Thursday, May 7, 2020

இலங்கைக்குத் தேவையான மருந்துகளில் காற்பங்கையேனும் இலங்கையிலேயே உற்பத்தி செய்ய முயற்சி!

சேலைன் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப மருந்துப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதற்கு செலவாகும் தொகையில் பெரும்பகுதியை மீதப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

1987 ஆம் ஆண்டு ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் எங்கள் நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கும், சந்தையில் மருந்துகளுக்கான விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பங்களிப்புச் செய்த ஒரே நிறுவனமாகும்.

நாட்டுக்குத் தேவையான மருந்துகளில் 12 முதல் 15 வீதமான அளவு மருந்துகளை இலங்கையிலேயே உற்பத்திசெய்யும் இலக்கை எட்டுவதற்காக சகல நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. பெஸிடோல் எனும் வியாபாரப் பெயரின் கீழ் இலங்கைக்குத் தேவையான அளவு பெரஸிடமோல்களை இலங்கையில் தயாரிப்பதில் இலங்கை மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் சிறப்பாகச் செயற்படுகின்றது. மிகவும் பாதுகாப்பான முறையில் அந்த மருந்து இலங்கையில் தயாரிக்கப்படுகின்றது.

கடந்த 30 வருடங்களாக மருந்துகளைத் தயாரிப்பதில் மக்களின் உள்ளத்தை வென்றுள்ள இ.ம.கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் தொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறப்பாகக் கருமமாற்றுவதற்கு முனைப்புடன் திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com