Thursday, April 9, 2015

வேரில் விழுந்த விசம். நோர்வே நக்கீரா

பிரிவினைவாதம், துவேசம், இனமுரண்பாடுகள், கலவரங்கள், போர் போன்றன இன்று நேற்று இலங்கையில் உருவானதல்ல. இவை ஆதியில் இருந்தே ஆணிவேரில் ஊற்றப்பட்ட நஞ்சுகள். இவற்றைச் சரியாக இனங்கண்டு செயற்பப்படாவிட்டால் இருவினமும் அழியும் என்பது திண்ணம். அன்று நடந்தவைதான் மீண்டும் மீண்டும் இன்றுவரை நடக்கிறது என்பதே இதற்கு ஆதாரம். பொதுவெதிரியான வெள்ளையர்களை வெளிறே ற்றுவதற்காக தமிழ் சிங்களம் இணைந்ததே தவிர உதிரத்தில் ஊறிய நஞ்சு இருந்து கொண்டேதான் இருந்தது. வடக்கு தெற்குப்பகுதிகளை இருசாராரும் மாறிமாறி ஆண்டு வந்தாலும் மதரீதியாக நம்பிக்கைகளும் முரண்பாடுகளும் ஆரம்பித்தில் இருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்பட்ட மத, அரசியல் மாற்றங்கள் இலங்கை யில் அன்றில் இருந்து இன்றுவரை பிரதிபலிப்பதை அவதானித்திருப்பீர்கள். தேவநம்பி தீசனின் மதமாற்றத்துக்குப்பின்னரே வடக்குத் தெற்கு என்ற பிரவும், பெருமுரண்பாடு களும் மிகவேகமாகவும் ஆளமாகவும் வேரூன்றியதை அவதானிக்க முடிகிறது.

எழு என்று இன்று மருவிய ஈழு என்ற முற்றுப்பெறா மொழியைப் பேசிவந்த ஒரேயின மக்களான இயக்கர் நாகரின் நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தன. ஈழுமொழி பேசியவர் கள் வாழ்ந்தநாடு என்பதாலே இலங்கை ஈழம் என்று அழைக்கப்பட்டது என்கிறர் கலாநிதியும் பேராசிரயருமான செங்கiயாளியான். தமிழர்களாகிய நாகர்கள் நாகங்களை வளிபட்டுவந்தமை சான்றுக்குரியது. புத்தர்பெருமான் ஐந்துதலை நாகங்க த்தின் கீழ் சயனத்திலும், நிஸ்டையிலும் இருப்பது நாகர்கள் பௌத்தமத்தைத் தழுவி யிருந்தார்கள் என்பதற்குச் நற்சான்றாகக் கூட அமையலாம். கடவுளை ஒரு மனிதனா கவோ தத்துவமாகவோ கருதாத, விஞ்ஞானமே எட்டிப்பார்க்காத காலத்தில் மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றியும், தமது சக்திக்கு மீறிய இயற்கையின் சக்திகளை கடவுளா கவும், தேவதைகளாகவும் கொண்டு வணங்கினர் என்பது ஆய்வு.

காதாநாயகத்துவம்

காமினி எனும் துட்டகைமுனுவை கதானாயனாக்க எழுத்தப்பட்ட மித்துக்கதையே மகாவம்சம் என்று தெரிந்தும் அதை சரித்திர மதவாதாரமாக காட்ட முயலும்போது அதையே வைத்து அவை தவறானவை என்று நிரூபிக்க வேண்டிய தேவையும் எமக்கு ஏற்படுகிறது. பாழிமொழியில் மகாநாம எனும் பல்லவதேரரால் எழுதப்பட்டு கிடக்கை யில் கிடந்த மகாவம்சத்தை ஆங்கிலேயரின் காலணித்துவ காலத்தில் தூசு தட்டி 1837ல் கியோர் துநோர் என்பவரால் ஆங்கிலத்தில் புத்துயிர் கொடுத்த பொல்லாமை நிகழ்ந்தது. துட்டகைமுனு கதாநாகனாகிறான் என்றால் அவன் மோதியவனும் அவனைவிட அதிபலசாலி என்பதே மறைமுகமான அர்த்தமாகிறது. வெல்லப்பட முடியாததை வெல்வதுதானே கதாநாயகத்துவம்.

மகாவம்சத்தில் பாரபட்சம்

44ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த எல்லாளனை 21செய்யுள்களுக்குள் அடக்கும் மகாநாம என்ற பல்லவப்பிக்குவால் எழுதப்பட்ட மகாவம்சம் 24வருடங்கள் மட்டம் அரசாண்டு துட்டகாமினியை 843 செய்யுள்களில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. இங்கேயே தெரிகிறது மாகாவம்சத்தின் நம்பத்தன்மையும் நடுநிலையும். ஆனால் துட்டகைமுனு வின் காலத்திலோ அன்றி மகாவம்சத்தின் காலத்திலோ சிங்களவர் என்றொரு இனம் இருந்ததாக எங்குமே அடையாளம் காணப்படவில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. துட்டகாமினி இயக்கன் என்தற்கான ஆராரங்களை எந்த ஆய்வாளர் களும் இன்னும் முன்வைக்கவில்லை. இவனுடைய அடி முத்துசிவன் (மூத்தசிவன்-ஊத்தைசிவன்)எனும் நாககுலத்திலிருந்தே ஆரம்பமாகிறது ஆதாரம் மகாவம்சம் இதன்படி பார்த்தால் இலங்கையில் நடந்த போர்களும், படுகொலைகளும் சகோதரப்படு கொலைகளே. இந்தமகாவம்சம் செய்த ஒரு கைங்கரியம் ஒரினமாக இருந்த ஈழமக்களை துண்டாடி, முரண்பாடுகளுக்கு உள்ளாக்கி, போர்களுக்குக் காரணமாகி கொடுங்கோண்மைக்கு வித்திட்டது. மகாநாம என்ற பல்லவ வந்தேறியின் புனைவு இலக்கியமாக உருப்பெற்றிருக்கிறது.

பௌத்தத்தினதும் சிங்ளப்பேரினவாத்தினதும் கைநூலான மகாவம்சம் பல அசிங்க மான வரலாற்றுப்பின்னணியைக் கொண்டது. சிங்கத்துக்கும் வங்கநாட்டு அரசிக்கும் பிறந்த பிள்ளைகளான சிங்கபாகு சிங்கவல்லி என்ற சகோதரங்கள் கலந்த 16பிள்ளைகளில் மூத்தவன் விஜயன் என்கிறது மகாவம்சம். அவன் குவேனியுடன் பிறந்தபிள்ளைகள் சிங்களவர்கள் என்றால் சிங்களப்பிறப்பு எப்படிப்பட்டது என்பதை எண்ணித்துணிக. சகோதரியில் இச்சைகொண்டு பிறந்த இந்தவம்சத்தினர் முள்ளிவாய்க் கால் இறுதிப்போரில் தமிழ்பெண் பிணங்களில் இச்சைகொண்டார்கள் என்பது பரம்பரை க்குணம் வம்சக்குணம் உதிரத்தில் ஊறியவிசம் என்றே கருதவேண்டியுள்ளது.

இந்தவேர்கள் எங்கிருந்து உருவாயின என்பதை பார்ப்போம். சரித்திரம், வரலாறு என்பது மிக மிக நீட்டது என்பதனால் தேவநம்பியதீசனில் தொடங்கி எல்லாளனுடன் நிறுத்துகிறேன்

இடப்பெயர்கள்: உருகுணை- கதிர்காமத்தை அண்டிய தென்மாகாணப்பகுதி
கல்யாணி ஆறு -களனி ஆறு
உத்தரதேசம்- பூநகரியை அண்டிய வன்னிப்பகுதி

மேற்குறிப்பிட்ட பெயர்கள் அடிக்கடி கட்டுiரையில் இடம்பெறுகிறது என்பதால் முன்கூட்டியே அவற்றை இங்கே தருகிறேன்.

வடக்குத் தெற்கு பிரிவினை, தேவநம்பியதீசனின் பரம்பரை

மானைத்துரத்திக் கொண்டிருந்த மூத்துசிவனின் (சைவப்பெயர்) மகன் தேவநம்பியதீசன் (தீசன் என்பது ஈசன் என்றும் பொருள் கொள்ளும்) மகிந்த (காலபதியான அரசின் ஜனாதிபதியும் மகிந்தவே- இனமத அழிப்பின் ஆணிவேர்கள்) எனும் பௌத்தபிக்குவின் குரலால் "மானைத் தொடரும் மன்னரே மதியைத் தொடர்வீராக" தடுத்து நிறுத்தப்பட் டான். கொல்லாமையை முதன்மைப்படுத்தும் பௌத்தம் போதிக்கப்பட்டு அவன் பௌத்தனாக மாறினான். மன்னனைத் தொடர்ந்து மக்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டனர். பௌத்தர்கள் அனைவரும் சிங்ளவர்கள் அல்ல என்பதை சிங்களவர் களும் தமிழர்களும் அறிவது அவசியம். பெரிய பௌத்த மடாலங்களுக்கு தமிழர்கள் தலைமை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுண்ணாகத்திலுள்ள கந்ததேராடை என்ற பகுதியில் இருந்தே பௌத்தசங்கங்கள் மதம்பரப்பு வேலையைச் செய்தன. அன்றும் அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் சிங்களவர்கள் அல்ல. உலகின் கிழக்குநோக்கி பௌத்தப்பரம்பலான திராவிடப்பௌத்தத்தின் ஆணிவேராக இருந்தவர்கள் தமிழர்களும் பல்லவர்களும் என்பதை மறந்துவிடலாகாது. பௌத்தமத காலத்திலேதான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது என்பதை ஐம்பெரும்காப்பியங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. ஈழத்தின் வடக்குக் கிழக்கில் வளர்ந்த பௌத்தம் அதிககால் அங்கே நிலைகொள்ளவில்லை. காரணம் இந்தியால் ஏற்பட்ட இந்துமதத்தின் மீள்வளர்ச்சியும் வாத விவாதங்களின் தோல்வியும் பௌத்தத்தை இந்தியாவை விட்டு ஓட ஓட விரட்டின. இதற்கு சமயகுரவர்களின் பங்கும் அதிகம். இந்தமாற்றம் வடகிழக்குப் பகுதிகளில் பரவியிருந்தமையால் இந்து பௌத்த முரண்பாடு ஈழத்துக்கு இறக்கு மதியானது. இதுவே அடிப்படையில் வேரில் ஊற்றப்பட்ட நஞ்சாகும்.

தேவநம்பிய தீசனுக்குப்பின் நடந்த போர்கள் அனைத்தும் வடக்கு தெற்கு என்ற நிலையிலேயே இருந்தது. தேவநம்பிய தீசனின் தம்பியான மகாநாகன் தேவநம்பிய தீசனுக்குப்பின் பட்டத்துக்குரிய இளவரசனாவான். இதை விரும்பாத தேவநம்பியதீச னின் மனைவி தன்மகனே முடிக்குரியவனாக வேண்டும் எனவிரும்பினாள். அதனால் மகாநாகனுக்கு (மச்சான்-கணவனின் தம்பி) மாம்பழத்தினுள் நஞ்சுவைத்துக் கொல்ல நஞ்சூட்டிய மாங்கனியைக் கொடுத்தனுப்பினாள். அதை மகாநாகனின் மகன் உண்டு உயிரைவிட்ட தந்தையும் (மகாநாகன்) மனைவி, மக்களும் உருகுணைக்கு சென்று மகாகமம் (தோட்டத்தை நாம் கமம் என்ற சொல்லைக்கொண்டு இன்றும் பாவிக்கிறோம்) என்ற நகரத்தை நிறுவி உருகுணைக்கு அரசனானான். அவனின் மகன் ஜத்தலாயதீசனும் அவனின் மகன் கோதபாயனும் (மகிந்த அரசின் பாதுகாப்புச் செயலாளரின் பெயரும் இதுவே) உருகுணை மன்னர்கள் ஆயினர். இவன் கதிர்காமப்பகுதியில் அரசனார்களாக இருந்து 10சத்திரியமன்னர்களை பலத்தபோரின் பின் அழித்தே அரசனானான் என்கிறது தட்டுவம்சம்( கிஸ்ரி ஆவ் சிலோன் தலைப்பு 111 பக்கம் 146). கோத்தபாயனின் பேரனான மகாநாகன் அநுராதபுத்தில் இருந்து ஆதரவற்றுத் ஓடிவந்தபோது அபயமளித்து காத்த கதிர்காமப்பகுதியின் குறுநிலமன்னன் கமணியை பிள்ளைகளே இந்தப் 10சத்திரிய மன்னர்கள் என அறியமுடிகிறது. இதனுடைய படிமத்தை எமது அரசியலிலும் காணமுடிகிறதா? நம்பிக்கைத் துரோகம், நன்றியின்மை உண்டவீட்டுக்கு இரண்டகம் என்பனவற்றை தமிழ் அரசியல் உணர்ந்திருக்கிறது. சேர் பொன் இராமநாதன் சிங்களவர்களைத் மாசல்சட்டத்தில் இருந்தும், ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து காத்து விட்டார். அவரை தேரிலும் தோழிலும் தூக்கிவந்த சிங்களம் எம்மக்களுக்கு என்ன செய்தது. நாட்டை எடுத்தபின் பிரிப்போம் என்று வாக்குறுதியளித்த ஐ.தே.கட்சியில் தந்தை தன்வாக்குக்கு எதிராகவே செய்யற்பட்டார். பிரிவினைக்கு எதிராக நடேசன் மகாதேவ போன்றவர்களை வாங்கி சோல்பரித்திட்டத்தில் பிரினைக்கு மண்ணள்ளிப்போட்டனர். பின் என்ன நடந்தது என்பதை அறிவீர்கள். இதேபோன்று புலிகளின் ஆதரவுடன் வந்த மகிந்தவும் இன்றைய கோத்தபாயனும்; புலிகளை என்ன செய்தார்கள் என்பதையும் அறிவீர்கள். நம்பிக்கைத் துரோகம், செய்நன்றி மறத்தல் என்பன இது வேரில் விழுந்த விசங்களே.

இருப்பினும் தமிழ்சத்திரியர்களை அவர்களால் அடியோடு அழிக்க முடியவில்லை. இம்மன்னர்களின் மூத்தவனான தர்மராஜனின் மகன் மாகாதீசன் சத்திரிய மன்னன் ஒருவனின் மகளை அபி அனுரதியை மணந்ததாக பிராமிக்கல்வேட்டில் கண்டெடுக் கூறுகிறது. (மகாவம்சம் தலைப்பு111 பக்கம் 147) இந்த அடியோடு அழித்தல் என்பது முள்ளிவாய்க்காலை நினைவு படுத்துகிறது அதையும் இதையும் செய்தவர்கள் கோத்தபாயர்களே. வேரில் விழுந்த விசங்கள் இவர்கள்.

கோத்தபாயனின் மகன் காக்கவண்ணதீசன் ஈழராஜனான எல்லாளனின் ஆட்சியை ஏற்று திறைசெலுத்தி வாழ்ந்தான். இலங்கை முழுவதும் எல்லாளனின் ஆட்சி இருந்தற்கான சாட்சி இதுவே. இவன் திருமணம் குறுநிலமன்னனான கல்யாணி அதாவது இன்றைய களனியை ஆண்ட களனித்தீசனின் மகள் மகாதேவியையே.

களனித்தீசனின் மனைவிக்கும் அவன் தம்பி அய்யவுத்திகனுக்கும்; உள்ள கள்ளதொடர்பு தெரியவர அவன் தலைமறைவாகி காதல் கடிதம் ஒன்றை பிக்குகள் மூலம் அனுப்பியபோது அது பிடிபடவே கடிதத்தைக் காவிவந்து பிக்குக்கள் இருவரின் தலைவெட்டுப்பட்டு கடலில் எறியப்பட்டது. செகுவேரா கலவரத்தில் தம்மினம் என்றும் பாராமல் சிங்கள இளைஞர்களை வெட்டி களனிகங்கையில் எறிந்தது நினைவுக்கு வருகிறது. புத்தபிச்சுக்களின் தலையை வெட்டி கடலில் எறிந்ததால் தான்; கடல்கொந்தளிப்பு கல்யாணிமேல் (களனிகங்கை) ஏற்படுகிறது என்ற மூடநம்பிக்கையில் தனது மகளான மகாதேவியை ஒரு வள்ளத்தில் ஏற்றி கடலில் விட்டான் களனிதீசன். அந்தவள்ளம் மகாகமத்தின் விகாரைகள் உள்ள கரையை அடைந்தது. அதனால் மகாதேவியாக இருந்தவள் விகாரமகாதேவி என்று அழைக்கப்பட்டாள். இவளை திருமணம் செய்தவன்தான் கோத்தபாணனின் மகன் காக்கவண்ணதீசன். இவளின் மசக்கை ஆசைதான் துட்டகைமுனுவை எல்லாளனுக்கெதிராக வளர்த்தது. அவளின் 3 மசக்கை ஆசையில் ஒன்றுதான் எல்லாளனின் முதன்மைத்தளபதியின் தலையை வெட்டிய வாளைக்கழுவிய தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பது. இந்தக் கொலைவெறிகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன என்பதை இனியாவது உங்களால் உணரமுடிகிறதா? இவளுக்குப்பிறந்த மூத்தவன்தான் கைமுனு எனும் காமினி. துர்நடத்தையின் காரணமாகவே துட்டகைமுனு என்று அழைக்கப்பட்டான். அவனுடைய தம்பி சதாதீசன். பிள்ளைகள் இருவரும் தாயினால் எல்லாளனுக்கெதிராக மனதில் நஞ்சூற்றியே வளர்க்கப்பட்டார்கள். குழற்தைகளான இவர்களின் ஆணிவேரில், மரபணுவில் தாயாரால் ஊற்றப்படுகிறது.

எல்லாளனின் நல்லாட்சி

இலங்கை முழுவதும் பரவியிருந்த எல்லாளன் நல்லாட்சியில் பௌத்தமதம் மற்றைய மதங்களைப்போல் பாதுகாக்கப்பட்டதால் இந்நல்லாட்சியை மறுக்க மகாவம்சத்தை எழுதிய பல்லவ மகாநாமதேரரால் முடியவில்லை. எல்லாளன் மனுநீதிச் சோழனுக்கு நிகராக ஒப்பிடப்பட்டான். எல்லாளனை சோழ அரசன் என்பது முற்றிலும் தவறா னது இந்திய வரலாறுகளிலோ, கல்வெட்டு, அகழ்வாய்வுகளிலே எல்லாளனைப் பற்றிக் எதுவும், எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவன் தமிழீழத்தைச் சேர்ந்த தனித்தமிழ் உத்தரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அரசன் என்பதற்கான பல ஆராரங்கள் உள்ளன. பாளிமொழியில் எலாரா என்பதே எல்லாளன் ஆனது இதன் அர்த்தும் ஈழராஜன் என்பது என பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் கருதுகிறார்.

சேனன், குத்திகன் எனும் தமிழ் மன்னர்களிடம் இருந்து அனுராதபுரத்தை அசேலன் கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். கி.மு 145ல் எல்லாளன் அவனை வென்று அனுராதபுரத்தை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான். எல்லாளனின் சொந்த இடமாக பூநகரியின் தெற்கெல்லையிலுள்ள பாலியாறுப்பகுதி என்று எண்ணித்துணியலாம். வவுனிக்குளத்தின் தோற்றமே எல்லாளனில் இருந்துதான் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாளன் பயிற்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பலகுளங்களை நிறுவி கடலில் வீணாகப்போகும் நீரைத் தேக்கினான் என்கிறது பலவராறுகள்.

துட்டகைமுனுவின் படையெடுப்பு.

தனது தந்தையான காக்க வண்ணதீசனின் மரணத்தின் பின் அவன் வைத்திருந்த படையுடனும், தான் தயாரித்து வைத்திருந்த படையுடனும் தன்தாய் விகாரமாதேவியு டனும் 500பிக்குக்களுடனும் அனுராதபுரத்திற்குத் தெற்கில் இருந்து புறப்பட்டான் துட்டகாமினி. எல்லாளன் போன்ற நீதிதவறா ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளப்ப இயலாது என்பதை உணர்ந்த இவன் இனத்துடன் இணைத்து மதத்தையும் சேர்ந்து யுத்தகோசத்தை அமைத்தான். இந்த இன மத வெறி என்பது தெற்கிலே துட்டனான காமினியால் முதன் முதலில் முன்னெடுக்கப்பட்டது என்பதை இங்கே காணலாம். இதுவும் அடிவேரில் ஊற்றிய நஞ்சே. ஐதேகட்சி, சுதந்திரக்கட்சி, பண்டாரநாயக்கா, ஜேஆர், போன்றவர்களால் துவேசம் மத இனவெறி ஏற்றப்பட்டது என்பதை விட வேரில் பரம்பரையாக சிங்கள இரத்தத்தில் ஏற்றப்பட்ட விசமே இது. ஜேஆர் பண்டாரநாயக்கா போன்ற கிறிஸ்தவர்களும் அரசியலுக்காக பௌத்த வெறிக்குள் அகப்பட்டுக் கொண்ட சந்தர்ப்பவாதிகளே. புத்தபிக்குகளை போருக்கு அழைத்துச் சென்ற துஸ்டன் இந்தக்கைமுனுவே. இந்த விசம் இன்றுவரை பிக்குக்களை அரசியலில் கால்பதித்து நிற்கவைத்தது. கௌதம புத்தரோ அரசசைத் துறந்து வந்தவர். போரை வெறுத்துவர். பௌத்தத்தை உலகெங்கும் பரப்பிய அசோகன் போரே வேண்டாம் அது பாவச்செயலென்று பௌத்தத்தைத் தழுவியவன். ஆனால் இந்தத் துஸ்டன் காமனியோ போருக்கே எதிரான பௌத்தத்தை போருக்காகப் பாவித்தான். இவன் பௌத்த மதத்தின் எதிரியாகத், துரோகியாகப் பார்க்கப்படவேண்டிவன்.

கைமுனுவின் படை முதன்முதலில் மகியங்களையில் எல்லாளனின் படையை சந்தித்தது. இப்படி சிறுசிறு இராவத்தளங்களை அழித்துக் கொண்டு சென்ற கைமுனு படை அம்பதீர்த்தத்திலுள்ள எல்லாளனின் படையை முற்றுகை இட்டும் 4மாதங்களு க்கு மேல் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. காரணம் எல்லாளனின் படைத்தளபதி தித்தம்பம் அதிவல்லவனாக இருந்தான். இருப்பினும் பெண் விடயத்தில் அவன் பலவீனனாக இருந்ததை அறிந்த கைமுனு தன்தாய் விகாரமாதேவியை அரக்கு காயாகப் பாவித்தான். தன்தாயை அன்னியனுக்கு காட்டியும், கொடுத்தும் ஒரு போர் மக்களுக்கோ மனிதர்களுக்கோ மனிதத்துக்கோ தேவையா? இந்த அசிங்கமான, கேடுகெட்ட செயலை இந்தக் கெட்ட ஜென்மம் கைமுனு செய்தான். இதை மாகாவம்சமே தலையில் சரித்திரம் என்றும் கைமுனுவை கதாநாயகன் என்றும் கொண்டாடுகிறது. ஒருதாயை விபச்சாரியாக்கிய பெருமை சிங்களம் தம்பரம்பரை என்று தலையில் வைத்து கொண்டாடும் துட்டகைமுனுவுக்கு உள்ளது. தாயையே விபச்சாரியாக்கியவனின் பரம்பரை பிணங்களுடன் உறவு கொள்ள முயன்றது அதிசயத்துக்குரியதல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். சென்ற பேரினவாத அரசியலில் பெண்கள் அரக்கு காய்களாக இருந்ததை அவதானித்திருப்பீர்கள். கருணா அம்மான் டக்லஸ் போன்றவர்களுக்கும் புலத்தில் இருந்து சென்றவர்களுக்கு மதுவும் மாதுவும் பரிசளிப்கப்பட்டு இரகசியப் படங்கள் எடுக்கப்பட்டு வெருட்டி அரசியல் நடத்திய விதம் வேரில் ஊறியிருந்த விச இரத்தத்தை காட்டுகிறது.

அவன்படை பொலநறுவையில் எல்லாளனின் படையை முறியடிக்க முடியாது திண்டாடியது. பலமான கோட்டைகள், கொத்துளங்கள், அகழிகள் பாதுகாப்பரண்கள் என்று பாதுகாப்புப் பலமாக இருந்ததனால் மேலும் நான்கு மாதத்தக்கு மேல் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இருபடையினருக்கும் பேரழிவு நிகழ்ந்தது. அதன்பின் எல்லாளனின் தலைநகரான அனுராதபுரத்தை நோக்கி நகர்ந்தபோது கிரலகம், மகிலநகர் எனுமிடங்களில் துட்டகைமுனுவின் படு படைதோல்வி கண்டது. பேரழிவைச் சந்தித்த அவன்படை உதவிகளை, ஆளணிகளை தெற்கில் உருகுணையில் இருந்து பெறவும், தம்மைத்தயாராக்கிக் கொள்ளவும் காசபர்வதம் எனுமிடத்தில் பாசறை அமைத்துக் கொண்டான். இதை எல்லாளன் அனுமதித்தான் என்பது பெருந்தன்மைக்குரியது. அடியோடு அடியாக துண்டகைமுனுவின் படைகளை முழுமையாக நாசமாக்கியிருக்க முடியும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மைதரும். நஞ்சி பட்டாலும் தொட்டாலும் நஞ்சு நஞ்சாகவே இருக்கும். எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில் போர்நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற போர்நிறுத்தங்கள் போருக்கான தயார்படுத்தல்களே இதுவரை இருந்திருக்கிறது என்பதையும் காணலாம்?

மீண்டும் தன்னையும், தெற்கிலிருந்து பெற்ற உதவிகளுடன் அனுராதபுத்திலுள்ள எல்லாளன் கோட்டையை கைமுனு படைகள் சுற்றிவளைத்தாலும். முன்னேறமுடிய வில்லை. பலவீனமான படையை வைத்து வெற்றியை எட்டமுடியாது என்று கண்ட துட்டனான கைமுனு எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். பெருமனதுடன் 72வயது நிரம்பிய கிழவனான எல்லாளன் ஒரு துஸ்ட இளைஞனின் வேண்டுகோளை ஏற்று களம் புகுந்தான். இதுவே எல்லாளன் செய்த முட்டாள் தனமான செயலும் தன் தலையிலேயே வாரி மண்ணைப்போட்ட செயலுமாகும். பெருந்தன்மை என்பது பொறுக்கித்தனத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடாது.

தனிச்சமரை ஏற்ற எல்லாளன் தனது மகாபர்வதம் என்ற பட்டத்துயானையிலும், துட்டன் கண்டுலன் எனும் யானையிலும் இருந்தபடி சமரை எதிர்கொண்டிந்தனர். 72வயது எல்லாளனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது துட்டகைமுனு யுத்த தர்மத்துக்கு எதிராக தனது யானையை எல்லாளனின் யானைமேல் ஏவிவிட்டான் அது தன்தந்தத்தால் எல்லாளனின் யானையைத்தாக்க மகாபர்வதம் நிலத்தில் சாய்ந்தது. அத்துடன் மாமன்னன் எல்லாளனும் சாய்ந்தான். அந்த வேளைபார்த்து, எல்லாளன் எழுந்திருப்பதற்கு முன்னால் மீண்டும் யுத்ததர்பத்தை மீறி தனது ஈட்டிகளை எறிந்து மாவீரன் எல்லாளனை கெட்ட கைமுனு கொன்றான்.

தனிச்சமருக்கு ஒருவரை அழைக்கும் போது பலமும், வயது, அனைத்தும் ஏறக்குறைய சமனாக இருக்கவேண்டும். இதை துட்டன் செய்யவில்லை. மாவீரன் எல்லாளனிடம் பெருந்தன்மை இருக்கலாம் ஆனால் அது நீதியற்ற ஏமாற்றுத்தனத்துக்கு துணை போயிருக்கக் கூடாது. யானைப்போர் என்பது ஆயுதபலத்திலும் அதைக் கையாளும் திறமையிலேயே போர் வெற்றி அமையும். இங்கே முதலில் யானையை எல்லாளன் யானை மீது ஏவி விட்டதே போர்தர்மத்தை மீறிய செயலாகும். அன்றைய யுத்த தர்மமானது மிருகங்களைப் போருக்குப் பாவிக்கலாம் ஆனால் அவற்றுக்கெதிராக ஆயுதங்களைப் பாவிக்கக் கூடாது. இதைக் கடைப்பிடித்தானா கடையனா கெட்ட துட்டன் கைமுனு? அதுமட்டுமல்ல நிராயுதபாணிமேல் ஆயுதம் பாவிப்பது உயரிய யுத்தமீறலாக அன்றும் இன்றும் கணிக்கப்படுகிறது. யானையால் விழுந்த எல்லாளன் எழுந்திருப்பதற்கு முன்ரே யுத்தர்மத்தை மீறி எல்லாளன் மீது ஈட்டியை ஏவினான் சிறுமதி கொண்ட கெட்ட துட்டன். எல்லாளன் என்றும் சரணடைந்திருக்க மாட்டான். அப்படி சரணடைவற்குக் கூட அனுமதிக்கவில்லை இந்தத் துட்டன் கைமுனு. இவனை கதாநாயகனாகப் போற்றும் பொன்சேகாவும், கோத்தபாயவும் மகிந்தவுமா அனுமதிப்பார் கள். இந்தத் துட்டனின் வாரிசுகளா, அவன் உதிரத்தில் உதிர்த்தவர்களா, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாமல் விடுவார்கள். இப்படிச் சரணடைந்தவர் களைக் கொல்லாது விட்டிருந்ததால் தான் இது அதிசயம். அன்று மாகாவம்சத்தில் இருந்து வேர்களில் ஊற்றிய விசங்கள் இன்று விழுதுவிட்டு விருட்சங்களாக இயக்கபரம்பரை அரக்கர்களாக, சிங்களப்படையாக பௌத்தபேரின வாதமாக எழுந்து நிற்கிறது. எது அன்று எல்லாளனுக்கு நடந்ததே அதுவே முள்ளிவாய்காலில் எமக்கும் நடந்தது.

போரின்பின்

வரலாற்றுப் பாடங்களை நான் திருப்பிப் பார்க்கும் போது எது அன்று நடந்ததே அதுவே இன்றும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதாவது பழைய நாகரீகங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவது போல போர், வாழ்வியல், படைப்புக்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. இந்த வட்டத்தை வெட்டவேண்டமாயின் சரித்திரங்களை அறிவதும், அனுபவங்களை திரட்டி ஆய்வதுமே வெற்றிக்கான பாதையாக அமையமுடியும். இறந்த பின்னர் செய்யும் மாலை, மரியாதையை துட்டகைமுனு செய்தான் ஆனால் துட்ட கைமுனுவின் வாரிசுகள் செய்தார்களா? அரை உயிருடன் கிடந்தவர்களை உயிருடன் புதைத்தார்கள். இறந்தவர்களின் உடல்களை தெருக்தெருவாக நிர்வாணப்படுத்தி தமது பெண்களுக்கு காட்சிக்குக் காட்டி மகிழ்ந்தார்கள். பெண்களை நிர்வாணமாக்கி கொலை செய்தார்கள். பிணத்துடன் இச்சை கொண்டார்கள். விதை விசவிதையாக இருந்தால் நற்பயனுள்ள மரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? எல்லாளன் இறந்ததை அறிந்த அவனின் மருமகன் பாலுகன் ஏழாம் நாள் 6000 படை வீரர்களுடன் பூநகரியில் இருந்து படையெடுத்து வந்து கைமுனுபடைகளைத் தாக்கி தோல்வியடைந்தான்.

போர்களின் பின் மனமுடைந்த கைமுனு தனது கொலைகளை எண்ணி மனம்வருந்தி அமைதி வேண்டி பௌத்ததேரர்களிடம் துயரைச் சொன்னபோது பௌத்தத்தை நேர்மையாகக் கடைப்பிடிக்க முடியாத தேரர்கள், பிச்சாந்திகள் கைமுனுவைத் தேற்றினார்கள் இப்படி "பௌத்தத்தை நம்பாத அனைவரும் நரகவாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய, விலங்குகளுக்குச் சமமானவர்கள் இவர்களைக் கொன்றால் பாவம் சேராது" என புத்தசங்கத்தால் உரைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் அதிகாரம் எக்ஸ் எக்ஸ் வி, பக்கம் 175 வரி 75ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பரனவிதான தான் எழுதிய புத்தகமான இலங்கைச் சரித்திரம் (கிஸ்டறி ஆவ் சிலோன்) 3ம் அதிகாரத்தில் பக்கம் 162ல் விளக்கியுள்ளார். இந்தப் போதனை இஸ்லாத்தை நினைவுபடுத்தவில்லையா? எல்லா மதங்களும் ஏறக்குறைய அண்ணன் தம்பிகள் தான்

துட்டகைமுனு 24வருடங்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆண்டான். இவனுடன் சேர்த்து 44வருடங்கள் தமிழர் அல்லாதவர்களின் கையில் அனுராதபுரம் இருந்தது. வடக்கில் இருந்து 7குறுநிலமன்னர்கள் படையெடுத்து வந்து மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றினர் என்பதே வரலாறு.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com