Wednesday, February 3, 2016

புலிகளுக்கு நிதிசேகரித்தவருக்கு ஜேர்மனியில் 18 மாத சிறைத்தண்டனை.

பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவருக்கு 18 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மன் ஹம்பேர்க் பகுதியில் வசித்து வரும் 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனிய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்ட நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே கருதப்படுகின்றது.

இந்தநிலையில்இ 2007-2009ம் ஆண்டு காலப் பகுதியில் யோகேந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக குறித்த நபர் 81000 யூரோக்களை திரட்டியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகவும் அவற்றை புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் யோகேந்திரன் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.

இதே நேரம் ஜேர்மனில் இவ்வாறு புலிகளுக்கு உதவி செய்தவர்கள் மற்றும் அவ்வமைப்பிற்காக பிரச்சார வேலைகளில் ஈடுபட்டவர்கள் படுகின்றவர்கள் சுமார் ஆயிரம் பேரளவில் ஜேர்மனியிலுள்ளதாக நீதிமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com