Sunday, December 1, 2019

இன்று மதகுருமார்கள் அரசியல்வாதிகளின் கைப்பாெம்மைகளாகவே உள்ளனர்! பேராயர்

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் கல்வியியலாளர்களையும், அறிஞர்களையும் அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிடுகின்றார்.

உருகுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொBR/>ண்டு உரையாற்றும்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று உருகுணைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. அங்கு அவர் உரையாற்றும்போது,

முன்னர் நாட்டை ஆட்சிசெய்த அமைச்சர்கள் எப்போதும் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றியே சதாவும் சிந்தித்தார்கள். மேலும் பொருளாதார அபிவிருத்திக்காகவும் தியாக சிந்தையோடு செயற்பட்டார்கள். இன்று எங்கள் மதகுருமார்கள் சில உறுப்பினர்களின் அரசியல் கைப்பொம்மைகளாக உள்ளனர்.

எங்கள் நாடு உலகில் முதன்மையான ஒரு நாடாக மாற வேண்டும். அவ்வாறு மாற வேண்டுமானால் நாங்கள் எங்களது கல்வி, மதம், இனம், மொழி வகுப்பு போல பிரிக்கப்படாமல் பொதுவான ஒரு கொள்கைக்குள் உள்வாங்கச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். அனைவருக்கும் ஒன்றுபோல சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

அரசியல் தலைவர்களாக கல்வியியலாளர்களும், அறிஞர்கள் மற்றும் பயிற்சிபெற்ற சிறப்புத் தேர்ச்சியுடையோரும் அரசியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

பட்டியலுக்குள் உள்ள அனைவரையும் தெரிவு செய்ய வேண்டியதில்லை. தலையைப் பாவித்துத் தெரிவுசெய்யுங்கள். நாட்டுக்குத் தேவையான நீதி, நேர்மை என்பவற்றை இவரிவரால் கட்டியெழுப்ப முடியுமா? என சிந்தித்து வாக்களியுங்கள் என்றார். <
BR/> சும்மா அலைபோல் ஒன்றுகூடுவதல்ல விஷயம். நாங்கள் அரசியல் மேடைகளுக்கு போவதாயின் அது நாட்டுக்குச் செய்யும் அநியாயமேயாகும்.

மதகுருமார்களாகிய நாங்கள் எங்கள் தலைமைத்துவத்தை அரசியல் மேடைக்கு வெளியால் இருந்தே வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com