Friday, December 14, 2018

கனாடாவில் மாத்திரம் மக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி தெரியுமா? சொல்றார் கேளுங்கள்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பெயரால் புலிகளால் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெறுமதி கொண்ட அசையும் அசையா சொத்துக்கள் தனிநபர்களின் சொத்தாக மாறியுள்ள அதேநேரத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நேர உணவுக்கு கையேந்தி நிற்கின்றமையும் யாவரும் அறிந்த விடயம்.

புலம்பெயர் தேசம் எங்கும் பினாமிகளின் பெயர்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய முதலிடுகள் முதற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறு வியாபார ஸ்பானங்கள் வரை புலிகளின் தலைமை வன்னியில் அழித்தொழிக்கப்பட்ட மறுகணமே புலிப்பினாமிகளின் முதிசமாக மாறியுள்ளது. கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா, ஸ்கண்டிநேவியா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, இந்தியா, மத்தியகிழக்கு , ஆபிரிக்கா என உலகம் முழுவதும் மக்களின் பணம் புலிப்பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டமைப்பு பல்வேறு பிரிவுகளாக பிளவு பட்டு நிற்கின்றது. இப்பிளவுகளுக்கான காரணமும் மக்களின் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்தான் என்பது பொதுவான வியடம். தங்களுக்குள் சொத்துக்களுக்காக அடிபடும்புலிகளால் தற்போது புலிகளின் சொத்துக்களின் விபரம் வெளிவரத்தொடங்கியுள்ளது.

அந்தவகையில் கனடாவை தளமாக கொண்டுள்ள உலகத் தமிழர் பேரவையின் ஆதரவாளரான தேவா என்பவர் புலிப்பினாமிகளின் ஒரு தொகுதியினரிடமுள்ள சொத்துக்கள் தொடர்பாக பேசியுள்ளார். கனடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் புலிப்பினாமிகளின் சொத்துக்கள் பொதுமக்களின் கைகளுக்கு செல்வதற்கு ஊடகங்கள் உழைக்கவேண்டும் என்றும் அவ்வாறு இன்றைய ஊடகங்கள் செயற்படுவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவரது வேண்டுதலை இங்கு நீங்கள் கேட்கலாம்..இந்த வெளியீட்டின் பின்னர் புலிகளின் சொத்துக்களை பகுக்கி வைத்துள்ள பிறிதொரு தரப்பினைச் சார்ந்தவரான பாரா என்பவர், தேவா கீழ்குறிப்பிடப்படும் சொத்துக்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் என்றும் தேவா குறிப்பிட்டுள்ள சொத்துக்களுக்கும் மேலதிகமான சொத்துக்கள் பினாமிகளிடம் உள்ளதாக தனக்கு தெரிந்தவற்றை போட்டுடைத்துள்ளதுடன் தேவா மீது குற்றமும் சுமத்தியுள்ளார். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இவ்வாறு இவர்கள் பிளவுப்பட்டு அடிபடும்போதாவது, மக்களின் சொத்துக்கள் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்வோம்.

அவரது அவரது வெளிப்படுத்தல்கள் கீழ்கண்டவாறு அமைந்துள்ளது.

CMR, TVI, சுரப்பி கடை, கனடா முருகன் கோயில் வீடு, KEEL & FINCH வியாபார நிலையம், WTM கட்டிடம் வைத்திருந்தவர்கள் மக்களின் சொத்துக்களை பொதுச் சொத்தாக்கவில்லையென்று கேள்வி கேட்பவர்கள், WTM அமைப்பின் பொறுப்பாளராக இருக்கும் "தமிழ்"(புங்குடுதீவு) என்பவரின் நிர்வாகத்தில் இருக்கும் அருமருகன்(இளவாலை - ஏசியன் புடவைக்கடை), கமல்(உலகத்தமிழர் பத்திரிகை- வறுதலைவிளான்), ஊரெழுவு கண்ணன்(நிதிப் பொறுப்பாளர்), காந்தன்(வணிகம் - தையிட்டி) மற்றும் பலரின் கீழ் இருக்கும் பல மில்லியன் சொத்துக்களை மக்கள் சொத்தாக்க தயாரா ?

வருடம் 2010ல் நாம் எடுத்த முயற்சியில் CMR மற்றும் TVI பொதுச் சொத்தாக்க வந்த நேரத்தில், WTM அமைப்பினர் தங்களின் சுயநலத்தால் அதை செய்ய விடாது மறைமுகமாக தடுத்தார்கள். இன்று அது ஒரு தனியார் சொத்தாக இருப்பதற்கு WTM தான் 100% காரணம் !

அதற்கு நான் முக்கிய சாட்சி !

வருடம் 2009இல், கனடா WTM அமைப்பின் பொறுப்பாளர் "தமிழ்" தனது சகோதரியின் குடும்பத்தை இலங்கையில் இருந்து கனடாவிற்கு களவாக எடுத்ததற்கு, $450,000 ஏஜென்டிற்கு WTM பணத்தை கொடுத்ததாக கனடா உளவுத்துறையிடமும் ஆதரமுள்ளது. பணம் வேண்டியவரும் உண்மையை சொல்லி விட்டாராம் !
இது யாருடைய பணம் ?
இப்படி பல மில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கழை புடுங்குவதே சாலச் சிறந்தது !

இரு பிரிவினரும் விரைவில் தேசியத்தின் சொத்துக்களை பொதுச் சொத்தாக்கி, ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு உதவுங்கள் அல்லது குடும்பத்தோடு சேர்ந்து நாம் நினைப்பதை செய்யுங்கள் !

விரைவில் எல்லோரினதும் குடும்ப புகைப்படங்களோடு சொத்து விபரமும் வெளியிடப்படும் !

முதுகெலும்புள்ள தமிழ் ஊடகத்துறையினர் மட்டும் நேர்மையாக மக்களின் குரலாக பதுக்கியவர்களை கேள்வி கேட்டுக் கொண்டேயிருங்கள் !
எதற்கும் அஞ்சாதீர்கள் உங்கள் பின்னால் நாம் இருக்கின்றோம் !

மக்களின் நண்பன்,
பரா(கனடா)

புலிகளின் பல்வேறு தரப்புக்களாலும் அபகரிக்கப்பட்டுள்ள அசையும் அசையா சொத்துக்களின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். உலகம் பூராகவும் எடுத்துக்கொண்டால் லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை தாண்டும் என்பது ஆய்வுத்தகவல்கள்.

எனவே இப்பெருந்தகைகள் தங்களிடமுள்ளவற்றில் ஓரிரு விகிதத்தையாவது மனமுவந்து வழங்கி இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு பொது வேலைத்திட்டத்தை அமைத்து செயற்படுத்துவார்களாயின் பாதிக்கப்பட்ட மக்களின் இருளுக்கு ஒளியேறும் என்பது எதிர்பார்ப்பு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com