Wednesday, July 8, 2020

அதிகரித்துள்ள மின்சாரப் பட்டியல் விடயத்தில் அரசாங்கம் பொதுமக்களுக்கு உதவ முன்வருகிறது!

மார்ச், ஏப்ரல் மாத மின்சாரப் பட்டியல் அதிகரிப்புக் காரணமாக கவலைடைந்துள்ள நுகர்வோருக்கு உச்ச சலுகை வழங்கி, கட்டணத்திலிருந்து ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்பதற்கு இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவம் மற்றும் மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், கொவிட் – 19 தொற்றுக் காலப் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்தமையினால் மின்சாரப் பாவனை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறு வீடுகளிலேயே இருக்கமாறு அறிவித்த து அரசாங்கமே என்பதால் அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்திலிருந்து ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்பதற்குத் தயாராகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மின்சாரப் பட்டியல் தொடர்பில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு சலுகை வழங்குவதற்காக சென்றவாரம் அமைச்சரவை வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, ஐவர் கொண்ட குழுவொன்று அமைச்சரால் நியமிக்கப்பட்டது. அவர்களின் அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைத்த்தன் பின்னர், பொதுமக்களுக்கு இவ்வாறு உதவி வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்த்தாக அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com