திடீர் தீயினால் வீடு முற்று முழுதாய் நாசம்!
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் ஆதடி தோட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பொன்றில் விளக்கு ஒன்று துணி ஒன்றின் மேல் தவறி விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட தீடிர் தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று (22) இரவு 7 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பற்றிய நேரத்தில் வீட்டில் எவரும் இல்லை என தெரியவந்துள்ளது.
இதனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரூபா ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் முற்றாக தீக்கரையாகியுள்ளதாக வீட்டு உரிமையாளா் கணேசன் தெரிவிக்கின்றார்.
தீ பற்றுவதை அறிந்த பொதுமக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை நோட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment