Saturday, May 23, 2020

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பேரூந்து சேவையை முன்னெடுக்க ஜனாதிபதி ஆலோசனை

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பஸ் சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பாடசாலை பஸ்களை மஞ்சல் நிறத்துடன் வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

கிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் அதிக வாகன நெறிசல் காணப்படுகிறது. இந்த நெரிசலை குறைப்பதற்காக தமது சொந்த கார்களில் அலுவலகங்களுக்கு வருவோரை பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதற்கு தீர்வாக தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்தி அலுவலகங்களுக்கு பஸ் வண்டிகளில் பயணம் செய்வதற்கு தேவையான முறைமையொன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி முன்மொழிந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com