விடுதலை புலி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத் தூபிகளை அமைக்க அனுமதி இல்லை. - நகரசபை.
வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத் தூபிகளை அமைப்பதற்கான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
தீருவில் பூங்காவில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை, மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என்பதுடன், அங்கு வேறு தூபிகள் அமைக்க வேண்டாம் என்ற பிரேரணை, சுயேட்சைக்குழு மற்றும் முன்னணி உறுப்பினர்களால் வல்வெட்டித்துறை நகர சபையில் இன்று முன்வைக்கப்பட்டது.
இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதை அடுத்து, சபையில் பெரும் குழப்ப நிலமை ஏற்பட்டது. அதனால் பிரேரணை தவிசாளரால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதனை அடுத்து பிரேரணைக்கு ஆதரவாக 8 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.
முடிவு சம நிலையில் இருந்ததால், தவிசாளர் தனது வாக்கினை பிரேரணைக்கு எதிராகப் பதிவு செய்தார். அதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment