Tuesday, November 13, 2018

பாராளுமன்றை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. சட்ட மா அதிபர். நீதிமன்றை சுற்றி பலத்த பாதுகாப்பு

19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என்று சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேநேரம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com