Sunday, January 4, 2015

வட மாகாண புலி ஆனந்தி சசிதரனின் சுய உருவம் இதோ..! தமிழர்களை தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மகிந்தவுக்கு நனறிக் கடன் !

வட மாகாண சபையின் உறுப்பினர் புலி எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காது பகிஷ்கரிக்கும்படி கூறியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத எந்த ஒருவருக்கும் தமிழர்கள் வாக்களிக்க கூடாது என்பதாகும். அவரின் மற்றொரு காரனம் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மைத்ரிபால சிறிசேன ஏற்க மறுப்பதாகும்.

வெளிப் பார்வைக்கு இந்தக் கோரிக்கை தமிழர் நலன் சார்ந்தது அல்லது சிங்களத் தலைவர்களுக்கு எதிரானது போல் தோன்றலாம். அது தவறு. ஆனந்தி தமிழரின் அக்கறையில் இவ்வாறு கூறுகிறார் என எவராவது நினைத்தால் அதுவும் தவறாகும்.

சர்வதேசத்தை பொறுத்தவரை அரச படைகள் மட்டுமல்ல புலிப்படையினரும் யுத்தக் குற்றங்களீல் ஈடுபட்டவர்கள்தான் என்பதை ஆனந்தி வகையாக மறந்துவிட்டார் போலும். இவர் புலிகளின் முக்கிய உறுப்பினரின் மனைவியாக இருந்தும் எவ்வாறு அரசாங்கம் இவரை அரசியல் செய்ய அனுமதித்தது எனத் தமிழ்ர்கள் பலரும் இதுவரை தலையை சொறிந்தவண்னம் இருந்தனர். ஆனால் இப்போது அவரின் சுய உருவம் வெளிவந்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல மொத்த நாட்டு மக்களையுமே தனது குடும்பத்தின் நலனுக்கு கீழ்ப்படுத்தி நாட்டையே கொள்ளையடிக்கும் கும்பலான ராஜபக்ஷவின் காட்டாட்சியை எதிர்த்து இன, மொழி, மத வேறுபாடு ஏதுமின்றி மக்கள் அணிதிரண்டு நிற்கும் இந்த நேரத்தில் புலி ஆனந்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது மீண்டும் ராஜபக்க்ஷ கும்பலை பதவியில் அமர்த்த செய்யும் கடைகெட்ட செயலாகும். இன்று மகிந்தவை எதிர்த்து நிற்கும் பல அமைப்புக்களும் தனி நபர்களும் கடந்த காலங்களில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பது ஆனந்தி போன்ற அங்கிடுதத்திகளுக்கு எங்கே புரியப்போகிறது.

எப்படி அன்று புலிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ் மக்களை தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்து மகிந்தவை வெல்லப் பண்ணினார்கள் என்பது யாவரும் அரிந்ததே. எமில் காந்தன் என்னும் புலி தொடர்பு நபர் ஊடாக அன்று பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ஷ புலிகளுக்கு கொடுத்துத்தான் புலிகள் இந்த தேர்தல் பகிஷ்கரிப்பை அன்று நடத்தினார்கள். இன்று ஆனந்தி அரசாங்கத்திடம் எவ்வளவு வாங்கிக்கொண்டு இந்த நாடகத்தை ஆடுகிறார்? அறிக்கையை விடுகிறார்?

தமிழர்களின் வாக்குகள் குறைந்தால் மைதிரிபாலவை தோற்கடிக்கலாம் என்பதே மகிந்த கும்பலின் அவா. அதைத்தான் ஆனந்தி செய்ய முனைகிறார். எத்தனையோ அப்பாவித் தமிழர்களை கொன்ற பயங்கரவாதியின் மனைவியான தன்னை சுதந்திரமாக அரசியல் செய்ய அனுமதித்தற்காக ஆனந்தி இந்த நன்றிக்கடனை செய்கின்றார். இவர் மட்டுமல்ல இன்று மகிந்தவின் மடியில் இருக்கும் கே.பீ. இற்கு ஊடாக மகிந்த அரசுடன் தொடர்பு வைத்து பல சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் வெளி நாட்டு தமிழர்களும் இந்த பகிஷ்கரிப்பை ஊக்குவிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை மகிந்த போன்ற ஒரு திருட்டு ஊழல் கூட்டம் பதவியில் இருப்பதே வசதியானது. மகிந்த மீண்டும் வெற்றிபெற்றால் அவர் தென்னிலங்கையில் பழையபடி புலியெதிர்ப்பு பேசி தனது கொள்ளையடிக்கும் குடும்ப அரசியலை கொண்டு செல்வார். ஆனந்தி போன்றவர்கள் வடக்கில் மகிந்த எதிர்ப்பு பம்மாத்து அரசியல் பேசி தங்களது வயிற்றை வளர்ப்பார்கள். வெளிநாட்டில் உள்ள வியாபாரக் கூட்டம் தங்களது கள்ள வியாபாரங்களை நடத்தி இலங்கையில் உள்ள பணத்தை சுருட்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வார்கள். இலங்கையில் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன?

(லங்கா ஈ நியூஸ் )

2 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com