Sunday, July 7, 2019

சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொல்வது தான் இராணுவம் பொது மக்களை பாதுகாக்கும் முறையா?

சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொல்வது தான் இராணுவம் பொது மக்களை பாதுகாக்கும் முறையா? நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும் போது பாதுகாப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூற முடி­யாது என சீறுகின்றார் எதிரகட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச.

மேலும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நுகே­கொடை – கோட்டே வீதியில் புத்­தி­ஜீ­விகள் சங்­கத்தின் தொழிற்­சங்க தலைமைக் காரி­யா­ல­யத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே எதிர்க்­கட்சித் தலைவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும் தெரி­விக்­கையில்,

தேர்­தல்­களில் வெற்றி பெறு­வ­தற்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக ஏனைய கட்­சிகள் மக்கள் மத்­தியில் பொய் பிர­சா­ரங்­களை செய்து கொண்­டி­ருக்­கின்­றன. பொது­ஜன முன்­னணி மாத்­தி­ர­மல்ல எந்த கட்­சி­யாக இருந்­தாலும் வாக்­குகள் தேவை­யில்லை என்று கூற முடி­யாது. கூறி­யதும் இல்லை. அர­சியல் கட்­சி­யொன்­ றுக்கு அனைத்து இன, மதங்­க­ளி­னதும் ஆத­ரவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

நாட்டின் எதிர்­கா­லத்தைப் பற்றி நினைக்கும் போது பய­மாக இருக்­கி­றது. பொரு­ளா­தாரம் மற்றும் ஏனைய பிரச்­சி­னை­களைப் பார்க்கும் போது 4 வருட காலத்­திற்குள் இவ்­வாறு நாட்டை சீர­ழிக்க முடி­யுமா என்று ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. இதற்கு முன்னர் இது போன்று பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­தில்லை. அவ்­வாறு சில பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்கம் அவற்­றுக்கு முகங்­கொ­டுத்­தது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தாகக் கூறி ஒவ்­வொரு நாளும் வெவ்­வேறு பிரச்­சி­னை­களை தோற்­று­விக்­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­ததன் பின்னர் அபி­வி­ருத்­தி­களை இலக்­காகக் கொண்டு செயற்­பட்டோம். அதன்போது 30 வருட கால யுத்­தத்­தினால் எவ்­வித அபி­வி­ருத்­தியும் இன்றி காணப்­பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் கூடுதல் கவனம் செலுத்­தப்­பட்­டது. அதற்­கி­ணங்க அப்­பி­ர­தே­சங்­களில் அதி­க­ளவு அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் அடுத்த தேர்­தலில் நாம் தோல்­வி­ய­டைந்தோம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சா­ரங்­களும், வெளி­நாட்டு அழுத்­தங்­களும் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தின.

இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர் மற்றும் அதன் உறுப்­பி­னர்கள் என்னை சந்­தித்து சோபா மற்றும் ஏனைய ஒப்­பந்­தங்கள் குறித்து எமக்கு தெளி­வு­ப­டுத்­தி­னார்கள். இதன்போது நாட்டில் நில உரிமை, உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் சர்­வ­தே­சத்தின் தலை­யீடு, அதனால் இலங்­கைக்கு ஏற்­படும் பாதிப்­புக்கள் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் இன்றும் சர்­வ­தேச தலை­யீ­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் வெளி­நாட்டு சம்­ப­ளத்தைப் பெறும் அதி­கா­ரிகள் இருக்­கின்­றார்கள்.

இலங்கை வர­லாற்றில் பாரா­ளு­மன்ற சேவை­யா­ளர்கள் அல்­லது அதி­கா­ரி­க­ளுக்கு நாட்டு நிதி­யி­லி­ருந்து தான் சம்­பளம் வழங்­கப்­பட்­டது. வெளி­நாட்டு சம்­ப­ளத்தைப் பெறும் அதி­கா­ரிகள் எதற்­காக பாரா­ளு­மன்ற கட­மைக்கு நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விலும் இது போன்ற அதி­கா­ரிகள் இருக்­கின்­றனர். இதில் பல ஊழல்கள் காணப்­ப­டு­கின்­றன.

இவற்றின் மூலம் தான் சர்­வ­தேச அழுத்­தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. எனவே நாட்டிலுள்ள புத்திஜீவிகள் நாட்டை நேசிக்கும் அனைவரும் இதற்கு எதிராக போராட வேண்டும். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பு கூறுவதாகவும், நாட்டுக்கு பொறுப்பு கூறுவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறானதொரு அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தை வீழ்த்து வது எம் அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com