Saturday, May 16, 2020

விமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு

கொவிட் 19 தொற்றின் நிலைமையின் காரணமாக விமான நிலையங்களில் வழமையான அலுவல்கள் நிறுத்தப்பட்டதையடுத்து வெளிநாட்டு தபால் மூலமான பொதிகளை பரிமாறும் பிரதான நடைமுறையான விமான தபால் சேவை முழுமையாக செயலிழந்தது.

தற்பொழுது நமது நாடு உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட வகையில் திறக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலுள்ள தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு இலங்கையில் வாழும் வெளிநாட்டு பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சில நிவாரணமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தபால் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் விமான சேவை மே மாதத்தில் நடைமுறைப்படுத்ப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு (இடங்களுக்கான) விமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு இதில் வசதிகள் செய்யப்படும்.

இதற்கமைவாக ஹொங்கொங் மற்றும் மெல்பனுக்காக மே மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளிலும் பீஜிங்க்காக மே மாதம் 20ஆம் மற்றும் 23ஆம் திகதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின் ஹீத்ரோவுக்காக மே மாதம் 19ஆம் மற்றும் 26ஆம் திகதிகளிலும் ஜப்பானுக்காக மே மாதம் 20ஆம் 30ஆம் திகதிகளிலும் சிங்கப்பூருக்காக மே மாதம் 23ஆம் மற்றும் 30ஆம் திகதிகளிலும் கட்டாருக்காக மே மாதம் 18ஆம் 25ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் ஜேர்மனுக்காக மே மாதம் 18ஆம் மற்றும் 25ஆம் திகதிகளிலும் இந்தியாவில் மும்பைக்காக மே மாதம் 22ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் சென்னைக்காக மே மாதம் 18ஆம மற்றும் 25ஆம் திகதிகளிலும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கான தபால் மூலமான பொதிகளை எடுத்துச் செல்வதில் விமான சேவை வசதியை பெற்றுக்கொள்வதற்கும் தற்போதைய நிலைமையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் தபாலை விநியோகிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாத்திரம் தபால் மூலமான பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கபபடும்.

அதே போன்று தற்போதைய நிலைமையின் கீழ் விமான சேவையை இரத்து செய்வதிலும், திருத்தத்தை மேற்கொள்வதிலும் தாமதம் இடம்பெறக்கூடும் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடல் மார்க்கமான தபால் மூலம் இந்த சேவையை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com