இந்திய விஜயத்தின்போது இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எதுவும் பேசவில்லை. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அண்மையில் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இச்சந்திப்புக்களின்போது இலங்கையில் நீண்டகாலமாக தீர்வுகாணாமல்காணப்படும் இனப்பிரச்சினை தொடர்பாக இந்திய அரசு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமென இலங்கையிலுள்ள இந்திய அடிவருடிகள் எதிர்வு கூறியிருந்தனர்.
இருந்தபோதும், இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்திப்புக்கள் தொடர்பில் தமிழ் நாழிதள் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் :
இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் பிரச்சினை படகுகள் விடுவிப்பு விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தே இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில் விஷேடமாக பேசினோம்.
அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் தனது சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்தும் வெளிவிவகார அமைச்சுக்குரிய விடயதானங்களாகவே காணப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment