Thursday, January 3, 2019

கோத்தாவின் வழக்கு எதிர்வரும் 11 ம் திகதிக்கு ஒத்தி.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபே ராஜபக்ஸ உட்பட 7 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்விசாரணைக்காக எதிர்வரும் 11ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் மெதமுலன வீரகெடிய பிரதேசத்தில் டி.எ.ராஜபக்ஸ நினைவு நூதன சாலையின் கட்டுமான பணிக்காக அரச நிதியிலிருந்து கிட்டதட்ட 34 மில்லியன் செலவிட்டப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டின் அடிப்படையில் முன்னால் பாதுகாப்பு செயலாளர் உட்பட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரச உடமையை தவறாக பயன்படுத்தினார்கள் என்ற பாரிய குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது குறித்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சில இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் அலி சப்ரி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிகள் கேட்டுள்ள ஆவணங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்குமாறும் குறித்த ஆவணங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டனவா என்பது தொடர்பில் விசாரணை செய்ய குறித்த வழக்கை 11 ஆம் திகதி ஒத்துவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றை வழக்கிற்கு பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷ சமூகமளிக்கவில்லை எனவும் கடந்த வழங்கின் போது வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் அவர் வெ ளிநாடு சென்றுள்ளதாகவும் பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ரவதி கமலதாச, சுதம்மிகா ஆட்டிகல்ல, சமன் குமார கலாபத்தி, டி. மெண்டிஸ் சலிய மற்றும் மல்லிகா குமாரி சேனதீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com