Tuesday, November 12, 2019

1ம் தர அனுமதிக்காக 5000 – 50000 வரை கப்பம் பெறும் பாடசாலை அதிபர்! நல்லாட்சி நித்திரையில்..

நல்லாட்சி என்ற பெயரிடப்பட்டுள்ள அரசில் பொல்லாட்சியே நடைபெறுகின்றது. அரச நிறுவனங்கள் தோறும் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் எண்கணக்கில்லாது மிறப்படுகின்றமையும் இலங்கையின் மனித உரிமைகள் அணைக்குழு ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்துள்ளமையும் யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் கல்முனை கல்விமாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அக்/அரசினர் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எதிர்வரும் 2020 ஆண்டுக்கான 1ம் தர மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக பெற்றோர் பாதுகாவலர்களிடமிருந்து ரூபா 5000 – 50000 வரை பெற்றுக்கொள்வதாக பிரதேச மக்கள் பெரும்விசனமடைந்துள்ளனர்.

இதேவாறான பண அறவீடு கடந்த வருடமும் இடம்பெற்றது. இதனைத் தடுக்க பதில் வலயக்கல்விப் பணிப்பாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கும் மக்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் இப்பாடசாலை மாணவர் அனுமதியை தனது விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சிறிய பாடசாலை மாணவர்களை இங்கு கவருவதை தடுக்க வேண்டும், பாடசாலைக்கான அனுமதி வழங்குவதில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நியதிகள் கடைப்பிடிக்கப்படவேண்டும், அறவிடப்பட்ட பணம் பெற்றோரிடம் மீளஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இவ்விடயத்தில் நீதி , ஒழுங்கை கடைப்பிடிக்காத அதிபர் உட்பட்ட அனைவரும் நீதியின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com