Tuesday, July 21, 2020

ரிஷாத் பதியுத்தீனைக் காப்பாற்றும் உரிமையை மகிந்த தேசப்பிரியவுக்கு என்ன அதிகாரம் உள்ளது? - விமல்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனைக் கைது செய்ய வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டத்தைச் செயற்படுத்தும் அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பி வைப்பதற்கு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்குள்ள அதிகாரந்தான் என்ன? என விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளதுடன், யாரேனும் ஒருவர் குற்றமிழைத்தால் அவரைக் கைது செய்வதற்குள்ள அதிகாரத்தை எவராலும் எந்த அதிகாரியாலும் தடுக்கவியலாது எனவும் அவர் தௌிவுபடுத்தியுள்ளார்.

நேற்று அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

''உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் படைகொலை செய்த குற்றவாளிகள் தொடர்பில் கடந்த அரசாங்கம் மௌனித்தது ஏன்? அதனை மூடி மறைத்தது ஏன்? இன்று அது தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் முன்வந்து, இன்று பொலிஸ் அதிகாரிகள் சாட்சியம் அளிக்கின்றார்கள். சீஐடியின் முன்னாள் தலைவர்கள் எங்களிடம் கீழ்வருமாறு சொன்னார்கள். குறித்ததொரு பயங்கரவாதியின் வீட்டில் இருந்த சீசீடீவி காட்சிகளை அழித்துவிடுமாறு சொன்னார். அதற்குக் காரணம் அரசாங்கத்தின் அமைச்சர்கள் குறித்த அந்த வீட்டுக்கு அடிக்கடி போய்வந்துள்ளார்கள். பொலிஸார் மறைத்தவையெல்லாம் இன்று பொதுவௌியில் கூட வலம் வருகின்றன. அன்று அவ்வாறு செயற்பட்ட அமைச்சர்களில் ஒருவர்தான் ரிஷாத் பதியுத்தீன். அவருக்கு ஆதரவாக இன்று தேர்தல் ஆணையாளர் இருக்கின்றார். கடிதங்களை அனுப்பி வைக்கின்றார்.

நானாக இருந்தாலும் குற்றமிழைத்தால் என்னைக் கைது செய்யத்தான் வேண்டும். அதற்கு எதிராக தேர்தல் ஆணையாளர் நாயகம், தேர்தல் முடியும் வரை விமலைக் கைது செய்ய வேண்டாம் எனக் கூற முடியுமா? தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு அந்த உரிமை கிடையாது. இந்த நாட்டில் யாரைக் கைது செய்ய வேண்டும்? எத்தனை மணிக்கு்க் கைது செய்ய வேண்டும் என ஆணையிட தேரதல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை' எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com