Saturday, August 2, 2014

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடாகும்! - பொலீவியா

இஸ்ரவேல் பயங்கரவாத நாடு என பொலீவிய ஜனாதிபதி இவோ மொராலெஸ் குறிப்பிட்டிருக்கின்றார். இஸ்ரவேலினால் ப்ரடக்டிவ்எஜ் தாக்குதலானது சர்வதேச சமூகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக 1972 ஆம் ஆண்டு “சுதந்திர விசா” உடன்படிக்கையினை நிராகரிப்பதாகவும் பொலீவிய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உடன்படிக்கை மூலம் இஸ்ரவேலர்கள் விசாவின்றி பொலீவியாவுக்கு சென்றுவர முடியுமாக இருந்தது. மனிதத்துவத்திற்கு எதிரான இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் ஐக்கிய நாடுகள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
காஸாவில் சிவில் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேலோங்குவதால் சிலி, எல்சல்வடோர் போன்ற இலத்தின் அமெரிக்க அரசாங்கம் தனது தூதுவர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துள்ளனர்.

இதற்கு முன் ஈக்வடோர், பிரேசில், பேரு முதலிய அரசாங்கங்கள் இஸ்ரேலில் இருந்த தங்கள் இராஜதந்திரிகளை அழைத்துக் கொண்டுள்ளனர்.

பொலீவியா 2009 ஆம் ஆண்டு காஸாவில் இஸ்ரேல் நடாத்தும் அடாவடித்தனங்களுக்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்ததுடன் இராஜதந்திர உறவுகளையும் இடைநிறுத்திக் கொண்டது.

நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்குச் சொந்தமான பாடசாலையொன்றில் தங்கியிருந்த பலஸ்தீன் சரணாகதிகள் 20 பேரை இஸ்ரேல் குறிவைத்து செல் தாக்குதல் நடாத்தி அழித்தது. இதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் பெரும் எதிர்ப்பை இஸ்ரேல் சம்பாதித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com