Tuesday, April 7, 2020

வௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்! - பிரதமர்

கொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும், சர்வதேச கடப்பாடுகளுக்கு ஏற்ப அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதும் அதற்கான ஆவன செய்யப்படும் என பிரமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இத்தாலிக்குச் சொந்தமான எம்.எஸ்.ஸீ. மெக்ஃபிக்கா கப்பலில் கடமையாற்றிய அநுர பண்டார என்ற இலங்கையர் இணைய வாயிலாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விடுத்த வேண்டுகோளையடுத்து குறித்த நபரை கொழும்புத் துறைமுகத்திலிருந்து மீட்டெடுக்க ஆவன செய்ததாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில் பரவிவருகின்ற கொரோனா தொற்றுக் காரணமாக, எண்ணிய மாத்திரத்தில் வௌிநாடுகளில் வேலை செய்வோரை வருவிக்க முடியாது என்றும், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்தவுடன், உடனடியாக அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக ஆவன செய்வதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தௌிவுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com