Thursday, May 7, 2020

ஸஹ்ரானின் பாசறையில் வளர்ந்த - கற்ற அநாதைச் சிறுவர்களுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்படுள்ளது!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள, மதுரங்குளியில் மத்ரஸாவொன்றை நடாத்திவந்த வழக்கறிஞர் தலைவராக இருந்த அரச சார்பற்ற நிறுவனத்திற்கு மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது என்பதை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அரச சார்பற்ற இந்த நிறுவனத்திற்கு மற்றுமொரு அரச சார்பற்ற நிறுவனத்திலிருந்தும் நிதியுதவி கிடைத்துள்ளது எனும் விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது விசாரணைகளை நடாத்தி வருகின்றனர் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த மத்ரஸாவில் அநாதை மாணவர்களும் கல்வி கற்றுள்ளனர் எ்னபதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

மாணவர்களிடம் வினவப்பட்ட கேள்விகளுக்கான விடைகளிலிருந்து, அந்த மத்ரஸாவில் அடிப்படைவாதம் கற்பிக்கப்பட்டுள்ளது என்து தெரியவந்துள்ளது. மேலும் சில மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com