Thursday, April 30, 2020

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை ஆரம்பம்

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள மேற்கொள்வதற்கான விசேட பீசீஆர் பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பீசீஆர் பரிசோதனை கடந்த திங்கட்கிளமை முதல் நடைபெற்றுவருவதாகவும் இதுவரை 143 பேருக்கான பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நால்வருக்கு கோரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்

மேலும் இதற்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 101 நோயாளர்களில் 8 பேர் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டதுடன் இவர்களில் ஒருவரே இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார்.
கொரோன பரிசோதனை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டிருந்ததினைத் தொடர்ந்து இதற்கான தனி அலகு ஸ்தாபிக்கப்பட்டு இங்கு வரும் கொரோனா நோயாளர்களை அல்லது கோரோனா நோய் தொற்று அறிகுறி காணப்படுபவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக பிரிவு அமைக்கப்படடிருந்தது. தற்போது பீசீஆர் பரிசோதனை மேற்கௌ;வதனையடுத்து இரண்டாவது வகைப்படுத்தல் பிரிவு ஒன்று அவசர மற்றும் விபத்து பிரிவுக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நோயாளர்களுக்காக சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகள் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால் சேவை மூலம் வழங்கப்பட்டிருப்பதுடன் தற்போது இங்கு வருபவர்கள் இடைவெளிபேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருப்பதுடன் அவசிய தேவைக்காக மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல் சமுக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலனி பிரதனியும் மயக்க மருந்து விசேட வைத்திய நிபுனருமான டாக்கடர் எஸ். மதனழகன்இ நுன்னுயிரியல் தொற்றுநோய் விசேட நிபுனர் டாக்டர் வைதேகிஇ மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com