப் பெருமையாக வேறு சொல்லிக்கொண்டார். மகா மோசமான இந்தச் சம்பவத்தை உலகப் பிரசித்திப் பெற்ற சாதனையாக விபரித்தனர் இந்தக் கொலையாளிகள்.

அற்ப பிரச்சினைக்காக தங்கள் சக வீரர்களைப் பலி கொடுக்கும் இவர்கள் மக்களை எப்படி மதிப்பார்கள்? குமரப்பா, புலேந்திரன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு உள் இயக்க முரண்பாடே அல்லாமல், வேறெந்தக் காரணமும் இல்லை! தங்கள் நலனுக்காக எத்தனை ஆயிரம் பொதுமக்களையும் பலிகொடுக்கத் தயங்கமாட்டார்கள். அதுதான் நடந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில்.

இந்திய அமைதிப்படை கொலை செய்யவில்லை, கற்பழிக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை, புலி விலங்கு அங்கத்தினரும் கற்பழித்தவர்கள்தான். அவர்களுக்கு புலித் தலைவர்கள் தண்டனை வழங்கியுள்ளனர். செல்வாக்கு மிக்கவர்கள் தண்டிக்கப்படாமல் கண்டுகொள்ளாமல் விடபட்டனர். ஐ.பி.கே.எப். கற்பழித்துவிட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. தங்கள் அங்கத்தவர்களின் கற்பழிப்புகளை பிரசாரம் இல்லாமல் மறைக்கப்பட்டது. எனவே மேற்கண்ட பாடல் புலிகளுக்குத்தான் பெருத்தமானதே தவிர ஏனைய இயக்கத்தினருக்கு அல்ல! தேனிசை செல்லப்பா பாடிய பாடல் புலி நடந்துவந்த பாதையினைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

துணுக்காய் வதைமுகாமில் குழிகளுக்குள் வைக்கப்படும் ஏனைய இயக்க அங்கத்தினருக்கென்று தனியாக மூன்று விலங்குகள் பொறுப்பாக இருந்தனர். றோஸ், பூட்டோ, பாபு ஆகிய இந்த மூன்று பேரும்தான் குழி தோண்டி மனித வதைசெய்யும் நிபுணர்கள். அங்கிருக்கும் அனைத்துக் குழிகளையும் வெட்டியவர்கள் பிடித்துவரப்பட்ட கைதிகள்தான். இந்தக் குழிகளுக்குள் மொத்தம் எத்தனை பேர் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியாது. எனது கணக்கின்படி ஏறக்குறைய முன்னூறு பேர் வரை இவ்விதம் குழிகளுக்குள் இருந்திருப்பார்கள்.

இந்த வதை முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள்தான் அதிகமாக இருந்தனர். ஈ.என்.டி.எல்.எப். தோழர்கள் மொத்தம் நூறுபேர் வரை இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் குமார் (கொட்டடி), குகன் (யாழ்ப்பாணம்), விக்கி (கிளிநொச்சி), நியூற்றன் (பாசையூர்) பாப்பா (பாசையூர்), வேதநாயகம் (பாசையூர்) நிக்கான் (யாழ்ப்பாணம்) போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் விக்கியைத் தனிக் குழி ஒன்றில் வைத்திருந்தனர். புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முசல்குத்தியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழிகளில்தான் இருந்தனர்.

இப்படிக் குழிகளில் இருந்த பெரும்பாண்மையானவர்களை புலிவிலங்குகள் கொன்று விட்டனர். இவர்கள் அனைவரும் பலவிதமான கொடுமைகளை அனுபவித்தனர். நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு இந்தச் சித்திரவதைகள் இருந்தன. கல்வி, அறிவு, பழக்கவழக்கம், மனிதப்பண்பு, மனித உரிமை, நாகரீகம் போன்ற அனைத்தையும் அறியாத இந்தப் புலிவிலங்குகள் சிறைச்சாலை நடத்துகின்றனர். அகப்பட்ட அனைவருமே இவர்கள் பார்வைக்கு விலங்குகளாகத் தென்பட்டனர் என்றால் தவறில்லை.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, வாரம் முப்பது முதல் நாற்பது பேர்வரை புதியவர்களைப் பிடித்துவருவார்கள். இடநெருக்கடி ஏற்படும் போது, அதே அளவு சகோதரர்களை இரவு வேளை வெளியே அழைத்துச் செல்வார்கள். அவர்களை முளங்காவில் பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்று எரித்துவிடுவார்கள் என்று கூட இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஒருநாள் இரவு 10மணியளவில் ஒருவரோடு ஒருவர் கதைத்துக் கொண்டிருந்தனர். புலி விலங்குகள் எல்லாரும் வெளியில் உலா வந்து கொண்டிருந்தனர். எனது பகுதியில் இருந்தவர்கள் கதைக்கும் சத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. திடீரென சிமெந்த் நிலத்தில் நன்கு காய்ந்த தடி ஒன்றினை ஓங்கி வீசி எறிந்தால் எழும் ஒலி ஒன்று கேட்டது. உடனே அனைவரினதும் கதைக்கும் சத்தம் நின்றது.

உள்ளே புலி சீருடை அணிந்த சராசரி உயரமான ஒருவர் வேகமாக வந்தார். அந்த வேளையில் நான் எழுந்து நின்று எனது சாரத்தை சரிசெய்து உடுத்தி அமர்வதற்குத் தயாரானேன். அனைவரும் அமர்ந்திருக்கையில் நான் மட்டும் எழுந்து நின்றது அவரை அவமதிப்பது போன்று தோன்றியதோ என்னவோ, அதே தடியை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்தார். நான் அதற்குள் எனது இடத்தில் அமர்ந்து விட்டேன். வந்த வேகத்தில் அந்தத் தடியினால் என்னைத் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தார். அந்தத் தடி நான்கு அடி நீளமானதாக இருந்தது. அடி தாங்கமுடியாமல் நிலத்தில் உருண்டேன். அருகில் இருந்தவர்கள் விலகினர். நான் உருளுவதைத் தடுப்பதற்காக மறுமுனைக்குத் தாவி மீண்டும் வயிறு முதுகு என்று கண்ணில் பட்ட இடமெல்லாம் அடித்தார். ஐந்து ஆறு நிமிடங்கள் வரை என்னை அடித்துவிட்டு இறுதியில் அந்தத் தடியின் முனையால் என் முதுகில் ஓங்கி ஓர் குத்து குத்திவிட்டு, 'இங்க இருக்கும் எந்த நாயும் கதைக்கக் கூடாது' என்று மூச்சுவாங்கக் கத்திவிட்டு வெளியில் சென்றார். இவ்விதம் என்னைத் தாக்கியவர் வேறு யாருமல்ல, புன்னகை மன்னனும், அரசியல் செயலருமான சூனா. பானா. தமிழ்ச்செல்வன்தான். இவர் முதலில் கொலைகாரக் குழுவில்தான் இருந்தார். கால் பழுதுபட்ட பின்னர்தான் அரசியல் பிரிவுக்கு வந்து பல்லிளிக்க ஆரம்பித்தார்.

தொடரும்...

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

இறுதிவரை மக்களுடன் யார் இருந்தார்கள்? த.தே.கூ வின் குடும்பங்கள் எங்கே? சுகு.

தமிழ் தேசிய வியாபாரிகள் தேர்தல் பிரச்சாரத்திற்காக வர்ணச் சுவரொட்டிகளுக்கு செலவிடும் பணத்தில் ஒரு பகுதியைத் தன்னும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பார்களா?
நெலிந்து மெலிந்து அனைத்தையும் இழந்து போய் உள்ள எமது சமூகத்தையும் அவர்களின வளத்தையும் பாதுகாக்க புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் பொதுச்செயளாலரும் அக்கட்சியின் யாழ் மாவட்டத்தின் தலைமை வேட்பாளருமான தோழர் சிறிதரன் சுகுமார் ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது உருக்கமான வேண்டுகோள் ஒன்றை புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு விடுத்துள்ளார்

கடந்த யுத்த காலங்களின் போது இம் மக்களின் நன்மை தீமைகளில் அம் மக்களுடன் மக்களாக நின்ற பணியாற்றியவர்களை மக்கள் இனம் கண்டு கொள்ளுவார்கள் கடந்த தேர்தலின் போது இம்மக்களால் தெரிவுசெய்யபட்ட 22 பாரளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் குடும்பங்களை வெளிநாட்டில் குடியேற்றிவிட்டு உலகம் எல்லா பயணங்களை மேற்கொண்டுவிட்டு தேர்தல்காலங்களில் மட்டும் மக்களின் நன்மை தீமைகளை பற்றியும் தன்னாட்சி சுயநிர்ணயம் பற்றி பேசுவதையும் எம்மக்கள் நன்கு உணர்ந்து உள்ளதோடு அவர்களை இனங்கண்டு உள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்

சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கியதை கவனத்தில் கொள்ளபடவேண்டும் அது சாதியரீதியாகவும் உரிமைகளை இழந்துநிற்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும் பேசபடவேண்டும் அதைவிடுத்து தேர்தல் காலங்களில் அதை தமிழ் தேசியம் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய இனைந்து வடகிழக்கு மகாணத்தை இணைத்து ஒரு மகாணசபை ஆட்சியை உருவாக்கியபோது அதனை கடுமை எதிர்த்தவர்கள் இன்று வடகிழக்கு இணைப்பைபற்றியும் சுயநிர்ணய உரிமையை பற்றியும் பேசுகிறார்கள் எனவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி செயலாளர் தோழர் சிறிதரன் சுகுமார் குறிப்பிட்டார்

எமது போரட்டத்தில் செல்லென்னா துயரங்களை அனுபவித்த எமது மக்கள் உடன் பிறப்புகளை இழந்துள்ளார்கள் பல இளைஞர் யுவதிகள் என ஆயிரக்கானனோர் இலட்சியத்திற்க்கா தாங்களின் உயிர்களை அர்ப்பணித்தார்கள் அவர்களின் அடையாளங்கள் இப்பொழுது அழிக்கபட்டு உள்ளது அவர்களின் இலட்சியத்திலும் தியாகத்திலும் உலகவலம் வந்துவர்களும் உல்லாச வாழ்க்கை வாழுந்தவர்களும் மன்னாரங்கம்பனி நடாத்தியவர்களும் தமிழ் தேசியத்தின் பெயரால் இப்பாரளுமன்ற தேர்தலிலே போட்டியிடுவதை மக்கள் இனம் கண்டு உள்ளார்கள்

இப்பொழுது எமது மண்ணிலே ஒரு லட்சத்து ஜம்பதுனாயிராம் பெண்கள் வாழ்வையிழந்து விதவைகளாகவும் எழுபத்தைந்தாயிரம் இளைஞர்கள் ஊனம் அற்றவர்களாகவும் இங்கு உள்ளார்கள் இவரைகளை பற்றியெல்லாம் சிந்திக்காமால் வண்ணபேஸ்டர்களை ஒட்டி மக்களிடம் வாக்குகேட்கிறார்கள் தமிழ்தேசிய வியாபாரிகள் இவர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவு செய்யும் பணத்தில் ஒரு வீதமாவது வன்னியில் அகதிகளாக உள்ளவர்களுக்கு செலவு செய்வார்களாயின் அந்த மக்கள் திருப்தியுடன் வாழ்வார்கள் எனவும் குறிப்பிட்டார்

முற்போகக்கு சிந்தனையுடன் செயற்படும் ஒரு கட்சி என்ற ரீதியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி என்ற வகையில் சிறுபான்மை தமிழர் மகாசபையின் செயற்பாடுகளை ஒரு புரிந்துணர்வுடன் பார்ப்பாதாக குறிப்பிட்ட அவர் சிறுபான்மை தமிழர்களுக்காக கடந்த காலங்களில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி பல போரட்டங்களை நடாதியதையும் சுட்டிகாட்டினார் இத்தேர்தலில் சிறுபான்மை தமிழர் மகாசபையுடன் அல்லது இடதுசாரிகளுடன் ஒரு உடன்பாட்டிக்கு வரமுடியாமால் போனமை ஒரு வேதனையான விடயம் என குறிப்பிட்ட அதேவேளை தமிழ் ஈழ் மக்கள் விடுதலை கழகத்துடன் முழுமையா இணக்கத்துடன் செயற்படுவதாகவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி செயலாளர் தோழர் சிறிதரன் சுகுமார் தெரிவித்தார்

Read more...

நான் ஒரு சமூக சேவகன், சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை - நித்தியானந்தா பேட்டி

நான் ஒரு சமூக சேவகன். ஆன்மீக ஆராய்ச்சியாளன். மற்ற துறையினர் தவறு செய்தால் கொடுக்கப்படும் "பெனிபிட் ஆப் தி டவுட்" கூட எனக்குத் தரப்படவில்லை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா. ஜெயா டிவி க்கு நித்தியானந்தா அளித்துள்ள ஒரு வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது...

சில நாட்களுக்கு முனபாக வெளியிடப்பட்ட வீடியோ டேப் பற்றியும், அதைத் தொடர்ந்து நடந்த பல துரதிரஷ்டவசமான நிகழ்வுகளைப் பற்றியும் உங்கள் முன்பாக சில உண்மைளையும் சில கருத்துக்களையும் மனம் திறந்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பல பொதுமக்களிடமிருந்தும், நிருபர்களிடமிருந்து வந்திருக்கும் கேள்விகளுக்கும் விடையளிக்கிறேன். முதலில் சொல்ல விரும்பும் சில கருத்துக்கள் வீடியோ டேப் குறித்து இப்போதுதான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மிஸ்ரெப்ரசன்டேஷன், மேனிபுலேஷன், கான்ஸிபிரஸி இவையெல்லாம் பாகமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆராய்வதற்கு முன்பாக எந்தவொரு செய்தியையும், கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. அடிப்படையாக அதைத் தாண்டிய சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வீடியோ டேப் வெளியிடப்பட்ட உடனேயே அதனுடைய உண்மைகளைப் பற்றி எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் சமூக சேவை செய்து வரும் எனது தியான பீட ஆசிரமங்கள், பல இடங்களில் சமூக விரோத கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை ஆசிரமம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிற, வாரந்தோறும் மருத்துவ உதவி செய்கிற, பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிற ஒரு சமூக சேவை நிறுவனம். அங்கிருந்த பிரமச்சாரி ஒருவரை தள்ளி, சமூக விரோத கும்பல் ஒன்று ஆசிரமங்களை அடித்து நொறுக்கி ஒரே ஒரு மணி நேரத்திற்குள் எட்டு இடங்களில் ஆசிரமங்களும், தியான மையங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

ஒரு நாளுக்குள் நூற்றுக்கணக்கான இடங்களில் பல நிகழ்வுகளை செய்ததனால் யார் இதைச் செய்தார்கள், ஏன் இதைச் செய்தார்கள், எங்களுக்கு யார் விரோதி என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எங்களுக்கு விரோதிகள் இருப்பார்கள் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. நாங்கள் அமைதியாக வாழ்கின்ற ஒரு ஆன்மீக இயக்கம். நான் அடிப்படையில் ஒரு ஆன்மீக ஆராய்ச்சியாளன்.

என்னுடைய வாழ்க்கையில் எனக்கு நடந்த ஜீவன் முக்தி அனுபவத்தை உலகத்தில் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள என்னால் ஆன எல்லா ஆராய்ச்சிகளையும் உலகத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண ஆன்மீக ஆராய்ச்சியாளன். இதை நான் உலகத்தோடு செய்து கொண்டிருக்கும் பொழுது ஏன் இத்தனை பேர் என் மீது விரோதம் பாராட்ட வேண்டும் என்று எனக்குமே முழுமையாகப் புரியவில்லை. பல இடங்களில் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதும், கொளுத்தப்பட்டதும் துரதிர்ஷ்டவசமானது.

திடீரென்று ஒரே ஒரு இரவில், நானும் தியான பீட இயக்கமும் லட்சக்கணக்ககான பக்தர்களும் அனாதைகளைப் போல உணர்ந்தோம். இதற்கு என்ன என்று தெரியவில்லை. காரணமில்லாமல் யார் எங்களைத் தாக்குகிறார்கள் என்று கூட தெரியவில்லை. எதற்காக நாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு சில விஷயங்களை உங்கள் முன்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கல்வித்துறையிலோ, அரசியல் துறையிலோ, சினிமாத் துறையிலோ, கலைத் துறையிலோ, அறிவியல் துறையிலோ யாராவது சமூக பங்களிப்பு செய்திருந்தால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எந்த ஒரு மிகப் பெரிய பிரச்சனையயும், மிகப் பெரிய கலவரங்களையும் சமூகம் ஏற்படுத்துவதில்லை. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை புறக்ணிக்கப்படுகிறது. அப்படியே மிகப் பெரிய பிரச்சனை வந்தாலும் சந்தேகத்தின் சாதகம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

நானும் ஆன்மீகத் துறை மட்டுமல்லாமல், பல துறைகளிலும் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளேன். கல்வித் துறையில் பள்ளிகளை நடத்துவதும், யோகா துறையிலே உடல் நலத்திற்காகவும், தியானத் துறையிலே மன நலம் சார்ந்தும், இதைத் தாண்டி ஆன்மீகம் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளிலும் ஆராயாச்சிகளை செய்து பல துறைகளிலே பல பங்களிப்புகளை செய்துள்ளேன். பல நூல்களை அளித்துள்ளேன். ஒரு எழுத்தாளனாக 200 நூல்களை உருவாக்கியுள்ளேன். ஒரு பேச்சாளனாக பல்வேறு விதமான மேடைகளிலே பொதுமக்களோடு லட்சக்கணக்கான பொதுமக்களோடு எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு கடந்த ஏழாண்டு பொது வாழ்க்கையிலே ஆயிரக்கணக்கான மணி நேரம் சொற்பொழிவாற்றியுள்ளேன்.

இப்படி பல துறைகளிலும் பல்வேறுவிதமான பங்களிப்புகளை அளித்துள்ளேன். மருத்துவம், ஆன்மீகம், உடல் நலம், யோகா போன்றவை குறித்து மருத்துவ துறையிலே ஆராய்ச்சி செய்துள்ளேன. வலியில்லா பிரசவம் செய்வது குறித்து யோகா மற்றும் தியானத்தை வடிவமைத்துள்ளேன். பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு ஆன்மீக, மன, உணர்வுரீதியான தீர்வுகளை ஆராய்ந்து பல இடங்களில் பேசியுள்ளேன், எழுதியுள்ளேன். இதையெல்லாம் தாண்டி, மனிதனுடைய அடிப்படை உணர்வுகளான கோபம், பொறாமை, காமம், பயம் போன்றவற்றுக்கு ஆன்மீக, மருத்துவ, அறிவியல்ரீதியாக உலகத்திற்கு பல பங்களிப்புகளை செய்துள்ளேன்.

நான் ஒரு சமூக சேவகன். பலவேறு வழிகளில் சமூக சேவை செய்துள்ளேன். இதுபோல பல துறைகளிலே பங்களிப்பை செய்திருந்தாலும், ஆன்மீகத் துறையிலும் பங்களிப்பைச் செய்துள்ளேன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு வினாடி கூட எந்த ஒரு விசாரணையும் இல்லாமல், தீர விசாரிக்காமல், பெனிபிட் ஆப் தி டவுட் கூட கொடுக்காமல், இன்னசன்ட் டில் புரூவன் கில்டி சொல்வார்கள், எனது விஷயத்தில் கில்டி டில் புரூவன் இன்னசன்ட் என்ற வகையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. யாரையும் நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. யாரையும் நான் பழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் ஆழ்ந்து விசாரிக்காமல் நான் பழிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், அதே தவறை நான் செய்ய விரும்பவில்லை. விசாரிக்காமல் நான் பழிக்க விரும்பவில்லை.

உண்மையில் எத்துணை ஆழ்ந்து யோசித்தாலும் சட்டவிரோதமான எந்த செயலையும் நான் செய்யவில்லை. சட்டத்திற்கு விரோதமான பல துரோகங்கள் எனக்கு இழைக்கப்பட்டுளளன. பக்தர்களும், சீடர்களும், எப்படியாவது, ஏதாவது சட்ட விரோத செயலை செய்ய வேண்டும் என்று ஆசிரமம், தியான பீடங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அவர்களது வீடுகளையும் கூட அடித்து நொறுக்கியுள்ளனர்.

எனது பிரம்மச்சரிய, சன்னியாசிகள் அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கடும் சொல்லால் துயர்பபடுத்தப்பட்டிருக்கறார்க்ள். ஆனால், அவர்கள் எல்லாம் எனது வார்த்தைக்கு கட்டுப்பட்டு பதிலடியில் இறங்காமல் ஆழ்ந்த அமைதியில் உள்ள லட்சோபம் லட்சம் சீடர்களையும், பக்தர்களையும் வணங்குகிறேன்.

சிலர் உண்மையில் புரிந்து கொண்டால் கூட ஆனந்தப்படுவேன். பல பேர் இது போல விசாரிக்கப்படாமல், கொடுமைப்படுத்தப்பட்டு, யோசிக்கப்படாமலேயே சிந்திக்கப்படாமலேயே அவதிக்கு உள்ளாகியிருப்பீர்கள். நீங்கள் எல்லாம் தயவு செய்து உங்களது குரல்களை கொடுங்கள், எனக்காக பிரார்த்தினை செய்யுங்கள். ஒரு சில ஆழமான விஷயங்களை நாம் கவனிக்காமல்யே போயிருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி இந்த சூழ்நிலையில் கற்றுக் கொண்ட, எனக்குக் கிடைத்த நல்ல செய்தி என்னவென்றால், கேள்விப்பட்ட செய்தி என்னவென்றால், சமூகத்தினுடைய படித்த, உயர்ந்த, மற்றும் யோசிக்கத் தெரிந்த தனியாக தெளிவாக சிந்திக்கத் தெரிந்த பல லட்சக்கணக்கான பேர் எனக்கு தங்களின் ஆதரவையும், அன்பையும் அளித்துள்ளனர்.

சமூகத்தில் ஒரு மிகப் பெரிய பாகம், அடுத்தவருடைய தனிப்பட்ட வாழக்கை சம்பந்தப்பட்ட இழிவான, கொச்சைப்படுத்தபப்ட்ட செய்திகளை பார்க்கவோ, கேட்கவோ விரும்பவில்லை. அதுபோல விஷயத்தை சார்ந்து ஒருவரை எந்தவிதமான பழித்தலுக்கும், எந்தவிதமான முடிவெடுத்தலுக்கும் செய்யவி்ல்லை என்பதை பல லட்சக்கணக்கான செய்திகள் , கடிதங்கள் இமெயில்கள், போன்கள் போன்றவை மூலம் தெரிந்து கொண்டதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு மிகப் பெரிய ஆறுதலாக உள்ளது.

இன்னும் யாராவது தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை சார்ந்த ஓரிரு வதந்திகளை பெரிது பண்ணாமல், உண்மையா, பொய்யா என தெரிந்து கொள்ளாமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று கூறப்படுவதைப் போல, இந்தக் காலத்தில் எதை வேண்டுமானாலும், தவறாக கூற முடியும். எந்த ஒரு செயலையும் எந்த ஒரு கோணத்திலும் சொல்லி விட முடியும். எந்தத் தீர்ப்பையும் சொல்ல முடியும்.

சமூகத்தில் ஒரு மிகப் பெரும் பாகம், இந்த மாதிரியான செய்திகளைப் பற்றிக் கவலைப்படாமல், செய்திகளை வைத்து மனிதர்களை எடை போடாமல் இருப்பது குறித்து மகிழ்கிறேன்.

ஆனால் சில சமூக விரோத கும்பல் எதைப் பற்றியும் யோசிக்காமல் சமூக சேவை நிறுவனமான தியானபீடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், செயல்களால் நானும், எனது பக்தர்களும் அனாதைகளைப் போல உணர்கிறோம்.

பொதுமக்களை தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன், தீர விசாரிக்காமல் எந்த முடிவுக்கும், செயலுக்கும் வர வேண்டாம். எல்லா உண்மைகளும் வெளிவந்து சொல்லப்படும் வரை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

மெளன தியானத்தை நீட்டிக்கிறேன்...

இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீலான்ஸ் எழுத்தாளரான மல்ஹோத்ராவுக்கு நித்தியானந்தா அளித்துள்ள இன்னொரு பேட்டியில், நான் மக்களுக்கு கடமைப்பட்டவன், இறைவனுக்கும் தர்மத்திற்கும் கடமைப்பட்டவன். யாரெல்லாம் மக்களை காயப்படுத்துகிறார்களோ அதை குணப்படுத்தும் கடமை எனக்கு உண்டு. என் மீதான நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர நான் பாடுபடுவேன். மதத் தலைவர்களின் ஆதரவும் எனக்கு கிடைத்து வருகிறது.

எனது மனசாட்சியின் அடிப்படையில், நான் மெளன தியானத்தை தொடர்ந்து நீட்டிக்கப் போகிறேன். போகிறேன். இது புதிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன். அதுதான் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்ற உதவும் என கருதுகிறேன். யாரெல்லாம் மக்களை காயப்படுத்தினார்களோ, அவர்களை குணப்படுத்த தியானம் மூலம் நான் முடிவு செய்துள்ளேன்.

அனைத்துப் பக்தர்களையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தியானத்தை தொடருங்கள். தயவு செய்து எனது போதனைகளை, சக்திகளை புரிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் சக்தி வாய்ந்தவை. எப்படி, சிவசூத்திரா, பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்ரா போன்றவை சக்தி வாய்ந்தவையோ, அதேபோலத்தான் எனது போதனைகளும், தியான முறைகளும். அதை விடாமல் தொடருங்கள். புத்தொளி பெறுங்கள். நமது அன்பையும், பரிவையும் உலகம் முழுவதும் பரவ விடுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

வழக்கு மாற்றப்பட்டதா இல்லையா...?:

இதற்கிடையே, நித்தியானந்தா மீதான வழக்குகள் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்து டிஜிபி லத்திகா சரண் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் போலீஸார் குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள், நித்தியானந்தா வழக்கு குறித்த விசாரனை எந்த அளவில் இருக்கிறது? என்று கேட்டபோது, நித்தியானந்தா வழக்கு விசாரணை கர்நாடகா அரசுக்கு மாற்றப்பட்டு விட்டது என்றார் லத்திகா.

ஆனால் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்கான தகவல் கிடைக்கவில்லை என கர்நாடகா கூறியுள்ளதே? என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டபோது, வழக்கு மாற்றம் குறித்து ரிஜிஸ்டர் தபாலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றார் லத்திகா சரண்.

Read more...

த.தே.கூ தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டதாக பிபிசி அதிருப்தி.

இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களின் மிகப்பெரிய கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டுள்ளதாக பி.பி.சி செய்திசேவை தெரிவித்துள்ளது. தனிநாட்டுக்குப் பதிலாக “கூட்டாட்சி” முறைத் தீர்வை அவர்கள் விரும்புவதாகவும், தமிழ் மாகாணங்களான வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்து முக்கியமான அதிகாரப் பரவலாக்கல்களைத் தரவேண்டுமென்பதே த.தே.கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் த.தே.கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் ஒரு பிரதிநிதியாகவே பார்க்கப்பட்டு வந்தது.தமிழ் மக்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற கொள்கையுடன் 1970 களிலிருந்து போராடும் விடுதலைப் புலிகளின் வழியிலேயே இவர்களும் பின்பற்றிச் சென்றனர்.

ஆனால் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு 10 மாதங்களுக்குப் பின்னர் இப்போது, த.தே.கூ ஆனது தமது கொள்கையிலிருந்து மாறியுள்ளது.

இவர்களின் தேர்தல் அறிக்கை, கூட்டாட்சி அமைப்பில் அதிகார பரவலாக்கலை வலியுறுத்துகிறது. அதோடு உள்ளூரிலுள்ள தமிழர்கள் மற்றும் தனிநாடு வேண்டும் எனக் கோரும் வெளிநாடு வாழ் தமிழர்களிற்கிடையிலான முரண்பாட்டையும் இது எடுத்துக்காட்டுகிறது என பி.பி.சி தெரிவித்துள்ளது.

Read more...

அமெரிக்கா சீனாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறது : ஜியாபோ சாடல்

சீனாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருவதாக சீனப் பிரதமர் வென் ஜியாபோ குற்றம் சாற்றியுள்ளார்.​ இதுகுறித்து பீஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் வென் ஜியாபோ பேசுகையில், “சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றுக் கொண்ட பிறகு அமெரிக்க-சீன உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.​

ஆனால் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலமும், திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை வெள்ளை மாளிகையில் ஒபாமா சந்தித்ததன் மூலமும் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டுள்ளது.​

இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஏற்கெனவே இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைகள்தான் அமெரிக்க-சீன உறவுக்கான அடித்தளம்.​ அதன்படி அமெரிக்கா செயல்படும் என நம்புகிறேன்.​ இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.​ ​

சீனாவில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமான பொருளாதார இடைவெளி அதிகம் உள்ளது.​ இந்த நூற்றாண்டின் மத்தியில் தான் சீனா வளர்ந்த நாடாக மாறும்.​ அதே சமயம் தற்போது உலகில் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களை கையாள்வதிலும்,​​ சர்வதேச ஒத்துழைப்பிலும் சீனா முக்கிய பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது” என்றார்.

Read more...

பொன்சேகா விடுதலையாவது எளிதல்ல: அனோமா

ராணுவ சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்றுதான் பொன்சேகா விரும்புகிறார்.​ ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்று பொன்சேகாவின் மனைவி அனோமா கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனோமா, “இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் நல்லெண்ணம் கொண்டோரும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.​

இது மனதுக்கு ஆறுதலாகவும் திருப்தியாகவும் உள்ளது.​ ஆனால் இந்த வேண்டுகோளுக்கு எல்லாம் இந்த அரசு செவிசாய்க்காது என்பது தெரியும்.​ அவர் விடுதலையாக வேண்டுமானால் சட்ட ரீதியாக மட்டுமே சாத்தியமாகும்.​ நீதித்துறை மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார் அவர்.

பொன்சேகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி,​​ ஆள்கொணர்வு மனு ​(ஹேபியஸ் கார்பஸ்)​ தாக்கல் செய்துள்ளார் மனைவி அனோமா.

அந்த மனுவில், “பொன்சேகா ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.​ எனவே அவரை ராணுவச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாது.​ சிவில் சட்டத்தின் கீழ் அவரை விசாரிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியுள்ளார்.

ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா ஜேவிபி கட்சியின் தலைமையில் உள்ள ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்காக அவரது மனைவி அனோமா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

தமது கட்சி ஆதரவாளர்களை கட்டுப்படுத்த கோரும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள்.

அரசியல் கட்சிகள் தத்தமது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை மீறுவோர் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பவ்ரல் , சீஎம்ஈபி என்கின்ற அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளது. இடம்பெற்று வரும் தேர்தல் வன்முறைகளில் அதிகமானவை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே இடம்பெறுவது அவதானிக்கப்பட்டதை தொடர்ந்தே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கு வாக்கு தேடுவதிலும் பார்க்க தமக்கு விருப்பு வாக்குகளை தேடுவதிலேயே வேட்பாளர்கள் முனைப்பு காட்டி வருவதுடன், சக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார காரியாலங்கள் தாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

இலங்கை ஜனநாயகமற்ற நாடாக மாறியுள்ளது. சரத் என் சில்வா.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை நிராகரித்து கடந்த சில வருடங்களாக ஒர் ஜனநாயகமற்ற நாடாக மாறியுள்ளது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் ஜெனரல் பொன்சேகாவினை இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது எனவும் அவர் ஏதாவது குற்றங்கள் செய்திருந்தால் அக்குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகள் சிவில் நீதிமன்றொன்றிலேயே இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

தமது கட்சி ஆதரவாளர்களை கட்டுப்படுத்த கோரும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள்.

அரசியல் கட்சிகள் தத்தமது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை மீறுவோர் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பவ்ரல் , சீஎம்ஈபி என்கின்ற அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளது. இடம்பெற்று வரும் தேர்தல் வன்முறைகளில் அதிகமானவை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே இடம்பெறுவது அவதானிக்கப்பட்டதை தொடர்ந்தே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கு வாக்கு தேடுவதிலும் பார்க்க தமக்கு விருப்பு வாக்குகளை தேடுவதிலேயே வேட்பாளர்கள் முனைப்பு காட்டி வருவதுடன், சக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார காரியாலங்கள் தாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

விருப்புவாக்குகளுக்காக சண்டை பிடிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி உத்தரவு.

தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமானதிலிருந்து இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் விருப்பு வாக்குகளுக்காக ஆழும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள்ளே மோதிக்கொண்ட சப்பவங்கள் பரவலாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் விருப்பு வாக்குகளுக்காக சண்டைபிடிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது முன்னணியின் வேட்பாளர்கள் விருப்பு வாக்குகளுக்காக மோதும் சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானித்ததை அடுத்தே ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Read more...

3 வயது குழந்தையை கங்கையில் விசிய தாய் கைது.

தனது மூன்று வயதேயுடைய மகனை களுகங்கையில் தாயொருவர் வீசிய சம்பவம் ஒன்று கொழும்பு தலைநகரின் புறநகர் பகுதியான கழுத்துறையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாயை கைது செய்த பொலிஸார் அவரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தினர். இவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

போலிஸாரினால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய 5 குழந்தைகளின் தாய் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், நான் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டடுத்திட்டத்தில் வசிக்கின்றேன். எனக்கு 5 குழந்தைதகள் உண்டு. இவ் ஐந்து குழந்தைகளையும் பராமரிப்பது மிகவும் கஷ்டம். எனது கணவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். எமக்கு எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமையில் வாடுகின்றோம். இந்நிலையில் எனது குழந்தைகளில் கடைசி குழந்தையை சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றிடம் கையளிக்க முயற்சிகள் செய்தேன். அதற்கு எனது கணவர் இணங்கவில்லை. குழந்தையின் பிறப்பத்தாட்சி பத்திரத்தை தன்னுடன் வைத்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதென்ற முடிவுக்கு வந்தேன். குழந்தையையும் தூக்கிகொண்டு களுகங்கை அருகே சென்றேன். குழந்தையுடன் கங்கையில் குதிப்பதென முடிவு செய்திருந்தேன். அப்போது குழந்தை எனது தோளில் நித்திரையாகி விட்டது. குழந்தையை கங்கையில் வீசி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

களுகங்கையில் வீசப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் தத்தளிப்பதை கண்ட வாகன சாரதி ஒருவர் நீரினுள் குதித்து குழந்தையை மீட்டுள்ளார். தற்போது குறித்த குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பிலுள்ள லேடி றிச்வே வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றது.

Read more...

திருமலையில் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை கொழும்பு வீதியில் மட்கோ சந்தி எனுமிடத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை செய்தனர். அப்பிரதேசத்தில் அப்பாவி பொது மகன் ஒருவர் பொலிஸாரினால் கொல்லப்பட்டதை கண்டித்தே இப்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் „ அப்பாவிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதை கண்டிக்கின்றோம்' , „ நீதியை நீலைநாட்டுவதற்கு ஒன்று திரள்வோம்' என்ற பதாதைகளை சுமந்து நின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கடும் நடவடிக்கைகள் எடுத்தபோதும் , அவ்வணுகுமுறைகள் கைகூடாத நிலையில் , பாரபட்சம் அற்ற விசாரணைகள் இடம்பெறும் என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உறுதிவழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Read more...

இஸ்ரேலைக் கண்டித்தார் கிளின்டன்

கிழக்கு ஜருசலத்தில் புதிய குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் எடுத்த தீர்மானத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அமெரிக்க-இஸ்ரேலிய உறவைப் பொறுத்தவரை இது “மிகவும் எதிர்மறையான” செயல் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவிடம் 43 நிமிட தொலைபேசி அழைப்பின்போது கிளின்டன் கூறினார்.

அமெரிக்கா இஸ்ரேலை இவ்வளவு கடுமையாகக் கண்டிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்று பிபிசி செய்தி நிறுவனத்தின் வாஷிங்டன் செய்தியாளர் குறிப்பிட்டார். அமைதிப் பேச்சை மீண்டும் தொடரச் செய்யும் நோக்கத்துடன் அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் மேற்கொண்ட வருகையின்போது, இஸ்ரேல் தனது தீர்மானத்தை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது தீர்மானத்தை மாற்றிக்கொள்ளும்வரை பேச்சு வார்த்தைக்குத் திரும்பப் போவதில்லை என்று பாலஸ்தீனர்கள் கூறிவிட்டனர்.

திரு பைடன் ஜருசலத்தில் பேச்சு நடத்தியபோது புதிய குடியேற்றம் அமைக்கும் திட்டத்தை அறிவித்ததற்காக திரு நெட்டன்யாஹு முன்னதாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ஔராண்டுக்கும் மேலாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சு வார்த்தையை “நேரடியற்ற முறையில்” நடத்த இஸ்ரேலியத் தலைவர்களும் பாலஸ்தீனத் தலைவர்களும் இணக்கம் அளித்திருந்தனர்.

ஆனால், இஸ்ரேலின் அறிவிப்பைத் தொடர்ந்து, குடியேற்றம் அமைக்கும் திட்டம் கைவிடப்படாவிட்டால் பேச்சு வார்த்தை நடத்துவது “மிகவும் சிரமமாக” இருக்கும் என்று பாலஸ்தீன் கூறிவிட்டது.

மேற்குக் கரையையும் கிழக்கு ëஜருசலத்தையும் 1967ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்தபிறகு, இதுவரை 100க்கும் மேற்பட்ட குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 500,000 யூதர்கள் வாழ்கிறார்கள். அனைத்துலகச் சட்டத்தின்கீழ் இந்தக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை. ஆனால் இஸ்ரேல் இதை மறுக்கிறது.

Read more...

கொந்தளிக்கும் இலங்கையின் எதிர்காலம். -கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்-

சிறுபான்மை பெரும்பான்மை இனங்களுக்கு வெளியேயான வலை
இலங்கை நிலவரம் ஒரு கொந்தளிப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உள்நாட்டிலும் குழப்பமான நிலை. வெளியேயும் மேற்குலகின் அதிகரித்து வரும் நெருக்கடிகள்ளூ அழுத்தங்கள். அத்துடன் இந்தியாவா சீனாவா அமெரிக்காவா தங்கள் கால்களை பலமாக ஊன்றிக் கொள்வது என்ற போட்டிகள். இந்தப் போட்டிகள் உள் நாட்டில் உருவாக்கும் குழப்பங்கள். அரசியல் கட்சிகளின் அணிப் பெருக்கம். வெளியே புலம் பெயர்ந்த தமிழர்களைக் கையாள முற்படும் மேற்கின் போக்கு என ஒரு வெப்ப வளையம்.

இதில் யப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் எங்கே, எப்படி நிற்பது என்று தெரியாது தடுமாறிக் கொண்டும் போட்டியிட்டுக் கொண்டுமிருக்கும் நிலைமை. இதற்காக சுருக்குக் கயிறுகளோடு சில நாடுகளும் கத்தி, பொல்லு, குண்டாந்தடிகளோடு சிலநாடுகளும் சவக்குழி, பொறிக் கிடங்குகளோடு சில நாடுகளும் என்று ஒரு மாபெரும் பொறிவெளியில் இலங்கை இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

போர் முடிந்து விட்டது என்று யாரும் ஆறுதலடைய முடியாதபடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எல்லாமே எதிர் மறை நிகழ்ச்சிகள். 'மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா விடாது' என்பது உலகப் பொதுக்கூற்றல்லவா!

முன்னர், நிலைமைகளை சமநிலையில் வைத்திருப்பதற்கு போர் இருந்தது. புலிகள் இருந்தார்கள். இலங்கை அரசாங்கம் கொஞ்சம் விலகினால் புலிகளுக்கு நெருக்கமாக வந்து (இந்த நெருக்கம் இரகசிய வழிகளிலானது) அரசாங்கத்தைப் பணியவைக்கும் உத்தியை இந்த நாடுகள் பயன்படுத்தின. அல்லது ஆட்சியிலிருக்கும் தரப்புக்கு எதிராக இருக்கும் தரப்பைப் பலப்படுத்திப் பணிய வைக்க முயற்சித்தன. இதில் சிங்களம் தமிழ் என்ற பேதங்களிருக்கவில்லை. எது வாய்ப்பான தரப்பு என்பதே கவனிக்கப்பட்டது. புலிகள் இல்லாத வெளியில் உருவாகியிருக்கும் புதிய சூழலில் இலங்கையின் மீதான ஆதிக்கப் போட்டிகள் மும்முரமாகி விட்டன. இந்தியா புலிகளில்லாத இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தை முழுமையாக்க முயற்சிக்கிறது.

இதில் அது ஏறக்குறைய பாதி வெற்றியை அடைந்துமிருக்கிறது. இப்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒரு வித இணைநிலை உறவைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவுக்கு இனிப்பான முறையிலேயே அது கூடுதலாக நடந்து கொள்கிறது. இதேவேளை நீண்ட காலத்துக்குப் பின்னர் (புலிகள் இல்லாத சூழலில்) தமிழ் - சிங்கள அதிகார வர்க்கங்களோடு ஒரு இணைநிலை உறவை இந்தியா இப்போது கொண்டுள்ளது. (இந்த நிலை ஒரு அமைதித் தீர்வுக்கு இலங்கையைக் கொண்டு செல்ல உதவும். அதற்கான சூழலையே இந்தியா உருவாக்குகின்றது என்று சொல்வோர் உள்ளனர். இது வேடிக்கையானது. இலங்கையில் அமைதி நிலவ ஒரு போதுமே இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. அதற்கான காரணங்கள் பலவுண்டு. அதை
இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

இப்போது இந்தியாவுக்கு மகிந்த அரசோடும் உறவு. தமிழ்க் கூட்டமைப்போடும் உறவு என்ற ஒரு புதிய சூழல். இது இந்தியாவைப் பொறுத்து வெற்றியே. ஆனால் ஒரு எல்லைவரையான வெற்றிதான் இது. இதற்கு எதிரில் பொறிகளோடும் அதிக முனைப்புகளோடும் மேற்குலகம் இருக்கிறது. திரை மறைவிலான முயற்சிகளோடு சீனா உள்ளது.

உலக அரங்கில் நிகழும் அதிகரித்த வர்த்தகப் போட்டிக்கு இலங்கை ஒரு முக்கிய மையமாக இருப்பது எல்லோருக்குமே தெரிந்த விசயம். இதனால் அந்தத்தரப்புகள் தமக்கு வாய்ப்பான இடங்களின் வழியாகக் காய்களை நகர்த்துகின்றன. கைகளை வைக்கின்றன. கால்களை ஊன்ற முயற்சிக்கின்றன.

போர் முடிந்த நிலையில் நிச்சயமாக ஒரு அமைதி இலங்கையில் இதுவரையில் எட்டப்பட்டிருக்க வேண்டும். பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம், அகதிகளை மீள் நிலைக்குக் கொண்டு வருதல், போர் நிகழ்ந்த பகுதிகளை அவற்றின் பாதிப்புகளிலிருந்து மீளக் கட்டியெழுப்புதல், சனங்களுக்குப்; புனர்வாழ்வழித்தல், அரசியல் தீர்வு நோக்கி முன்னேறுதல் என்று நிலைமைகள் மேம்பாடடைந்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அப்படி எதுவும் எளிதில் நடந்து
விடப்போவதுமில்லை. அதற்கு இந்த நாடுகள் அனுமதிக்கப் போவதுமில்லை. போர் மனித உரிமை மீறல்களுடன்தான் நடந்தது என்று இந்த நாடுகள் அனைத்துக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் போரின்போது இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா நாடுகளும் எந்தப் பேதங்களுமில்லாமல் தாராளமாக உதவின.

ஆனால், போருக்குப் பின்னர் அகதிகளுக்கு உதவவும் மீள் கட்டுமானம், புனரமைப்புப் போன்றவற்றுக்கு உதவவும் இவை தயாரில்லை. இது எப்படியிருக்கிறது? தமக்கு சார்பாக நடந்து கொண்டால் தாராள உதவி என்ற கொள்கை அன்றி வேறென்ன? இதற்குத் தனியே மகிந்த ராஜபக்ஸ மட்டும் காரணமல்ல. அவருக்கு இந்தக் குறைபாடுகளில் பெரும் பங்கிருந்தாலும் அவருக்கு அப்பால் ஏனைய அரசியல் தரப்பிருக்கும் சகலருக்கும் இவற்றில் பொறுப்பும் பங்குமுண்டு.

போர் முடிந்த பின்னர் இரண்டு பெரும் தேர்தல்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்தத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆனால், போர் முடிவுற்றதைத் தவிர நாட்டில் நிலவும் வேறு எந்தப் பிரச்சினைகளும் தீர்ந்ததாக இல்லை. பதிலாக இன்னும் பிரச்சினைகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

அப்படியென்றால், என்னதான் நடக்கிறது? இனி என்னதான் நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இதுதான் சுவாரஷ்யமான பகுதி. கொலனி ஆதிக்கத்தின் போது இலங்கை போன்ற நாடுகளை பிரித்தானியா பிரித்தாளும் தந்திரோபாயத்தின் மூலம் கையாண்டது. அங்குள்ள மக்களை இன, மத, மொழி அடிப்படைகளில் வெவ்வேறு சமூகங்களாகப் பிரித்தாண்டது. இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயம் மேற்குலகின் கைவந்த கலை.

இதைப் பின்னர் இந்தியா கையாளத் தொடங்கியது. இதன் வெவ்வேறு வடிவங்கள்தான், ஐ.தே.க ஆட்சியிலிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தமக்குச் சார்பாகக் கையாள்வது. அது சாத்தியப்படாதபோது ஜே.வி. பி.யைக் கையாள்வது. சிறிலங்கா
சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தால் அதை வளைத்துப் போடுவது. முடியா விட்டால் எதிர்த்தரப்பைக் கையாள்வது. (சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1980 களின் நடுப்பகுதியில் ஜே. ஆரால் சிதைக்கப்பட்ட பின்னர், ஜே.வி.பி யை இந்தியா கையாண்டதை இங்கே நினைவு கூரவேண்டும்). அல்லது தமிழ்க்கட்சிகளை, இயக்கங்களைக் கையாள்வது.

இது இந்தியாவின் நடவடிக்கைகள் என்றால், போரின்போது நிகழ்ந்து கொண்டிருந்த சிதைவுகளை மையமாக வைத்துக் கொண்டு மேற்குலகம் ஒரு பக்கத்தாலும் சீனா இன்னொரு பக்கத்தாலும் ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இன்னொரு பக்கத்தாலும் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தின. அதாவது போர் எப்போதும் எதிர் எதிரான இரண்டு தரப்புகளைக் கொண்டது என்பதால் இவை இப்படித் தமது காரியங்களை இடையில் நின்று மேற்கொள்ள முடிந்தது.

இந்தப் பிரித்தாளும் தந்திரமானது நேரடியான கொலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்து அறுபது ஆண்டுகளான பின்னரும் தொடர்கிறது. அதுதான் கவலைக்குரியது. இப்போது இலங்கை அரசாங்கம் மேற்குலகுடன் வெளிப்படையான முரண் நிலைக்கு வந்துள்ளது. மேற்குலகமும் இலங்கையை வெளிப்படையாகவே மிரட்டவும் அதற்கு அழுத்தம் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடுதான், புலம் பெயர் தமிழர்களின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பிரித்தானியப் பிரதானிகள் கலந்து கொள்வதும் இவை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் முக்கிய கவனமெடுத்துக் கருத்துரைப்பதுமாகும்.

இன்னும் தங்கள் தேவைகளுக்கா தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்தாள முயற்சிக்கின்றது இந்த உலகம். எல்லாமே அவரவர் நலன்களுக்காக மட்டுமெ நடக்கின்றன. இல்லையென்றால், வன்னிப் போரின்போது ஈழத்தமிழர்கள் கொட்டும் பனியில் நின்று போரை நிறுத்தும் படியும் அங்கே கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றும் படியும் வேண்டிய போது அதையெல்லாம் கண்டு கொள்ளாத மேற்குலகம் இப்பொழுது நடக்கும் இந்தச் சிறு கூட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறதே. இது சிரிப்பாக இல்லையா?

மேற்குலகின் இந்த திடீர் மாற்றம் சில தமிழருக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் இப்போது தரலாம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. பொதுவாகவே தமிழ் சிங்கள மக்களிடம் ஒரு குறைபாடிருக்கிறது. தமிழர்கள் வெளிச்சக்திகளால் நெருக்குவாரப்படும் போது சிங்களர்கள் சந்தோசப் படுவார்கள்.

அதாவது தமிழர்களின் மூக்குகள் உடைபடும் போது சிங்களவர்கள் சிரிப்பார்கள். சிங்களவர்களின் மூக்கு உடைபடும் போ தமிழர்கள் சிரிப்பார்கள். ஆனால், இரண்டு தரப்பினரும் தலைகளும் உடைபடுகின்றன என்பதை இவர்களில் பலரும் கண்டு கொள்வதில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.

இந்திய நெருக்கடி அல்லது அழுத்தம் என்பது இப்போது மறைமுகமானது. சிநேக ரீதியானது போல தோற்றம் காட்டுவது. காரணம் மகிந்த ராஜபக்ஸ ஒரு சுதேசியாகத் தோற்றம் தருபவர். அத்துடன் பிராந்திய நாடுகளுடனான உறவில் தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திரோபாயத்தைக் கொண்டவர். மேலும் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்குலக நெருக்கம் என்பது புலம் பெயர் தமிழர்களின் மூலமாக இலங்கைத் தமிழர்களை அனுசரிக்க வேண்டி வரலாம் என்ற எச்சரிக்கையுணர்வை உடையவர். மட்டுமல்ல, வருகின்ற காலத்தில் மேற்குலகத்துக்குச் சவாலாக பொருளாதார ரீதியில் சீனாவும் இந்தியாவும் எழுச்சிபெற்று வருவதையும் சரியாக விளங்கிக் கொண்டு காரியமாற்றுபவர் மகிந்த ராஜபக்ஸ.

எனவே அவர் மேற்குலகத்தை விடவும் இந்தப் பிராந்தியத்துடனான உறவையே அதிகம் விரும்புகின்றார். இதை மேற்குலகம் விரும்பவில்லை. அதனால் அவரை அது நெருக்குகிறது. பழிவாங்கத்துடிக்கிறது. இந்த நெருக்கடியை தனியே நின்று அவரால் ஒரு போதுமே சமாளிக்க முடியாது. அதற்கு தமிழ் சிங்கள உறவுக்கான அடிப்படைகளை அவர் சீராக்க வேணும். இல்லை என்றால் இந்தியாவிடமோ சீனாவிடமோ சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்போதும் மேற்குலகம் இலங்கையைச் சும்மா விட்டு விடாது. ஆகவே கொந்தளிக்கும் நிலைமைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டுச் சூழலைப் பிறர் கையாள்வதற்கு எவரும் இடமளிக்கக் கூடாது. இதில் அரசாங்கத்துக்குக் கூடுதல் பொறுப்புண்டு. இதற்கு மேன்மையான குணங்களும் விரிந்த அரசியற் பார்வையும் விட்டுக் கொடுப்புகள், ஏற்றுக் கொள்ளல்கள், சகித்துக் கொள்ளுதல்கள் என்ற ஜனநாயகப் பண்புகளும் அவசியம். இல்லையெனில் தொடரும் துயரம். கொந்தளித்துக் கொண்டேயிருக்கும் இலங்கை.

Read more...

Sunday, March 14, 2010

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -9)

நாம் சிறைபட்டு இவர்களது சவக்குழிகளுக்குள் இருந்த போது எங்கள் இரத்த உறவுகள் எங்களைப் பார்க்க தினமும் புலி விலங்குகளது அலுவலகங்கள் முன்னால் காத்துக் கிடந்தனர். அங்கு இருந்த மூவாயிரம் பேரில் ஒருவரைக்கூட இந்த விலங்குகள் பார்வையிட அனுமதிக்கவில்லை. அம்மா, அப்பா, சகோதரர்கள், மனைவி, குழந்தைகள் என்று அனைத்து இளைஞர்களுக்கும் இரத்த உறவுகள் இருந்தன. இவர்களது பல அலுவலகங்களுக்கும் நாயாக அலைந்து திரிந்தனர். எங்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது கூட எங்கள் உறவினருக்குத் தெரியாது.

மனித நேயமே அற்ற இந்த விலங்குகளா எங்கள் இனத்துக்கு விடுதலை பெற்று வாழவைக்கப்பபோகின்றனர்? மனித உரிமைகள் என்றால் என்னவென்றே தெரியாத இந்த மிருகங்கள் தமிழினத்தை வன்னியில் விலங்குகளாக மாற்றிக்கொண்டிருந்தனர்.

“கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய்”

ஏனைய அனைத்து இயக்கங்களையும் கதிரை ஏறும் ஆசை கொண்டு வதைக்கவில்லை? அழிக்கவில்லை? 1983 முதல் அனைத்து இயக்கங்களும் போர் முனைக்குச் செல்லத்தான் தயாரித்துச் செயல்பட்டன. கதிரை ஆசை யாருக்கும் அப்போது வரவில்லை. கதிரை ஆசை வந்தது புலி விலங்குகளுக்குத்தான். போட்டிக்கு இயக்கங்கள் இருந்தால் தானே கதிரைக்கும் போட்டி வரும். அனைத்து இயக்கங்களையும் அழித்துவிட்டால் எனக்கு மட்டும்தானே கதிரை! மொத்தமாகவே தமிழ் இளைஞர்களையும் தமிழினத் தலைவர்களையும் அழித்த விலங்குகள் கதிரைக்கு ஆசைப்படுவது ஏனைய இயக்கங்கள் என்று கதை சொல்லிப் பாட்டுப்பாடுகின்றனர். என்ன கொடுமை இது! பாவத்தை இரக்கமின்றிச் செய்து கொண்டு பழியைப் பிறர்மீது சுலபமாக விதைத்தனர் பாடல் வழியாக!

“உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூட்டினாய்”

எந்த மனிதனாவது தனது தங்கையைக் கற்பழித்தவனுக்கு மாலை சூட்டுவானா? ஐ.பி.கே.எப். கற்பழித்தது, ஏனைய இயக்கங்கள் மாலை சூட்டினர் என்பதுதான் இந்தப் பாடல் வரிகள். “கவிதைக்குப் பொய்யழகு” என்று தமிழகத்தில் ஒருவர் பாடினார். இந்த விலங்கும் பொய்யையே கவிதையாக்கி ஏனைய விலங்குகளிடம் கைத்தட்டல் பெற்றிருப்பார். ஐ.பி.கே.எப். தமிழ் பெண்களைக் கற்பழிப்பதற்காக ஈழத்துக்கு வரவில்லை. மாலை போட்டு வரவேற்றது புலிகள்தான். அமைதியை நிலைநாட்டி தமிழருக்கென்று மாநில அரசொன்றை உருவாக்கி நிர்வாகத்தைத் தமிழரே, தமிழர் பகுதிகளில் நடத்திட ஓர் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த அமைதிபடை வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியை ஐ.பி.கே.எப். க்கு எதிராக திருப்பினால் ஏனைய இயக்கத்தவர்களும் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராகத் திருப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாரா? எந்த நியாயத்தை வைத்து இந்த விலங்குகள் எதிர்பார்த்தனர்?

கதிரை ஆசைக்காக ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்தீர்கள். எனவே ஏனைய இயக்கத்தினரும் ரெலோ இயக்கத்தினரைக் கொலை செய்ய வேண்டுமா? ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரைக் கொன்றார்கள் ஏனையோரும் மதிகெட்டு அப்படிச் செய்ய வேண்டும் என்றா எதிர்பார்த்தனர்?

பிரபாகரன் என்ன நினைக்கிறாறோ அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் அனைவரும் துரோகிகள். பிரபாகரனுக்கோ அல்லது புலிகளுக்கோ முடிசூட்டும் பணிக்காக நாம் விடுதலை கோரவில்லை! தமிழ் இனத்தின் விடுதலைக்காகத்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் திலகமிட்டு அனுப்பினர். அப்படி அனுப்பப்பட்ட பிள்ளைகளை எண்ணை ஊற்றி எரித்துவிட்டு தேவாரம் பாடி மக்களை ஏமாற்றினார்கள் அன்று. தமிழ் இனத்துக்கு எதிரான வன்கொடுமை ஒரு புறம் நடக்க, மறுபுறம் தமிழின உணர்வுப் பிரசாரம் செய்து பணம் பார்த்தார்கள் பிறநாடுகளில்.

ஐ.பி.கே.எப். தமிழர்களைத் தாக்கவுமில்லை, அழிக்கவுமில்லை, எப்போது புலிவிலங்குகள் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்களோ அப்போதுதான் அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். புலேந்திரன், குமரப்பா உள்பட 12 புலிகள் இலங்கைக் கடற்பகுதியில் வைத்து சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் தமிழர்களைக் கைது செய்யக் கூடாது என்று இந்தியாவின் உத்தரவு. கடல் பகுதியில் வைத்து கைது செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்ற உத்தரவு ஒப்பந்தத்தில் இல்லை. எனவே கடற்படை ஒப்படைத்த நபர்களை விசாரிக்க கொழும்புக்கு கொண்டு செல்லப்போகிறோம் என்று இலங்கை இராணுவம் முயற்சிகள் மேற்கொண்டது. அதை மறுத்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது.

இந்த வேளையில்தான் புண்ணியவான்களான பாலசிங்கமும், மாத்தையாவும் அந்தக் கைதிகளைச் சந்திப்பதற்கு இந்தியாவிடம் வற்புறுத்தி அனுமதி பெற்று பார்க்கச் சென்றனர். அவர்களுக்கு உண்ண உணவும் கொடுத்துக் கூடவே சைனைட் குப்பிகளையும் கொடுத்து ‘தலைவர் உத்தரவு” சாப்பிட்டுச் செத்துப் போங்கள் என்று ஆசி வழங்கிவிட்டு வந்தனர். அவர்கள் உண்டார்கள், இறந்தார்கள்!

புலிகளது கொள்கைப்படி, படைப்பிரிவுகளிடம் அகப்பட்டுக்கொண்டால் விசக்குப்பியைக் கடித்துத் தின்று இறந்துவிட வேண்டும். ஆகவே புலேந்திரன் குமரப்பா மற்றும் புலிகளும் கடற்படையிடம் சிக்குண்ட போதே குப்பியைக் கடித்து இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை! அப்படியாயின் அவர்கள் வாழவேண்டும் என்று நினைத்துள்ளனர். அவர்களிடமிருந்த குப்பிகளை கடற்படையினர்தான் அகற்றி எடுத்தனர். இவர்கள் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் செய்திருந்தனர். அத்திருமணங்களை தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தி நடத்திவைத்தவர் தலைவர் பிரபாகரன்தான். எனவே அவர்கள் தற்கொலை செய்ய விரும்பவில்லை. தங்கள் குடும்பத்தினருடன் வாழ்வதற்கே விரும்பினர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திவைத்த இந்தத் திருமணங்களுக்கு மணப்பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்களை அழைத்து வந்து மணமேடை ஏற்றியவர்கள் அமைதிப்படையினர்தான் என்றால் நம்பவா போகின்றனர் புலிவிலங்குகள்.

தொடரும்…...

Read more...

இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் மூடல்

இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன. பல்கலைக்கழகங்களில் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கலாநிதி பத்மநாதனை பதவியிலிருந்து விலகுமாறு வற்புறுத்திய மாணவர் பேரவை பிரதிநிதிகளுக்கும், இதன் காரணமாக மாணவர் பேரவையை கலைக்குமாறு கோரிக்கையை முன் வைத்த மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

இதனால் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் வைத்திய பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் விரிவுரைகளை இடைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணைவேந்தர் கலாநிதி கே. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலின் பின்னர் இரண்டு மாணவ குழுக்களிடையே அமைதியற்ற சுழ்நிலை காணப்பட்டதாகவும் இதனையடுத்தே விரிவுரைகளை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மன்சூர்.ஏ.காதர் கூறுகின்றார்.

Read more...

ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்:

நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா. ஹரித்வாரில் கும்பமேளாவில் இருப்பதாகக் கூறப்படும் நித்தியானந்தா ஆங்கில மற்றும் தெலுங்கு சேனல்களுக்கு ஒரு புதுப் பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய முரண்பாடான விவகாரங்கள் வெளியாகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


நித்தியானந்தா: தற்போதைய விவகாரத்துக்கு முன்னரும், பின்னரும் யூ டியூப் தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன். முன்பு ஆன்மிக குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடி என்ற பெயரிலும் அதிகளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன்.

எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் இரண்டு எதிரெதிர் முனைகளையும், புகழின் உச்சத்தையும், தாழ்வையும் தொட்டுவிட்டேன். இவை எனக்கு வாழ்க்கையின் இதர பரிமாணங்களை கற்றுத் தந்திருக்கின்றன. இதுவரை பார்க்காத பரிமாணங்களை நான் கண்டுவருகிறேன்.

எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை உருவாகும் என்றோ, என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை தான் எனக்கு ஆறுதல்.

கேள்வி: சர்ச்சைக்குரிய அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நீங்கள் தானா?


நித்தியானந்தா: அதில் நிறைய தவறான சித்தரிப்புகள், இடைச்செருகல மற்றும் மார்ஃபிங் நடந்துள்ளன. வீடியோ காட்சிகளில் எந்தெந்த இடங்களில் 'மார்ஃபிங்' செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய அவற்றை லண்டனுக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்.

அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் நான் பிரக்ஞையற்ற நிலையில் இருந்தேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை திரிக்கப்பட்டும், தவறானதாகவும் சித்தரிக்கப்பட்டு வெளியுலகுக்கு காட்டப்பட்டுள்ளது. எனது 'பிரைவசி' பறிபோயுள்ளது.

அதோடு நான் குளித்துவிட்டு உடை மாற்றுவதைக் கூட மீடியாக்கள் படமெடுத்துள்ளன. இது நிச்சயமாக என்னை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நடந்துள்ளது.

கேள்வி: வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். அந்த நடிகை (ரஞ்சிதா) உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா?

நித்தியானந்தா: ஆம்.. நடிகை ரஞ்சிதாதான் அது. அதை நான் மறுக்கவில்லை. மறைக்கவுமில்லை. ரஞ்சிதா நேற்றும் இன்றும் நாளையும் எனது தீவிர பக்தைதான். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள். ரஞ்சிதா எனக்கு நீண்ட காலமாக எனக்கு சேவை செய்பவர். அந்த காலகட்டத்தில் எனக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். நீண்ட நாள்கள் அப்படியிருந்தேன். அப்போது அவர் தான் என்னை முழுவதுமாக மனமுவந்து கவனித்துக் கொண்டார்.

அந்த விடியோ படம் எடுக்கப்பட்டபோது உண்மையில் நான் உடல் நலமற்று... 'சமாதி' நிலையில் இருந்தேன். சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.

கேள்வி: உங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையே?

நித்தியானந்தா: தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் பிரக்ஞையுடன் உங்களுக்கு 'பயோ-மெமரி' அதிகளவில் இருக்குமானால், மற்றவர்களின் தேவை குறைவானதாக இருக்கும்.

உங்களது பயோ- மெமரி வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.

எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.

இந்த வீடியோ எனக்கு எதிரான மிகப் பெரிய சதி. ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரத்தத்தை வைத்து ரத்தத்தைக் கழுவ முடியாது. எனது பல்வேறு சேவைகளை கருத்தில்கொண்டு இதனை சமுதாயம் நிராகரித்திருக்க வேண்டும்.

விரைவில் பெங்களூருக்கு வருவேன்

கேள்வி: மீண்டும் ஆஸ்ரமத்திற்கு திரும்புவீர்களா?

நித்யானந்தா: 'எனது நிலையை சீடர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நான் ஹரித்வாரில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. நான் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. கும்பமேளாவில் எனது கடமைகள் முடிந்தபின் நான் பெங்களூர் ஆஸ்ரமத்துக்குத் திரும்புவேன்.

இந்த வழக்கு தொடர்பாகவோ, குற்றச்சாட்டுகளை விசாரிக்கவோ போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை' என்றார்.

Read more...

பிரபாகரனின் தாய் பார்வதி வெளிநாடு : சிவாஜிலிங்கத்திடம் விசாரணையாம்.

இலங்கையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலேசியா சென்ற வேலுப்பிள்ளையின் மனைவி பார்வதியை சிவாஜிலிங்கம் மலேசியா வரை கொண்டு சென்று விட்டுவந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. இச்செயற்பாடானது இலங்கை அரசின் அனுசரணையில் யாழ்பாணத்தில் போட்டிபோடும் சிவாஜிலிங்கத்திற்காக மேற்கொள்ளப்படும் இலவச தேர்தல் பிரச்சாரமாகும். இப்பிரச்சாரத்திற்கு பிரபாகரனின் சகோதர சகோரிகளின் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளதையிட்டு சிவாஜிலிங்கத்தின் அரசியல் வஞ்சகங்கள் தெரிந்த யாழ் மக்கள் மிகவும் விசனமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து விசேட ஏற்பாடுகளுடன் இலங்கை வரவழைக்கப்பட்ட சிவாஜிலிங்கம், இலங்கை அரசாங்கத்தின் நிகழ்சி நிரலில் இயங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது யாவரும் அறிந்தவிடயம். இந்நிலையில் தான் வேலுப்பிள்ளையின் மனைவியை மலேசியா அழைத்துச் சென்றதற்காக தன்னை விசாரித்ததாக சிவாஜிலிங்கம் புளுடாவிட்டுள்ளார். இப்புளுடாவை இணையத்தளங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

வன்னி முற்றாக புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டபோது மக்களோடு மக்களாக வந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினரை இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பனாகொடை இராணுவ முகாமில் தங்க வைத்திருந்தனர். அவ்வாறு அவர்களை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதற்கான காரணம் பிரபாகரன் மீது மக்கள் கொண்ட ஆத்திரத்தில் மக்கள் அவரது பெற்றோரை தாக்கலாம் என்ற சந்தேகம் எனவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. அவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இடைத்தங்கல் முகாம்களில் பதுங்கயிருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரன் தாய் தந்தயைருக்கு பாதுகாப்பு வழங்கிய இலங்கை அரசாங்கம், வேலுப்பிள்ளை மரணித்த நிலையில் பார்வதியை மலேசியா கொண்டு சென்றதற்காக ஒருவரை ஏன் விசாரிக்கவேண்டம். இதை நம்பும் அளவிற்கு தமிழ் மக்கள் மடையர்கள் என நினைக்கும் சிவாஜிலிங்கம் எவ்வளவு முட்டாளக இருக்கவேண்டும் என்பதை அளப்பதற்கான அளவுகோல் எங்கிருக்கின்றது?

பானாகொடை பாதுகாப்பு முகாமில் வேலுப்பிள்ளை உயிரிழந்தபோது, இலங்கை அரசாங்கத்தினை தொடர்பு கொண்ட பிரபாகரனது சகோதரிகள் தமது தந்தையின் உடலத்தை தமது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நல்லடக்கம் செய்வதற்கு உரிமை கோரியபோது, இலங்கை அரசாங்கம் அதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்திருந்ததுடன் அப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்திற்கு இலவச தேர்தல் பிரச்சாரம் செய்தபோதும் சிவாஜிலிங்கத்தால் நாடளாவிய ரீதியில் ஒன்பதாயிரம் வாக்குகளே பெறக்கூடியதாக இருந்தது. ஆனால் ஜனாதிபதி தேர்லின் போது ஜனாதிபதி வேட்பாளராக நின்ற சிவாஜிலிங்கத்திற்கு பக்கபலமாக நின்ற சிறிகாந்தா பிரபல சட்டத்தரணி என்பதும் அவர் தனது வாழ்நாளில் ஒன்பதாயிரத்திற்கு மேலதிமான வழக்குகளை வாதாடியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இவருடைய வாடிக்கையாளர்கள் கூட சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இருவரும் கூட்டாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாடளாவிய ரீதியில் ஒன்பதாயிரம் வாக்கெடுத்த மகான்கள் யாழ் மாவட்டத்தில் எத்னை வாக்குகளை குவிக்கப்போகின்றார்கள்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com