Saturday, July 13, 2019

முஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.

இந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் பல்வேறு சம்பிரதாயபூர்வமான செயற்பாடுகளை சவாலுக்குள்ளாக்கியுள்ளனர். அந்தவகையில் இலங்கையில் திருமணமாவதற்கு பெண்கள் 18 வயதினை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என்ற சட்டம் முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஒன்றுகூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும், முஸ்லிம் பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும், விவா­க­ரத்து வழக்­கு­களில் பாதிக்­கப்­படும் பெண்­க­ளுக்கு மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) பெற்றுக் கொடுப்­ப­தற்கும் இணங்குவதென ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

மேற்படி விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாராகும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தாம் ராஜனாமா செய்துகொண்ட பதவிகளை மீண்டும் பொறுப்­பேற்றுக் கொள்­வதெனவும் தீர்­மா­னித்­துள்ளனர்.

திருமணங்கள் விவாகரத்து தொடர்பான 1951ம் ஆண்டு சட்டத்தில் முஸ்லிம் பெண்கள் 12 வயதில் திருமணமாகலாம் என விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவானது வயதெல்லையை 16 அல்லது 18 ற்கு உயர்த்தவேண்டும் என பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com