Thursday, May 14, 2020

ராஜித்தவின் பிணை இரத்து...27 ஆம் திகதி வரை சிறைவாசம்!

தனது பிணை மனுவை இரத்துச் செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வலுவற்றதாக மாற்றுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் வழக்கறிஞர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்ற ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் வெள்ளை வேன் தொடர்பில் பொய்யான விடயங்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்தமைக்காக முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கேற்ப முன்னாள் அமைச்சர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும்வேளையில் குற்றப் புலனாய்வுத் தினைணக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரைச் சென்ற டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்தது.

அவ்வவாறு அவர் விடுதலையானதைத் தொடர்ந்து அதற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார். சட்டமா அதிபரின் மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பு வழங்கியது. ‘கொழும்பு தலைமை நீதிமன்றம் முன்னாள் அமைச்சரை பிணையில் விடுதலை செய்ததில் தவறு நிகழ்ந்துள்ளது’ எனக் குறிப்பிட்டு பிணையை நிராகரிப்பதாகக் கூறியது.

மேலதிக செயற்பாடுகளுக்காக குறித்த வழக்கை மீண்டும் நடாத்துவதற்காக தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆவன செய்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் திருமதி லங்கா ஜெயரத்ன அவர்கள் வழங்கிய ஆணையின் பேரில் நேற்று முன்னாள் அமைச்சர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போது, எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ராஜித்த சேனாரத்னவை சிறையில் வைக்குமாறு குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com