மக்களை காட்டிக்கொடுத்த உங்களுக்கெல்லாம், வெட்கமே இல்லையா? - அருட்தந்தை சக்திவேல் அடிகளார்.
மக்களை காட்டிக் கொடுத்த தொழிற்சங்கங்கள் இனியாவது மக்களுக்காக செயற்பட வேண்டும் என, சமூக செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக 1000 இயக்கத்தினால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, சமூக செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் அடிகளார், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் கிடைக்காவிட்டால் தமது பதவியை துறப்பதாக,கடந்த நாட்களில் வாக்குறுதி வழங்கியது போன்று ஆறுமுகன் தொண்டமானும், திகாம்பரமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தமது அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து மக்களுடன் இணைந்து போராட வேண்டும் எனவும் சக்திவேல் அடிகளார் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment