Tuesday, August 4, 2020

முட்டாள்களின் செயல்கள் எத்தனை ரகங்கள்?

மூதூரின் நீண்டகால SLMC போராளிக் குஞ்சுகளின் கந்து தாவல்களுக்கும் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரே முரண்டு பிடித்துக் கொள்கின்றது எனது கை கொண்ட பேனா.

சாணக்கியத்திற்காக பீரங்கி பிரச்சாரம் செய்த அந்த வாய்கள் இன்று சத்தியத் தலைவர், உரிமை காக்கும் புனிதர் என்று முழங்கிக்கொள்கிறது. அதனை கேட்கும் ஏமாளி சமூகம் ஆமாம் என்று வாய்பிழந்து கேட்டுவிட்டு, கைதட்டி பாராட்டி வீடு செல்கின்றது. முட்டாள்களின் செயல்கள் எத்தனை ரகங்கள் பார்க்கும் போது கவலைகள் மேலெழவே செய்கின்றது.

தனக்கு தவிசாளர் தரவில்லை என்பதற்காக 33 வருட போராளி கரீஸ் சேர் சத்தியத்தின் பக்கம் சென்றார், ஆனாலும் அவர் கூறுவது என்னவோ மண்ணின் புறக்கணிப்பாம், அடுத்து அதிகூடிய வாக்குகளை பெற்ற தானீஸ் தனக்கு தவிசாளர் தரவில்லலை என்பதற்காக தானும் சத்தியம் சாய்ந்தார், இவற்றுள் பல தர்க்க காரணிகளும் உண்மைகளும் இருக்கின்றது அதாவது இரண்டாம் தடவையாக ஹரீஸ் சேருக்கு தவிசாளர் கொடுத்திருந்தால் மூதூர் கிழக்கில் பிரச்சினை தோன்றி இருக்கும் அதனை விடுத்து தோப்பூருக்கு கொடுத்து இருந்தால் அதிகூடிய வாக்குகளை வைத்திருக்கின்ற மூதூரின் வாக்கு வங்கியை தக்க வைக்க முடியாமல் போகும்.

அதே வகைப்பட்ட சுயம் சார்ந்த பிரச்சினைகள் தான் மாவட்டம் தழுவி சாணக்கியத்திற்கு காய் வெட்டி சத்தியத்தின் பால் நகர்ந்த அத்தனை போராளிகளினதும் நிலையும். அவற்றை தெளிவாக விளக்க முடியும் ஆயினும் இவ்விடம் தகாது. குறிப்பாக அன்வரின் வெட்டுக்கான பிரதான காரணம் மாகாணசபையில் மூன்று தடவைகள் இருந்தும் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என்பதே அவரின் வாதம். அதுவும் தலைமையின் கணிப்பின்படி அதிகப் படியாக 91,666 வாக்குகளை கொண்ட பொத்துவில் தொகுதிக்கு அந்த அமைச்சுகளை வழங்கி அந்த வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டது.

இங்கு நான் கூற விளைகின்ற விடயமானது சுய காரணங்களுக்காக பிரிந்திருக்கின்ற இவர்கள் அனைவரும், எம்மண் ஏமாற்றப்படுகின்றது ஆகவே எம்மண்ணுக்காக பிரிந்திருக்கின்றோம் எனும் ஏகோபித்த கருத்தில் உறுதியாக இருந்த போதிலும், இவர்கள் மண்ணுக்காக மாவட்ட தலைமையிடமோ, தேசிய சத்திய தலைவர் இடத்திலோ செய்திருக்கின்ற உடன்படிக்கை என்ன? அதனை ஏன் அவர்கள் வெளிப்படுத்தக் கூடாது? என்பதே எனது வினாவாகும்.

அதாவது மூதூரை பொருத்த வரை ஹரீஸ் சேர் மற்றும் தானீஸ் இருவருக்கும் பொதுவான பிணக்கு தவிசாளர் மட்டுமே அதனை வழங்கி இருந்தால் அவர்கள் இன்று ஆயிரம் விளக்கு ஏந்தியே இருப்பார்கள். அப்படிப்பட்ட இருவரும் மண்ணுக்காக தவிசாளர் கோரிக்கையோடு நின்று விட்டார்களா? இல்லை மண்ணுக்காக நாம் கோருகின்ற மாகாண, பாராளுமன்ற பிரதிநிதிக் கோரிக்கைக்கும் ஏதேனும் வழியை திறந்து இருக்கின்றார்களா ? என்பதை ஹரீஸ் சேர் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

பதில் இல்லை என்றால் அவர்களின் சிந்தனை சுயநலமும், குறுகியதும் ஆகும் மாறாக ஆம் என்று பதில் அமையுமாயின் அங்கிருந்துதான் பலதரப்பட்ட கேள்விகளை முன்வைக்க முடியும். அதாவது பாராளுமன்ற சாத்திப்பாடு அடுத்து ஐந்து வருடங்களுக்கு இல்லை ஆனாலும் மாகாண சபை உறுப்பினர் பங்கீட்டினைப்பற்றி வினவுகின்றபோது அப்துல்லா மஹ்ரூப் இன் பக்கத்தில் இருந்து ஒருபோதும் அதனை தக்க வைக்க முடியாது என்பதை ஹரீஸ் சேர் உட்பட கடந்த ஜூன் மாதம் சாணக்கியத்தின் பேச்சை பகிர்ந்து வந்தவரும் ஜூலை மாதம் தொடக்கம் சத்தியத்தின் பேச்சுக்களை முகநூலில் பகிர்ந்து வருகின்றவருமான, முன்னால் SLMC மத்திய குழுவின் செயலாளர் நூலகர் முஜீப் போன்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

காரணம் றிஷாட் இற்கு கிண்ணியாவில் ஒரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தவரும், தனக்கென ஓர் தனி வாக்கு வங்கியை அகத்தே கொண்டவருமான Dr. ஹில்மி அவர்களுக்கு வெட்டியதே அந்த மாகாண சபை உறுப்பினரை தனது மருமகனுக்கு தக்க வைத்துக் கொள்ளவதற்காகவே என்பதை குறிப்பாக மூதூரில் இருந்து சத்தியத்தின்பால் சென்ற இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சத்தியத் தலைவரின் அடிக்கல் நாடுதல் போல் அல்லாது செய்து கொண்ட உடன்படிக்கையை மக்கள் மத்தியில் ஆவணங்களாக காட்சிப்படுத்த வேண்டும்.

மாறாக சஹ்ரான் விவகாரத்தில் அநீதமாக சிக்குண்டார் எனும் மாயையில் வீழ்ந்து நிபந்தனைகள் இன்றி ஆதரவளிக்க முற்படும் பட்சத்தில் ஹரீஸ் சேர் இன்னும் 30 வருடங்கள் கூட ACMC போராளியாகவும் தவிசாளாராகவும் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்...
Hablullah buhary.....✍️

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com