Sunday, March 14, 2010

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -9)

நாம் சிறைபட்டு இவர்களது சவக்குழிகளுக்குள் இருந்த போது எங்கள் இரத்த உறவுகள் எங்களைப் பார்க்க தினமும் புலி விலங்குகளது அலுவலகங்கள் முன்னால் காத்துக் கிடந்தனர். அங்கு இருந்த மூவாயிரம் பேரில் ஒருவரைக்கூட இந்த விலங்குகள் பார்வையிட அனுமதிக்கவில்லை. அம்மா, அப்பா, சகோதரர்கள், மனைவி, குழந்தைகள் என்று அனைத்து இளைஞர்களுக்கும் இரத்த உறவுகள் இருந்தன. இவர்களது பல அலுவலகங்களுக்கும் நாயாக அலைந்து திரிந்தனர். எங்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது கூட எங்கள் உறவினருக்குத் தெரியாது.

மனித நேயமே அற்ற இந்த விலங்குகளா எங்கள் இனத்துக்கு விடுதலை பெற்று வாழவைக்கப்பபோகின்றனர்? மனித உரிமைகள் என்றால் என்னவென்றே தெரியாத இந்த மிருகங்கள் தமிழினத்தை வன்னியில் விலங்குகளாக மாற்றிக்கொண்டிருந்தனர்.

“கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய்”

ஏனைய அனைத்து இயக்கங்களையும் கதிரை ஏறும் ஆசை கொண்டு வதைக்கவில்லை? அழிக்கவில்லை? 1983 முதல் அனைத்து இயக்கங்களும் போர் முனைக்குச் செல்லத்தான் தயாரித்துச் செயல்பட்டன. கதிரை ஆசை யாருக்கும் அப்போது வரவில்லை. கதிரை ஆசை வந்தது புலி விலங்குகளுக்குத்தான். போட்டிக்கு இயக்கங்கள் இருந்தால் தானே கதிரைக்கும் போட்டி வரும். அனைத்து இயக்கங்களையும் அழித்துவிட்டால் எனக்கு மட்டும்தானே கதிரை! மொத்தமாகவே தமிழ் இளைஞர்களையும் தமிழினத் தலைவர்களையும் அழித்த விலங்குகள் கதிரைக்கு ஆசைப்படுவது ஏனைய இயக்கங்கள் என்று கதை சொல்லிப் பாட்டுப்பாடுகின்றனர். என்ன கொடுமை இது! பாவத்தை இரக்கமின்றிச் செய்து கொண்டு பழியைப் பிறர்மீது சுலபமாக விதைத்தனர் பாடல் வழியாக!

“உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூட்டினாய்”

எந்த மனிதனாவது தனது தங்கையைக் கற்பழித்தவனுக்கு மாலை சூட்டுவானா? ஐ.பி.கே.எப். கற்பழித்தது, ஏனைய இயக்கங்கள் மாலை சூட்டினர் என்பதுதான் இந்தப் பாடல் வரிகள். “கவிதைக்குப் பொய்யழகு” என்று தமிழகத்தில் ஒருவர் பாடினார். இந்த விலங்கும் பொய்யையே கவிதையாக்கி ஏனைய விலங்குகளிடம் கைத்தட்டல் பெற்றிருப்பார். ஐ.பி.கே.எப். தமிழ் பெண்களைக் கற்பழிப்பதற்காக ஈழத்துக்கு வரவில்லை. மாலை போட்டு வரவேற்றது புலிகள்தான். அமைதியை நிலைநாட்டி தமிழருக்கென்று மாநில அரசொன்றை உருவாக்கி நிர்வாகத்தைத் தமிழரே, தமிழர் பகுதிகளில் நடத்திட ஓர் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த அமைதிபடை வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியை ஐ.பி.கே.எப். க்கு எதிராக திருப்பினால் ஏனைய இயக்கத்தவர்களும் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராகத் திருப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாரா? எந்த நியாயத்தை வைத்து இந்த விலங்குகள் எதிர்பார்த்தனர்?

கதிரை ஆசைக்காக ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்தீர்கள். எனவே ஏனைய இயக்கத்தினரும் ரெலோ இயக்கத்தினரைக் கொலை செய்ய வேண்டுமா? ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரைக் கொன்றார்கள் ஏனையோரும் மதிகெட்டு அப்படிச் செய்ய வேண்டும் என்றா எதிர்பார்த்தனர்?

பிரபாகரன் என்ன நினைக்கிறாறோ அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் அனைவரும் துரோகிகள். பிரபாகரனுக்கோ அல்லது புலிகளுக்கோ முடிசூட்டும் பணிக்காக நாம் விடுதலை கோரவில்லை! தமிழ் இனத்தின் விடுதலைக்காகத்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் திலகமிட்டு அனுப்பினர். அப்படி அனுப்பப்பட்ட பிள்ளைகளை எண்ணை ஊற்றி எரித்துவிட்டு தேவாரம் பாடி மக்களை ஏமாற்றினார்கள் அன்று. தமிழ் இனத்துக்கு எதிரான வன்கொடுமை ஒரு புறம் நடக்க, மறுபுறம் தமிழின உணர்வுப் பிரசாரம் செய்து பணம் பார்த்தார்கள் பிறநாடுகளில்.

ஐ.பி.கே.எப். தமிழர்களைத் தாக்கவுமில்லை, அழிக்கவுமில்லை, எப்போது புலிவிலங்குகள் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்களோ அப்போதுதான் அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். புலேந்திரன், குமரப்பா உள்பட 12 புலிகள் இலங்கைக் கடற்பகுதியில் வைத்து சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் தமிழர்களைக் கைது செய்யக் கூடாது என்று இந்தியாவின் உத்தரவு. கடல் பகுதியில் வைத்து கைது செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்ற உத்தரவு ஒப்பந்தத்தில் இல்லை. எனவே கடற்படை ஒப்படைத்த நபர்களை விசாரிக்க கொழும்புக்கு கொண்டு செல்லப்போகிறோம் என்று இலங்கை இராணுவம் முயற்சிகள் மேற்கொண்டது. அதை மறுத்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது.

இந்த வேளையில்தான் புண்ணியவான்களான பாலசிங்கமும், மாத்தையாவும் அந்தக் கைதிகளைச் சந்திப்பதற்கு இந்தியாவிடம் வற்புறுத்தி அனுமதி பெற்று பார்க்கச் சென்றனர். அவர்களுக்கு உண்ண உணவும் கொடுத்துக் கூடவே சைனைட் குப்பிகளையும் கொடுத்து ‘தலைவர் உத்தரவு” சாப்பிட்டுச் செத்துப் போங்கள் என்று ஆசி வழங்கிவிட்டு வந்தனர். அவர்கள் உண்டார்கள், இறந்தார்கள்!

புலிகளது கொள்கைப்படி, படைப்பிரிவுகளிடம் அகப்பட்டுக்கொண்டால் விசக்குப்பியைக் கடித்துத் தின்று இறந்துவிட வேண்டும். ஆகவே புலேந்திரன் குமரப்பா மற்றும் புலிகளும் கடற்படையிடம் சிக்குண்ட போதே குப்பியைக் கடித்து இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை! அப்படியாயின் அவர்கள் வாழவேண்டும் என்று நினைத்துள்ளனர். அவர்களிடமிருந்த குப்பிகளை கடற்படையினர்தான் அகற்றி எடுத்தனர். இவர்கள் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் செய்திருந்தனர். அத்திருமணங்களை தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தி நடத்திவைத்தவர் தலைவர் பிரபாகரன்தான். எனவே அவர்கள் தற்கொலை செய்ய விரும்பவில்லை. தங்கள் குடும்பத்தினருடன் வாழ்வதற்கே விரும்பினர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திவைத்த இந்தத் திருமணங்களுக்கு மணப்பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்களை அழைத்து வந்து மணமேடை ஏற்றியவர்கள் அமைதிப்படையினர்தான் என்றால் நம்பவா போகின்றனர் புலிவிலங்குகள்.

தொடரும்…...

2 comments :

Anonymous ,  March 15, 2010 at 1:54 PM  

Its true?

Anonymous ,  March 15, 2010 at 3:12 PM  

Hallo my dear,
I am so sorry. It is very terrible experience. BUT I am also very impressed.

1. You tried to watch what were going on around you
2. You tried asked question to other to find out
3. Remember all LTTE member names and positions
4. And every LTTE member background soon or later.
5. You know every camp and place name.
EVEN
1. Your eye was ties by black clothes
2. Lived in dark room all the time
3. Almost no food and water at all
4. Everybody beating up all the time
5. Almost like dead body.

What a smart guy you are.
You know Tamil community needs strong and clever people like you.
PLEASE
WRITE MORE MAYBE YOU CAN DO SOME TING ELSE

In my place we support every moments (PLOT, EPRLF and much other NASTY moments) and nobody had same experience like you
WHO KNOWS
MAYBE
YOU ARE PERSON

தமிழனாக ஏனடா பிறந்தோம் என்று வருந்துவதைத் தவிர வேறு என்னத்தான் நினைப்பது

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com