கே.பி தொடர்பில் புலனாய்வுத்துறை இரகசிய அறிக்கை ஒன்றை தயாரிக்கின்றது.
புலிகளுக்கான ஆயுத விநியோகித்தராக செயற்பட்டு வந்த கே.பி எனப்படுகின்ற குமரன் பத்தநாதன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட கே.பி மீது அவர் மேற்கொண்ட தேச விரோத செயல்களுக்காக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவரை கைது செய்து குற்றத்திற்கான தண்டனை வழங்குமாறும் ஜேவிபி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவினை விசாரணை செய்த நீதியரசர்கள் குழாம் கே.பி தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 5ம் திகதி மன்றுக்கு தெரிவிக்குமாறு ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் கே.பி தொடர்பில் இரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க இலங்கை புலனாய்வுத்துறை தயாராகி வருவதாக அறியக்கிடைக்கின்றது.
கடந்த அரசாங்கம் கே.பி யை நீதிமன்றில் ஆஜர் செய்யாமல் விடுதலை செய்தமைக்கான காரணங்கள் யாது என்றும் அவரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சாதகங்கள் யாது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment