Wednesday, October 23, 2019

முஸ்லிம்களுக்கு எதிராகக் செயற்படுவோரின் பின்னணியில் கோத்தாவே இருக்கிறார்! - மகேஷ்

முஸ்லிம்களுக்கு எதிரான அலையொன்றை ஏற்படுத்திய குழுவின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளரானதைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக இடம்பெற்று வந்த வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் அச்சுறுத்தல்களும் உடனடியாகவே காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல்மஹேஸ் சேனாநாயக்கா தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறும் போது கூறியதாவது,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் அன்றாடம் மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களே பதிவு செய்யப்பட்டு வந்தன. தம்பியா, ஹம்பயா போன்ற அனைத்து சொற்களையும் பயன்படுத்தி குரோதத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் திடீரென அச்செயற்பாடுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நின்று போனது.

இன்று நீங்கள் கூறுங்கள், இன்று உங்களால் அவ்வாறான பதிவுகளைக் காண முடிந்ததா என்று? இப்போது அவற்றைக் காண முடியாது. ஏன் காண முடியவில்லை? அவற்றைச் செய்தவர் இம்முறை வேட்பாளராக களமிறங்கியிருக்கின்றார்.

அவரும், அவரைச் சூழயிருப்பவர்களும்தான் இதனை ஏற்படுத்தினார்கள். இல்லாவிட்டால் அவைகள் ஆகஸ்ட் மாதத்துடன் நின்று போயிருக்காது.

இன்னமும் அவைகள் தொடர்ந்திருக்க வேண்டும். இதுதான் இந்த அரசியலின் தோற்றுப் போன குடும்பக் குழுக்கள், திருடர்கள் ஒன்று ​சேர்ந்த அரசியலாகும்” என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com