Saturday, August 9, 2014

கத்தோலிக்க - பௌத்த கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சி நடக்கிறதாம்…!

இனவாத மனப்பான்மையை ஏற்படுத்தி பேருவளை, அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை உசுப்பேற்றியது போல, பௌத்த தேரர்கள் பலருடனான குறித்ததொரு பகுதியினர் ஒன்றிணைந்து இந்நாட்டிலுள்ள கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் எதிராக செயற்படுவதற்கு தயாராகி வருவதாக பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய இனக் குழுக்களிடம் இனவாத, குரோத மனப்பான்மையை வளர்த்து இறுதியில் அதனை இனவாத வன்முறை வரை எடுத்துச்சென்ற நிகழ்வின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் மறைவாக நின்று செயற்படுவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு கத்தோலிக்க மக்களுக்கும், அவர்களுடைய தேவாலயங்களுக்கும் எதிராக மக்களை உசுப்பேற்றுகின்ற உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்கள் பல தங்களது முகவர்களுடாக தெரிவுசெய்துள்ள பௌத்த மதகுருமார்கள் பலருக்கு பிழையான தகவல்கள் பாரிய அளவில் மிகவும் இரகசியமான முறையில் வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறு இனங்களிடையே சகோதர நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து இனவாத பிளவுகளையும், வன்முறைகளையும் தோற்றுவிப்பதற்கு முயற்சிசெய்கின்ற உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்கள் எவையெனத் தேடிப்பார்ப்பதற்கு தற்போது வேறாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருவளை, அளுத்கமைப் பகுதிகளில் ஏற்பட்ட இனவாத வன்முறை போன்று கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளிலும் பெரும்பாலும் ஏற்படுவதை முழுமையாக நீக்குவதே இவ்வாய்வின் குறிக்கோள் எனவும் தெரியவருகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com