வெள்ளை வேனின் ஆட்களை கடத்தி முதலைக்கு போட்ட இருவரும் சிஐடி யினரால் கைது!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடத்தப்பட்ட நபர்களை கொன்றுவிட்டு அவர்களது உடலங்களை மொனராகலை பிரதேசத்திலுள்ள குளமொன்றின் முதலைகளுக்கு தீனிக்கு வீசியாதாக தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 10) டாக்டர் ராஜித சேனாரட்ண தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தங்களை குறித்த வெள்ளை வான்களின் சாரதிகள் என அறிமுகப்படுத்திய இருவரே மேற்குறிப்பிட்ட தகவலை பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் தான் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கடத்தில்கள் கொள்ளைச் சம்பவங்களின்போது சாரதியாக செயற்பட்டதாக குறிப்பிட்டிருந்த அதே நேரம் ஒருவர் தானே வன்னியிலிருந்து புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தை கொண்டுவந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேற்படி வெளிப்படுத்தலானது உண்மைக்கு புறம்பான செய்தியென அப்போது நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குமுது பிரதீப் சஞ்ஜீவ பெரேரா என்பவர் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டின் பிரகாரம், மேற்படி இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நபர்கள் இருவரும் வஜிர அபேயவர்த்தன யாப்பாவின் அமைச்சில் சாரதிகளாக கடமைபுரிந்து வந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது
0 comments :
Post a Comment