ஷரியா சட்டம் நிந்தவூர் கமநல நிலையத்திலிருந்து நடைமுறைப்- படுத்தப்படுகின்றதா? ரணிலின் வக்கீல் சுமந்திரன் எங்கே?
இலங்கையில் கிழக்கிஸ்தான் என்ற பெயரில் இஸ்லாமிய ராட்சியம் ஒன்று உருவாகும், அது தென்கிழக்கிலங்கை எனப்படுகின்ற கல்முனை நகரை மையமாக கொண்ட பிரதேசங்களிலிருந்தே ஆரம்பமாகும் என்றும் அதற்கான அடித்தளங்கள் மரணமடைந்த அஷ்ரப்பின் தலைமையில் இடப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய இலங்கைமீது அக்கறை கொண்டுள்ள தேசபக்தர்கள் பலரால் எச்சரிக்கப்பட்டுள்ள விடயமாகும்.
இவ்எச்சரிக்கைகளுக்கு சான்றுகூறுவிதமாக கடந்த 01.01.2020 அன்று இலங்கையின் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டு தேசியகீதம் இசைப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட சம்பவமொன்று நிந்தவூர் கமநல கேந்திர மந்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
அனைத்து அரச ஊழியர்களும் முதலாம் திகதியன்று தேசியக்கொடியேற்றி தேசியதீகம் இசைத்து உறுதியுரையெடுத்துக்கொள்ளவேண்டுமென தெரிவித்திருந்தபோது, இந்நாட்டையும் அரச நிர்வாகத்தையும் ஏமாற்றி ஊழியர்களை அவ்வாறு செய்யவிடாது அந்நிலையத்தின் தலைவராகவும் கமநல உத்தியோகித்தராகவும் செயற்படுகின்ற ஐ.எல்.ஏ கார்லிக் தடுத்துள்ளார்.
தேசிய கீதத்தை இசைக்காது, இசைக்குமாற்;போல் வாயசைத்து அதனை ஆவனப்படுத்தும் நயவஞ்சக செயலில் ஈடுபட்டபோது, அச்செயற்பாட்டினை பார்த்து நகைத்த பெண் ஊழியர் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளான் கார்லிக்.
இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்படுவதை இவன் தடுக்கின்றான் என்றால் அவனது உள்நோக்கம் என்னவென்பது இங்கு ஆராயப்படவேண்டும். ஷரியா சட்டம் இங்கு அமுலுக்கு வரும்வரை கார்லிக் இலங்கையில் சட்ட திட்டங்களையும் அதன் தேசிய கீதத்தையும் மௌனமாக்க முயற்சிக்கின்றானா என்ற கேள்விக்கு பதில்தேடப்படவேண்டும்.
இக்கேள்விகளுக்கு பதில்தேடி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை தேடிக்கொடுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டிய பொலிஸார் இன்று ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதாக அறியமுடிகின்றது. கடந்த முதலாம் திகதி மேற்படி நபரால் தாக்குதலுக்குள்ளான பெண் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில், அவனை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துவதை பொலிஸார் காலம் கடத்திவருவதாக அறியமுடிகின்றது.
இது தொடர்பாக பொலிஸ் உயர் மட்டத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளபோதும், சம்மாந்துறை பொலிஸார் சந்தேக நபர் வீட்டில் இல்லை என உயர் மட்டத்திற்கு அறிவித்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெரும்பாண்மையானோர் முஸ்லிம்கள் என்றும் அவர்கள் பக்கசார்பாக கடமையாற்றுகின்றார்கள் என்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைக்கின்றனர். அத்துடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ் - முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி சேவையாற்றக்கூடியோர் நியமிக்கபடவேண்டும் என அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதேநேரம் குறித்த பெண் தொடர்பாக சமூகத்தின் பல்வேறு மட்டத்தினர் குரல்கொடுத்துவருகின்றபோதும் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து சுகபோக வாழ்கை வாழ்ந்து வருகின்ற அரசியல்பிரமுகர்கள் எவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நியாயத்திற்காக முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியதாகும்.
நிந்தவூர் கமநலசேவைகள் மத்திய நிலையத்தில் 3 தமிழ் பெண்கள் கடமையாற்றுகின்றனர். அவர்கள் முகாமைத்துவ உதவியாளர்களாக கடமையாற்றுகின்றனர். அதே நிலையத்தில் முஸ்லிம் பெண்கள் பலரும் முகாமைத்துவ உதவியாளர்களாக கடமையாற்றுகின்ற அதே தருணத்தில் முஸ்லிம் சிற்றூழியர்களும் கடமையாற்றுகின்றனர். இருந்தபோதும் சிற்றூழியர்கள் மேற்கொள்ளவேண்டிய மலசலகூட துப்பரவு போன்ற கருமங்களைக்கூட தமிழ் பெண்களை மேற்கொள்ளுமாறு மேற்படி நபர் பணித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இது அப்பட்டமாக அவர்களது மனித உரிமைகளை மீறும் செயலென்பதுடன் அதிகார துஷ்பிரயோகமுமாகும். இப்பெண் தாக்கப்பட்ட விடயத்தில் ஆதாயம் தேடும்நோக்கில் ஒரு சில அரசியல்வாதிகள் இறங்கியிருந்தாலும் இதுவரை எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
எனவே உடனடியாக குறித்த பெண்கள் கார்லிக் க்கு எதிராக மனித உரிமைகள் மீறல் வழக்கொன்றினை தொடர்வதற்கு சமூகத்திலிருந்து அவரச உதவியையும் மனத்துணிவையும் வழங்கவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்காக இராப்பகலாக வழக்காடிய சுமந்திரன் தமிழ் பெண்களின் மானம் காக்க முன்வருவாரா என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது.
0 comments :
Post a Comment