Tuesday, August 4, 2020

மகிந்த தேசப்பிரிய இராஜினாமாச் செய்வாரா?

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

2020 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பெறுபேறுகள் வௌியானதன் பின்னர் பெரும்பாலும் அவர் தனது பதவியை இராஜிானாமாச் செய்வார் என குறித்த செய்திகள் அறிவிக்கின்றன. எவ்வாறாயினும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது பதவிக்காலம் நிறைவுறும். தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதையே விரும்புவதாகத் தெரியவருகின்றது.

பிரபல அரச சார்பற்ற செயற்பாட்டாளரான சுனந்த தேசப்பிரியவின் சகோதரனான மகிந்த தேசப்பிரிய கடமையில் கண்ணுங்கருத்துமான சிறந்ததொரு அரச அதிகாரியென்ற பெயர் நாமத்தை அவர் பெற்றிருக்கின்ற போதும், 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் வெளிவந்துள்ள இரு ஒலிப்பதிவுகளின் மூலம் அவரது அரசியல் பற்றித் தெரியவந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மகிந்த தேசப்பிரிய அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தன்னால் மேற்கொள்ளப்படுகின்ற இறுதித் தேர்தல் இதுவெனக் குறிப்பிட்டிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com