Thursday, November 29, 2018

மத நல்லிணக்கம் பேண மறுக்கும் ஆசிரியர். மறவன் புலவு சச்சிதானந்தன்

சாவகச்சேரி இந்துக் கல்லூரி. இந்துக்களின் மரபுகளைப் கல்லூரி பேணும் கல்லூரி. அருள்மிகு அய்யப்ப வழிபாடு. அஃதே இலங்கையில் அருள்மிகு அய்யனார் வழிபாடு. இலங்கைத் தீவு எங்கும் அருள்மிகு அய்யனாருக்கு ஆயிரக்கணக்கான கோயில்கள். நூற்றுக்கணக்கான ஊர்களின் பெயர்கள் அய்யனார்கோயிலடி என்று இருக்கும்.

அருள்மிகு அய்யப்பனுக்குக் கார்கால நோன்பு, கார்த்திகையில் தொடங்கும் தைப்பொங்கல் வரை நீளும்.

வேண்டுதல்களை நிறைவேற்ற அருள்மிகு அய்யப்பன் நோன்பு இருப்பார்கள்.

இலங்கை அரசு இந்த மரபை ஒப்புக்கொண்டுள்ளது. அரசு ஊழியர் இக்காலத்தில் சீருடைகளைத் தவிர்க்கலாம். மழிக்காத முகம், நீறு அணிந்த நெற்றி, கார் நிற உடைகள், காலணி இல்லா நடைகள், சுவாமி ஆகிவிடும் அடியவர்கள்.

இலங்கைக் காவல் துறை ஊழியர்கள் வழமையான சீருடைகளைக் கைவிடலாம். காலணிகளைக் கைவிடலாம். கார் நிற உடைகளை அணியலாம். விடுப்பு எடுக்கலாம். பம்பை, சபரி மலை போய் வரலாம்.

சபரிமலை வழிபாட்டுப் பயணிகளுக்கு இந்திய அரசின் நுழைவு உரிமத்தைக் கட்டணமின்றி வழங்குவர்.

இலங்கைக் கல்வி அமைச்சில் இந்த நோன்பு கால மரபுகள், வழமைகள் ஒப்புக்கொண்ட விதிகள்.

ஆனாலும், கிறித்தவர்களுக்கு அருள்மிகு ஐயப்பன் சாத்தான் அல்லவா? சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியர் வினோத் கிறித்தவர்!

விடத்தல்பளை செல்வராசா பிரகாசம். (அவரின் தொலைப்பேசி +94 775085413) பன்னிரண்டாம் வகுப்பு மாணவன். 19 வயது. 12ஏ பிரிவு.

27 11 2018 காலை தேர்வு எழுதக் கல்லூரிக்கு வருகிறான்.

பிரகாசரின் தந்தையார், 'சுவாமி நன்றாகத் தேர்வு எழுதிவிட்டு வாருங்கள்' எனத் தன் மகனை வாழ்த்தி அனுப்புகிறார்

ஏனெனில் மாணவன் பிரகாசம் ஆண்டுதோறும் அருள்மிகு ஐயப்பன் நோன்பு கைக் கொள்பவன். அக்காலத்தில் அவனைச் சுவாமி எனவே வீீீட்டில் அழைப்பர்.

தேர்வு எழுத மேசையில் பிரகாசன் அமர்கிறான். வினாத்தாளைக் கொடுக்கின்றார் ஆசிரியர் வினோத். (அவரின் தொலைப்பேசி +94 770272554)

அவருக்கு மாணவன் சாத்தானாகத் தெரிகிறான். ஏனைய மாணவர்கள் முன்பு வினாத்தாளை கிழித்து வீசுகிறார். முகத்தை மழிக்காத அரும்பு முடிகள் வினோதரின் கண்களை உறுத்தின.

'நோன்பு முடிந்த பின்பு தேர்வு எழுத வா' என்று காட்டமாகக் கத்துகிறார்

மாணவனைத் தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியே அனுப்புகிறார்.

மாணவனின் பெற்றோர் சிவசேனையிடம் முறையிடுகின்றனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் நிலையத்தினர் இந்துக் கல்லூரி முதல்வரின் அறைக்குச் செல்கின்றனர்.

அடுத்த அரைமணி நேரத்தில்,
பிரதேச சபை உறுப்பினர்
வலையக் கல்வி அலுவலர்
எனப் பலரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதல்வரின் கவனத்தை ஈர்க்கின்றனர்.

அடுத்த தேர்வு நாள் இன்று 29.11.
சாவகச்சேரி வலயக்கல்வி அலுவலகம் மாணவன் பிரகாசரைத் தொலைப்பேசியில் அழைக்கிறது.

இன்று 29.11 தேர்வு எழுதப் போகுமாறு கூறுகிறது எழுதாத தேர்வை மற்றும் ஒருநாள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்கிறது.

இந்துக் கல்லூரிக்குள் ஊடுருவிய கிறித்துவர் இந்து மரபுகளை உடைக்கிறார். முதல்வருக்கே தெரியாமல் நடவடிக்கை எடுக்கிறார்.

சைவ உலகம் பார்த்துக்கொண்டிருக்கலாமா? கொடுமை செய்த கிறித்தவ ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாவகச்சேரி வலையக் கல்வி அலுவலகத்துக்கு முறையிடுவது சைவ உலகத்தின் கடனாகும்.

பெற்றோரின் முறையீட்டைத் திரு மோகன் அவர்களிடம் சொன்னேன். பணியில் இருந்தார். எனினும் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் நண்பர்கள் பல முனைகளில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதல்வருக்கு அழுத்தம் கொடுத்தனர்.

சாவகச்சேரி காவல் நிலையத்திலிருந்து என் வேண்டுகோளை ஏற்று இருவர் முதல்வரிடம் நேரில் சென்று சென்று விவரம் கேட்டனர்.

திரு மோகன் அவர்களுக்கும் காவல் நிலைய அன்பர்களுக்கும் சைவ உலகம் என்றும் கடப்பாடு உடையது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com