Wednesday, May 27, 2020

பதின்நான்கு நாட்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது என்பது தொடர்பாக அறிவிக்க முடியும் : கல்வி அமைச்சர்

கொவிட் 19 தொற்று பரவலுக்கு பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்குமென்று கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரு தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

66 நாட்களுக்குப் பின்னர் முழுநாட்டிலும் மீண்டும் வழமையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியில் சமூகததின் செயற்பாடு போக்குவரத்துத் துறையிலான விடயங்கள் முதலான விடயங்கள் ஆராயப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்;த்தை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது பல கட்டங்களின் கீழ் இடம்பெறும். முதல் கட்டத்தின் கீழ் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில்; 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் இவர்களது போக்குவரத்து வசதிகளுக்காக போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com