யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு
யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றாடல் தினம் ஜூன் 5ஆம் திகதி உயிரியல் பல்வகைத்தன்மை - இயற்கையின் ஓரிடம் என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சால் நடாத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் யூன் ஐந்தாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குறித்த தினத்தில் சுற்றுச்சூழல் தினத்தை நடத்த முடியாமையினால் இன்றைய தினம் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற சுற்றாடல் தின நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரினால் மரம் நாட்டி வைக்கப்பட்டதோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக சிறப்புரையும் மேற்கொள்ளப்பட்டது.
0 comments :
Post a Comment