Wednesday, September 16, 2009

தாய்நாட்டுக்கு துரோகம் செய்யும் சதிகாரர்கள் மீண்டும் நாட்டை காட்டிக் கொடுக்க முயற்சி.

`உயிருடன் இருக்கும் வரை இடமளியேன்’

தாய்நாட்டுக்கு துரோகம் செய்த சில சதியாளர்கள் மீண்டும் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்ற போதிலும் தான் உயிருடன் இருக்கும் வரையும் அதற்கு இடமளியேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்தார்.

எமது பாதுகாப்பு படையினர் தமது உயிர்களை அர்ப்பணித்துப் பாதுகாத்திருக்கும் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க எவருக்குமே இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், குரூர பயங்கரவாதம் காரணமாக இந்நாட்டு மக்கள் மூன்று தசாப்த காலம் பீதி கொண்டிருந்தார்கள். அந்த பயங்கரவாதம் இப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்போது முழு நாட்டுக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரணியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்திற்கு எதிராக வெவ்வேறு விதமான குற்றச் சாட்டுக்களை எழுப்பு கின்றார்கள்.

தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அவர்கள் கொண்டு செல்லுகின்ற பிழையான பிரசாரங்களுக்கு எதிராக இந்நாட்டின் மீது அன்பு கொண்டுள்ள சகலரும் கிளர்ந்தெழ வேண்டும்.

எமது நாடு இறைமைமிக்க சுதந்திரமான நாடு. இன்னொரு நாடு எம்மை ஆட்சி செய்ய முடியாது. அவ்வாறான நிலைமைக்கு ஒரு போதுமே இடமளிக்கப்படமாட்டாது. வரலாற்றில் வெவ்வேறு விதமான காட்டிக் கொடுப்புக்களை இந்நாடு கண்டிருக்கின்றது. என்றாலும் நாம் பெற்றிருக்கும் வெற்றியைக் காட்டிக் கொடுக்க இடமளிக்க மாட்டோம்.

இப்போது எமது நாட்டைச் சேர்ந்த சிலர் நாட்டுக்கு நாடு சென்று நாம் பெற்றிருக்கும் வெற்றியை மாத்திரமல்லாமல் எமது நாட்டையும், பாதுகாப்பு படையினரையும் காட்டிக் கொடுக்கின்றனர். இதனை அவர்கள் ஒரு விளையாட்டாகக் கருதுகின்றனர். நாட்டில் எதிர்க்கட்சி இருக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சி இருப்பது அவசியம் ஏனென்றால் அரசாங்கம் ஏதாவது சந்தர்ப்பத்தில் தவறான வழியில் சென்றால் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியதும், அது தொடர்பாக கலந்துரையாட வேண்டியதும் எதிர்க்கட்சியின் பொறுப்பாகும்.

இருந்தும் இப்போது எமக்கு எதிர்க்கட்சி இருக்கின்றதா? அது தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றுகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக பாரிய யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போது காலை வாரியவர்கள் யுத்தத்தை நிறுத்தி நாட்டைத் துண்டாட முயற்சி செய்தவர்கள் அச்செயல்களில் நின்று விடாமல் நாட்டுக்கே எதிராக மாறியுள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு எதிரான கட்சியின் தலைவராக அல்லாமல் நாட்டுக்கே எதிரான தலைவராக செயற்படுகின்றார்.

அதனால் தான் அவர் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுடன் படையினரால் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த வெற்றியைக் குறைத்து மதிப்பிடுகிறார். அவர்களை யுத்த நீதி மன்றத்திற்கு முன்பாக நிறுத்துவதற்கும், எமது நாட்டுக்குக் கிடைக்கின்ற உதவிகளை நிறுத்துவதற்கும், எமது நாட்டின் அபிவிருத்தியைக் குலைப்பதற்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வதேச ஒத்துழைப்பு இப்போது எமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவை பற்றி உங்களுக்கு எதிர்காலத்தில் தெரியவரும்.

மஹிந்த சிந்தனை மூலம் நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதமானவற்றுக்கும் மேலானவற்றை நிறைவேற்றியுள்ளோம். அரசாங்கம் இது வரை எடுத்துள்ள நடவடிக்கைகள் சரியானதா? பிழையானதா என்பது குறித்து மக்களிடம் கேட்க வேண்டியது அரசின் கடமையே.

அரசின் இந்தப் பயணத்தை மக்கள் நிராகரிக்கும் வரை உச்ச அளவில் மக்களுக்கு சேவை செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்கள் மைத் திரிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட முக்கியஸ் தர்களும் கலந்து கொண்டார்கள். (ரு-து)

நன்றி தினகரன்


Read more...

ஜனாதிபதி மஹிந்தவை சிறைக்கு அனுப்ப பலர் முயற்சித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக இருந்தபோது அவரைச் சிறைக்கு அனுப்புவதற்கு பலர் முயற்சித்தார்கள். ஹம்பாந்தோட்டை சிக்கலை வைத்து அவரை சிறைக்கு அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சியின் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவரும் மேலும் ஒருவரும் அம்முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தொடர்ந்தும் அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

இவர்களின் இச்செயற்பாடுகளுக்கு இலங்கை ராஜதந்திர மட்டங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டோர் பலர் உதவி புரிந்து வருகின்றனர். அவர்கள் இந்நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது, மோசடிகள் இடம்பெறுகின்றது எனக் கூறி இலங்கை மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

Read more...

தலாய்லாமாவை அமெரிக்க அதிகாரிகள் சந்தித்ததற்கு சீனா எதிர்ப்பு

திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதையொட்டி, இந்தியாவிலுள்ள தர்மசாலாவில் தங்கி இருக்கும் அவரை அமெரிக்க தூதர்கள் சந்தித்து பேசினார்கள். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தலாய்லாமாவை பிரிவினைவாதியாக கருதும் சீனா, அவரை எந்த ஒரு அரசாங்க பிரதிநிதியும் சந்திப்பதை விரும்பவில்லை. இதுபற்றி அந்த நாட்டு அதிகாரி ஜியாங் ï கூறுகையில், அன்னிய நாடுகளின் அதிகாரிகள் அவரை சந்தித்துப்பேசுவதை நாங்கள் எதிர்க்கிறோம். திபெத் பிரச்சினை எங்கள் உள்நாட்டு பிரச்சினை ஆகும். இதில் வெளிநாடுகள் தலையிடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

Read more...

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி தீவிரம்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி மஹிந்த கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக வர்த்தக சமூகத்தினரின் ஒத்தாசையும் வேண்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கையில் இன்னும் பீதி குறையவில்லை: முன்னாள் அதிபர் சந்திரிகா.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் இலங்கையில் பீதி குறையவில்லை. அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நான் இப்போதும் பாதுகாப்பு அங்கு இல்லாததாகத்தான் கருதுகிறேன் என கொச்சியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது கூறியுள்ளார்

கொச்சியில் நடைபெற்ற சர்வதேச ரோட்டரி சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக, அங்கு சென்றிருந்த இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க, ரோட்டரி சங்க விழாவை தொடங்கி வைத்த பின்னர் அங்கிருந்து, மாநில தலைநகர் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அங்கு தலைமைச் செயலகம் சென்று, முதல்- மந்திரி வி.எஸ். அச்சுதானந்தனை சந்தித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசும்போது மேற்காண்டவாறு கூறியுள்ள அவர் மேலும் கூறியதாவது:-

கேரளாவிற்கு பலமுறை வந்திருந்தாலும், மாநில முதல்-மந்திரியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்.

இலங்கையில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டது.

அங்கு நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான போரில், கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பது உண்மை தான்.

அங்கு மனித உரிமை மீறல் நடந்ததா? ஏனக்கேட்டபோது இது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார் .

Read more...

ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர்த்து அக்கரைப்பற்றில் ஹர்த்தால்.

வாள்வெட்டுக்களுக்கு இலக்காகி எட்டுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று நோன்பு திறப்பதற்காக அக்கரைப்பற்று செல்ல இருந்த நிலையில் அவரது வருகையை எதிர்த்து அதாவுல்லா தலைமையிலான தேசிய முஸ்லிம் காங்கிஸ் இனர் பாரிய ஹர்த்தால் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஹர்த்தால் ஏற்பாட்டாளர்களுக்கும் ரவூப் ஹக்கீமின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பிரதேத்தில் மூண்டுள்ள இவ் வன்செயல்களில் 8 மேற்பட்டோர் வாள்வெட்டுக்களுக்கு இலக்காகி அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக தகவல்கள் தொடரும்

Read more...

Tuesday, September 15, 2009

திஸ்ஸநாயகத்திற்கு குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பேசிய இலங்கை சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் அவர்கள், திஸ்ஸநாயம் புரிந்துள்ள குற்றத்திற்கு சட்டத்தில் வழங்கக்கூடிய அதி குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Read more...

சகவேட்பாளரினால் அனர்கலிக்கு உயிர் அச்சுறுத்தலாம்.

தென் மாகாண சபையில் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அனர்கலி, தனக்கு தனது கட்சியின் வேட்பாளர் ஒருவரால் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுள்ளார்.

இது தொடர்பாக டெய்லி மிரர் பத்திரிகைக்கு கூறுககையில், எனது சகவேட்பாளர் என்னையும் எனது குடும்பத்தினரையும் எனக்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வோரையும் தாக்கப்போவதாக மிரட்டினார். இது தொடர்பாக நான் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

242 கிலோ வெடிமருந்துகள், 6733 துப்பாக்கிரவைகள் மீட்பு

242 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 56 கிலோ எடையுள்ள 11 கிளேமோர் குண்டுகள், 6733 பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் தாராவிக்குளம் பிரதேசத்திலிருந்தே இந்த வெடிமருந்துகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிழக்கில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 232 வது படையணியினர் தாராவிக்குளம் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்திலிருந்து ஒவ்வொன்றும் 27.5 கிலோ எடையுள்ள சி-4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் 04 (இதன் மொத்தத் தொகை 110 கிலோ) ரி-56 ரக ரவைகள் - 2250, வெடிக்கவைக்கும் கருவிகள் - 4000 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் புலிகளால் கைவிடப் பட்ட நிலையில் காணப்பட்ட பெருந்தொ கையான ஆயுதங்களை இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் மீட்டெ டுத்துள்ளனர்.

132 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய் ந்த வெடிமருந்துகள், 10 கிலோ எடை யுள்ள வெடிமருந்து தூள்கள், 16 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் - 02, 5 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் - 02, 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் -07 (இதன் மொத்தத் தொகை 56 கிலோ) வாகனங்களுக்கு பொருத்தக் கூடிய தற்கொலை குண்டுகள் - 19, தற் கொலை அங்கிகள் - 57, 9 மி.மீ. பிஸ்டல் ரவைகள் - 4409, வெடிக்கவைக்கும் கரு விகள் - 1219, 82 மி. மீ. மோட்டர் குண்டு கள் - 132 மற்றும் உபகரணங்களை மீட்டெ டுத்துள்ளனர்.

Read more...

அனைத்துக்கட்சிக் குழுவின் ஆலோசனையை ஏற்க ஐ.தே.க தயாராகவுள்ளது. ரணில்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமுகமாக அரசின் அனுசரணையுடன் அனைத்துக்கட்சி குழுவினால் முன்வைக்கப்படும் ஆலோசனைக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, September 14, 2009

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் யோக்கியம் கெட்டவர்களாம்.

ஓர் சிறந்த நேர்மையான மனிதனான கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிரல் மொகான் விஜெவிக்ரம அவர்களை நீக்குமாறு கோரிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் யோக்கியம் கெட்டவர்கள் என மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் பேசிய வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார்கள். ஆனால் அரசியல் காழ்புணர்ச்சிகளை தீர்ப்தற்காக தகாதவார்த்தை பிரயோகங்களை பாவிப்பதை எந்த சமூகத்தை சேர்ந்தோரும் விரும்பவில்லை என்பதை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எடுத்துக்காட்டுகின்றது. அவ்வூடகத்தில் குறிப்பிட்ட செய்திக்கு பதிவாகியுள்ள சில கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளது.

incompetent in what ?

Posted By: Hamza

Karuna giving character reference to some one as "an honest, justifiable and straight forward person" ! No one will belief him and the Governor of the Eastern Province must be feeling uncomfortable

Posted By: Vijay Uk

GOLDEN WORDS FROM AN IMPOSTER " DIPLO MUT " The Chief Minister is a more straight forward , honest gentleman, and hardworking. Can Karuna, account for the 600 policemen he killed in the east??????????????????

Posted By: Thomas

why do think so sir? Becasue there is no white van abduction in the East like in Colombo. They were your companion in committing crimes against humanity.

Posted By: raj

Karuna, you are natinal list MP, you have no moral rights to talk against the people representatives decision.

Posted By: M.Jawfer

Karuna, your mask has become loyal to the Government. But your own face still belongs to Pirabakaran. It is difficult to stay long with the mask. The more you talk shows you must be good at guns not at words.

Read more...

இராணுவ அதிகாரி ஒருவர் படைச்சிப்பாயினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் இரண்டாம் லெப்டினட் தர இராணுவ அதிகாரி ஒருவர் படைச் சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

டபிள்யூ. எம். ரட்ணசிறி எனப்படும் குறிப்பிட்ட அதிகாரி தூக்கத்தில் இருந்த சிப்பாயை இழுத்து எழுப்பியபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிபோது சிப்பாய் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். சந்தேக நபரான சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது ரி 81 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read more...

தேர்தல் சட்டதிட்டங்கள் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட முடியாதவையா? ரஞ்சன்.

இலங்கை தேர்தல் சட்டதிட்டங்கள் ஆளும் கட்சி மீது பிரயோகிக்கப்பட முடியாதவையா என சப்ரகமூவ மாகாண சபையின் எதிர்கட்சித்தலைவர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். தான் சப்ரகமுவ தேர்தலில் ஈடுபட்டிருந்தபோத தேர்தல் காலங்களில் தனது நாடகங்கள், மற்றும் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிதாக குறிப்பிடும் அவர், தென்மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு முன்னணி சார்பாக பங்கு கொள்ளும் வேட்பாளர்களான அனர்கலி மற்றும் சுசந்தா ஆகியோரது நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் அரச வானொலி மற்றும தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளி, ஒலி பரப்பப்படுவதாகவும் அது அவர்களின் பிரச்சாரத்திற்கு உதவியாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் பகிரங்கமான பதில் ஒன்றை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

துரத்துவோம் துப்பாக்கிக் கலாச்சாரத்தை

Read more...

முகாம்களில் உள்ள 60 மனநோயாளிகளை ஏற்க உறவினர்கள் முன்வரவில்லை.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் 60 மனநோயாளிகள் உள்ளதாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சகம் அந் நோயாளிகளை பாரமெடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என அறிவித்துள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அங்கோடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு குணமடைகின்றபோது விசேட பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புதவற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக சுதாதர அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com