Tuesday, May 14, 2019

ஜூலியன் அசான்ஜ் சிறையில் வாடுகையில் அரசியல்வாதிகள் “உலக ஊடக சுதந்திர தினம்” கொண்டாடுகிறார்கள்- David Walsh

உலக ஊடக சுதந்திர நாளான மே 3, ஆண்டு தோறும் ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் (UNESCO) ஆதரவளிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந் நிகழ்ச்சியை நடத்தும் யுனெஸ்கோ, “ஊடக சுதந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை” கொண்டாடுவதற்கு, உலகம் முழுவதிலும் ஊடக சுதந்திரத்தை மதிப்பீடு செய்வதற்கு, ஊடகங்களின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களில் இருந்து அவற்றைக் காப்பாற்றுவதற்கு மற்றும் தங்களது தொழிலிலை மேற்கொள்ளும்போது தங்களது உயிரை இழந்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செய்வதற்கு அது சபதம் எடுக்கிறது.”

உண்மைகள் எடுத்துக்காட்டுகின்றவாறு, இந்த கூற்றுக்கள் வெற்றாரவாரமும் ஏமாற்றுமாகும்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மீண்டும் இலண்டனில் ஒரு உயர் பாதுகாப்பில் அடைக்கப்பட்டு மற்றும் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார். ஏன்? ஏனென்றால் அவரும் அவரது நிறுவனமும் “ஊடக சுந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை” முக்கியமானதாக எடுத்துக் கொண்டதாலும் மற்றும் சர்வதேச ரீதியாக அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் நாளாந்த ஊழல் மற்றும் குற்றத்தன்மையையும் மற்றும் குறிப்பாக அமெரிக்க இராணுவத்தின் கொலைகார நடவடிக்கைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதாலுமாகும். அசான்ஜ் வழக்கறிஞர்களில் ஒருவர் கவனித்தவாறு, வாஷிங்டனானது, “உண்மையான தகவலை வெளியிட்டதற்காக கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளரை நாடுகடத்த கோருகின்றது.”

இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் இன்னொரு அங்கமான, தன்னிச்சையான தடுப்புக் காவலில் வைப்பது தொடர்பாக விசாரணை செய்யும் குழுவானது, பிணையை மீறியதற்காக அசான்ஜிற்கு 50 வார “பொருத்தமற்ற சிறைத் தண்டனை” பற்றிய தனது நிராகரிப்பை வெள்ளி அன்று பதிவு செய்தது. அதனை அது “ஒரு அற்ப மீறல்” என்று குறிப்பிட்டது. 2015ல், ஐ.நா. மனித உரிமை குழுவின் பகுதியான இக் குழுவானது அசான்ஜ் சுவீடன் மற்றும் பிரிட்டன் அரசாங்கங்களினால் “தன்னிச்சையாக கைது செய்யப்பட்டார்” என தன் கருத்தைத் தெரிவித்தது. மற்றும் அவர் “சுதந்திரமாக நடமாடுவதற்கும் நஷ்ட ஈடு பெறுவதற்கும் தகுதி உடையவர் என்று தெரிவித்தது. அந்தக் கருத்தானது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அலட்சியம் செய்யப்பட்டது. அவ்வாறே வெள்ளிக்கிழமையும் இருக்கும்.

யுனெஸ்கோ மற்றும் உலக ஊடக சுதந்திர நாளுடன் தொர்புடைய எவரும், இந்த வாரத்தின் எந்த நிகழ்வின்பொழுதும் அசான்ஜ் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. உண்மையில், எத்தியோப்பியா அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஒரு முக்கிய விழாவில் அழைக்கப்பட்ட பிரதான பேச்சாளர்களில் ஒருவரான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் Rt. Hon. ஜெரமி ஹண்ட் இருந்தார்.

“மிகவும் மரியாதைக்குரிய” திரு. ஹண்ட் ஏப்பிரல் 11 அன்று அசான்ஜை மிருகத்தனமாக கைதுசெய்து சிறையிடுவதற்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அதிகாரிகளுள் ஒருவராக இருந்தார். விக்கலீக்ஸ் வெளியீட்டாளரின் கைதை தொடர்ந்து, ஹண்ட் ஒரு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார், “இன்று நாம் எடுத்துக்காட்டி இருப்பது யாதெனில் சட்டத்திற்கு மேலாக எவரும் இல்லை என்பதுதான். ஜூலியன் அசான்ஜ் கதாநாயகன் இல்லை. அவர் ஆண்டுக் கணக்கில் உண்மையிலிருந்து மறைந்திருந்தார் மற்றும் அவரது எதிர்காலம் பிரிட்டிஷ் நீதிமுறையினால் தீர்மானிக்கப்பட இருப்பது சரியானதே.”

பத்திரிகைகளுக்கு விடுத்த செய்தியின்படி, அடிஸ் அபாபாவில் அவரது உரையில் ஹண்ட், “ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு அவரது கண்ணோட்டத்தை முன்வைத்தார்.” உலகின் மிக முக்கியமான புலனாய்வு பத்திரிகையாளரை தயாரிக்கப்பட்ட குறிப்புக்களோடு அல்லாமல், பெருநகர போலீஸ் சேவையின் மூர்க்கத்தனமான வன்முறையுடன், பழிவாங்கும் துன்புறுத்தலுக்கு தலைமைதாங்குவதில் வெளியுறவுச்செயலர் “தமது கண்ணோட்டத்தை முன்வைத்தார்” என்று கருத்துரைத்தமைக்காக நாம் மன்னிக்கப்படலாம்.

அவரது உரையின்போது, அப்பட்டமான பொய் மற்றும் வெற்றுரைகளின் கலவையுடன், எத்தியோப்பாவில் அவரது கூட்டத்திற்கு வருகைதந்தோரிடம் ஹண்ட், பல்வேறு கண்ணோட்டங்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் போட்டியிடுவதற்கு உயிர்க்காற்றை அளிக்கும்பொழுது, கருத்துக்களுக்கு இடையிலான பகிரங்கமான போட்டியிலிருந்து அறிவுடைமை எழுகிறது என்பதை மனிதகுலத்தின் முன்னேற்றம் தெளிவாக காட்டுகிறது எனக் கூறினார். “அந்த வேறுபட்ட கண்ணோட்டங்களும் உத்தியோகபூர்வ ஒன்றானதாக இருக்குவரை மட்டும்தான் இல்லாவிடின், உயிர்காற்றின் விநியோகம் துண்டிக்கப்படும்” என ஹண்ட் இன்னும் சேர்த்திருக்கலாம்.

அடிஸ் அபாபாவில் விளக்கவுரைகள் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் ஆபிரிக்க முதலாளித்துவவாதிகள் போன்ற பங்கேற்ற அனைத்து முதலாளித்துவ அரசியல்வாதிகளின், வளர்ந்துவரும் மக்கள் அதிருப்தி மற்றும் எதிர்த்தரப்பு குரல்களை ஒடுக்க வேண்டியதன் அவசியம் பற்றிய அவர்களின் அச்சங்களால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தன.

இதுதான் ஹண்ட் மற்றும் பிறராலும் வழங்கப்பட்ட உரைகள் —“ஊடக சுதந்திரம்” தொடர்பாக உலகம் முழுவதிலும் உள்ள பொறுப்பில் உள்ளவர்களிடையே உள்ள பொதுவான அணுகுமுறையாக— அவர்களின் திரிக்கப்பட்டதும் நேர்மையற்றதும் “இரட்டைத்தன்மை” கொண்டதுமாய் இருந்தன. அரசாங்கம் உண்மையில் விரும்புவது ஊடக சுதந்திரத்தில் இருந்து சுதந்திரமாகும். ஆளும் செல்வந்த தட்டு தாங்கள் சுதந்திரமாய் செயல்படுவதையே, அதாவது அதிருப்தி மற்றும் “இடையூறு விளைவிக்கும்” குரல்களின் தலையீடு இல்லாமல் செயல்படுவதையே விரும்புகிறது.

இந்த கவலைகளுக்கு பின்னால் இணையத்தை தணிக்கை செய்தலும், செயலிழக்க செய்வதற்குமான திட்டமிட்ட முயற்சிகள் மற்றும் வெறுப்புப் பேச்சு, இணையம் துன்புறுதல், கற்பனை புள்ளிவிவரங்கள், தவறான செய்தி ஊடக அறிக்கைகள், தேர்தல்களின் மோசடி மற்றும் "ஜனரஞ்சகவாத" வார்த்தையாடல்கள் பற்றிய போலியான நியாயப்படுத்தலும் இருக்கின்றன. நிச்சயமாக, தவறான தகவல்கள், வஞ்சகங்கள் மற்றும் ஒவ்வொரு விதமான பின்தங்கிய தன்மை மற்றும் பாரபட்சம் ஆகியவற்றின் போக்கு முதலாளித்துவ ஊடகங்கள் எல்லா இடங்களிலும் எங்கும் பரவலாக இருந்து வந்திருக்கின்றன, இது பற்றி அதிகாரத்திலுள்ள எவரும் புகார் செய்ய நினைத்ததில்லை. இதுவரை சக்திமிக்கதாக விளங்கிய தவறான தகவல்கள் மற்றும் ஏமாற்றும் இயங்குமுறையின் நிலைமுறிவுதான் இன்னும் பலமடைந்து அசான்ஜை துன்புறுத்துமாறு கோரும் முரட்டுத்தனத்தை தூண்டியும்விடும் சக்தியாக இருக்கின்றது.

இந்நிலைப்பாடுகளின் வழியே, யுனெஸ்கோவின் “இதழியல், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்: இதழியல், கல்வி மற்றும் பயிற்சிக்கான கையேடு” (2018), “உத்தியோகபூர்வ ஆதாரங்கள்“ மற்றும் “நம்பத்தகுந்த இதழியல்” என்பன அழியாத சொற்றொடர் என அது குறிப்பிடப்படும் தற்போதைய "தகவல் கோளாறால்" பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று வாதிடுகின்றது.

“மாற்று அல்லது எதிர்க்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமையை உருவாக்குதல், துருவமுனைப்படல் மற்றும் கட்சிசார்பற்ற தன்மை, ஆகியவற்றை உருவாக்கல்” மூலம், “பிரபலத்தை சட்டரீதியானதாக்குதல்” மூலம், “ஜனரஞ்சக தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் முக்கியத்துவமற்ற நபர்களால் சூழ்ச்சிக்கையாளல்கள் செய்யப்படுவதை அனுமதித்தல்” மூலம் “சமூக ஊடகமானது ஜனநாயகத்தை கீழறுக்கிறது” என ஆசிரியர்கள் வாதிடுகின்றனர்.

செய்தி வெளியீட்டாளர்கள் தமது வெளியீடுகளை தொடர்ச்சியாக வெளியிட போராடுவதையும், செய்தி வெளியீட்டுக்கான தடைகளை நீக்குதல், தமது உள்ளடக்கத்தை வெளியிடுவதற்கு, பாரம்பரிய வாயில்காப்பாளர்களை கடந்துசெல்லல் மற்றும் கவனத்தை ஈர்க்கப் போட்டியிடல் ஆகியவற்றிகாக எவரையும் அல்லது எந்த நிறுவனத்தையும் அதிகாரத்தில் இருத்தல் இயல்நிகழ்ச்சியை கையேடானது ஆர்வத்துடன் சுட்டிக்காட்டுகிறது. மற்றும் அது “சமூக ஊடக மேடைகளில் மற்றும் இணையத்தில் அனைவருக்கும் இலவசமாக அதிவேக தகவலில் ஒவ்வொருவரும் வெளியீட்டாளர் ஆக முடியும் என்று மேலும் எச்சரிக்கிறது. அதன் விளைவாக, குடிமக்கள் எது உண்மை மற்றும் எது பொய் என்று பிரித்தறிய போராடுவர். ஆட்சி மீது எரிந்து விழுவதும் நம்பிக்கை இன்மையும் வருகிறது. தீவிர கருத்துக்கள், சதி தத்துவங்கள் மற்றும் ஜனரஞ்சகவாதம் பூத்துக் குலுங்கிவிட்டால் ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளையும் நிறுவனங்களையும் கேள்விக்குள்ளாக்கும்.”

அவர்களின் பழமைவாத, ஜனநாயக விரோத மற்றும் ஸ்தாபக-ஆதரவு கருத்துக்களின் கடுந்தீவிரம் மற்றும் “ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள் மற்றும் நிறுவனங்களை” பாதுகாக்கும் அவர்களது ஆசையின் ஆழம் ஆகியன உலக ஊடக சுதந்திர நாள் பற்றி நன்றாகப் பேசும் மற்றும் மரியாதைக்குரியனவாக திகழுபவர்கள் ஏன் அசான்ஜையும் அவரைப் போன்றோரும் வாழ்நாள் முடியும் வரை சிறையில் கிடந்து சீரழிய வேண்டும் என நம்புகிறார்கள் என்பதை விளக்க உதவும்.

யுனெஸ்கோவும் இக்கூட்டத்து மீதிப்பேரும் “தவறான தகவல்” பற்றி அக்கறையாக இருந்தனர் என்றால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், இதுவரை நவீனகால “போலிச் செய்திகள்” நடவடிக்கையின் மோசமானதும் ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலானோரின் இறப்புக்கு வழி வகுத்த மற்றும் முழு பிராந்தியத்தையும் சீர்குலைய வைத்ததுமான காட்சிப் பொருள் எண் 1 ஆக ஈராக்கில் “பேரழிவு ஆயுதங்கள்” என்பதன் மீதான அமெரிக்க ஊடகத்தின் உண்மையற்ற மற்றும் ஆபத்தான பிரச்ச்சாரம் பற்றி அவர்கள் முன்வைக்க நேரிடும்.

“ஒவ்வொரு வரலாற்று சகாப்தமும் அதன் சொந்த தொழில் நுட்பம் மற்றும் அதன் சொந்த அரசியல் வடிவத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, தனக்குத்தானே விசித்திரமான ஒரு பாசாங்குத்தனத்தையும் கொண்டிருக்கும்” என்று ஒருமுறை லியோன் ட்ரொட்ஸ்கி அவதானித்தார்.

ஒருபுறம் “பத்திகையாளர்கள் அவர்களது வேலையைச் செய்யும்பொழுது அவர்களைக் காப்பதற்கும் ஊடக சுதந்திரத்தின் நன்மைகளை முன்னிலைப்படுத்தவுமான ஒரு உலகப் பிரச்சாரத்தை அவரும் அவரது அதிகாரிகளும் தொடங்குகின்றர் என்று அறிவிப்பதும் மறுபுறம், சாத்தியமானால் அசான்ஜை எப்போதைக்குமாக மௌனமாக்குவதற்கும் முடிந்தவரை முயற்சி செய்வதும், ஹண்ட்டுக்கு இது எப்படி சாத்தியமாகிறது?

உண்மையிலே இது, வெறுமனே பாசாங்குத்தனம் என்பதற்கும் அப்பால் செல்கிறது. ஆங்கிலப் பொருளியலாரும் சமூக அறிவியலாருமான ஜோன். ஏ. ஹொப்சன் அவரது மதிப்பு மிக்க, ஏகாதிபத்தியம்: ஒரு ஆய்வு (1902) என்பதில், வாதிடுகிறார், “முரண்பாடான கருத்துக்களை அல்லது ஒரே நேரத்தில் மனதில் வைத்திருக்கும்" இந்த “முரண்பாட்டின் மேதைத்தன்மையை” அத்தகைய அதிகாரிகளின் பிரித்தெடுத்தல் என்பது “பாசாங்குத்தனம் இல்லை அல்லது தவறான உள்நோக்கங்களின் திட்டமிடப்பட்ட சிந்தனை உருவாக்கமல்ல” என்று வாதிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் இது பிளாட்டோவின் வார்த்தையில் “உயிரில் நிறைந்த பொய்” — ஒரு பொய்யாக தன்னையே அறியாத ஒரு பொய்யாக இருக்கும்” நிலை என்றே அவர் வாதிடுகிறார். ஹொப்சன் நிலைநாட்டும் இதுதான் ஏகாதிபத்திய கட்ட வளர்ச்சியின் “அறிவார்ந்த மற்றும் தார்மீக பாதுகாப்பு வழிமுறைகளின் விரிவான பின்னல்களினூடான ஏகாதிபத்திய கட்டத்தின் அபிவிருத்தியின் “அறவியல் மற்றும் சமூக இயல்” ஆக இருந்தது.

“இந்த ஒட்டுமொத்தப் போக்கினதும் செயற்பாட்டையும் கட்டுப்படுத்தும் மற்றும் வழிநடத்தும் கையாளாக இருப்பது ஒரு நாட்டின் சிறிய, திறமையான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் நேரடி, குறுகிய-வரம்பு, பொருளாதாய நலன்களுக்காக இயக்கப்படும் நிதிய மற்றும் தொழிற்துறையின் அழுத்தம் என அவர் எழுதினார்.

அசான்ஜ், செல்வந்த மற்றும் செல்வாக்குடைய “சிறிய, திறமான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் பேரால் பிடிக்கப்பட்ட ஒரு வர்க்கப் போர்க் கைதி, ஏனெனில் அவர் ஒடுக்கப்படுவோருக்கு எதிரான அவர்களின் குற்றங்களில் சிலவற்றை அம்பலப்படுத்தினார்.

அடிஸ் அபாபாவில் ஒருவிடயம் பற்றியதில் ஜெர்மி ஹண்ட் சரியானவராக இருந்தார். “பிரச்சினைகளும் பதட்டங்களும் கழுத்துவரை வந்தால், அதற்கு மேலாகவும் கொதித்து விடும்”, என அவர் எச்சரித்தார். பிரச்சினையை அறிவிப்பதிலிருந்து பத்திரிகையாளர்களை தடுத்துவிட்டால் பிரச்சினை அதைவிட்டுப் போகாது…. அரசாங்கங்கள் பத்திரிகைகளை மூடத் தொடங்கும்பொழுதும் ஊடகத்தை நசுக்கும்பொழுதும், ஒழுங்கமைதியை பாதுகாத்து வைத்திருப்பதைவிட எதிர்காலத்திற்கான தொந்திரவை சேமித்து வைப்பதாகத்தான் அதிகமாய் இருக்கும்.”

சாதாரணமாக அவரிடம் யோசனை எதுவும் இல்லை.

உலகம் முழுவதும், தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை, சம்பளங்களை மற்றும் சமூக உரிமைகளைக் காத்துக்கொள்வதில் வளர்ந்துவரும் வேலைநிறுத்த இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சமூக சக்திதான், ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கான உண்மையான சமூக அடிப்படையை அமைப்பர், முதலாளித்துவ செல்வத்தட்டின் ஊழல் மிக்க பிரதிநிதிகள் அல்லர்.

சனிக்கிழமை அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆறாவது ஆண்டு இணையவழி மேதின கொண்டாட்டத்தை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வின் மையக் குவிப்பு அசான்ஜையும் துப்பு வழங்குநர் செல்சீ மானிங்கையும் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும். நாம் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரையும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க விழையும் அனைவரையும் தங்களைப் பதிவு செய்து அதில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சோசலிஸ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com