Tuesday, March 17, 2020

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மட்டும் முஸ்லிம்களின் விடயங்களை தீர்மானிக்க முடியாது. அலி சப்றி அவேசம்.

இந் நாட்டில் உள்ள முஸ்லிம்களின் தலைவிதிகளையும் மார்க்க விடயங்களையும் தீர்மானிக்கின்ற சக்தியாக எதிர்காலத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மட்டும் இருக்க முடியாது என சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (15) இடம்பெற்ற ஏ.றபீயுத்தீன் ஜமாலி எழுதிய வகாபிசமா சூபிஸமா எனும் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்:

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :
எதிர்வரும் காலத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்குள் இந்ந நாட்டில் உள்ள வர்த்தகர்கள், சட்டத்தரணிகள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் என அனைவரும் உள்வாங்கிய ஒரு சபையே உருவாக்கப்படும்.

அச்சபையில் இந்த நாட்டில் வாழும் சகலரும் உள்வாங்கப்படல் வேண்டும்.

காலத்துக்கு காலம் எனது மூத்தவாப்பா செய்ததை நான் செய்ய வேண்டும் என்பது அல்ல, இப்ப நான் செய்வதை எனது மகன் ஏன் எதற்காக இதனை செய்கிறீர்கள் என என்னிடம் திரும்ப கேட்கின்றான்.

ஆகவே தான் எதிர்காலத்தில் முஸ்லிம்களை மிக சிறப்பாக வழிநடத்தக் கூடியதும் முஸ்லிம் சமய திணைக்களத்திடத்தினையும் கூட்டிணைத்து நமது வழிகாட்டிகளை நாம் மீள் புனர்நிர்மாணம் செய்தல் வேண்டும்.

இல்லாவிட்டால் ஷஹ்றான் போன்ற ஆயிரம் சஹ்ரான்களும் இயக்கங்களும் இந்த நாட்டில் உருவாகும் என்றும் அலி ச ப்றி எச்சரித்துள்ளார். .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com