Wednesday, July 8, 2020

நாங்கள் எங்கள் போராட்டத்தை நடுத்தெருவில் ஆரம்பித்தோம்... பாராளுமன்றில் நிறைவு செய்வோம்! லால் காந்த

பணிபுரியும் மக்களுக்கு வழங்கப்படவிருந்த சம்பளம், ஒதுக்கீடு செய்யப்பட்ட சம்பளம் என்பன கொவிட் 19 இந்நாட்டில் உட்புகுந்ததன் முன்பே நிறுத்தப்பட்டது என தேசிய சக்தியின் கண்டி மாவட்டத்தின் வேட்பாளர் கே.டீ. லால்காந்த நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

0 எங்கள் நாட்டின் தொழிலாளர்களுக்கு கடைசியாக சம்பளஅதிகரிப்பு 2016களிலேயே இடம்பெற்றது.அப்போதைய அரசாங்கத்தினால் அது வழங்கப்படவில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அது ஜனாதிபதியின் வாக்குறுதி.பின்னர் வாழ்க்கைச் உயர்ந்த அளவில் சம்பளமோ கொடுப்பனவுகளோ அதிகரிக்கவில்லை.

​கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் முதன் முதல் செய்தது என்னவென்றால் கொரோனா முடியும் வரை பொறுத்திருங்கள் என்பதே. நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவது என்னவென்றால், கொரோனாவுக்கு முன்னர் நீங்கள் தருவதாகச் சொன்னவற்றைத் தாருங்கள் என்பதே. அதிகமான தொழில்களில் ஈடுபடுவோர் தங்களது செலவினங்களை எவ்வாறேனும் சரி செய்து கொள்வார்கள். ஆனால் மாதாந்தச் சம்பளம் எடுப்பவர்களுக்கு அவ்வாறு செய்ய முடியாது. அதனால் தொழிற்சங்கம் என்ற வகையைில் நாங்கள் எப்போதும் போராட்டம் செய்து கொண்டே இருக்கின்றோம். இ்ந்தப் போராட்டம் பாராளுமன்றில்தான் என்று யாரேனும் நினைப்பார்களாயின் அது தவறாகும். இந்தப் போராட்டத்தை நடுவீதியிலிருந்து தொடங்க வேண்டும். மீதியை பாராளுமன்றிற்கு அதிகமானோரை அனுப்புவதற்கு ஏதுவான முறையில் செய்ய வேண்டும்.

தாதியர் வித்தியாலயத்தின் கொடுப்பனவு இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திலும் வெட்டுக்கொத்து. சிறப்பான முறையில் ஊதியம் வழங்குவோம் என்று பறையறைந்தவர்கள்தான் இன்று இப்படியெல்லாம் செய்கிறார்கள். இன்னும் சில நாட்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com