Sunday, July 28, 2019

சவப்பெட்டி -அரசியல்வாதி கஜேந்திரனின் மாளிகை கட்டுமானப்- பணிகளில் தென்பகுதி சிங்களவர். போட்டுடைக்கிறார் டக்கிளஸ்.

வடக்கில் பணப்பெட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சவப்பெட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்பது போலவே தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொள்கின்றனர் என ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ஸ்ரான்லி வீதியிலுள்ள அவரது கட்சியின் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் தமிழ்க் கட்சிகளை கடுமையாகச் சாடியுள்ளார்.

இதன் பொது அவர் மேலும் தெரிவித்ததாவது..

வடக்கில் சவப்பெட்டி கடை அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி ஒருவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர். இப்போது பதிக்கப்படவர்களுக்கு வாதாடி வருவதாக கூறி திரிகின்றார் அவர்களின் உண்மை முகங்கள் உரிய நேரங்களில் வெளிக் கொண்டு வரப்படும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி ஒருவருடன் ஓர் தொலைக் காட்சி நிகழ்வில் கலந்து கொண்டேன். அவர் என்மீதும் எனது கட்சியின் மீதும் பல கொலை, கொள்ளை கடத்தல் குற்றச் சாட்டுக்களை சுமத்தினார். அப்போது நான் அதற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கையை எடுங்கள் நாம் அதனை வரவேற்போம் என்றேன்.

எம்மில் யாரவது தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். சில குற்றச் சாட்டில் ஈடுபட்ட எனது கட்சியை சேர்ந்த சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன். அவர்களில் நீதிமன்ற நடவடிக்கையிலும் உட்படுத்தப்பட்டுள்ளனர். எங்கள் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்த முன்னணியை சேர்ந்த அந்த சட்டத்தரணி ஒரு காலத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்.அவ்வாறு ஈடுபட்டமைக்கான சான்றுகள் உள்ளன. அவர்களின் உண்மை முகங்கள் உரிய நேரங்களில் வெளிக்கொண்டு வரப்படும்.

இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட சட்டத்தரணி பாதிக்கப்பட்ட ஐயர் குடும்பம் ஒன்றுக்காக தாம் இலவசமாக வாதாடியதாக கூறினார். ஆனால் அவர் 5 இலட்சம் வாங்கி வாதாடியுள்ளார். இவ்வாறு இந்த சவப்பெட்டி கடை கட்சிக் காரரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள சட்டத்தரணிகள் ஏராளமான பணத்தினை கொள்ளைப் பணமாக கறந்து உழைத்து வருகின்றனர்.பின்னர் தேசியம் பேசி மக்களை உசுப்பேத்தி வருகின்றனர்.

மேலும் தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கில் வேலைக்கு அமர்த்தும் போது கூக்குரலிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் நல்லூர் பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டி வரும் தனது பங்களாவின் கட்டுமானத்துக்கு தென்னிலங்கையை சேர்ந்த தொழிலாளர்களையே பயன்படுத்திவருகின்றார் இவர்கள்தானா மக்கள் காவலர்கள்?

வடக்கில் அரச வேலை வாய்ப்பின் போது தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது.இதனை நாம் உட்பட பல தரப்புக்கள் எதிர்த்து வருகின்றோம். ஆனால் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு இங்கு தொழில் வாய்ப்பினை வழங்கக்கூடாது என கூக்கிரலிட்டு வரும் சவப்பெட்டி கட்சியின் தலைவர் நல்லூர் பகுதியில் கோடிக்கணக்கான பணத்தினை செலவழித்து பங்களா ஒன்றை கட்டி வருகின்றார்.

அதனை கட்டுவதற்கு இங்குள்ள தொழிலாளர்களுக்கு வாய்ப்பினை வழங்காது தென்னிலங்கையில் இருந்து அதிக பணத்தினை கொடுத்து தொழிலாளர்களை கொண்டு வந்து பங்களா கட்டி வருகின்றார். வடக்கில் உள்ள வேலை அற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும் என மக்கள் முன்னிலையில் மூச்சு விடாது பேசுபவர்கள் இவ்வாறு நடப்பது சரியானதா?இவர்கள் போலித் தேசிய வாதிகள் இவர்களை மக்கள் இனம்காண வேண்டும்.
இதே வேளை வடகிழக்கில் பணப்பெட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சுய நலன்களை முன்நிறுத்திச் செயற்பட்டு வருகின்றனர்.

ன்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார். ஆகவே தேர்தல்கள் வரவிருப்பதால் பாரிய வெடிப்புக்கள் ஏற்படலாம். ஆகவே மக்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும். மக்களுக்கு பல வாக்குறுதிகளையும் வழங்கி அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி வந்த கூட்டமைப்பினர் இன்றைக்கு தங்களை அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக கூறுவது வேடிக்கையானது.

வடக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவnhரு விடயங்கள் தொடர்பிலும் குறிப்பாக பௌத்தமயமாக்கல் சிங்களக் குடியேற்றங்கள். தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் வடக்கில் நியமிக்கப்படுவது குறித்து எந்தவித கருத்தையும் கூட்டமைப்பினர் தெரிவிக்கவில்லை. இவர்கள் படிப்பது தேவாரமாக இருந்தாலும் இடிப்பது சிவன் கோவிலாகவே உள்ளது.

தற்போது அவர்களின் பணப்பெட்டி நிறைவதால் அவர்கள் மக்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் தேர்தல்கள் வரவுள்ளதால் வீரவசனங்கள் வெற்றுக் கோசங்களை உரத்துச் சொல்லி மக்களை ஏமாற்ற முனைவார்கள். கேவே மக்கள் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

உண்மையில் இங்கு சவப்பெட்டி மற்றும் பணப்பெட்டி அரசியல் செய்கின்ற கூட்டமைப்பு மற்றும் முன்னணி ஆகிய இரு கட்சிகளின் கொள்கை என்ன, திட்டம் என்ன, வழிமுறை என்ன, இவர்களுக்கு வரலாறு இருக்கின்றதா. இவ்வாறு ஏதுமே இல்லாமல் மக்களை உசுப்பேத்தி ஏமாற்று அரசியலையே செய்கின்றனர். இன்றைக்கு தேர்தல் வரவிருப்பதால் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பதவிகளை பெறுவதே இவர்களுக்கு இருக்கின்ற நோக்கமாக உள்ளது. அதிலும் கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போனதாகவே இவர்களது கருத்தக்களும் செயற்பாடுகளும் அமைகின்றன.
ஆகவே இதனையெல்லாம் மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது மிக மிக அவசியமானது. எங்களிடம் கொள்கை இருக்கிறது. அதற்கான வழிமுறை இருக்கிறது. நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை. எங்களால் முடிந்ததைச் செய்து கொடுத்தே வந்திருக்கின்றொம். ஆகவே உண்மையில் மக்கள் எங்களுக்கு ஆதரவைத் தந்து எங்களைப் பலப்படுத்தினால் வடக்கில் தேனும் பாலும் ஓடும். ஆதற்கமைய எமது செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்றார்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com