Saturday, July 4, 2020

இலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்

போர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர்த்திச் செல்வதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ரீட்டா பிரேன்ஞ், ஜெனீவா மனித உரிமைகள் சம்மேளனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக குறிப்பிட்ட சிலரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற 44 ஆவது மனித உரிமைகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள 46ஆவது மனித உரிமைச் சம்மேளனத்தின்போது இவ்விடயம் முன்வைக்கப்படவுள்ளது. இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணையை கொண்டுவந்த ஜேர்மனி, கனடா, மொன்டினீக்ரோ மற்றும் மெசிடோனியா போன்ற நாடுகள் உயர் ஸ்தானிகரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com