திருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் பொலீஸாரின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொள்ளையர்கள் தெல்லிப்பளை பகுதியில் உள்ள பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ள நிலையில் இவ்வாறு சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இருவரும் தமிழ் பெண் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு இன்று நண்பகல் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை வீட்டில் மறைத்துவைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கடமைக்குச் சமுகமளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.இதன் காரணமாக அவர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.மேலும் கைதான சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment