Wednesday, April 8, 2020

கொழும்பில் தங்கியிருப்போர் ஊர்களுக்குச் சென்றால் நாட்டுக்கே பேராபத்து!

தத்தமது கிராமங்களுக்குப் போக முடியாமல் மேல் மாகாணத்தில் தங்கியிருக்கின்றவர்களை அவர்களது ஊர்களுக்குத் அனுப்பிவைப்பதற்கு பாதுகாப்பான சுகாதார திட்டமொன்று அவசியம் என இலங்கை பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தௌிவுறுத்தியுள்ளார்.

மேல் மாகாணத்தில் தங்கியிருக்கின்றவர்கள் தங்களது கிராமங்களுக்குச் செல்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளமையை மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டும்.
அதற்காக கட்டுக்கோப்பான முறையில் ஆவன செய்யாதுவிட்டால் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அநாவசியமான முறையில் பாதிப்படையக்கூடும் எனவும் ஊடக அறிக்கையொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் மக்களைத் தங்கள் கிராமங்களுக்குச் செல்வதற்கு சரியான திட்டமிடலுடன் செயற்படுவதாக இருந்தால் கீழ்வரும் மூன்று விடயங்கள் தொடர்பில் கருத்திற் கொள்ளுமாறு அரசாங்கத்திடமும் பொறுப்பு வாய்ந்த பிரிவினரிடமும் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அவையாவன,

1. தங்கியிருக்கின்ற நபர்களைத் தங்கள் கிராமங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் சுகாதாரப் பிரிவினர் பாதுகாப்புப் பிரிவினர் ஒருங்கிணைந்து பொருத்தமான சுகாதார பாதுகாப்புத் திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் தொடர்புற்ற அண்மித்த கண்காணிப்பு.

2. தங்கியிருக்கின்ற நபர்களைத் தங்கள் கிராமங்களுக்கு அனுப்பியதன் பின்னர் அவர்களசை் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினால், அது அவ்வளவாகப் பலன்தராமையால் பிரதேச ரீதியாக குழுக்களாக தனிமைப்படுத்தி சமூகமயப்படுத்தல். (இதன்போது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் / மாவட்டத்திற்குப் பயணிக்கும் குழுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்க வேண்டும்.)

3. குறித்த நபர்கள் பயணிக்கும்போது, ஒருவருக்கொருவர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகாதிருக்க ஆவன செய்தல்.

அசாதாரண சூழ்நிலையிலான இந்தக் காலத்தில் ஒரு சிறு தவறேனும் நிகழ்ந்தால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால், விசேட அவதானத்திற்கு எடுக்குமாறும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
(சி.சி.நி)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com