Wednesday, October 23, 2019

13 கோரிக்கைகளுக்கும் தமிழரசுக் கட்சி ஆப்பு.

எதிர்வரும் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமிழ் கட்சிகள் 5 இணைந்து 13 கோரிக்கைகளை முன்வைப்பதென தீர்மானித்திருப்பதாக பெருமெடுப்பில் செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்த விடயம். ஐந்து கட்சிகளும் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குறித்த 13 கோரிக்கைகளையும் வேட்பாளர்களிடம் சமர்ப்பித்து எவர் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றார்களே அவரையே தேர்தலில் ஆதரிப்பெதென தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் பிரச்சராத்தில் ஈடுபட்டுவந்தனர்.

குறித்த பிரச்சாரத்தை அடுத்து தமிழ் கட்சிகள் மக்களின் அபிலாஷைகளின் பிரகாரம் இலக்குகளை அடைய பொதுவான கொள்கை ஒன்றை கடைப்பிடிக்கவுள்ளனர் என திருப்தியடைந்திருந்தனர்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியினர் திரைமறைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இச்செயற்பாட்டில் கிளிநொச்சி கட்டப்பஞ்சாயத்து தலைவன் சிறிதரன் , மாவை , சரவணபவான் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தீவிரமாக இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

கம்பரெலிய மூலமாகவும் பின்கதவால் பெட்டிகள் மூலமாகவும் தமது மடியை நிரப்பிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிருவரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே தமது ஆதரவு என உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக இலங்கைநெட் நம்பகரமாக அறிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com