Sunday, January 17, 2021

மனநோயாளியான கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

ஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சேவைக்கு அழைத்தபோது அவசர சேவைக்கு பதிலாக அங்கு விரைந்த பொலிஸாரினாலேயே வாரன் எனப்படுகின்ற குறித்த மனநோயாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் அமெரிக்காவின் ரெஸ்சாஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கொரோணாவினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக தொழிலை இழந்துள்ளார். அதன் பின்னர் அவரால் அவரது உயிர் காப்புறுதியை தொடர்ந்து செலுத்த முடியாது போயுள்ளதுடன் அந்த காப்புறுதியும் காலாவதியாகியுள்ள நிலையில் குறித்த குடும்பம் மரணச் செலவும் மற்றும் தொடர்ந்து வாழ்வினை கொண்டு செல்வதற்கு நலன்விரும்பிகளிடம் உதவியை கோரி நிற்கின்றது.

உயிரிழந்த நபர் மிகவும் இனிமையான மற்றும் அயலவர்களுக்கு உதவி புரிவதில் மகிழ்சி கொள்கின்ற நபர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறான நீதிக்கு புறம்பான படுகொலைகள் தொடரக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் குடும்பத்தினர் அரசை வலியுறுத்தி நிற்கின்றனர். குடும்பம் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பான பூரண வீடியோ பதிவை கோரியுள்ளார்:

கொரோணா சூழ்நிலையிலும் கடந்த வருடம் 2020 இல் அமெரிக்காவில் 1127 பொதுமக்கள் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றது. அமெரிக்காவில் வருடாந்தம் சுமார் 1000 பேர் பொலிஸாரால் கொல்லப்பட்டு வருகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com